இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 31 August 2008

கூகுளில் தமிழ் தேடல் - கொஞ்சம் புத்சு..

இப்போது கூகுளை பயன்படுத்தி தமிழில் தேடுவது மிகவும் சுலபம் மற்றும் மிக நவீனம். கூகுள் இந்திய தளத்திற்கு சென்று தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து , பின் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தேடம் போது அதற்குரிய தமிழ் வார்த்தைகளை தேடு பொறி பரிந்துரைக்கிறது. அந்த பரிந்துரைக்கு நேரே அந்த தேடுதலுக்குரிய வார்த்தைக்கு எத்தனை பதில்கள் இருக்கின்றன என்பதையும் காண்பிக்கிறது. முயற்சி பண்ணுங்க.

Monday, 25 August 2008

கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள் சார்பில்

ஜோசப் அண்ணாச்சியின் சமீபத்திய பதிவில் உடன்பாடு இல்லாததால் "கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள்" சார்பில் ஒரு பதில்பதிவு..

//வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான். //
ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. //
//
அது தான் நட்பு... எந்த ஒரு சராசரி மனிதனும் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன் தான். இந்த பதிவை எழுத அவருக்கும் உணர்ச்சிபூர்வமான காரணம் எதுவும் இருக்கலாம். அதனால் சட்டென உணர்ச்சிவசப் பட்டு எழுதி இருக்கலாம். அது தவறு என்று புரியவைத்து அவரை மீண்டும் எழுதுங்கள் என்று " கொஞ்சுவது அல்லது கெஞ்சுவது" நண்பர்களின் விருப்பம். அதை "தொடர்கதை" என்று சொல்லி நீங்கள் கொச்சை படுத்தினாலும் பரவாயில்லை. அந்த கொஞ்சலையும் கெஞ்சலையும் மதித்து அவர் மீண்டும் எழுத வருவது நண்பர்களுக்கு அவர் தரும் மரியாதை தானே ஒழிய வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

//நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க,//

இது வரை சரிதான்..
//இனிமே எழுதாதீங்க. //
ஆனால் இது எதோ உத்தரவு மாதிரி அல்லவா இருக்கு? :(

//உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை.//
நல்ல கொள்கை. மெச்சுகிறோம். யாருக்கும் என்ன மாதிரியான கொள்கை வேணாலும் இருக்கலாம். தவறில்லை. அதே போல் அவருக்கும் கொள்கை இருக்கலாம். விளையாட்டாய் விடைபெறுகிறேன் என்று சொல்லவோ.. அல்லது உணர்ச்சிவசப் பட்டு விடைபெறுகிறேன் என்று பதிவிடவோ அவருக்கும் உரிமை இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

//மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.
//

இது நிஜமா நல்லவருக்கு... ரொம்ப நல்ல வரிகள். மத்தவங்க கூப்பிடறாங்கன்னு வந்துடாதிங்கன்னு உங்க ஈமெயில் முகவரி கூட தெரியாத ஜோசப் உரிமையோட சொல்ற மாதிரி.. உங்களோட வாரத்தில் 4 நாட்களாவது பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கும் நான் உரிமையோட சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத வாங்க.

இது ஜோசப் அண்ணாவுக்கு,
அண்ணா அவர் எழுதலைனா நிச்சயம் நாடு ஒன்னும் கெட்டு பொயிறாது. ஏன்னா ஆக்கப் பூர்வமான படைப்புகளை எழுத நீங்க இருக்கிங்களே. அதுவே போதும் நாடு கெட்டு போகாமல் இருக்க. ஆனால் பணிச்சுமையின் காரண்மாக நினைத்த நேரத்தில் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேச முடியாமல் இருக்கும் எங்களை போன்ற மொக்கை பதிவு நண்பர்களுக்கு வலைபதிவு தான் அழகான தொடர்பு கருவி. ஆகவே எங்கள் நட்பு குறையாமல் இருக்கவாவது அவர் திரும்ப பதிவு எழுதியே ஆகனும்... அவரை வர வெண்டாம் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பது போல் தெரியவில்லை. ஏன்னா உங்க கிட்ட அவரோட மின்னஞ்சல் முகவரி கூட இருப்பதாக தெரியவில்லை... ஆனால் நான்க்காள் மின்னஞ்சலில் மட்டும் இல்லாமல் தொலைபேசியிலும் பேசும் அளவுக்கு நல்ல நண்பர்கள். ஆகவே எனக்கு அவரை மீண்டும் எழுத வைக்க உரிமை இருக்கு.

//எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? //
அவர் என்ன மூலப் பொருளை கொண்டு உற்பத்தி செய்யும் இயந்திரமா? மூலப் பொருள் தீர்ந்துவிட்டது.. இனி எதும் தயாரிக்க முடியாது என்று சொல்ல.. இன்று எழுத அவருக்கு ஒன்றும் இல்லாமல் போனாலும் நாளையே அவருக்கு எதாவது எழுத கிடைக்கலாமே.... அதும் இல்லாம இத்தனை பேர் திரும்ப வாங்கன்னு கூப்பிடறத( அதாவது அப்படி கூப்பிடும் எங்களை) கேள்வி கேக்க நீங்க யார்ணே..? //மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? //
இது மோசமான வரிகள். முடியாது என்று சொல்பவரை ஊக்கப் படுத்தி ஓட வைக்க வேண்டுமே ஒழிய.. அப்பாடா போட்டியில ஒருத்தன் ஒழிஞ்சான். நமக்கு குறைந்த பட்சம் ஒரு இடமாவது முன்னாடி கிடைக்கும் என்று நினைப்பதை என்னவென்ரு சொல்ல?

//எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது.//
நல்லா ஜோசியம் பாப்பிங்க போல.. :).. ஏன்ணே.. ஜோசப் அண்ணே.. காரணமே இல்லாம எதுக்குண்ணே சொல்லனும்? ஒரு நையாண்டித்தனமான காரணமாவது இருக்கும்ணே.. நீங்க ஏன்ணே இம்புட்டு அவசரப் பட்டு அவரை துரத்துவதிலேயே குறியாக இருக்கிங்க? :(


// எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ? //
அது கெஞ்சறவங்களோட( அதாவது எங்களோட) இஷ்டம்ணே.. அவர் எங்களுகெல்லாம் அந்த அளவுக்கு நல்ல நண்பர். அதனால் கெஞ்சறோம். உங்களுக்கு ஏன் எரியனும்?.. வேணும்னா இந்த மாதிரி நீங்க ஒரு பதிவு போட்டு பாருங்களேன்.. எத்தனை பேர் உங்களை கெஞ்சறாங்கன்னு பாக்கலாம்.. :))

//நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.//
இதனால் உங்களுக்கு எங்கே ஆண்ணா குறைந்துவிட்டது? யார் என்ன அறிவித்தால் உங்களுகென்ன? அது அதிகரித்தே போனாலும் உங்களுகென்ன?.. அந்த மாதிரி பதிவர்கள வசிப்பதை நிறுத்திவிட்டால் போச்சி.. அதற்கு ஏன் தனி பதிவு போடனும்? இதற்கு முன் எத்தனை பேர் இப்படி அறிவித்திருக்கிறார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் நீங்க எங்கே போனிங்க? ஏன் நிஜமா நல்லவருக்கு மட்டும் ஆப்படிக்க முயற்சி பண்றிங்க? :)

// இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. //
நீங்க இந்த பதிவை எழுதி இருபப்து கூட சூடாண இடுகையில் இடம்பிடிக்கும் உங்கள் ஆசையாகத் தான் தெரிகிறது.. ஏன்.. நான் உங்களுக்கு எழுதும் இந்த பதிவு கூட சூடாண இடுகையில் வரும்.. அதற்கெல்லாம் என்ன செய்ய முடியும் அண்ணா? அதிகம் பேர் பார்க்கும் பதிவு சூடாண இடுகையில் வரத்தான் செய்யும்.. சூடாண இடுகையில் இடம் பிடித்தாம் விருதோ அல்லது பணமோ தராங்களா? இதை ஏன் கேள்விக்கு உள்ளாக்குகிறீர்கள்?... தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பிடிப்பது எபப்டி என்று நான் ஒரு பதிவு போட்டேன். அந்த பதிவில் வெறும் நாங்கு வரிகள் எழுதினேன்.. "இந்த பதிவு சூடான இடுகையில் வரும் பாருங்க" என்பது போல். விஷயமே இல்லாத அந்த பதிவும் சூடாண இடுகையில் வந்தது. அதுக்கு யாருமே எனக்கு பணம் தரலைணே.. எங்களை போன்ற மொக்கை பதிவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு.. அவ்வளவுதான்.. இதை ஏன் சீரியசா எசுத்துகிறீங்க?

//இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து. //

இது உங்கள் கருத்தாக மட்டும் இருக்கும் பட்சத்தில் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் இது உத்தரவாக மாரும் பட்சத்தில் தான் உங்களை கேள்வி கேக்கத் தோன்றுகிறது.

