இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 28 March 2009
Earth Hour ஒரு மணி நேரம் மட்டும் ப்ளிஸ்
இன்று உலகம் முழுவதும் Earth Hour அனுசரிக்கப் படுகிறது. இந்திய நேரம் இரவு 8.30 முதல் 9.30 மணி வரை. ஆகவே அந்த ஒரு மணி நேரம் விளக்குகள் அனைத்தும் அணைத்து புவி வெப்பமடைதல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு கொள்வோம்.
Earth Hour நோக்கம்:
- தனி மனிதர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைவரையும் ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கச் செய்வது.
- அதன் முலம் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்துவது.
- புவி வெப்பத்தினால் எற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க மக்கள் பிரதிநிதிகளை செயல்பட செய்வது.
2007ஆம் ஆன்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தோன்றிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இப்போது சுமார் 80 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கப் படுகிறது.
இதர்காக மார்ச் மாதம் 28ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப் படுகிறது. இதில் நாமும் கலந்துக் கொள்வோம். பூமி வெப்பமடைதலில் இருந்து காப்போம்.
இந்த பிரச்சாரத்திற்கான அமைப்பு, இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் கேட்டிருக்கிறது.
என் கருத்து : ஆற்காடு வீராசாமியை உலக மிந்துறை அமைச்சராக்கினால் போதும். வருடம் ஒரு மணி நேரம் எதற்கு? ஒரு நாளைக்கு 2 மணி நேர விளக்கனைப்பிற்கு உத்திரவாதம் உண்டு.
Wednesday, 25 March 2009
ஆத்தா எனக்கு அவார்டு கெடைச்சிடிச்சி.

நாம இப்போல்லாம் வலைப்பூக்கள் படிக்கிறதே கொறைஞ்சிருந்தாலும் பாசக்கார புள்ளைங்க பதிவுகளை மட்டும் முடிஞ்ச வரைக்கும் படிக்கிறதுண்டு. அப்டி பார்க்கும் போதெல்லாம் இந்த பட்டாம்பூச்சி விருதுன்னு ஒரு மேட்டர் பதிவுலகம் முழுக்க பட்டாசுக் கிளப்பிட்டு இருந்தது. எனக்கும் ஆசை, யாராவது நமக்குத் தர மாட்டாங்களான்னு.:).. நானும் இந்த விருது வாங்கின நம்ம பாசக்கார புள்ளைங்க பதிவுக்கெல்லாம் போய் குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டு இருந்தேன். அப்டியாவது யாராவது நமக்குத் தரமாட்டாங்களான்னு தான். :))
ஹிஹி.. இம்புட்டு தானுங்க நம்ம ரேஞ்ச். சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் ரொம்ப ஆசைப் படுவேன்.தேன்மிட்டாய், ஐஸ், கடலை மிட்டாய், பொரி, எள்ளுருண்டை மாதிரி.. இந்த பட்டாம் பூச்சி விருது மாதிரி..:))
ஆனா பாருங்க ஒருத்தரும் மதிக்கலை.. :(. சரி.. நாம எழுதறதும் யாருக்கும் பிடிக்கலை அல்லது நம்மள நண்பனாவும் யாரும் நினைக்கலைப் போலன்னு நினைச்சிக்கிட்டேன்... நான் எழுதறது பெரும்பாலானவங்களைக் காயப் படுத்தற மாதிரியே இருக்குன்னும் அது எனக்கு தெரியாதுன்னும் என் உடன்பிறப்பு ஒருத்தர் வேற சொல்லி இருந்தாரா.. அதனால விட்ரா..விட்ரா.. சானா கானான்னு மனசைத் தேத்திக்கிட்டேன். :))
ஆனா பாருங்க.. நான் எதிர்பார்க்காத நேரத்துல என்னையும் தன் நண்பனா நினைச்சி பட்டாம் பூச்சி அவார்டு குடுத்துட்டார் நம்ம சுரேகா. :) இதுல இன்னும் ரொம்ப சந்தோஷம் என்னன்னா .. என் மாமன் அப்துல்லா மற்றும் சினிமா பதிவு நிபுணர் முரளி கண்ணன் கூட சேர்த்து எனக்கும் குடுத்திருக்கார்.
அன்பு நண்பர் சுரேகாவிற்கு நன்றி.. நன்றி.. நன்றி.. :)) உங்கள் நட்பில் பெருமை கொள்கிறேன்.
