இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 2 July 2009

MGR vs VIJAY

வித்தியாசம் 1:
எம்ஜிஆர்: இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில் நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம்செய்தார்.
விஜய் : தமிழகத்திலே பிறந்தார்.இலங்கையிலே பெண் எடுத்தார்.தமிழக மக்களின் பொருமையைச் சோதிக்க வேண்டி சினிமாபீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.
வித்தியாசம் 2:
எம்ஜிஆர்: சினிமாவிற்குவருவதற்கு முன்னர் நாடகங்களில்சின்ன சின்ன அதாவது பிட்டுபிட்டான வேடங்களில் நடித்துசினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.
விஜய் : ஆரம்பம் முதலே பிட்டுபடங்களில் தான் அறிமுகமானார்.கேரளத்திலே ஷகிலா படம் எந்தஅளவிற்கு போனதோ அந்தஅளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது இவரதுபடங்கள். அதன் முழுவேலையையும் அவரதுதந்தைதான் கவனித்துக்கொண்டார்என்பது தான் இங்கே முக்கியமாகத்தெரிந்து கொள்ள வேண்டியவிசயம்.
வித்தியாசம் 3:
எம்ஜிஆர்: படங்களில்விதவிதமான வேடங்கள் போட்டுநடித்தார். நிறைய படங்களில்மாறுவேசம் போட்டுக்கொண்டுமுகத்தில் மரு வைத்துக்கொண்டுபாட்டுப் பாடிக்கொண்டே வந்துஉளவு பார்ப்பார். அந்த திரிலிங்கைரசிக்காதவர்களே இருக்க முடியாது.
விஜய் : மாறுவேசம்தேவையில்லை. சொந்த வேசத்தில் நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான்வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு போக்கிரி படத்துலபோட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு, சிரிச்சி சிரிச்சி சிரிப்ப நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போன ரசிக கண்மனிகள் இன்னும்திரும்பவேயில்லை.
வித்தியாசம் 4:
எம்ஜிஆர்: இவர் படங்களில்அதிகபட்சம் ஒரு வில்லன் தான்இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலேதுரத்திக்கொண்டு ஓடுவார். அதுமட்டுமின்றி அதிவேகமாகஓடிக்கொண்டிருக்கும் குதிரையில்ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.
விஜய் : இவர் படம் முழுவதும்வில்லன்கள் தான் உலாவருவார்கள். ஆனால்எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவதுஎதிரியை முட்டாளாக்கிவிட்டு(நம்மையும் தான்) சமாளித்துதப்பிவிடுவார். கதா நாயகியை மீட்கமோட்டார் படகு,ஹெலிகாப்டரில்துரத்திச்சென்று மீட்டுவருவார்.மேலிருந்து தாவி வந்து ஓடும்ரயிலில் சர்வசாதாரணமாகஏறுவார். உஷ்..,இப்பவே கண்ணக்கட்டுதே!
வித்தியாசம் 5:
எம்ஜிஆர்: தன் அண்ணன்சக்ரபாணியை எப்படியாவதுமுன்னனி நடிகராக்க வேண்டும் எனதன் படங்களில் அவருக்காகசிபாரிசு செய்தார்.அதன் மூலம்அவரும் நிறைய படங்களில் நடித்துஒரு சிறந்த நடிகராகஉருவெடுத்தார். அண்ணன் மீதுஅவ்வளவு பாசம் கொண்டவர் புரட்சித்தலைவர்.
விஜய் : தன் தம்பி நடிக்கவருகிறார் என தெரிந்ததும் எங்கேதனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ எனபயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்கமுடியோமோ அதையெல்லாம்பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில்பெரும்பங்காற்றிய வள்ளல். அந்தஅளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி.
வித்தியாசம் 6:
