இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday 25 March, 2008
இந்த ஆண்ண்ண்ண்ண்டு.. ஸ்ட்ரைக் ஆண்ண்ண்ண்ண்ண்டு..
ஒரு வழியா மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்பித்தாச்சி. ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வுக்கு பரிந்துரை பண்ணி இருக்காங்க. அம்மாடி 40 சதவிகிதமா? ... (விவசாயிகள் கடன் தள்ளுபடியை கண்மூடி தனமாக எதிர்த்த ஏசி அறை பொருளாதார வல்லுநர்கள் இத எதிர்க்கிறார்களா பார்ப்போம்)இவ்வளவு அதிக ஊதிய உயர்வு அளிப்பது கூட பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால்... அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதற்கு தகுதியானவர்கள் தானா? குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் வேலைகளை எத்தனை ஊழியர்கள் செய்கிறார்கள். குறைந்தபட்ச நாகரிகம் மற்றும் மனிதாபிமானம் கூட இல்லாமல் எத்தனையோ ஊழியர்கள் நடந்துக் கொள்கிறார்கள். எதாவது முக்கியமான வேலையாக அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டி இருந்தால் .. எத்தனை பேர் சந்தோஷமாக போய் சந்தோஷமாக வெளியே வர முடிகிறது? ஒரு சிறு வேலைக்கு கூட எத்தனை தாமதம்.. எத்தனை அலைகழிப்புகள்.. எத்தனை அவமானங்கள்.... பெரும்பாலானவர்கள் பொது மக்களிடம் மிக மோசமாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள். காரணம் வேலையின் மீது கொஞ்சமும் அற்பணிப்பு உணர்வு இல்லாததும் தெனாவெட்டும் தான். நம்மை யார் கேள்வி கேக்க முடியும்? அப்படியே கேட்டாலும் .. இருக்கவே இருக்கு சங்கங்கள்... போராட்டங்கள்..
எனவே இந்த அளவு சம்பள உயர்வு தேவையா?
சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளில் முக்கியமானது, இப்போது இருக்கும் விடுமுறை நாட்களை குறைத்து 3 நாட்கள் மட்டுமே விடுமுறை நாட்கள் இருக்க வேண்டும் என்பது. இதை சும்மா பேருக்கு எதிர்த்துவிட்டு அமைதியாகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது....
..............கல்லூரி நாட்களில் முக்கியமான தேர்வு இருந்தால் ஒழிய மற்ற வெள்ளிகிழமைகளில் கல்லூரி செயல்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. அத்தனை வெள்ளிக் கிழமைகளிலும் ஸ்ட்ரைக் இருக்கும். ஏன்னா... ஹாஸ்டல் மாணவர்கள் எல்லோரும் வார இறுதியில் ஊருக்கு போவார்கள். வெள்ளிகிழமை வரை கல்லூரி இருந்தால் சனிக்கிழமை தான் ஊருக்கு செல்ல முடியும் , பிறகு அடுத்த நாளே கிளம்பி ஹாஸ்டலுக்கு வர வேண்டும். அப்போ தான் திங்கட்கிழமை கல்லூரிக்கு வர முடியும். அப்படியானால் விடுமுறை என்று பார்த்தால் முழுதாக 2 நாள் கூட இல்லை. இவ்வளவு கஷ்டப் பட்டு படித்தாக வேண்டுமா? என்ன கொடுமை குசும்பா இது? எனவே... வெள்ளிக் கிழமை நிச்சயமாக ஸ்ட்ரைக் இருக்கும். அது மட்டுமில்லை. என்றைக்கு புது திரைப்படம் ரிலிஸ் ஆனாலும் அன்றும் ஸ்ட்ரைக் இருக்கும். அது எவ்வளவு கொடுமையான படமாக இருந்தாலும் ஸ்ட்ரைக் இருக்கும். சிலர் சினிமாவுக்கு