இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 10 November 2007
வலையுலக வா(ல்)ழ் மக்கள் அனைவருக்கும் என் தாமதமான தீபாவளி நல் வாழ்ததுக்கள்.
தாமதாமா வாழ்த்து சொல்றதுக்கு அல்லாரும் மன்னிக்கோனுமுங்க.. செவ்வாய்க்கிழமை போன இந்த பாழாப்போன இண்டர்நெட் இணைப்பு புதன் கிழமை மதியம் வரைக்கும் வரலைங்க. அதான் யாருக்கும் விஷ் பண்ண முடியல. அப்பால ஊருக்கு போய்ட்டு இன்னைக்கு தான் வந்தேனுங்க.. வந்ததும் ஒரு வாழ்த்து பதிவு போட்டுடேனுங்க. 2 நாள் ரொம்ப சந்தோசமா இருந்துச்சிங்கோ.
ரொம்ப நாளைக்கு( வருஷத்துக்கு:P) அப்புறம் என் நெருங்கிய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்... பயங்கர ஜாலிதான் போங்க.. மதியம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனாலும் போனோம்.. எதுக்குடா இவனுங்கள உள்ள விட்டோம்னு அந்த மேனேஜர்( அல்லது மொதளாலி) மற்றும் எங்களுக்கு சர்வ் பண்ண அந்த நண்பர்(சர்வர்) மூஞ்சிய பாத்தாலே தெரிஞ்சது.. கொஞ்சம் ஓவராத் தான் அலம்பு பண்ணிட்டோம் :). நல்ல வேள இரவு உணவுக்கு போல.. :)).
அப்புறம்... நீண்ட வருடங்களுக்கு பிறகு நெறைய சொந்த பந்தங்கள பாத்துட்டேன். எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க... நானும் வழக்கமா சொல்ற பதில சொல்லி எஸ்கேப் ஆய்ட்டேன். :P
( நான் இங்க இல்லாத இந்த நாலு நாள்ல எங்க சங்கத்துல ஏகப்பட்ட மாற்றங்கள பண்ணி இருக்காங்க.. ஒரு நட எட்டிப் பாத்துட்டு வந்துடறேன். )
Monday, 5 November 2007
எங்க ஊர் குடும்பப் பெயர்கள். செம டமாசு :))
எங்க ஊர்ல எல்லா குடும்பங்களுக்கும் எதாவது ஒரு குடும்ப புனைப்!? பெயர் இருக்கும். அதெல்லாம் படு வேடிக்கையா இருக்கும். இப்போ வரைக்கும் அதுல பாதிப் பேருக்கு மேல என்ன அர்தம்னு தெரியாமலே நானும் அவங்கள அப்டியே தான் அடயாளப் படுத்திகிறேன் :P .
எங்க ஊர்ல இருக்கிரவங்களோட பாதிப் பேர் எனக்கு மறந்துப்போச்சி :( மாதம் ஒரு முறை ஊருக்கு போயும். நான் வீட்டுக்கு போனா எங்க வீட்ட தவிர வேர எங்கயும் போறதில்ல. பக்கத்து வீட்டுக்கோ அல்லது பக்கதுல இருக்கிற தாத்தா வீட்டுக்கோ கூட.
( எங்க ஊர்ல பாட்டி என்ற சொல்லே வழக்கில் இல்லை :). பாட்டியும் எங்களுக்கு தாத்தா தான். எங்க சுத்து பட்டு ஊர்ல எல்லாம் இதே நெலமை தான்).
யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்.. அதே போல ஊர்ல கூடவும் அவ்வளவா பேசவும் மாட்டேன். வீட்ல அத விட மோசம்.ஊர்ல எனக்கு அமைதியின் சிகரம்னு பேரு :P.
சரி மேட்டருக்கு வரேன். பாதிக்கு மேல மக்கள் பேரு எனக்கு மறந்துட்டதால ஞாபகம் இருக்கிற கொஞ்சம் பேர மட்டும் உங்களுக்கு சொல்றேன்.
