இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 24 April, 2009

பர்ச்சேஸ் போறீங்களா.. கொஞ்சம் பார்த்து போங்க..


எதை திண்ணா பித்தம் தெளியும்னு சொல்ற மாதிரி, என்ன பண்ணா இப்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என யோசிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் பர்சேஸ் போகிறவர்களுக்கு சின்ன ஆலோசனை. வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் எனது நேரடி அனுபவமே இந்த கட்டுரை.

பொதுவாக ஒரு பொருள் வாங்க செல்பவர்கள் ஒரே கடையில் விசாரித்து வாங்கி விடுகிறார்கள். சோம்பேறித்தனமும் பணத்தின் அருமை தெரியாததுமே இதற்கு காரணம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். சில நூறு ரூபாய் அளவில் உள்ள பொருட்கள் என்றால் பரவாயில்லை. 10, 20 ரூபாய்கள் வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் ஆயிரங்களில் வாங்கும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம் தியேட்டர், ஃபர்னிச்சர்கள் போன்ற பொருட்களை வாங்கும் போது ஒரே கடையில் விசாரித்து வாங்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எதாவது ஒரு கடைக்கு சென்று உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்துக் கொண்டு அதற்கான விலையை கேட்டுக் கொள்ளுங்கள். “ நாங்கள் வேறு கடையிலும் விலையை விசாரிக்க விரும்புகிறோம். உங்களை விட குறைவாக இருந்தால் அங்கேயே வாங்கிவிடுவோம். அலல்து நீங்கள் அதைவிட குறைவான விலையில் அல்லது அதே விலையில் கொடுக்க முன்வந்தால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம்” என கண்ணியமாக சொல்லிவிட்டே (இப்படி சொல்லும் போதே அவர்கள் ஓரளவு நியாயமான விலையை சொல்லிவிடுவார்கள்) அல்லது வேறு காரணங்களை சொல்லிவிட்டு வேறு கடைக்கு சென்று விசாரியுங்கள். குறைந்தது 4 கடைகளிலாவது விசாரியுங்கள். அப்போது தான் உண்மை விலை என்னவென்று தெரியும்.

தவறாமல் பெட்டியில் இருக்கும் அதிகபட்ச விலையை (MRP) பார்த்துக் கொள்ளுங்கள். அதை அழித்திருந்தால் வாங்க வேண்டாம். மதிப்புக் கூட்டு வரி (VAT) அமுல்படுத்திய பிறகு பொருட்களின் அடக்க விலைக்கும் அதிகபட்ச விலைக்குமான வேறுபாடு பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதில் இருந்து சில சதவீதம் கழித்து வாங்கினாலே அது சரியான விலையாகத் தான் இருக்கும்.

தவணை முறையில் வாங்க விரும்பினால் குறைந்தது 3 நிதி நிறுவங்களின் சேவை பற்றியாவது விசாரியுங்கள். நீங்கள் பொருள் வாங்கும் கடையிலேயே அதற்கான ஆட்கள் இருப்பார்கள். அவர்களிடம் வட்டி விகிதம், டாகுமெண்ட் சார்ஜ் போன்றவற்றை விசாரித்து, எந்த நிறுவனம் நமக்கு சரியாக இருக்கும் என தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

அதிக விலை உள்ள பொருட்களை இணையத் தளங்கள் மூலம் வாங்குவதை தவிர்க்கவும். அவர்கள் பெரும்பாலும் அதிகபட்ச விலையில் தான் விற்பனை செய்கிறார்கள். செல்போன், கேமரா போன்றவற்றின் விலையை இணையத் தளங்களில் தெரிந்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைகளில் வாங்குங்கள். இவைகளை பொறுத்தவரையில் இணையத் தளங்களில் தான் ஓரளவு சரியான விலை இருக்கும்.

ஆன்லைனில் வாங்குவதில் சில அசெளகரியங்கள் உள்ளன. வாங்கிய பொருள் சரியாக எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. குறைந்தது 7 நட்கள் ஆகும். Transport Damage இருந்தால் அதை மாற்றுவது கஷ்டம்.

இணையத் தளத்தில் பார்த்த தோற்றத்திலேயே அந்த பொருள் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஷிப்பிங் சார்ஜ் ஃப்ரீ என்று சொல்லிவிட்டு பொருளை டெலிவரி செய்யும் நிறுவனம் நம்மிடம் காசு வாங்க வாய்ப்பிருக்கு. நாம் முன்பே பொருளுக்கான விலையை கிரெடிட் கார்ட் மூலம் கட்டி இருப்போம். ஆகவே இப்போது சில நூறு ரூபாய்க்காக பொருளை வேண்டாம் என சொல்ல முடியாது. தேவை இல்லாத மன உளைச்சலும் செலவும் ஏற்படும். சமீபத்தில் கூட ஒரு நண்பருக்கு இந்த பிரச்சனை வந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்குங்கள். அப்போது தான் வாங்கிய பொருளை எடுத்து செல்வதற்கான செலவு குறையும். அதைவிட முக்கியம், சர்வீஸ் வசதி. ஏதேனும் பழுதடைந்தால் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் செண்டருக்கு நீங்களே நேரடியாக அழைப்பதைவிட, அந்தப் பொருளை வாங்கிய கடையிலேயே பழுதைப் பற்றி சொல்லி உங்கள் விலாசம் கொடுத்து விட்டால், அவர்கள் இன்னும் விரைவான சேவைக்கு ஏற்பாடு செய்வார்கள். இதற்கு, அருகில் இருக்கும் கடைகளில் வாங்குவது தான் சிறந்தது.

