இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 24 July 2008

கூகுள் செய்திகள் தமிழில்


நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் தமிழ் செய்திகள் இப்போது வெளிவந்துவிட்டது.ஆங்கிலத்தில் உள்ள அதே பிரிவுகளுடனும் அதே மேலதிக வசதிகளுடனும் இருக்கிறது. தமிழ் செய்திகளுக்கான முக்கியமான தளங்கள் அனைத்திலும் இருந்து செய்திகள் திரட்டப் படுகிறது. இலங்கை சம்பந்தப் பட்ட செய்திகளுக்கு தனி பிரிவும் இருக்கிறது. ம்ஏலும் நமக்கு விருப்பமான தலைப்புகளை சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இதன் மூலம் அந்த தலைப்பிலான செய்திகளை தனிப் பிரிவாக படிக்கலாம்.


கூகுள் 3D அரட்டைக்கு புதியதாக Lively என்ற சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. கூகுள் கணக்கை வைத்து உள்ளே சென்று நமக்கென மிக அழகாக நம் கற்பனைக்கேற்ற வகையில் அரட்டை அறையை உறுவாக்கி அதில் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்...

7 Comments:

said...

Next New TAG pls visit

Anonymous said...

நீங்க குடுத்த லிங்க்குக்கு போனா ஆங்கிலத்துல இல்ல இருக்கு. தமிழில் இல்லையே. கொஞ்சம் பாருங்கள்

said...

//மங்களூர் சிவா said...

Next New TAG pls visit //

பாத்தாச்சி.. அதுக்கு ஒரு பதிவும் போட்டாச்சி :) அழைப்புக்கு நன்றி மாமா.. :)

said...

// சின்ன அம்மிணி said...

நீங்க குடுத்த லிங்க்குக்கு போனா ஆங்கிலத்துல இல்ல இருக்கு. தமிழில் இல்லையே. கொஞ்சம் பாருங்கள்//
அட ஆமாம்க்கா.. எதோ தப்பு நடந்து போச்சி.. இப்போ சரி பண்ணிட்டேன். பாருங்க..

or http://news.google.co.in/news?ned=ta_in

இல்லைனா... www.google.co.in போங்க.. அதுல செய்தி பிரிவுக்கு போய் தமிழ் க்ளிக் பண்ணுங்க.. அசவுகரியத்துக்கு மன்னிக்கவும். :)

Anonymous said...

ரொம்ப நன்றி சஞ்சய், அலுவலகத்தில இருந்து இந்திய செய்திகள தமிழ்ல பாக்க ரொம்ப உதவியா இருக்கும்.ஹிண்டுவிலயே பாத்து அலுத்துப்போச்சு

said...

கூகுள் தமிழ் செய்திகள்

"படா ஷோக்கா கீது பா"

said...

@ சின்ன அம்மிணி : தமிழ் செய்திகள் நல்லா படிச்சி ரசிங்க.. நம்ம ஊர் செய்திகளையும் பாருங்க. :)

@ மங்களூரார் : சுக்ரியா சாப் :)

Tamiler This Week