இப்போ நானும் யாருக்காவது தரனுமாம்.. எனக்குத் தெரிஞ்சி இதை வாங்காம யாரும் இல்லை. அப்டி யாராவது இருந்தா அவங்களுக்குத் தான் நான் இந்த பட்டாம்பூச்சி விருது தர ஆசைப் படறேன். அதனால யாருக்கெல்லாம் இன்னும் இதை யாரும் கொடுக்கலையோ அவங்க எல்லாருக்கும் நான் தரேன் பட்டாம் பூச்சி விருது. எல்லோரும் என் நண்பர்களே. மொத்த பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விருதைக் கொடுக்கிறேன். வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))
நன்றாக தமிழில் எழுதும் திறமை இருந்தும் தமிழ் பதிவுகளுக்கு பரிச்சயம் இல்லாத என் தோழி பதுமையின் பதிவுகளை அறிமுகப் படுத்தும் விதமாக அவளுக்கு இதை சிறப்பு விருதாகக் குடுக்கிறேன் மற்ற எல்லோரோடும் சேர்ந்து..
மேலும் சிறப்பு விரு(ந்)தினர்கள்
குசும்பன்
கோவி கண்ணன்
நாகைசிவா
வால்பையன்
தூயா
பொடிப்பொண்ணு
லவ்டேல் மேடி
கும்கி
... இன்னும் பட்டியல் தொடரும்.. :-)
Monday, 23 March 2009
கூட்டாஞ்சோறு v 1.03.2
எனக்கு ஒரு சந்தேகம். சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை படிக்கிறப்போ வந்தது தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசிய தமிழுக்கும் இப்போ நாம் பேசும் தமிழுக்கும் சின்ன ஒற்றுமை கூட இல்லை.
தொலைகாட்சிகளில் நடன, பாட்டு நிகழ்ச்சிகள் அந்தக் காலத்து புராணங்கள் இதுகாசங்கள் காப்பியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாம் இப்போ நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் இல்லை. இப்போது வரும் கவிதைகள் கதைகள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாமே நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது. அப்படின்னா , அந்த காலத்துல எழுதிய வார்த்தைகள் தானே மக்கள் பேசும் வார்த்தைகளாகவும் இருந்திருக்கும். அப்போது பேசிய மொழி தமிழாக இருந்தால் இப்போது நாம் பேசும் மொழி என்ன? அல்லது நாம் இப்போது பேசுவது தான் தமிழ் என்றால் பழைய இலக்கியங்கள் எல்லாம் எழுதப்பட்டிருப்பது என்ன மொழியில்? இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தி தாள்களில் வந்த வார்த்தைகளுக்கும் இப்போது பயன்படுத்தப் படும் வார்த்தைகளுக்குமே ஏராளமான வித்தியாசங்கள் இருக்கே. இப்படி மாற்றியது யார்? ஒரு மொழியில் தேவைக்கேற்ப புதிய வார்த்தைகள் ( இணையம். கணினி மாதிரி) கண்டுபிடிக்கப் படலாம். ஆனால் இருக்கும் வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?
இன்றைக்கு ஏராளமான ஆங்கில வார்த்தைகளை மாற்று வார்த்தைகளாக பயன்படுத்துகிறோம். அதேபோல் பழைய தமிழ் வார்த்தைகளுக்கு மாற்றாக வேறு மொழி பயன்படுத்தி இருப்பார்களோ? அதாவது நாம் இப்போது பேசும் மொழி... இது என்ன மொழி?
----புதசெவி-----
க்ராக்&ஜாக்
விஜய் : ராமா ராமா ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்
பீமா பீமா பீமன் கிட்ட கதய கேட்டேன்
முருகு முருகு முருகன் கிட்ட மயிலைக் கேட்டேன்
ஈசு ஈசு ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன்
க்ராக்&ஜாக் : ஏனுங்க்ணா.. இப்டி வெட்டியா கண்டதையும் கேட்கற நேரத்துல
ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.
க்ராக் : மாசம் 25000 சம்பளம். ஒரு நல்ல வேலை இருக்கு. வேணுமா?
ஜாக் : அட. அப்டியா.. உடனே சேர்ந்துக்கிறேன். வேலை என்ன சொல்லு?
க்ராக் : ஏவிஎம் வாசல்ல நின்னுகிட்டு அஜித் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும்.
ஜாக் : !?!?!?!
டரியல்ட்யூப் ஆஃப் திஸ் வீக்
இப்போ விஜய் தான் Youtube-ல நம்ம விஜய டீஆருக்கு பயங்கர போட்டியா இருக்கார்.. :))
Posted By
Sunday, 22 March 2009
Happy Birthday Dear Pavan kutty
எங்க சங்கத்து சிங்கமும், அபிஅப்பா & மாநக்கல் பிசிக்கு சவால் விட்டவருமான முழு நிர்வாணப் புகழ் பவன் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் எல்லா நலனும் பெற்று வளமோடும் ஆரோக்கியமாகவும் வாழ சங்கத்து சார்பிலும் வலையுலக ஆண்டிஸ் அங்கிள்ஸ் தாத்தாஸ் பாட்டிஸ் சார்பிலும் வாழ்த்துகிறேன். :)