இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 20 March, 2008

முதல்கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றது.

கோவை, சூலூர், திருப்பூர், அவினாஷி, பல்லடம், சோமனூர், பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், காங்கேயம், தாராபுரம், வெள்ளக்கோயில், கூடலூர், ஊட்டி, அருவங்காடு, கோத்தகிரி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம்..... வழக்கமான சுற்றுப்பயணமாக இல்லாமல் கோடை துவங்கிவிட்டதால் ஒரு முதல் கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே முடித்துவிட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடி சுற்ற்ப்பயணம் போக வேண்டியது தான்.

தினமும் இரவு 12 மணிக்கு மேல இரவு உணவு.. அதிலும் பெரும்பாலும் பஞ்சாபி தாபா ஹோட்டல்களிலேயே சாப்பிட்டு வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.

முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று மிகுந்த சிரமத்துக்கிடையில் :) காலை 4 மணிக்கு எழுந்து பயணத்தை துவங்கி ஊட்டி காபி ஹவுஸில் சிற்றுண்டி முடித்துக் கொண்டு வழியில் மான், காட்டுபன்றி, மயில், சிங்கவால் குரங்கு போன்ற சொந்த பந்தங்களை எல்லாம் சந்தித்து விட்டு கூடலூர் சென்று திரும்ப ஊட்டி வரும் வரை எல்லாம் சுமூகமாகத் தான் முடிந்தது. பிறகு ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடையில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. கொஞ்சம் மழை பெய்தாலும் "தண்ணி" மப்பில் மரங்கள் கவிழும். நேத்து பலத்த மழை. மண்சரிவு ஏற்படாமல் இருக்கனுமே என்று நினைத்துக் கொண்டே வந்தோம். மரம் விழுந்ததோடு நின்றது. எப்படியும் மரத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்து சீராக 2 மணி நேரமாவது ஆகும். நல்ல வேளை ஒரு போலிஸ் அங்கிள் டேக் டைவர்ஷன் சொல்லி ஒரு ஒத்தையடி பாதையை காண்பித்தார். அவர் பேச்சை கேளாமல் சில லேம்ப் ஆயில்ஸ் மெயின் ரோட்டிலேயே சென்றார்கள். எப்படியும் 2 மணி நேரத்திற்கு மேல் அவதி பட்டிருப்பார்கள். போலிஸ் மாமா சொன்ன வழியில் சென்றதால் எந்த சிரமமும் நெரிசலும் இல்லாமல் அருவங்காடு வழியாக குன்னூர் வந்து சேர்ந்தோம். வழியில் மேட்டுப்பாளையத்தில் 11.30 மணிக்கு ஒரு ரோட்டோரக் கையேந்திபவனில் சுட சுட தோசை சாப்பிட்டு கோவை வந்து சேர்ந்தோம்.

ச்ச... எவண்டா கண்டுபிடிச்சான் ராத்திரியில் ஆடை மாத்திக் கொண்டு படுக்கனும் என்று.தினமும் ராத்திரி 12 மணிக்கு மேல தான் வீட்டுக்கே வர முடியுது. இதுல இந்த கன்றாவி எல்லாம் பண்ணிட்டு படுக்கனுமாம். ச்ச.. ஒரே குஷ்டமப்பா :(((....

..... இன்று காலையில் தொலைகாட்ச்சியில் செய்தி : "குன்னூருக்கும் மேட்டுபாளையத்துக்கும் இடையில் மண்சரிவு. போக்குவரத்து நிறுத்தம்." ஆஹா... ஜஸ்டு மிச்சுடு....

