இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 3 July 2009

பக்த”கேடி”கள்


மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் 1500 எருமை மாடுகளை கொன்று குவித்த பக்தகேடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவங்களும் இவங்க நம்பிக்கைகளும்.. கடவுள் நம்பிக்கை இருந்தா சந்தோஷமா போய் வணங்கிட்டு வாங்க.. அதெல்லாம் உங்க உரிமை. அதென்ன அடுத்த உயிரை கொன்று நேர்த்திக் கடன் செலுத்தறது? இந்த பக்தகேடிகள் ராஜபக்‌ஷேவையே மிஞ்சிடுவாங்க போல....:(

21 Comments:

ஸ்வாமி ஓம்கார் said...

//இந்த பக்தகேடிகள் ராஜபக்‌ஷேவையே மிஞ்சிடுவாங்க போல....:(//

தன் இனத்திற்காக கொதிக்கும் சஞ்சய் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.

அப்படியே நானும் கொதிச்சிருக்கேன். வந்து பாருங்க.

உண்மைத்தமிழன் said...

கொடுமை.. மகா கொடுமை..

இந்த மூடத்தனம் என்றைக்கு ஒழியும் என்று தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்வாமி ஓம்கார் said...

//இந்த பக்தகேடிகள் ராஜபக்‌ஷேவையே மிஞ்சிடுவாங்க போல....:(//

தன் இனத்திற்காக கொதிக்கும் சஞ்சய் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.]]]

ஆஹா.. ஓம்கார் ஸ்வாமி வைச்சிட்டாரு பாருங்க ஆப்பு..!

தம்பி ஸ்வாமிக்கு நாங்களே பரவாயில்லீல்ல..?!!!!!!!

கயல்விழி நடனம் said...

அதென்ன அடுத்த உயிரை கொன்று நேர்த்திக் கடன் செலுத்தறது? இந்த பக்தகேடிகள் ராஜபக்‌ஷேவையே மிஞ்சிடுவாங்க போல....:(


Sariya sonna ....

Kumky said...

இந்த மேனகா காந்தில்லாம் இப்போ இல்லையா?

sakthi said...

அதென்ன அடுத்த உயிரை கொன்று நேர்த்திக் கடன் செலுத்தறது?

சபாஷ் சரியான கேள்வி....

sakthi said...

1500 எருமை மாடுகளை கொன்று குவித்த பக்தகேடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உங்கள் உணர்வு புரிகின்றது...

குடுகுடுப்பை said...

இதை தடுக்க வழி இல்லையா? இவை உள் நாட்டு விவகாரம் தானே?

அன்புடன் அருணா said...

"பக்த”கேடி”கள்"
ரொம்ப சரி!

Anonymous said...

கொடுமை... நேர்த்திக்கடன் செய்த 1500 பேரையும் வெட்டணும்...

Heam said...

என்ன ஒரு மனித தன்மை இல்லாத செயல் , இதுபோல தான் இன்னும் பல ஊர்களில் நடந்து வருது . இன்னொரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை ..

*இயற்கை ராஜி* said...

கொடுமை.. மகா கொடுமை..

சுவாதி said...

//இன்னொரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை//
மட்டன் பிரியாணிக்கும், சிக்கன் குழம்புக்கும் உயிர்களைக் கொன்றால் பரவாயில்லையா?
இதுதான் கொன்றால் பாவம். தின்றால் போச்சா??

Sanjai Gandhi said...

மங்களூராரே உங்க அனுதாபத்துக்கு எருமை மாடுகள் சார்பில் நன்றி. நாம எல்லாம் அவங்க பாலும் குடிச்சி வளர்ந்தவங்க.. அந்த நன்றி உணர்ச்சி இருக்கனும்ல.

உங்க கொதிப்புக்கு நன்றி ஸ்வாமி.. உங்க பதிவு படிச்சிட்டேன்.. உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கிங்க.. ஆனா இந்த மனித மிருகங்களுக்கு புரியுமா?

கடவுள்கள் நேரில் தோன்றி சொல்லும் வரை ஒழியாது உண்மைதமிழன் அண்ணே..

உத அண்ணே.. ஸ்வாமிக்கும் நான் தான் கைபுள்ள.. :)

நன்றி கயல்.. அவங்களையே பலி கொடுத்துக்க வேண்டியது தானே.. எதுக்கு அடுத்த உயிரை எடுக்கனும்?

எத்தனை மேனகா காந்தி வந்தாலும் பெரியார்கள் வந்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க கும்கியாரே.. :(

வால்பையன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
//இந்த பக்தகேடிகள் ராஜபக்‌ஷேவையே மிஞ்சிடுவாங்க போல....:(//
தன் இனத்திற்காக கொதிக்கும் சஞ்சய் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.//


என்ன கொடும சார் இது!

Sanjai Gandhi said...

நன்றி சக்தி..

ஆமாம் குடுகுடுப்பை.. உள்நாட்டு விவகாரம் மட்டுமில்லை.. உள்மாநில விவகாரமும் கூட. அதனால தான் ஜெயலலிதா இந்த கொடுமைக்கு தடை விதிச்சாங்க. ஆனா அதுக்கும் சொம்ப தூக்கிட்டு ஒரு கும்பல் வந்துச்சே.. எங்க நம்பிக்கைல கை வைக்கிறிங்க.. தும்பிக்கைல கை வைக்கிறிங்கன்னு.. என்ன செய்ய சொல்றிங்க?

நன்றி அருணாக்கா..

வெட்டக் கூடாது தூயா.. எருமை மாடுங்களை விட்டு கூட்டமா மிதிக்க வைக்கனும்.

சரியா சொன்னிங்க ஹீம்.நன்றி.

Sanjai Gandhi said...

கொடுமை தான் இயற்கை.. :(

சுவாதி, எந்தக் காரணத்திற்காகவும் அடுத்த உயிரைக் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. அசைவ உணவுகளையே தடை பண்ணனும்.

நன்றி வாலு. பா.ச பேசுது போல.. :)

Santhosh said...

அடப்பாவிங்களா.. 1500 இதெல்லாம் டூ டூஊஊ மச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொடுமை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சுவாதி said...
//இன்னொரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை//
மட்டன் பிரியாணிக்கும், சிக்கன் குழம்புக்கும் உயிர்களைக் கொன்றால் பரவாயில்லையா?
இதுதான் கொன்றால் பாவம். தின்றால் போச்சா??//

பிரியானி இல்லாம நம்ம அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி இயங்கும்?
பிரியானி கிண்ட கொஞ்சம் இடம் கொடுத்தாதல் தான் மக்களாட்சித் தத்துவம் தழைக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது பிரியாணி போன்ற மக்களாட்சித் தத்துவத்தின் அத்தியாவசியத்தை அசைத்துப் பார்க்கும் பதிவு.

அது மட்டுமல்லாமல் சன நாயகத்தின் குரல் வலையை நெறிக்கும் பதிவு. அரசில்வாதிகளுக்கு எதிரான பதிவு.

பொறுப்பான அரசியல் வாதிகளை அழைத்து போராட்டம் அறிவிக்கப் படும்.

Tamiler This Week