பொன்னமூட்டு மணி
குந்துகாலமூட்டு ஜெகதீசன்
வண்ணாமூட்டு முருகன்
கொங்காமூட்டு பழனி
நெண்டுக்காமூட்டு வரதன்
தெருக்மோட்டு குப்பன்
ஜினுங்கூட்டு மணி
குண்டமூட்டு குப்புசாமி
மூக்கமூட்டு சிவாஜி
காளையமூட்டு அம்பு( அன்பு)
கரியமூட்டு முருகன்
புட்டமூட்டு சொக்கு
வெள்ளூட்டு பிரகாசம்
ஜொள்ளமூட்டு பன்னீர் :P
மொட்ட ஊட்டு தருமன்
கெழக்குமோட்டு கைலாசம்
வடக்குமோட்டு புட்டன்
புக்கமூட்டு முருகன்
அம்மாசியூட்டு குமார்
தீத்தாமூட்டு குமரன்
புட்டுக்கொள்ளமூட்டு சங்கர்
மீசகாரமூட்டு சாமிக்கண்ணு
மோட்டமூட்டு மணி
குப்பமூட்டு காமராஜ்
செங்காமூட்டு மணி
ஊர்கவணமூட்டு_______( சொல்ல மாட்டோம்ல)
ஊடு என்றால் வீடு....
குப்பமூட்டு = குப்பன் + ஊட்டு = குப்பன் வீட்டு
அதாவது குப்பமூட்டு காமராஜ் என்றால் காமராஜின் அப்பாவோ அல்லது தாத்தாவோ அல்லது கொள்ளுத்தாத்தாவோ குப்பன் என்ற பெயரில் இருப்பார் அல்லது இருந்து இருப்பார். :)
இந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள( எல்லாரும் எனக்கும் சொந்தக்காரங்க தான்) எல்லோரும் இன்னும் இருக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்று சுமார் 200 பெயர்களுக்கு மேல் எனக்கு தெரியும். இப்போ எல்லாம் மறந்துப் போச்சி. ( எல்லாம் இந்த நகரத்துப் பசங்களோட கெட்ட சகவாசம் :P )
Sunday, 4 November 2007
தமிழ்மணத்தில் என் பதிவுக்கான மறுமொழிகள் தெரிய என்ன செய்ய வேண்டும்?
தலைப்பை படித்துவிட்டு கொஞ்சம் விளக்கமாக இந்த( என்னோட) மரமண்டைக்கு புரியர மாதிரி சொல்லி தர முடியுமா? :(
Saturday, 3 November 2007
கோவையில் இசை மழை.. சும்மா அதிரப் போகுதுல..
கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கோவைல சூரியன் FM and ரெய்ன்போ FM மட்டுமே இருந்தது. ரெய்ன்போ FM பத்தி சொல்லவே வேணாம். அவங்களும் அவங்க வர்ணனைகளும்... சகிக்காது.. இந்த சூரியன் FM அதுக்கு மேல.. விளம்பரத்த போட்டே கொன்னுடுவாங்க. வெரைட்டியான நிகழ்ச்சிகளும் இல்ல. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் போன் பேசரது தான். ஒரே மொக்கைபா( அத நான் சொல்றேன் :( ). அதனால என் மொபைல்ல FM கேக்கற வசதி இருந்தும் அத யூஸ் பன்னாம இருந்தேன்.
அட வீணா( என் ஆளு இல்ல) போன பொடியா.. என்னடா சொல்ல வறனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி என் மனசாட்சி( இது நிஜமா.. யார்னா மனசாட்சி பத்தி ஒரு பதிவு போடுங்கப்பா.. போட்டிருந்தா தந்தி குடுங்க) என்ன தல கீழ தொங்க விட்டு கேக்குதுபா :(
இப்போ நம்ம கோவைல(நான் கோவைல இருக்கேன் என்கிற அரிய தகவலை உங்ககிட்ட சொல்லியாச்சிபா:P) FM ரேடியோஸ் லைன் கட்டி அடிக்கிறாங்கபா. ரேடியோ மிர்ச்சி..செம ஹாட்டு மச்சி... ஹலோ FM.. இதான் ரைட் நம்பர்... ரேடியோ சிட்டி .. இவங்க எல்லாம் இப்டி க்யூ கட்டி அடிக்கிறாங்கபா... இவங்க எல்லாம் இப்போதைக்கு சோதனை(ஒலிபரப்பு) பண்ணிட்டு இருக்காங்க... சோதனையை ஒலிபரப்போட நிறுத்திப்பாங்கனு நம்புவோம். நிகழ்ச்சில சோதிக்காம இருந்தா சரி.
இப்போ என் மொபைல எத்தன வாட்டி சார்ஜ் பன்றேன்னு எனக்கே தெரியலபா.. :). கோவை இப்போ குளிருதுனு மட்டும் சொல்லிட்டிருந்த நாங்க இனி கோவை அதிருதுனு சொல்லப் போறோம்ல :P. இந்த பதிவ எழுதும்( அல்லது டைப் பன்னும்) போது கூட ரேடியோ மிர்ச்சி( சுச்சிய தான் ரொம்ப மிஸ் பன்றேன்) கேட்டுட்டு தான் இருக்கேனாக்கும். ;)
ரேடியோ மிர்ச்சில வர அந்த கானா பாட்டு..அட அட.. சொகமா தான் கீதுபா..