எம்ஜிஆர்: இவர் படங்களில்இவருக்கு நண்பர்களாக யாராவதுஒருவர் தான் (சந்திரபாபு, நாகேஷ்,தங்கவேல்) வருவார்கள். தலைவர் போடும் சண்டைக்காட்சிகளில்எல்லாம் அவர்களும் சேர்ந்துசண்டை போடுவார்கள்.
விஜய் : இவர் படங்களில்குறைந்தது 4 முதல் 6 நண்பர்கள்கூடவே வருவார்கள். ஆனால் சண்டைக் காட்சிகளில் காணாமல்போய் விடுவார்கள். காதலுக்குஉதவிசெய்யும் கருவேப்பிலைவேலை மட்டும் தான் அவர்களுக்கு.
வித்தியாசம் 7:
எம்ஜிஆர்: தன் ரசிகர்கள்கூட்டத்தில் அல்லது அரசியல்பொதுக்கூட்டங்களில் தன்வளர்ச்சிக்கு காரணமானரசிகர்களைப் பார்த்து "என்ரத்தத்தின் ரத்தமான அன்புஉடன்பிறப்புகளே" என பேச்சைத்துவக்குவார்.
விஜய் : தன் ரசிகர்களைஎன்றைக்குமே மதிக்காத,கண்டுகொள்ளாத இவர் ரசிககண்மனிகளைப் பார்த்து "டேய்....,பேசிக்கிட்டிருக்கோம்ல....,சைலன்ஸ்" அப்டின்னு கத்துவார்.
வித்தியாசம் 8:
எம்ஜிஆர்: இவர் படங்களில்எதிரிகளிடம் மாட்டி கொண்டு சிறையிலே அடைக்கப்படுவார்.எதிரிகளின்அகழிகளில் அடைக்கப்பட்டுள்ளசிங்கம்,புலி ஆகியவற்றோடுசண்டையிட்டு அவைகளைஅடக்கிவிட்டு தப்பிச்சென்று விடுவார்.
விஜய் : விலங்குகளோடுசண்டையிடுவது மிக சாதாரணவிசயம் எனக் கருதியதால் இவர்மிசின்களோடு சண்டையிடுவார்.நம்ம அலுவலகங்களில்சாதாரணமாகவே லிப்ட்எங்கயாவது மாட்டிக்கிட்டாகம்பிகளை வெல்டிங் வச்சித்தான்உடைத்து எடுப்பார்கள். ஆனால்தளபதியை லிப்ட்டுக்குள் வைத்துஅடைத்து தண்ணீருக்குள்முக்கிவிட்டுச் செல்வார்கள். அந்தசமயத்தில் கூட அதை மிகச்சாதாரணமாக உடைத்துக்கொண்டு வெளியே வந்து பாய்ந்து செல்வார்.இன்னும் கொஞ்ச நாளில் ஓடும்டிரைனை ஜல்லிக்கட்டு மாட்டைஅடக்குவது போல அதோடுசண்டையிட்டு நிறுத்துவது மாதிரி சீன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்டித்தான் புதுசுபுதுசா கண்டுபுடிக்கிறாய்ங்களோ!
வித்தியாசம் 9:
எம்ஜிஆர்: கத்திச் சண்டை,சிலம்பச் சண்டையில் மாவீரன்.இவர் படங்களில் சண்டைக்காட்சிகள் அற்புதமாக இருக்கும்.பாடல் காட்சிகளை இரண்டுகைகளை ஆட்டியே ஓட்டிவிடுவார்.
விஜய் : இவர் படங்களில்வாய்ச்சண்டை அதிகமாகஇருக்கும். கார்களில் குண்டுவைத்து கும்பலாக வெடிக்கும்போது இவர் மட்டும் அங்கிருந்துகூலாக நடந்து வருவார். கப்பலில் இருந்து கயிறு இல்லாமல்குதிப்பார், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டேசண்டையிடுவார். இன்னும்கொஞ்சம் நாட்களில் தன்னைதாக்கவரும் ஹெலிகாப்டரின்வாலைப்பிடித்து மலையில்அடிப்பது போன்ற காட்சிகள் வரலாம். பாடல் காட்சிகளில்இரண்டு கையை ஒரு மாதிரிமேலும் கீழும் ஆட்டிக்காட்டுவார்.இப்போது ஒரு கையைஉதறிக்காட்டுகிறார்.
வித்தியாசம் 10:
எம்ஜிஆர்: இவர் தன்னுடையரசிகர்களுக்கு எவ்வளவோமருத்துவ உதவிகள், திருமணஉதவிகள் போன்றவற்றைசெய்திருக்கிறார். ஆனால் இவர் செய்யும் உதவிகள் எதுவுமேவெளியே வராது.
விஜய் : இவர் 10 ஜோடிகளுக்குமிக ரகசியமாக இலவசத் திருமணம் செய்து வைப்பார். ஏழைகளுக்குஇலவச தையல் மிசின், இஸ்திரி பொட்டி வழங்கும் நிகழ்சிகளும் மிகரகசியமாகத் தான் நடக்கும்.காரணம் இவருக்கு விளம்பரமேபிடிக்காது என அவர் தந்தைசொல்லுவார். ஆனால் அடுத்த நாள்இந்த செய்தி, படங்கள் மற்றும்நான் செய்யும் உதவியை வெளியேசொல்லிக்கொள்வதே இல்லைஎன்ற இவரது பேட்டியும் எல்லாப்பத்திரிக்கைகளிலும் வந்துவிடும்.
வேண்டா வெறுப்புக்கு புள்ளயபெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்.