போவதற்கு ஒட்டு மொத்த கல்லூரிக்கும் விடுமுறை இருக்கும். பெரும்பாலும் வெள்ளிகிழமைகளிலும் புது படம் ரிலிஸ் ஆகும் நாட்களிலும் பெரும்பாலான மாணவ மணிகள் :P கல்லூரி பக்கம் வர மாட்டார்கள். எப்படியும் அன்று ஸ்ட்ரைக் இருக்கும் என்று தெரியும். :) ... ஹாஸ்டலில் இதற்கென்று தனி துறையே செயல்படும் . ஸ்ட்ரைக்கிற்கு காரணம் கண்டுபிடிக்கும் துறை. :P.... 2 மற்றும் 3ம் ஆண்டுகளில் எங்கள் அறை தான் இந்த துறையின் அலுவலகம். எப்போதும் எங்கள் அறையில் கொஞ்சம் சார்ட் பேப்பர்கள் ஸ்டாக் இருக்கும். இதில் தான் ஸ்ட்ரைக்கிற்கான காரணம் எழுதி அதை கல்லூரி கேட்டின் முன் வைத்துவிடுவோம். அதை படித்துவிட்டு கேட்டின் உள் நுழையாமல் அனைவரும் அப்படியே செல்ல வேண்டியது தான். :)). பெரும்பாலும் சில காரணங்களே தான் தொடர்ந்து அந்த பேப்பரில் இருக்கும்.
1.ஹாஸ்டலில் சாப்பாடு சரி இல்லை...
2. சாப்பாடு பற்றாக்குறை.. ( செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு 12 மணிக்கு மேல வந்தா எவன் சோறு போடுவான்? :P )
3. பாத்ரூமிற்க்கு தண்ணீர் சப்ளை இல்லை. ( காலையில் போர் மோட்டார் போட்டதும் தெரியாமல் நிறுத்திவிடுவோம். பிறகு தாமதமாக மோட்டார் போட்டு விடுவோம். அப்போ தான லேட்டா குளிச்சிட்டு அதையே காரணமாக எழுத முடியும்:P)
4. கல்லூரியில் ஆசிரியர் பற்றாக் குறை ( இருக்கிறவங்க க்ளாஸ் எல்லாம் ஒழுங்கா அட்டெண்ட் பண்ற மாதிரி:) )
5. அடிக்கடி பழுதடையும் ஹாஸ்டல் டிவியை மாற்ற வேண்டும். ( நல்ல வேளை கடைசி வரை அதை மாற்றவே இல்லை :P )
... இது போன்று சில காரணங்கள் தான் தொடர்ந்து இருக்கும்...
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்.. அரசு ஊழியர்களும் இப்படி படிச்சி (?!) வந்தவங்க தானே.. அரசாங்கம் அறிவிக்கும் விடுமுறையை பற்றி அவர்களுகென்ன கவலை? அதெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். :))
ஸோ... ஒரு வேளை இந்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் .... இப்போது இருக்கும் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் அடிக்கடி ஸ்ட்ரைக் இருக்கும் என நினைக்கிறேன். :))
6 Comments:
no the comments :D
அரசாங்க ஊழியர்கள் சம்பளம் கொடுக்கட்டும்..பிரச்சனையே இல்லை.
ஆனா, கிம்பளம் வாங்காமல் வேலை செய்யச் சொல்லுங்க அதுப் போதும்.
( டம்பி, இந்த பின்னுட்ட பொட்டி பறக்கிறது நல்லா இல்லை. சிரமம் இல்லை என்றால், மாற்றிவிடுங்க.. )
1. விடுமுறை நாட்கள் மூன்று + இரண்டு (http://payanangal.blogspot.com/2008/03/3.html)
2. 40 சதவிதம் சம்பளம் அனைவருக்கும் உயர்வு அல்ல. சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சம்பளம் மட்டும் தான் 100 %, 200 % , 300 % உயர்ந்திருக்கிறது. (அதாவது இந்தியா முழுவதும் சுமார் 300 - 350 தனிநபர்கள் தான் அந்த வட்டத்தில் இருப்பார்கள்) சொல்லப்போனால் கலெக்டரின் சம்பளம் கூட 20 % தான் உயர்வு.