Friday, 2 November 2007
இலவசக் கொத்த்னார் கேள்விகளுக்கு பதில்கள்.
நண்பர்களே இலவசக் கொத்தனார் தன் இலவசம் வலைப்பூவில் குயிஜ( அப்டித்தான் அவா சொல்றா ) போட்டி நடத்துறார். அதில் நானும் பங்கு பெற்று சில பதில்களை சொன்னேன். அந்த கேள்விகளுக்கு பதில் தேடியதில் பல அரிய விஷயங்கள தெரிஞ்சிகிட்டேன். அதுக்கு கொத்தனாருக்கு ரொம்ப நன்றி. நான் சொன்ன பதிலில் ஒன்றை மட்டும் தவறு என்று சொல்லிவிட்டார் (இப்படி ஏமத்திட்டயே கூகுள்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ) இன்னும் இரண்டு பதில்களை Pending வச்சிருக்கார். அவர் நெனைக்கிற பதில சொல்லனுமாம். (எனக்கு ஜோசியம் தெரியாதுனு யார்னா சொல்லுங்க அவர்கிட்ட ப்ளீஸ்). எது எபப்டியோ உண்மையில் அது மனம் விட்டு பாராட்டக் கூடிய செயல். எனக்கு நேத்து தான் இந்த குயிஜ பத்தி தெரிய வந்தது. அதனால இந்த வாட்டி பெரிசா கண்டுக்கல..( மண் ஒட்ட விட மாட்டோம்ல ... இதுல கொஞ்சம் பேரு எல்லாத்துக்கும் சரியான பதில வேற சொல்லிட்டாங்க.. எப்டித்தான் முடியுதோ.. அவ்வ்வ்வ்வ் :( ).
சரி இப்போ தலைப்புக்கு வரேன்.. அதாவது யார்க்காச்சும் கொத்தனார் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சதுனா அங்கன போய் சொல்லுங்கண்ணேன். உங்க அறிவ பத்தி அல்லாரும் தெரிஞ்சிக்கட்டும். என்னத்த பெரிய அறிவு.. எல்லாரும் முன்னாடியே பதில தெரிஞ்சிகிட்டா சொல்றாய்ங்க.. எல்லாம் கூகுள் , விக்கிபீடியா புண்ணியதுல தான சொல்றாங்கனு யாரும் சலிச்சிக்காதிங்க. அதுல சரியா தேடரதுக்கும் நமக்கு கொஞ்சமாச்சும் அறிவு வேணுமாக்கும். ஆகவே பெரிசுகளே பொடிசுகளே அங்கிட்டு போய் பதில சொல்லுங்க. அப்போ தான் இது மாதிரி நல்ல சமாச்சாரங்களும் தமிழ் வலைப்பதிவு உலகத்துல அப்பப்போ கெடைக்கும்.
( ஹிஹி.. அந்த கேள்விங்களுக்கு இங்க பதில் இருக்கும்னு நெனச்சி வந்திங்களாக்கும்.. அஸ்கு.. புஸ்க்கு..அப்பள வட... அந்த கேள்விங்கள தயார் பண்ண அவர் எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பார்?)
மேலும் என் வலைப்பூ தமிழ்மணத்தில் இன்று ( கொஞ்ச நேரத்துக்கு முன்னால ) சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதால் அதில் தெரியுமாறு ஒரு பதிவை போடுவது என்று நினைத்ததாலும் தமிழ்மணத்தில் தெரியப் போகும் முதல் பதிவிற்கு பெருமளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும் என்ற அரிய நோக்கத்திற்காகவும் தான் இந்த பதிவிற்கான தலைப்பு வைக்கப் பட்டதெயன்றி வேறெந்த உள் ( குத்தும்) நோக்கமும் இல்லை என்பதை உங்கள் முன்னிலையில் தெரிவித்துக் "கொல்ல" கடமைப்ப் பட்டுள்ளேன்.
நன்றி..வணக்கம்.. மீண்டும் வருக..
(பிகு: இந்த ஒடம்பு எவ்வளவு அடி தாங்கும் என்பதை தெரிந்துக் கொண்டு அடிக்கவும்.. அப்புறம் கொலக் கேசு ஆய்டும்..ஆமா.. :P )