இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 29 March, 2008

இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

வெளிவராத ஒரு சிங்கள படத்தின் இயக்குனரை சிலருடன் இணைந்து இயக்குனர் சீமானும் தாக்கி இருக்கிறார். இது போன்ற கீழ்த்தரமான இயக்குனர் இருப்பது தமிழ்சினிமாவின் சாபக்கேடு. தாக்குதலுக்கு காரணம் அவர்களின் கொள்கை(!?)க்கு மாறாக அந்த சிங்கள படம் இருக்கிறது என்பது தான். படமே வெளிவராத நிலையில் இவர் எப்படி அதை கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை இவர் சொல்லும் காரணம் நிஜமானதாகவே இருக்கட்டும். அப்படியானால் ஒருவர் எடுக்கும் சினிமா நம் கொள்கைகளுக்கு மாறாக இருந்தால் நமக்கு பிடிக்காத வகையில் இருந்தால் அந்த படத்தின் இயக்குனரை உதைக்கலாம். அப்படித்தானே.

சீமான் எடுத்த எல்லா படங்களுமே எல்லோருக்குமே பிடித்தவை தானா?. எதோ காரணத்தால் எத்தனையோ பேருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம் இல்லையா?.. அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து இந்த டுபாக்கூர் இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

சுப.வீ.பா மற்றும் கோஷ்டி எதிர்க்கிறார்கள் என்றால்... அவர்களுக்கு தேவை இருக்கிறது எதிர்க்கிறார்கள். இவரும் ஒரு இயக்குனராக இருந்துக்கொண்டு இதை எபப்டி செய்யலாம்? நாளை இவருக்கும் இந்த நிலை வந்தால் யாரையும் இவர் குறை சொல்லமாட்டாரோ?...

இதில் வேடிக்கை .. சுப.வீ யின் அண்ணன் தான் இயக்குனர் திரு. முத்துராமன் அவர்கள். :) இவர் இன்னொரு இயக்குனரை தாக்குவதற்கு முன் யோசித்திருக்க மாட்டாரா? நம் அண்ணன் எடுத்த படங்கள் கூட யாருக்காவது பிடிக்காமல் இருந்திருக்கலாமே.. அவர்களும் நம் வழியை பின்பற்றினால் என்ன செய்வது என்று....

15 Comments:

said...

ராமசாமி கொஞ்சநாள் தலைமறைவா இரும்.

said...

அதானே...

இதன் தொடர்ச்சியா..நீ எழுத பதிவு பிடிக்கலையென்று அடிக்க வந்தால்..நான் எல்லாம் எங்கே போறது...

வேண்டாம், தவறு, விட்டுடுங்க....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

பாவம் அவரு என்ன பண்ணுவாரு
வாங்குன துட்டுக்கு கத்தனும் யாரையாவது ஒதைக்கனுமில்ல..

said...

திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்:
கருத்துரிமை என்பது வேறு. இனத்தை இழிவு செய்வது என்பது வேறு.

கற்பனை- புனைவு என்பதில் கருத்துச் சொல்வது வேறு.

ஒரு வரலாற்றை படைக்கின்றபோது திரித்தும் மாற்றியும் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

தமிழீழ மக்கள் அனைவரும் கொடுமையானவர்கள்- சிங்கள மக்கள் அனைவரும் கருணையே உருவானவர்கள் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் திரிபு. கருத்துரிமை உரிமை அல்ல என்றார்.

For more information: http://www.puthinam.com/full.php?2b1Wrne0dCc6u0ecMCc23b40cIX4d3h3e3cc2BrI3d43dWQ3b034Ou3e

said...

சரியாச் சொன்னீங்க சஞ்சய்.
அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் இயக்குனர் சீமான் இப்படி நடந்து கொண்டது மிகத்தவறு.

இவர் கடைசியாக 'வாழ்த்துக்கள்' படத்தின் இரண்டு பாடல்காட்சிகளை இலங்கையிலே எடுத்தார்.
அப்பொழுது இதே இயக்குனர்கள் இலங்கையில் அவருக்கு உதவினார்கள்.
இப்படி நன்றி மறக்கலாமா?

(உங்கள் வலைப்பதிவிலேயே நாள்முழுதும் இருக்கவேண்டும் போலிருக்கிறது.எனக்கு விருப்பமான அழகான பாடல்கள் :) )

Anonymous said...

http://www.puthinam.com/full.php?2b1Wrne0dCc6u0ecMCc23b40cIX4d3h3e3cc2BrI3d43dWQ3b034Ou3e

said...

@நல்லவர் : ஹிஹி... அதுகெல்லாம் அவசியம் இல்லைண்ணே... :))

--------
@டிபிசிடி : ஆமாம்.. எனக்கும் கூட அந்த கவலை இருக்கிறது.. :P

-------

@அனானி : அட அப்டியா? :(

-------
@க்ரேட்

// திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்:
கருத்துரிமை என்பது வேறு. இனத்தை இழிவு செய்வது என்பது வேறு.//
கிரேட் .. அழகான தமிழ்ச்சொல் :P..

இலங்கையில் இருப்பவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வேற்றுக் குடிமக்களா?..
கடலூரில் சகதமிழர்களை மலம் திண்ண வைத்தார்களே.. அப்போது சுப.வீயும் சீமானும் எங்கே இருந்தார்கள்? அதற்காக இவர்கள் யாரை உதைத்தார்கள்?
.... மேலும் காரணம் எதுவாயினும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த முறைதான் எனக்கு தவறாகப் படுகிறது. அந்த படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரலாமே தவிற உதைக்க கூடாது....
... இப்படி செய்வது தான் உண்மையில் தமிழினத்தை இழிவுபடுத்தும் செயல்.


--------

@ கடைசி அனானி: எதற்கு முகமூடி?.. உங்கள் பெயரிலியே இந்த இணைப்பை குடுத்திருக்கலாமே. :)..

said...

:| The sorry state of tamil cinema!

Anonymous said...

சுப.வீ. சொல்வது சரியெனவே படுகிறது.

உயிருக்கும் வாழ்க்கைக்கும் போராடுபவர்களின் எதிரிகளிடம் என்ன ஜனநாயகம் வேண்டிக்கிடக்கிறது.

said...

எதிர்ப்பு தெரிவித்ததில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. தெரிவித்த விதம்தான் தவறு!

said...

/
ராமசாமி கொஞ்சநாள் தலைமறைவா இரும்.
//
ரிப்பீட்டேய்

said...

/
TBCD said...
அதானே...

இதன் தொடர்ச்சியா..நீ எழுத பதிவு பிடிக்கலையென்று அடிக்க வந்தால்..நான் எல்லாம் எங்கே போறது...

வேண்டாம், தவறு, விட்டுடுங்க....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

:))))))))))))

said...

ட்ரீம்ஸ்
அனானி
தஞ்சாவூரான்
சிவா மாம்ஸ்..
எல்லார்க்கும் நன்றி. :)

said...

பட்டய கிளப்பிருக்கிங்க பொடியன். இப்ப தான் உங்க லிங்கை பார்த்து இங்கே வந்தேன். எனக்கு கூட சீமான் எடுத்த எந்த படமும் பிடிக்கலை, நாலு அறை விட்ட வாங்கிப்பாரா :))

said...

நன்றி பிளீச்சிங் :))

அவர் எப்போதும் எங்கும் சில நூறு அல்லக்கைகளுடன் மட்டுமே வரும் வீரன்.. அகவே உங்கள் ஆசை நிறைவேறுவது சற்று கஷ்டம் தான்.. :))

Tamiler This Week