இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday 13 July, 2008

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே முடிந்தது.

காலையில் இருந்து மாலை வரை காஃபி( எத்தனை முறை என்று நினைவில்லை), வடை( எத்தனை தட்டு காலி ஆகி இருக்கும் என்று நினைவில்லை ), ஜூஸ், குலாப் ஜாமூன், தக்காளிசாதம், லெமன் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை அன்போடு தந்து உபசரித்த திரு மற்றும் திருமதி. மஞ்சூர் ராசா, திருமதி மஞ்சூர் ராசாவின் சகோதரி மற்றும் அவர் கணவர் மற்றும் அவர் உறவினர் ஆகியோருக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.

***************

சந்திப்பில் கலந்து கொண்டு சிறபித்தவர்கள் :-
.... சுப்பையா வாத்தியார் கிளம்பறேன் கிளம்பறேன் என்று சொல்லிக் கொண்டே சில மணி நேரங்கள் தனது "சிற்றுரை"யை ஆற்றியது, லதானந்த் அவர்கள் "ஜாக்கி" வைத்து எதையும் தூக்கி நிறுத்த தான் பதிவு எழுதவில்லை என்று விளக்கியது, அபாயகரமான ஒரு இலவச இணைய சேவை பற்றி ஸ்ரீபால் ஜோசப் சொன்னது, நான் வீட்டுக்கு போகனும் மாமனார் வைவார் என்று வடகரைவேலன் புலம்பியது, தொட்டராயஸ்வாமி தன் விடாமுயற்சியை பற்றி சொன்னது, ஞானவெட்டியான் அவர்கள் தான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்று ஆன்மீகம் பேசியது, கடவுள் இல்லை என்று செம்மலர் தியாகு சிலரிடம் வாக்குவாதம் செய்தது, வின்செண்ட் அவர்கள் மற்றும் குப்புசாமி அவர்கள் மூலிகை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு பற்றிய தங்களின் முயற்சிகளை பகிர்ந்து கொண்டது, பதிவுகளை PDF ஆவணமாக மாற்றுவது பற்றி தமிழ்பயணி சிவா சொன்னது, புரவி ராம், ஓசை செல்லா ஆகியோரின் பங்களிப்பு என பல விஷயங்களை முடிந்த வரையில் கொஞ்சம் விரிவாக பின்னர் பதிவிடுகிறேன்.

பல உருப்படியான விஷயங்களை கற்றுக் கொண்ட மிக நல்ல சந்திப்பு.
சந்திப்பு பற்றிய செய்தியை வெளியிட்ட திரட்டி.காம் திரட்டிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

35 Comments:

said...

படத்துல இருப்பதெல்லாம் யார்யாருன்னு ரெண்டு வரில சொன்னா என்ன?

said...

aahaa ennai thedineengalaame? chella anna sonnar. porunga porunga pathivaave poduren athai. aamaa ip log kooda irukke? appo intha comment naanthane pottiruppen. Engeyirunthunnu kandupidinga? sila visayam puriyum!

said...

//நிலா said...

படத்துல இருப்பதெல்லாம் யார்யாருன்னு ரெண்டு வரில சொன்னா என்ன?//

வெய்ட்டீஸ்.. :)

said...

//Unsettled Woman said...

aahaa ennai thedineengalaame? //
நெனப்பு தான்..
//chella anna sonnar. porunga porunga pathivaave poduren athai. //
எதை? நீங்க யார்னா?..
//aamaa ip log kooda irukke? appo intha comment naanthane pottiruppen. Engeyirunthunnu kandupidinga? sila visayam puriyum!//

ஒரு புன்னாக்கும் புரிய வேணாம். நீங்க யாரா இருந்தா எனகென்ன? உங்கள பத்தி தெரிஞ்சிகிறது தான் என் வேலையா?.. உங்கள மாதிரி அடையாளம் தெரியாத ஆளுங்க கிட்ட பேசறதுல எனக்கு விருப்பம் இருக்கிறதில்ல. அதான் இப்போ உங்க பதிவுகள் பக்கமே வரதில்ல. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது. சரியா..?

said...

நம்ப ஊர் சனங்கல பாக்குறதுல நொம்ப சந்தோசம். என்ன, ஒரு வேட்டி சட்டையத்தான் காணம். ஏண்ணா, அப்புச்சி, அமுச்சி, நங்கையா எல்லாம் சேமந்தான?

-சூலூர் மணியான்
http://maniyinpakkam.blogspot.com

said...

// உங்கள பத்தி தெரிஞ்சிகிறது தான் என் வேலையா?.. உங்கள மாதிரி அடையாளம் தெரியாத ஆளுங்க கிட்ட பேசறதுல எனக்கு விருப்பம் இருக்கிறதில்ல. அதான் இப்போ உங்க பதிவுகள் பக்கமே வரதில்ல. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது. சரியா..? //

sarithaan! naanum unga pathivuppakkam inimel varamaaten. Ok vaa?