3. //எதாவது முக்கியமான வேலையாக அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டி இருந்தால் .. எத்தனை பேர் சந்தோஷமாக போய் சந்தோஷமாக வெளியே வர முடிகிறது? ஒரு சிறு வேலைக்கு கூட எத்தனை தாமதம்.. எத்தனை அலைகழிப்புகள்.. எத்தனை அவமானங்கள்.... பெரும்பாலானவர்கள் பொது மக்களிடம் மிக மோசமாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள்.
நம்மை யார் கேள்வி கேக்க முடியும்? அப்படியே கேட்டாலும் .. இருக்கவே இருக்கு சங்கங்கள்... போராட்டங்கள். எனவே இந்த அளவு சம்பள உயர்வு தேவையா?//
இலக்கை அடைந்தால் தான் சம்பள உயர்வு வேண்டும்.
என் கீழ் வேலை பார்த்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு வருடம் தோறும் சுமார் 500 வீடுகளுக்கு போய் மலேரியா இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்பது இலக்கு
அவர் ஒரு வீட்டிற்கு கூட செல்லவில்லை. இன்னொரு நபர் 650 வீடுகளுக்கு சென்று சோதனை செய்திருந்தார். இருவருக்கும் ஒரே சம்பளம் (இப்ப ஒரே உயர்வு) என்பது எனக்கே எரிச்சல் தான் :( :(
என்ன செய்ய... காரணம் நீங்க சொன்ன சங்கம் தான் :( :( :(
ஆனால் ஒரு விஷயம்... நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு வருடம்தோறும் 2.5 % சம்பள உயர்வு என்பது கம்மிதான்
@ ட்ரீம்ஸ்... ஏண்டா ராசா நோ கமெண்ட்ஸ்? உன் ஆளு படம் போட்டா தான் கமெண்ட் போடுவியா? :P
--------
@ டிபிசிடி : என்னாது கிம்பளம் இல்லாமலா.. அதுக்கு நாண்டுக்கிட்டு சாக சொல்லுங்கண்ணே.. சாக சொல்லுங்க.. ( வடிவேலு ஸ்டைல்ல படிங்க:P )....
அண்ணே.. பறக்கும் பொட்டி இருக்கிறதுல ஒரு வசதி இருக்குண்ணே... பதிவுல வேற வேற எடங்கள்ல இருக்கிற வரிகளை வெட்டி ஒட்டி கமெண்ட்ட இது வசதியா இருக்கும். இல்லைனா 2 ஜன்னல் தொறந்து வைகனும்.
சிரமத்துக்கு மன்னிக்கனும்ணே.. கொஞ்சூண்டு தம்பிக்காக பொருத்துக்கோங்க :))
@புருனோ :
விளக்கமான கருத்துக்கு மிக்க நன்றி புருனோ சார். இந்த லட்சனத்துல தனியார் நிறுவனங்களிலும் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று காம்ரேடுகள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வரும் நிலையில் காம்ரேடுகளுக்கு சங்கங்கள் அவசியம் தேவைபடுகிறது.
//ஆனால் ஒரு விஷயம்... நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு வருடம்தோறும் 2.5 % சம்பள உயர்வு என்பது கம்மிதான்//
இதற்கு கமிஷன் 3.5% உயர்வை பரிந்துரைத்திருக்கிறார்கள்.
கமிஷனின் பரிந்துரைகள் சரி இல்லை என்ற பேச்சு கிளம்பி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தனியார் துறை பணியாளர்களுக்கு இணையான சம்பளம் இல்லை என்பது. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களோ? :(... தனியார் துறையில் பணியாளர்கள் நேரம் காலம் இல்லாமல் உழைக்கிறார்கள். இவர்களை போல் மாசம் பொறந்தா சம்பளம்.. மணியடிச்சா சோறு என்று செயல்படுவதில்லை...
ஸ்ட்ரைக்கா?
அதெல்லாம் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் கூட பண்ணலாமா?
இது நல்லாருக்கே?
:)
என்ன கொடுமை சஞ்சய் சார் இது?
Post a Comment