இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 26 March, 2008

போலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்!

பண்பலைவரிசை ரேடியோக்களை பலரும் குறை சொன்னாலும் அதில் பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் காலை 7 முதல் 8 வரை FM கேட்கும் பழக்கம் உண்டு. அனைத்து FM ரேடியோக்களிலுமே பல நல்ல சுவரஷ்யாமான தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். நேயர்களுக்கு பல வகையான போட்டிகளையும் நடத்துகிறார்கள்.குறிப்பாக ரேடியோ மிர்ச்சியில் நடத்தும் போட்டிகள் ரொம்ப சுவாரஷ்யமா இருக்கும். சமீபத்திய சுவாரஷ்யமான போட்டி.... ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடத்தினார்கள். நகரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப் பட்ட சில வண்ணங்களை அவர்கள் தரும் குறிப்புகளை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முதல் பரிசாக 15000 ரூபாய் கொடுத்தார்கள்.( இது அதிர்ஷ்ட போட்டி அல்ல.. அதை நான் எப்போதும் ஆதரிப்பது இல்லை) எதற்கு பரிசுத் தொகையை குறிப்பிடுகிறேன் என்றால்.. அதே நாளில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த அணிக்கு 4000 ரூபாய் முதல் பரிசாக கொடுத்திருந்தார்கள். என்ன கொடுமை பாலாஜி இது? :P.... சில நாட்களுக்கு முன்பு சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 5000 ரூபாய் கொடுத்து யார் அதிக பொருட்களை வாங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டி நடத்தினார்கள்.

அதெல்லாம் சரி... இப்போ எதுக்கு பாலாஜிக்கு சபாஷ்...
கடந்த செவ்வாய்க் கிழமை காலை நிகழ்ச்சியில் , டுபாக்கூர் கால் செண்டர்களில் பணிபுரிந்து ஏமாந்து போகும் பணியாளர்கள் பற்றிய செய்தியை சொல்லி, அது போன்று ஏமாந்தவர்கள் தனக்கு மெயில் அனுப்பினால் அதை பற்றி நிகழ்ச்சியில் செய்தியாக சொல்லப் படும் என்று சொல்லி இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு போல... அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப் பட்ட 2 கால் செண்டர் பணியாளர்கள்( சுமார் 30 பணியாளர்களின் சார்பில்) பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு 8 மாதங்களாக சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கடைசி 3 மாதங்கள் முழு சம்பளமுமே கொடுக்காமல் தங்களை வெளியேற்றி விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள். அன்று மாலையில் அந்த கால் செண்டரின் உரிமையாளரும் பேசி இருப்பார் போல. இது காவல் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதன் விளைவாக அந்த கால் செண்டர் உரிமையாளர் முழு பணத்தயும் அளிப்பதாக கூறி இருக்கிறார். அதன் படி நேற்று நிலுவை தொகையில் பாதி கொடுத்திருக்கிறார். மீதியை இன்று தருவதாக சொல்லி வர சொல்லி இருக்கிறாராம். ச்ச.. செம மேட்டர் இல்ல... அவர்களுக்கு மீதி தொகையும் இன்று கிடைக்க வாழ்த்துக்கள்!. ஸோ ஹாட்ஸ் ஆஃப் யூ டியர் பாலாஜி.

4 கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு கால் செண்டர் நடத்துவதாக கூறி பணிக்கு ஆட்கள் அமர்த்தி அவர்களுக்கு சரியாக சம்பளம் குடுக்காமல் ஏமாற்றி வெளியேற்றும் மோசடி கால் செண்டர்கள் பற்றிய தகவல்கள் அளித்தால் , அது ரேடியோ மிர்ச்சியின் ஹலோ கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் வெளியிடப் படும் என்று பாலாஜி கூறி இருக்கிறார். இனியும் இது போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து ஏமாறாமல் இருக்க இது ஒரு நல்ல முயற்சி. தகவல் அனுப்ப வேண்டிய இமெயில் முகவர் : balaji983@radiomirchi.com

6 Comments:

said...

superu :)

said...

4000 Vs 15000
namma naadu munneridum!

said...

இங்க ரேடியோ
மிர்சி வரலை :(

சூர்யன் எப்.எம் வருது. இதுல அப்பிடி எல்லாம் ப்ரயோசனமா எதும் வரமாதிரி தெரியலை. ப்ளேடு நம்பர் 1 ன்னு ஒரு ப்ரொக்ராம் கடி கடின்னு கடிக்கிறாய்ங்க :(

said...

ரேடியோ மிர்ச்சி எப்பவுமே செம ஹாட்டு

said...

நல்ல பதிவு
இது போன்ற மக்களுக்கு நல்லது செய்யும் நிகழ்ச்சிகளுக்கு நம்ம அரசு பண்பலையில் சுதந்திரம் இல்லாம தவிக்கிறோம்.
பாப்போம்.காலம் மாறுதான்னு.!

said...

ட்ரீம்ஸ்
மங்களூர் சிவா
பொன்வாண்டு
சுரேகா...
...... எல்லோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :).......

Tamiler This Week