//உங்கள மாதிரி அடையாளம் தெரியாத ஆளுங்க கிட்ட பேசறதுல எனக்கு விருப்பம் இருக்கிறதில்ல.//
adaiyaalam theriyura maathiri ezhuthinaal penkalukku ennenna sangadangal irukkum endru ungal nambarkal listla neraiya pen pathivarkal perai pottirukkeereengale avanga kitta kettu therinjukkanga. avangallam photo podave payakkirappa naan en kutti pukaipadathodu ezhuthuvathe periyavisyamthan. appuram ennai evvalavu asingamaaka kamal rasikarkal punnootiyirukkaangannu paathu therinjukkanga. But the real reason is I am in a responsible post and dont want to be identified in the public through my online adamant writings. good night.

said...

//பழமைபேசி said...

நம்ப ஊர் சனங்கல பாக்குறதுல நொம்ப சந்தோசம். என்ன, ஒரு வேட்டி சட்டையத்தான் காணம். ஏண்ணா, அப்புச்சி, அமுச்சி, நங்கையா எல்லாம் சேமந்தான?//
ஆஹா.. டேய் சஞ்சய் உன்ன வச்சி இவர் எதோகாமெடி பண்ண ட்ரை பண்றார். உஷாரு.. :)

said...

// Unsettled Woman said...

sarithaan! naanum unga pathivuppakkam inimel varamaaten. Ok vaa? //

நான் என்னை பற்றிய தகவல்களுடன் தான் பதிவெழுதுகிறேன். மேலும் உங்களை போன்று அறிவார்ந்து எழுதவில்லை என்றாலும் மொக்கையை கூட ஒரே விஷயத்தை பற்றி போடுவதில்லை. ஆனால் நீங்கள் கமலை அசிங்கபடுத்துவதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்கள். வேறு எதாவது எழுதினால் படிக்க முயற்சிக்கிறேன்.

... நீங்கள் வருவதும் வராததும் தனிபட்ட விருப்பம். இதுவரை தந்த பின்னூட்டங்களுக்கு நன்றி...

//adaiyaalam theriyura maathiri ezhuthinaal penkalukku ennenna sangadangal irukkum endru ungal nambarkal listla neraiya pen pathivarkal perai pottirukkeereengale avanga kitta kettu therinjukkanga.avangallam photo podave payakkirappa naan en kutti pukaipadathodu ezhuthuvathe periyavisyamthan//
காமெடி பண்ணாதிங்க. அவங்கள பத்தி இங்க நிறைய பேருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். நேர்ல கூட பலரும் சந்திச்சிருக்கோம். அவர்களை பட்ட தனிபட்ட விவரங்கள் இணையத்தில் எல்லாரும் பார்க்கும் வகையில் இருக்கு. உங்கள் தனிபட்ட காரணத்தை பிறர் மீது திணிக்க வேண்டாம்.

// appuram ennai evvalavu asingamaaka kamal rasikarkal punnootiyirukkaangannu paathu therinjukkanga. //

அதற்கு முழு காரணம் நீங்கள் தான். புண் படுத்தும் வகையில் மட்டுமே எழுதுனீங்க.நீங்க மத்தவங்க கிட்ட எபப்டி நடந்துக்கிறிங்களோ அதே மாதிரி தான் மத்தவங்களும் உங்க கிட்ட நடந்துப்பாங்க.
//But the real reason is I am in a responsible post and dont want to be identified in the public through my online adamant writings.//
:))

.....அணுவைப்போலவே மீச்சிறு அளவினள்! உடைக்க நினைத்தால் (உங்களால் முடிந்தால்) வெடித்தெழுவேன்,தொடரியக்கமாய், பேரழிவாய்!...... இது சும்மா காமெடிக்கா? :P

// good night.//

இரவு வணக்கம்..

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்...!:)
ஆமா இந்தப்படத்துல யார் யாரு இருக்காங்க ?

said...

அப்ப இன்னும் ஒரு நாலைஞ்சு பதிவு போடலாம்கிறிங்க இந்த மாட்டரை வச்சு...;)

said...

நல்லா இருங்கய்யா!

சென்னைக்கு போயிட்டதால இந்த சந்திப்பிற்கு வரமுடியவில்லை.

said...

வந்திருந்தாலும் வேஸ்ட்டாகியிருக்கும் அதுதான் சைதை தமிழரசி வரலியே :)))))))))))))))))))))

said...

வாழ்த்துக்கள் சஞ்சய் !!!

said...