கூடலூர் போகும் வழியில் கேமராவில் சுட்டது.. :)

ஊட்டி போகும் வழி
வழியில் மான் கூட்டம்.. இன்னும் சில இடங்களிலும் கூட்டம் கூட்டமாக இருந்தது.
இதுக்கு பேர் மயில்.. ஹிஹி ஆண் மயில்.. :P
ஓடையாம்ல :)
என்னா ஒரு வில்லத் தனமான பார்வை.. ஹிஹி.. பக்கத்தில் போக பாயந்துகொண்டு தூரத்தில் இருந்தே எடுத்த படம் இல்லை :P
கொஞ்சம் கூட பயப்பட மாட்டேன்றான். :)
எப்போதும் படையோட தான்யா சுத்தறாய்ங்க.
அட.. என்னா சேஷ்ட்டை பன்றாங்க.. கொஞ்ச நேரம் மிரட்டராங்க.. கொஞ்ச நேரம் தாவறாங்க.. அட.. அட...
தலைவா எதுவா இருந்தாலும் சொல்லிட்டு திட்டுப்பா... என் காதுல என்னென்னவோ கேட்டது.. :(
இத பாருய்யா நக்கலை... என் மூஞ்சி பாக்க முடியாத அளவுக்கா கொடூரமா இருக்கு? :((
பெண் மயில்.. தெரியுதா?

என்னா ஒசரமா வளந்துனு கீது.. :O

.....நல்ல வேளை.. குசும்பன் கல்யாண வேலைல இருக்கார்.... :P

21 Comments:

said...

ஆண் மயில் படத்த மட்டும் பெருசா போடுறாங்க ஆனா....??!!!

said...

ஆண் மயில் படத்த மட்டும் பெருசா போடுறாங்க ஆனா....??!!!

said...

ஐயையோ ஷார்ஜா ஒற்றர் படை என்னோட கமெண்ட டபுள் ஆக்கிடுச்சு!!!!!

said...

////கொஞ்சம் மழை பெய்தாலும் "தண்ணி" மப்பில் மரங்கள் கவிழும்./////
மரங்கள் கவிழுறத பத்தி சொல்லுவாங்க. ஆனா அங்கங்க இவங்க கவுந்தத பத்தி மட்டும் மூச்சு விடமாட்டாங்க.

said...

///வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.////
தாகசாந்தி நடந்துமா வயிறு எரியுது????

said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய்

said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய்

said...

///மங்களூர் சிவா said...
5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய்///


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

said...

// நிஜமா நல்லவன் said...

ஆண் மயில் படத்த மட்டும் பெருசா போடுறாங்க ஆனா....??!!!//
பென் மயில் படம் போட்டிருந்தா நீங்க இந்த ஆண்மயிலை பாத்திருக்க மாட்டிங்க.பென் மயில் படம் அதுல இருக்கு. ஆனா பாக்க முடியாத மாதிரி இருக்கு. :P
---------
//நிஜமா நல்லவன் said...

ஐயையோ ஷார்ஜா ஒற்றர் படை என்னோட கமெண்ட டபுள் ஆக்கிடுச்சு!!!!//

ஆதங்கத்துல டபுள் ஆய்டிச்சி போல :P

---------
/நிஜமா நல்லவன் said...

////கொஞ்சம் மழை பெய்தாலும் "தண்ணி" மப்பில் மரங்கள் கவிழும்./////
மரங்கள் கவிழுறத பத்தி சொல்லுவாங்க. ஆனா அங்கங்க இவங்க கவுந்தத பத்தி மட்டும் மூச்சு விடமாட்டாங்க.//
ஏன் இந்த கொலை வெறி? ;((

------------

//நிஜமா நல்லவன் said...

///வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.////
தாகசாந்தி நடந்துமா வயிறு எரியுது????//

எனக்கு எங்க எதிர் வீட்டு ஷாந்தி மட்டும் தாங்ணா தெரியும் :))

---------
//நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய்///


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட//

வாய்ப்பு கெடைக்கும் போது நாங்களும் வைப்போம்ல ரிவீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்.. :P

said...

//மங்களூர் சிவா said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய//

யோவ் மாமா.. என்னய்யா ஆளாளுக்கு டபுள் கமெண்ட் போடறிங்க?.. :(((

said...

//
SanJai said...

//மங்களூர் சிவா said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய//

யோவ் மாமா.. என்னய்யா ஆளாளுக்கு டபுள் கமெண்ட் போடறிங்க?.. :(((
//

காசா பணமா????
ஃப்ரீதானே !!

said...

