இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 16 November 2007

இந்த காலத்து குட்டீஸ் - பதில்

டியர் அமாஸ்..( அத்தைஸ் and மாமாஸ்)
என்னோட இந்த காலத்துக் குட்டீஸ் - ஒரு போட்டி மாதிரி பதிவுக்கு கிடைத்த அமோக:( ஆதரவையும் வரலாறு:( அஜித் படம் இல்ல) காணாத வரவேற்பையும் கண்டு சொல்லவொண்ணா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...) அந்த ஆனந்தத்தில் இருந்து கொஞ்சம் என்னை விடுவித்துக் கொண்டு பதிலை சொல்லி விடுகிறேன். இன்றும் சொல்லவில்லை என்றால் ஜெஸிக்கா அத்தை என்னைக் கொன்றுவிடுவார். :P .


காட்சி 1 : அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

காட்சி 2 ( போட்டிக்கானது): அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

அடுத்து அங்க நடந்தது:

அந்த டீலர் மாமா வருவதற்குள் நம்ம சங்கத்து ஆள் போனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார். டீலர் மாமா அங்கு வந்து நம்ம ஆளிடம் போனை கேட்டிருக்கார். அதற்கு நம்ம ஆள் சொன்ன பதில் " இப்போ நான் பேசிட்டிருக்கேன்ல.. எதுக்கு தொந்தரவு பன்றிங்க.. அடிச்சிடுவேன் போங்க".
( அந்த டீலர் மாமா அழுது கொண்டே எல்லாம் போய்விட வில்லை.. மகனின் சாதுரியத்தயும் வால் தனத்தையும் நினைத்து அவன் தலையில் லேசாக தட்டி போனை வாங்கி பேசினாராம்.:-) இதில் கற்பனை எதும் இல்லை. அவர் சொன்னதை அப்படியே இங்கு சொல்லிவிட்டேன்.)

அதான் தலைப்பிலே சொல்லி இருக்கேன்ல.. இந்த காலத்துக் குட்டீஸ்னு.. சட்டுடு புரிஞ்சிக்க வேணாமா? :) . உங்க வீட்லயும் இது மாதிரி குட்டீஸ் வால்த் தனம் எதும் நீங்க ரசிச்சி இருந்தா kuttiescorner@gmail.com க்கு அனுப்பி வைங்க.. நிலா(அப்பா) அத படிச்சிட்டு குட்டீஸ்கார்னர்ல போடுவார். நீங்க ரசிச்சத நாங்களும் ரசிக்கிறோமே.. ரெடி..ஸ்டார்ட்... அனுப்பிடு சீசே... :)

7 Comments:

Anonymous said...

அப்ப எனக்கு பரிசு இல்லயா...சரி சரி நானும் ஒரு போட்டி வெச்சிருக்கென் பதில் போடுப்பா...

வித்யா கலைவாணி said...

ஆமா அந்த டீலர் மாமா யாருன்னு சொல்லவே இல்லையே!
ஆமா இதுக்கும் நந்து அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம். தெரியாமத்தான் கேக்கிறேன்.

Sanjai Gandhi said...

// இம்சை said...

அப்ப எனக்கு பரிசு இல்லயா...சரி சரி நானும் ஒரு போட்டி வெச்சிருக்கென் பதில் போடுப்பா...//

யாருக்குமே இல்ல.. :))
உங்க போட்டிக்கு பதில் சொல்லியாச்சி அங்கிள். :)

Sanjai Gandhi said...

//ஆமா அந்த டீலர் மாமா யாருன்னு சொல்லவே இல்லையே!// சொன்னாலும் உங்களுக்கு தெரியாது ஆண்ட்டி.. நான் அப்புகிட்ட சொல்லிட்டேன். :)

Sanjai Gandhi said...

//ஆமா இதுக்கும் நந்து அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம். தெரியாமத்தான் கேக்கிறேன்.//
நானும் தெரியாமத் தான் கேக்கறேன். இதுக்கும் அவருக்கும் சம்பந்தம்னு நான் எப்போ சொன்னேன்? :(((

Anonymous said...

this is cheating...naanthaan ippidi solli iruntheney??அந்த டீலர் மாமா வருவதற்குள் நம்ம சங்கத்து ஆள் போனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார். //

மங்களூர் சிவா said...

நான் ஆட்டத்துக்கு உண்டா??
நான் இங்க மங்களூர்ல பன்றதெல்லாம் மெயில் அனுப்பினா குட்டீஸ் கார்னர்ல போடுவாரா நிலா அப்பா?

Tamiler This Week