//தமிழ் மணத்திற்கு : // முதலில் நீங்கள் தமிழ்மணத்தை கேள்வி கேட்பதையே நான் விமர்சிக்க விரும்புகிறேன். நான் தமிழ்மணத்தை பல முறை கேள்வி கேட்டிருக்கிறேன். அவர்களை விமர்சித்து இருக்கிறேன். தமிழ்மணத்தில் என் பதிவை சேர்த்த நாள் முதல் இன்று வரை பல வடிவமைப்புகளை மாற்றியும் தமிழ்மணத்தின் லோகோ என் வலைப்பூவில் இடம் பெற செய்திருக்கிறேன். அவர்கள் என் வலைப்பூவை திரட்டுகிறார்கள் இலவசமாக. அதற்கு பதிலாக நான் அவர்களுக்கு என் வ்லைப்பூவில் இணைபு கொடுத்துள்ளேன். இந்த குறைந்த பட்ச புரிதல் கூட உங்களுக்கு இல்லை. உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டிய போதிலும் நீங்க அவர்களுக்கு இணைப்பு தரவில்லை. ஆனால் "திரட்டி" எனும் திரட்டிக்கு இணைப்பு கொடுத்திருக்கிங்க. அப்படி இருக்கும் போது தமிழ்மணத்தை எப்படி உங்களால் கேள்வி கேட்க முடிகிறது?.. நிஜமா நல்லவரின் பதிவு சூடாண இடுகையில் வருகிற ஒரே காரணத்திற்காகவா? :)

//சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ? //
என் சிற்றறிவுக்கு எட்டியவரை அதிகம் பேர் அல்லது அதிகம் முறை பார்க்கப் படும் பதிவு தானாகவே சூடான இடுகைகளில் இடம் பிடிக்கிறது.

//பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா? //

பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தே என்று நினைக்கிறேன்.

//ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன? //

மொக்கை பதிவுகள் என்பதற்கு உங்களால் விளக்கம் தர முடியுமா?. . . என்னங்கய்யா ஆளாளுக்கு மொக்கை பதிவு மொக்கை அப்திவு சவுண்டு குடுக்கறிங்க. மொக்கை பதிவுகளால் யார்னா காயப் பட்டிருக்கங்களா? உங்கள மாதிரி ஆக்கப் பூர்வமான பதிவர்களால் தான் மற்றவர்கள் வருத்தப் பட வேண்டி இருக்கு. ( உதாரணம் உங்களின் இந்த பதிவு )சூடான இடுகையில் இடம் பிடிப்பதெல்லாம் மொக்கை பதிவுகள் என்றால் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்குமே. அதை விட்டு மற்ற " ஆக்கப் பூர்வமான" பதிவுகளை படிக்கலாமே.

//இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?//

அண்ணே.. இப்போ எல்லாம் வலைப்பூக்கள் நட்பை வளர்க்கும் இடமாக மாறிவிட்டது. ஆகவே அதிக நண்பர்களை வைத்திருப்பவரின் பதிவுகள் அதிகம் பேரால் பார்க்கப் படுகிறது.. அது சூடாண இடுகையில் வந்து தொலைத்துவிடுகிறது. இது உங்க வெயித்தெரிச்சலை சம்பாதித்துவிகிறது. பேசாம தமிழ்மணத்திற்கு ஒரு கடிதம் எழுதி சூடாண இடுகையை எடுக்க சொல்லுங்க.. இனியாவது உங்க டென்ஷன் கொறையட்டும். இதுல தவறான முன்னுதாரணத்துகெல்லாம் ஒரு வேலையும் இல்லை. உங்களால இதில் இடம்பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான் தெரிகிறது... தயவு செய்து "வழக்கம் போல்" ஆக்கப் புர்வமான பதிவுகள் மட்டும் எழுத முயற்சி பண்ணுங்க. பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடனும்னு எங்கள மாதிரி நீங்களும் மொக்கை போடாமல் இருந்தால் சந்தோஷபடுவேன்.

இப்படிக்கு
வழக்கம் போல் உங்கள் நண்பன்.


பிகு : ஜோசப் அண்ணாவுக்கு பதில் பதிவு எழுத நீ யாருடா என்று கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு .... நாளைக்கு நானும் விடை பெறுகிறேன்.. வடை சுடுகிறேனு ஒரு பதிவு போடுவேன். அப்போ யாரும் எனக்கு ரிவீட்டு அடிக்க கூடாது இல்ல.. அதான் இப்போவே கொஞ்சம் உஷாரு ஆய்க்கிறேன்..

---விரைவில் எதிர்பாருங்கள்....
........வாருங்கள் ஆயில்யனை வழியனுப்பிவிட்டு அவருக்கு பின்னூட்டம் போடுபவர்களை கேள்வி கேப்போம்............

எவன்டா என் தலைவனை உசுப்பேத்தி விட்டவன்?

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. முழுசா பாருங்க... என் தலைவனின் உணர்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்... என் தலைவனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ப்ளீஸ்...



நன்றி : சின்னக்குட்டி

Saturday, 23 August 2008

அய்யோ... அய்யோ...அய்யோ...

ஜூனியர் விகடனில் குசும்பன்


வாழ்த்துக்கள் குசும்பன்... நல்ல முயற்சிகளுக்கு இது அங்கீகாரம்... தான் மட்டும் போட்டோ குசும்பு பண்ணுவதோடு இல்லாமல் தன்னை போலவே பல போட்டோ குசும்பர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் குசும்பனுக்கு பாராட்டுக்கள்... இன்னும் கலக்கு மாமா.. :)

Tamiler This Week