//
SanJai said...

//மங்களூர் சிவா said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய//

யோவ் மாமா.. என்னய்யா ஆளாளுக்கு டபுள் கமெண்ட் போடறிங்க?.. :(((
//

காசா பணமா????
ஃப்ரீதானே !!

said...

//
SanJai said...

//மங்களூர் சிவா said...

5,8,9,10 ம் படத்தில நீ அழகா இருக்கிறய்யா சஞ்சய//

யோவ் மாமா.. என்னய்யா ஆளாளுக்கு டபுள் கமெண்ட் போடறிங்க?.. :(((
//

காசா பணமா????
ஃப்ரீதானே !!

இது ட்ரிபிள் கமெண்ட்

said...

nalla thaan sooravali payanam poraainga :)

said...

@சிவா : நல்லா இருங்க :((
--------
@ட்ரீம்ஸ் : என்னடா கண்ணா பண்றது? நான் என்ன த்ரிஷாவ கட்டிக்கவா கஷ்டபடறேன்?:P...எல்லாம் வயித்து பொழப்புக்கு தான். :))

said...

இந்த சிறுத்தை,கரடி,புலி இதெல்லாம் வழியில வரலியா?

ம்ஹூம் இந்த போட்டோவெல்லாம் பாத்தா நானும் வரலாம் போல இருக்கு

said...

//நந்து f/o நிலா said...

இந்த சிறுத்தை,கரடி,புலி இதெல்லாம் வழியில வரலியா?//

அட நீங்க வேற.. நாங்களும் அங்கங்க வண்டிய நிறுத்தி யானை , புலி, சிங்கம் மாதிரி எலலம் சவுண்டு கூட குடுத்து பார்த்தோம். எலலாம் பயந்து நடு காட்டுக்கு போய்டிச்சிங்க போல.:))

// ம்ஹூம் இந்த போட்டோவெல்லாம் பாத்தா நானும் வரலாம் போல இருக்க//

வெற்றி..வெற்றி.. :)).. எப்போவும் இல்லாம இந்த முறை ஏன் போட்டோ எடுக்கறிங்கனு ஹரி கேட்டார்.. இத எல்லாம் அனுப்பி நந்து அண்ணா வயிதெரிச்சலை கெலப்பனும்.. அவருக்கு இந்த மாதிரி பயணம் ரொம்ப புடிக்கும்னு சொன்னேன். ஆஹா.. நினைத்தது நடந்தது.. ஆனந்தம்.. பேரானந்தம்.. :))

ஒவ்வொரு முறை கூடலூர் போகும் போதும் இதுக்காகவே முதுமலை, கள்ளட்டி வழியா போவோம். :))

said...

படங்கள் நல்லாருக்கு..நல்ல பயணம்தான்..இப்போ நார்மல் ரொட்டீனுக்கு வந்தாச்சா?

said...

//பாச மலர் said...

படங்கள் நல்லாருக்கு..நல்ல பயணம்தான்..இப்போ நார்மல் ரொட்டீனுக்கு வந்தாச்சா?
//

ரொம்ப நன்றிக்கா.. திரும்பவும் ஆரம்பிக்கனும்க்கா.. ஜூன் வரை தொடரும் :(

said...

தினமும் இரவு 12 மணிக்கு மேல இரவு உணவு.. அதிலும் பெரும்பாலும் பஞ்சாபி தாபா ஹோட்டல்களிலேயே சாப்பிட்டு வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.

அட இது கூட தெரியாதா... முள்ள முள்'ளால தான் எடுக்கனும் , அது மாதிரி எரியரத அனைக்கனும்னா நல்ல காரமான பச்சை மிளகாய் ஒரு ஜஸ்ட் 500கிராம் வாங்கி சாப்பிட்டா போதும்

said...

இவ்ளோ பெரிசுங்க கமெண்ட் போட்டுருக்காங்க யாராவது உங்களுக்கு ஆக்கபூர்வமான உதவி பண்ணாங்களா .... என்ன கொடுமை இது...

Tamiler This Week