இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 30 November 2007

அகில உலக ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கம் - இன்று முதல் உதயம்

ஸ்ரேயா கோஸ்வாமி நற்பணி மன்றத்தில் சேர விரும்பிய எங்க சங்கத்து சிங்கத்தை சேர்க்க மாட்டேன் என்று கூறி ஆவமானப் படுத்தியதோடு நிற்காமல் எங்க சங்கத்தயும் அசிங்கப் படுத்தி மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தாக்கி எங்களை சினம்கொண்டு எழச் செய்துவிட்டார் குசும்பன் மாமா.
ஆதாரம் :
"குசும்பன் said...

Baby Pavan said...
நாங்க அலவ்டா அங்கிள்....////

உங்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை, சின்ன புள்ளைங்கள கெடுக்கிறேன் என்று கெட்ட பேர் எனக்கு வந்துவிடும், இப்ப யார் குழந்தை நட்சத்திரம் என்று தெரியவில்லை, இருந்தா அவுங்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுங்க:))) "

இதனால் பொங்கி எழுந்த நாங்கள் , குசும்பன் அங்கிளுக்கு போட்டியாக இன்று முதல் அகில உலக ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு காலத்துல TV யில I Love You Rasna சொன்ன அந்த குட்டிப் பொண்ணு இப்போ பெரிவளாகி காலேஜ் போராளாம். அதனால் அவள் பெயரில் ஒரு சங்கம் ஆரம்பிப்பதாக நினைத்த போது தானே விரும்பி தலைமைப் பொறுப்பை ஏற்பதாக சொன்ன தன்னார்வலர் கட்டை பிரம்மச்சாரி மங்களூர் சிவா மாமாவை தலைவராகவும், வயாதானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையாத(நன்றி : நீலாம்பரி) வலையுலகத் தல சிபி மாமாவை ஆயுட்கால ஆலோசகராகவும் கொண்டு இன்று முதல் சங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கத்தார் கிளையை தனக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்து கோஸ்வா மன்றத்திலிருந்து வெளியேறிய ரசிகன் மாமாவிற்கு அகில வளைகுடாவின் பொறுப்பு வழங்கப் படுகிறது. எங்கு ரசிகர்.. ஸாரி... நற்பணி மன்றம் ஆரம்பித்தாலும் முதல் ஆளாக சேரும் ஆயில்யன் அங்கிள் கத்தார் 144வது வார்டு பொறுப்பாளர் பதவி கொடுத்தால் கூட போதும் என்றுக் கேட்டு இணைந்திருக்கிறார். இப்படியாக கோஸ்வா மன்றத்திலிருந்து அனைவரும் ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கத்தில் இணைந்து விட்டதால், யாருமே இல்லாத டீ கடைல யாருக்குத் தான் டீ ஆத்துவது என்று புலம்பிக் கொண்டிருந்த குசும்பன் அங்கிள் ரஸ்னா பொண்ணு சங்கத்தின் ஒருன்கிணைப்பாளர் பதவி குடுத்தால் எங்க சங்கத்து இளஞ்சிங்கம் பவனிடம் நிபந்த்தனையற்ற?!! மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கடிதம் அனுப்பி உள்ளார். பரிசீலிக்கப் படும்.

சங்கத்தில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. விருப்பமான பதிவிகளை நீங்களே பரிந்துரைக்கலாம்.

14 Comments:

Baby Pavan said...

வந்துட்டோம்ல

Baby Pavan said...

எனக்கு ரஸ்னா ரொம்ப பிடிக்கும்

ஆயில்யன் said...

குசும்பு நண்பா எனக்கு தெரியாமலே என்னைய ஈஈஈநத சங்கத்துல சேர்ந்துட்டாங்க தலைவா!

நீங்க நம்பாதீங்க!

நான் என்றும் ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றத்தின் ஆணாக - சாரி - தூணாக இருப்பேன் என்றும் இங்கும் கூறிக்கொள்கிறேன்!

ஆயில்யன் said...

பொடி தம்பி!

அது யார் கோஸ்வாமி??????????


சின்னபயலுங்கன்னு எங்க தலைவன் சொன்னது கரெக்ட்த்தான்!

ஆயில்யன் said...