அஸ்கி புஸ்கி டிஸ்கி : எனக்கு மின்னஞ்சலாக வந்தது.. நான் பதிவிட்டுவிட்டேன். பதிவர்கள் யாராவது எழுதி இருந்தால் தெரிவிக்கவும்.. இணைப்புக் கொடுத்துவிடுகிறேன்.

பிற் சேர்க்கை:
இங்கே ஒரிஜினல் பதிவு இருக்கிறது.
http://kaludai.blogspot.com/2009/06/10.html
மெயிலில் சுட்டி அனுப்பியவர் : நண்பர் ஹேமந்த்.

15 Comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஜோசப் பால்ராஜ் said...

//விஜய் : தன் தம்பி நடிக்கவருகிறார் என தெரிந்ததும் எங்கேதனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ எனபயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்கமுடியோமோ அதையெல்லாம்பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில்பெரும்பங்காற்றிய வள்ளல். அந்தஅளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி //

இது சூப்பர் காமெடி மாப்பி.

அவரு தம்பி என்னமோ கமல் ரேஞ்சுக்கு திறமைசாலி மாதிரியும், அவர இவரு கவுத்துவிட்ட மாதிரியும்ல சொல்லியிருக்கு இதுல?

கயல்விழி நடனம் said...

//வேண்டா வெறுப்புக்கு புள்ளயபெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்.


இது செம பன்ச் மா....

நான் கூட நீ தான் சொந்தமா யோசிச்சியோன்னு கொஞ்சம் பெருமை பட இருந்தேன்...(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ன்னு பதில் சொல்லாத...)

Anonymous said...

சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌ நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போனும் போலத்தான் இருக்கு... சூப்பர்

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் சஞ்சய்

மங்களூர் சிவா said...

கார்க்கியை கலாய்க்க ஆயிரம் வழியிருக்க ஆயிரத்தோராவது ஆயுதத்தையும் எடுத்த உங்களை கன்னாபின்னாவென பாராட்டுகிறேன்.

☼ வெயிலான் said...

ஹைதையிலருந்து ஆட்டோ வந்துட்டிருக்குப்பூ!

பட்டாம்பூச்சி said...

கலக்கல் :)

அன்புடன் அருணா said...

அச்சச்சோ!

Anonymous said...

இஃகி, இஃகி என்று பழமைபேசி பாணியிலும் , ஹிஹி என்று நம் போன்ற சாமானியர் பாணியிலும் சிரிச்சாச்சு :)

நட்புடன் ஜமால் said...

ஜெம காமெடி தேன் ...

Sanjai Gandhi said...

நன்றி விஜய்.. :)

//அவரு தம்பி என்னமோ கமல் ரேஞ்சுக்கு திறமைசாலி மாதிரியும், அவர இவரு கவுத்துவிட்ட மாதிரியும்ல சொல்லியிருக்கு இதுல?//
எலேய் டுபுக்கு.. விஜய் என்ன பெரிய நடிகனா? அவர் இருக்கிற மாதிரியே இவரும் மாஸ் ஹீரோ ஆய்ட்டா என்ன செய்றது? ஒரு அஜித் பத்தலையா? விஜய் அஜித் எல்லாம் முதல் படத்துலையே பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதிச்சிட்டாங்களா? அதே மாதிரி கொஞ்ச வருஷத்துல இவர் தம்பியும் பெரிய ஆள் ஆய்டா? :) யோசி மச்சான்.. யோசி..

யக்கா கயலு.. இந்த கமெண்ட் போட்டு 2 நாள் சந்தோஷமா தூங்கி இருப்பியே.. நல்லா இரு.. :)

நன்றி மயில்.. :)

நன்றி ஆதவன்.. :)

Sanjai Gandhi said...

கார்க்கியை கலாய்க்க பெங்களூர் மேட்டர் போதும் மங்களூர் மாமா.. விஜய் எதுக்கு? :)

அப்டியே பிரியாணியும் அனுப்ப சொல்லுங்க வெயில்ஸ்.. ஹைதை ஆட்டோ ஆட்டோமேட்டிகா பெங்களூர்க்கு டைவர்ஷன் எடுத்துடுதாமே.. :))

நன்றி பட்டாம் பூச்சி :)

என்னாச்சி அருணாக்கா? சாருவா இப்படின்னு தலைப்பு வச்ச பதிவுக்கு நாங்க தான் இப்டி கமெண்ட் போடனும்.. :)

நன்றி அம்மனி அக்கா.. நலமா? :)

நன்றி ஜமால் பையா.. பீருக்கு மிக்சிங் என்னன்னு கண்டு பிடிச்சாச்சா? :)) :)

Kumar J said...

ஐயோ 😄😄😄😄 என்னால படிச்சு முடிக்க முடியல, ,சிரிப்புதான்

Kumar J said...

ஐயோ 😄😄😄😄 என்னால படிச்சு முடிக்க முடியல, ,சிரிப்புதான்

Tamiler This Week