Exclusive Showroomகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். அங்கு வேறு நிறுவனப் பொருட்கள் இருக்காது என்பதால் குறைவான அளவிலேயே வியாபாரம் நடக்கும். ஆகவே சிக்கிய வாடிக்கையாளர்களிடம் தாழித்து விடுவார்கள். அவர்களிடம் விலை விசாரித்துவிட்டு வேறு கடைக்கு வந்து விசாரித்து பாருங்க. பெரிய வித்தியாசம் இருக்கும்.

இந்த ஆலோசனைகளை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லி இருக்கிறேன். இதன் மூலம் பல நூறு ரூபாய்களில் இருந்து சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவளியுங்கள்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காமில் வந்த கட்டுரை

20 Comments:

said...

//சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவளியுங்கள்.//

எனக்கு ரொம்ப தேவையான வார்த்தை!

கடைபிடிக்க வேண்டிய பதிவு

said...

நல்லது மாப்ள

:))

said...

எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு சஞ்சய். நன்றி!

said...

ரொம்ப உபயோகமான பதிவு சஞ்சய்.

ஓட்டு போடறேன் பலரும் படிக்கணும்

said...

நல்ல பயனுள்ள பதிவுன்னு எனக்கு முன்னாடியே பெரியவங்களெல்லாம் வந்து சொல்லிட்டு போயிட்டாங்க !

ஸோ... எல்லோர் கருத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))))

said...

sari sari unga credit cardai annuppi vainga

said...

vilaiyai visarichu vangaren unga credit cardai anuppi vainga okva

said...

useful post - ithu naan sollalai en friend solla sonnaga :)

said...

நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களையும் பல வருடங்களாக ஃபாலோ பண்ணுகிறேன். நான் சொல்லி என் நண்பர்களும்:)! பதிவாக பகிர்ந்து பலரையும் சிந்திக்கவும் இனி செயல் படுத்தவும் தூண்டுதலாக அமைந்த இப்பதிவுக்கு என் வோட்டும். வாழ்த்துக்கள்!!!

said...

எங்க வீட்டுல சார் இப்படி செய்வதை முதலில் வேடிக்கையாகப் பார்ப்பேன்.பின் அனுபவத்தில் அதை புரிந்துகொண்டேன்.. நாலு இடத்தில் விசாரிச்சுப் பார்த்துங்கறது ரொம்ப நல்ல பழக்கம்.

said...

ரொம்ப உபயோகமான பதிவு

said...

// “ நாங்கள் வேறு கடையிலும் விலையை விசாரிக்க விரும்புகிறோம். உங்களை விட குறைவாக இருந்தால் அங்கேயே வாங்கிவிடுவோம். அலல்து நீங்கள் அதைவிட குறைவான விலையில் அல்லது அதே விலையில் கொடுக்க முன்வந்தால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம்” என கண்ணியமாக சொல்லிவிட்டே//

இது நான் எப்போதும் கடைப்பிடிக்கும் வழிதான்.
அனுபவத்தில், இது நல்ல யோசனைதான்.
பகிர்வுக்கு நன்றி.

said...

நல்ல பதிவு

நீங்க டிஸ்டிபூட்டர்ங்கரதால இந்தபதிவு
அதே மாதிரி ஒரு ரீடைலர்ரா இருந்தா என்னமாதிரி போட்டிருப்பீங்க விளக்கவும் :-))

said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்.

நானும் கூடுமானவரை ஒரே கடையில் விசாரித்து வாங்கும் வழக்கத்தை தவிர்த்துத்தான் வருகிறேன்.

said...

நல்ல பதிவு.

நான் ஒரு கடைக்குப் பத்துக் கடை விசாரிச்சுட்டுத்தான் வாங்குவேன்.

இங்கே நியூஸியில் ச்சும்மாக்கூடப் பார்த்துட்டு வரலாம். வேணாமுன்னு சொல்லக் காரணம் தேடத் தேவையில்லை. பொருட்கள் வாங்கிட்டு நாட் ஹேப்பி வித் திஸ் பர்ச்சேஸ்ன்னு சொல்லித் திருப்பிக்கொடுத்துறடலாம். அது வாங்கியபின் மனமாற்றம் 7 நாட்களுக்குள் மட்டும்.

ஒரு சமயம் இந்தியாவில் இருந்தப்ப நவ்தால் பூட்டுவிலை ஒரு கடையில் விசாரிச்சுட்டு இன்னொரு கடையிலும் போய்க் கேட்டோம். முதல்கடையே விலை குறைச்சல். அதுக்காக திரும்பி அங்கே போய் பூட்டை வாங்கிக்கறேன்னு சொன்னப்ப அந்தக் கடைக்காரர் 'தரமாட்டேன். அங்கேயே போய் வாங்கிக்க'ன்னுட்டார்(-:

அது ஆச்சு ஒரு 30 வருசம் முன்பு!!!

Anonymous said...

சஞ்சய்!!!

said...

unga retailers kku ithai padikka kodukkanum...unga paer ah solli:-))

said...

thatstamil kku aasthana ezuththaalaraiteengga pola...hmm...carry on:-))

Anonymous said...

//இய‌ற்கை said...
unga retailers kku ithai padikka kodukkanum...unga paer ah solli:-))//

Repeattuuuuu :-)))

said...

அருமையான பதிவு மாம்ஸ்!

Tamiler This Week