இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 22 April, 2009

ஓ போடாதிங்க.. ஓட்டு போடுங்க..

தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். வேட்பு மணுத் தாக்கலும் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடுவதில் விருப்பம் இல்லை போலும். அதனால் 49ஓ விதியை பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இது பல தவறான செயல்கள் தொடர்வதற்கும் நல்ல விஷயங்கள் நடக்காமலே போவதற்கும் தான் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.

49ஓ விதியை பயன்படுத்த நினைப்பதற்கு காரணம், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேபாளர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே. எல்லாத் தொகுதியிலுமே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். அதில் பாதிப் பேர் சுயேட்சை வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் அனுகக்கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே.

நீங்கள் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பதன் மூலம் அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை, களத்தில் நிற்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் உங்கள் வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள் என காட்ட முடியும். அதன் மூலம் வரும்காலத்தில் அரசியல் கட்சிகளும் தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்லவர்கள், அதாவது நாம் எதிர்பார்ப்பது போன்ற தகுதி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் மூலம் இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்ற முடியும். அதை விட்டு 49ஓ விதியை பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதை புறக்கணித்தால் நம் விருப்பம் என்ன என்பதை எப்படி உணர்த்த முடியும்? நாம் எது போன்ற வேட்பாளரை விரும்புகிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆகவே, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் எதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்யுங்கள். 49ஓ விதியை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள்.

டிஸ்கி : தட்ஸ்தமிழுக்காக எழுதிய கட்டுரை.

அங்கே வாசிக்க

11 Comments:

said...

'49 ஓ'-ல் எனக்கும் உடன் பாடில்லை.
நல்ல பதிவு சஞ்சய். நம்பிக்கைதானே வாழ்க்கை. சிந்தித்து ஒருவருக்கு ஓட்டினை அளிப்பதே சிறந்தது.

said...

நீங்க எப்ப எலெக்சன்ல நிக்கப்போறீங்க. என இல்லாத ஓட்டு உங்களுக்குத்தான்.

said...

\\அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் அனுகக்கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே\\

அப்போதைய தேர்தல் சூழலில் மட்டுமே அவர் அந்த‌ தகுதியானவராக இருப்பார்..
ஒரு வேளை அவர் ஜெயித்து விட்டால், நீங்கள் எந்த கட்சி வேட்பாளர்களை நம்பவில்லையோ,
அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து விடுவார் என்பதில் என்ன நிச்சயம்..?
இதற்கு பல வேட்பாளர்களை என்னால் உதாரணம் காட்ட முடியும் சஞ்சய் ஸார்..

\\தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். .\\

அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது..!
எல்லா தேர்தலிலும் உங்களுக்கு ஸ்ட் வேணுமின்னா உங்ககிட்ட இருக்க வேண்டியது
நம்பிக்கை, நாணயம் போன்ற மண்ணாங்கட்டிகள் இல்லை.
முக்கியத் தேவை "பணம்"..!
அது மட்டும் இருந்தா, நீங்கதான் எம்.பி, எம்.எல்.ஏ...!

\\இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்\\

இந்த மாற்றம் எனும் வார்த்தையை உங்கள மாதிரி தமிழன் சொல்லவும்,எழுதவும் என்னைய மாதிரி தமிழன்
படிக்கவும்,கேக்கவும் மட்டும் தான் முடியுமே தவிர வேற ஒன்னும் கழட்டீரமுடியாது..!

said...

எல்லாமே ஒரு நம்பிக்கைதான்னு நீங்க சொல்லலாம்..!
நம்பி நம்பித்தானே தமிழன் மண்ணாப் போனான்..!

இது என் மனதில் தோன்றிய தனிப்பட்ட கருத்து மட்டுமே..
நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துவிடவும்..

said...

/
குடுகுடுப்பை said...

நீங்க எப்ப எலெக்சன்ல நிக்கப்போறீங்க. என் ஓட்டு உங்களுக்குத்தான்.
/

ரிப்பீட்டு

said...

பாராட்டுகள் சஞ்சய்.. கட்டுரை அருமை..

said...

உருப்புடாத அரசியல்வாதிகளும், கொள்கையும், கோட்பாடும் இல்லாத கட்சிகளும், பதவிக்காகவும் பணத்திற்க்காவும் மட்டுமே கூட்டு சேரும் கூட்டணிகள் அமைக்கும் ஆட்சிகளும் நம்மையெல்லாம் விட்டு விலகும்வரை ஓ மட்டுமே போடுங்கள்.

said...

உண்மையில் ஆகச்சிறந்த கருத்து.. 100% ஒப்புகிறேன்.!

said...

முதலில் வாக்கு செலுத்த வசதி இருந்தால் வாக்கு செலுத்த வேண்டும். அதன் பிறகு, உங்கள் தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளரையும் கட்சி சார்பில்லாமல் சீர்தூக்கி பார்த்து அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்கு செலுத்த வேண்டும். (கட்சி சார்பில்லாதவர்கள் ). கட்சியை சேர்ந்தவர்கள் கரை வேட்டிக்கு வாக்கு செலுத்தலாம். கடந்த 60 வருடங்களாக இந்தியாவில் வாக்கு சதவீதம் 55-60% தான் இருந்து வந்துள்ளது. அதை எந்த அரசியல் கட்சியும் கண்டுக்கொள்ளவில்லை. அதே போன்றே செல்லாத வாக்குகளையும் எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. இன்றிரிக்கும் சட்டத்தின்படி 49 O விற்கு வாக்கு செலுத்தினாலும் இதே நிலைமை தானே !

நமது வாழ்க்கையில், வேலை செய்யும் இடத்தில் எவ்வளவோ சமரசம் செய்து கொள்கிறோம். அரசியலில் மட்டும் மிகவும் idealistic கொள்கைகளுடன் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்கும் அவசியம் என்ன ?

said...

நன்றி லக்‌ஷ்மியக்கா.. மிக சரியான கருத்து. :)

நன்றி குடுகுடுப்பை.. நிக்கும் போது சொல்லி அனுப்பறேன். பாசக்கார பயலுக..:))

உங்கள் விளக்கமான கருத்துக்கு நன்றி டக்ளஸ். புறக்கணிக்க முடியாத கருத்துக்கள் தான். ஆனால் ஒரே அடியாக ஒதுங்கிக் கொண்டு எதிர்மறையாக பேசிக் கொண்டிருந்தால் அடுத்த ஜெனரேஷன் நம்மை மன்னிக்காது என்பது என் கருத்து.

மன்னிப்பு எதற்கு டக்ளஸ். உங்கள் கருத்தை நாகரிகமாகத் தானே பதிவு செய்திருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கே. கழட்டிற முடியாது என்பதெல்லாம் அரசியல் கருத்து சொல்லும் போது சைவமாகிவிட்டது. :) வைகோவின் பேச்சைக் கேட்டதில்லையா நீங்க? :)

நன்றி சிவா மாம்ஸ். :)

said...

மிக்க நன்றி வெண்பூ. :)

நன்றி ஜோசப். யாரையும் நாம் கட்டாயப் படுத்த முடியாது. எல்லோருக்கும் அவர்கள் செய்கைக்கான காரணம் இருக்கும்.

ரொம்ப நன்றி தாமிரா :)

//நமது வாழ்க்கையில், வேலை செய்யும் இடத்தில் எவ்வளவோ சமரசம் செய்து கொள்கிறோம். அரசியலில் மட்டும் மிகவும் idealistic கொள்கைகளுடன் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்கும் அவசியம் என்ன ?//

நச்.. நன்றி மணிகண்டன். :)

Tamiler This Week