நான் பேசினதப் போடாத சஞ்சய்... சரி விடுங்க.. (வடையெல்லாம் குடுத்தாரு.. திட்டக்கூடாது)

//திரு மற்றும் திருமதி. மஞ்சூர் ராசா, திருமதி மஞ்சூர் ராசாவின் சகோதரி மற்றும் அவர் கணவர் மற்றும் அவர் உறவினர் ஆகியோருக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.//

இதை பயங்கரமாக வழிமொழிகிறேன். நான் அவங்களை நேர்ல பாத்து நன்றி சொல்லீட்டு போகணும்ன்னு நெனச்சேன்.. !

(ஆமா.. சந்திப்புல நடந்த ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே)

said...

சஞ்சய்..

unsettled woman-ஐ விட்டுடுங்களேன்..

அவங்க நல்லா செட்டிலானதுக்கப்புறம் பேசிக்குவோம்!

said...

ஆர்வமாக பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கின்றது. சந்திப்பை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டுக்கள்... :)

said...

///சஞ்சய்..
unsettled woman-ஐ விட்டுடுங்களேன்..
அவங்க நல்லா செட்டிலானதுக்கப்புறம் பேசிக்குவோம்!///
:)

said...

//நிலா said...
படத்துல இருப்பதெல்லாம் யார்யாருன்னு ரெண்டு வரில சொன்னா என்ன?//


வழி மொழிகிறேன்!!!

said...

///தமிழ் பிரியன் said...
ஆர்வமாக பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கின்றது. சந்திப்பை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டுக்கள்... :)///



தல ஜனவரில நீங்க ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணுங்களேன்:)

said...

///தமிழன்... said...
அப்ப இன்னும் ஒரு நாலைஞ்சு பதிவு போடலாம்கிறிங்க இந்த மாட்டரை வச்சு...;)///

எந்த மேட்டரை வச்சி?????

said...

///மங்களூர் சிவா said...
நல்லா இருங்கய்யா!

சென்னைக்கு போயிட்டதால இந்த சந்திப்பிற்கு வரமுடியவில்லை.///



நீ போயிருந்தா மட்டும் என்ன நடந்திருக்க போகுது? எக்ஸ்ட்ட்ராவா நூறுவடை போடவேண்டியிருந்திருக்கும்:)

said...

//காலையில் இருந்து மாலை வரை காஃபி( எத்தனை முறை என்று நினைவில்லை), வடை( எத்தனை தட்டு காலி ஆகி இருக்கும் என்று நினைவில்லை ), ஜூஸ், குலாப் ஜாமூன், தக்காளிசாதம், லெமன் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை அன்போடு தந்து உபசரித்த திரு மற்றும் திருமதி. மஞ்சூர் ராசா, திருமதி மஞ்சூர் ராசாவின் சகோதரி மற்றும் அவர் கணவர் மற்றும் அவர் உறவினர் ஆகியோருக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.//

Kural 86)
செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு.

வீடு தேடி வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு வரக்கூடிய விருந்தினருக்காக எதிர்பார்த்திருபவனை உறுதியாக, வானிலுள்ள தேவர்களும், தம் விருந்தினராக ஏற்று எதிர்கொள்ளக் காத்திருப்பார்.

The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.



தெய்வப் புலவரின் குறளை வாழ்வின் நிதர்சனமாக்கிய அந்த அன்புசால் குடும்பத்தாரின் விருந்தோம்பலின் இனிமையின் கனிவுக்கு பாராட்டுக்கள்.

இந்த கோவை இணைய நண்பர்கள் இனிய சந்திப்பு சிறப்பாக நடந்தேற அருமை ஒத்துழைப்பினை நல்கிட்ட அத்துணை நல் உள்ளங்களை நன்றி பாரட்டி மகிழுவோம்.

தொடரட்டும் கோவையில் தமிழ்ப் பணி.


தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

said...

ஆசிரியர் சுப்பையா அவர்களின் "ப்ல்சுவை"ப் பதிவில் என் பின்னுட்டம்.

//இன்னும் பலர் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மாலை 4.30 மணிக்குள்
அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்.

நான் எதிர்பார்த்து, நான் அங்கே இருந்தவரை வராதவர்கள் மூவர்
அவர்கள், நாமக்கல் சிபி, கோவை விமல், கோவை விஜய்!

மூவரும் என் வகுப்பறை மாணவர்கள்.