ஐ லவ் யூ ரஸ்னா சொன்னப்ப எப்படி இருந்துச்சோ அப்படியேத்தான் இருக்குது அந்த பாப்பா

அதுக்குப்போய் தனியா சங்கம்லாம் வைச்சு

என்ன கொடுமை பொடி....??????

ஆயில்யன் said...

ஒன் சுமால் ரிக்வெஸ்ட்!

சங்கம்லா வேண்டாம்! வேணும்னா அந்த பாப்பாவ குட்டீஸ் கார்னர்ல அட்மிஷன் போட்டு சேர்ந்துக்கோங்கப்பா!

அதவிட்டு சங்கமாம் சங்கம்!!!

Sanjai Gandhi said...

//Baby Pavan said...

எனக்கு ரஸ்னா ரொம்ப பிடிக்கும//
உன்ன ஏன் குசும்பன் அங்கிள் அவர் மன்றத்துல சேக்கலனு இப்போ தான் புரியுது.. :P

Sanjai Gandhi said...

//ஆயில்யன் said...

குசும்பு நண்பா எனக்கு தெரியாமலே என்னைய ஈஈஈநத சங்கத்துல சேர்ந்துட்டாங்க தலைவா!

நீங்க நம்பாதீங்க!//
சரி சரி டோர குளோஸ் பண்ணுங்க.. உள்ள பாருங்க எவ்ளோ ஈ போகுதுனு. :P

Sanjai Gandhi said...

//ஆயில்யன் said...

ஐ லவ் யூ ரஸ்னா சொன்னப்ப எப்படி இருந்துச்சோ அப்படியேத்தான் இருக்குது அந்த பாப்பா

அதுக்குப்போய் தனியா சங்கம்லாம் வைச்சு

என்ன கொடுமை பொடி....??????//

பாத்திங்களா.. பெருசுனு கன்பர்ம் பண்ணிட்டிங்க :)ஸோ உங்களுக்கு 144வது வார்டு பொறுப்பு வேணாம்.. விடுங்க பாத்துக்கலாம்.எங்க போய்டப் போறிங்க.. :)

Sanjai Gandhi said...

//ஆயில்யன் said...

ஒன் சுமால் ரிக்வெஸ்ட்!

சங்கம்லா வேண்டாம்! வேணும்னா அந்த பாப்பாவ குட்டீஸ் கார்னர்ல அட்மிஷன் போட்டு சேர்ந்துக்கோங்கப்பா!

அதவிட்டு சங்கமாம் சங்கம்!!!//

குட்டீஸ்கார்னர்ல மை பிரண்ட் அத்தைக்கு அட்மிஷன் குடுத்தப்பவே எனக்கு தெரியும்.. இப்படி வயசு வித்தியாசம் இல்லாம அட்மிஷன் போட வேண்டி இருக்கும்னு.. :))
என்ன கொடுமை ஆயிலயன் அங்கிள் இது? ;P

Ponnarasi Kothandaraman said...

:O Ithu rasna ponna? Ninga sonathum naa kutty paapa nu nenacheney :O

Marutham said...

Andha kutty papaava idhu?? :)
CUTE She is....

மங்களூர் சிவா said...

//
தானே விரும்பி தலைமைப் பொறுப்பை ஏற்பதாக சொன்ன தன்னார்வலர் கட்டை பிரம்மச்சாரி மங்களூர் சிவா மாமாவை தலைவராக கொண்டு இன்று முதல் சங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது
//
ஆமா எதா இருந்தாலும் நீங்க தலைவர் என்கிட்ட பேசுங்க பாப்பாட்ட நான் பேசுறேன் :-)))))))

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

//
தானே விரும்பி தலைமைப் பொறுப்பை ஏற்பதாக சொன்ன தன்னார்வலர் கட்டை பிரம்மச்சாரி மங்களூர் சிவா மாமாவை தலைவராக கொண்டு இன்று முதல் சங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது
//
ஆமா எதா இருந்தாலும் நீங்க தலைவர் என்கிட்ட பேசுங்க பாப்பாட்ட நான் பேசுறேன் :-))))))//

ஸாரி மாம்ஸ்.. அவங்க மேனேஜர்( நான் தான்:P) அந்த சங்கத்துல சேரக் கூடாதுனு பாப்பா சொல்லிடிச்சி...:D

Tamiler This Week