வாத்தியார் செல்லட்டும், அங்கே போய் லுட்டி அடிக்கலாம் என்று
நான் இருந்தவரை வரவில்லைபோலும்!
posted by SP.VR. SUBBIAH at 5:03 PM on 13 Jul, 2008 //



விஜய் said...
ஆசிரியர் ஐயா

என்னோடு நமது கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுரியில் ("visual communication") படித்த தோழியின் "வாழ்க்கை ஒப்பந்த விழா" வின் நிமித்தமாக திருவனந்தபுரம் சென்று,
பின் நாகர்கோவிலிருந்து இன்று இரவு இரவு 0830 மணிக்கு புறப்படும் கோவை நா.கோவில் தொடர் வண்டியில் கோவை திரும்புகிறேன்.
அதனால் ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு அடுத்த கோவை பதிவாளார் சந்திப்பில் என் நம்புகிறேன்.

கோவைச் சந்திப்பு பற்றிய தகவலை முதலில் தாங்கள்தான் பதிவீர்கள் என எண்ணிக் கொண்டே பார்த்தால் "அதை மெய்ப்பித்திருக்கிறீர்கள்".

பதிவாளார்களின் சந்திப்புகளையெல்லம் படம் பிடித்து ஒரு பதிவு போடலாம் என எண்ணியிருந்தேன்.

மாணவர்களை தேடிய அன்புக் கண்களுக்கு நன்றிகள்.

தி.விஜய்

Anonymous said...

அன்பு நெஞ்சங்களே,
உங்களை மாதிரி பல விஷ்யங்களை நான் எழுதுபவன் அல்ல ஏதோ இவ்ளோ கஷ்டப்பட்டு பாடு பட்டு நம் நண்பர்களூக்காக உழைக்கிறீர்களே ஒரு ரிலாக்ஸ்க்காக ஓசை செல்லா மாதிரி எனக்கு பிடித்தவரின் பாடல்களை போடுகிறேன். அவ்வளவு தான் இருந்தாலும் என்னை அன்போடு வரவழைத்த அன்பு நெஞ்சங்கள் எல்லோருக்கும் குறிப்பாக மஞ்சூர் மற்றும் சஞ்சய் ஆகியோர் அனைவருக்கும் என் நன்றி. என் நன்பர் ராஜ்குமாரின் பழைய பாடல்கள் அடங்கிய வானொலி ஒலித்தொக்குப்பு தேன்கிண்ணத்தில் மறவாமல் கேளூங்க்ள் உங்கள் மனம் குதூகலிக்கும்.

said...

இப்படியெல்லாம் கவனிப்பிங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்து இருப்போம் இல்ல

said...

மஞ்சூர் அண்ணா செய்த பலகாரங்கள் வீணாகிடக் கூடாதுன்னு பொறுப்பா தின்று தீர்த்த நம்ம சஞ்ஜய்க்கு பாராட்டுக்கள்

said...

Excellent post, my friend!
Nice photos, good persons and very good blog.
Happy week.

said...

//தமிழன்... said...

வாழ்த்துக்கள் சஞ்சய்...!:)
ஆமா இந்தப்படத்துல யார் யாரு இருக்காங்க ?//

வாழ்த்துக்கு நன்ரி தமிழன்.. விரைவில் யார் யார்னு ஒரு ப்திவு வரும்.. காத்திருக்கவும் :)

//அப்ப இன்னும் ஒரு நாலைஞ்சு பதிவு போடலாம்கிறிங்க இந்த மாட்டரை வச்சு...;)//

நேரம் கிடைத்தால் 10 பதிவு கூட போடலாம் :)

said...

@ மங்களூர் சிவா : அடுத்த வாட்டி குடும்பதோட கலந்துக்கோங்க மாமா :D.

சைதை தமிழரசிக்கு பால் ஊத்தியாச்சி மாம்ஸ் :))
---

@ நித்யா : நன்றி சி.மா :)
---

@பரிசலார் : //(ஆமா.. சந்திப்புல நடந்த ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே)//

உங்க மாலை சந்திபுல "உற்சாகமா" நடந்ததை கேக்கறிங்களா? அது வேணாம்ங்க..பொழச்சி போங்க.. :P

said...

//பரிசல்காரன் said...

சஞ்சய்..

unsettled woman-ஐ விட்டுடுங்களேன்..

அவங்க நல்லா செட்டிலானதுக்கப்புறம் பேசிக்குவோம்!//

அவுக நேத்தே செட்டில் ஆய்ட்டாக :P

said...

நன்றி தமிழ்பிரியன்

நன்றி விஜய்.. நீங்க வந்திருக்கலாமே...

நன்றி கோவை ரவி சார்

நன்றி David ஸ்antos

said...

// தாரணி பிரியா said...

இப்படியெல்லாம் கவனிப்பிங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்து இருப்போம் இல்ல//

வந்திருந்தா உங்கள தான சமையல் பண்ண வச்சிருபோம்.. :))

said...

// ரசிகன் said...

மஞ்சூர் அண்ணா செய்த பலகாரங்கள் வீணாகிடக் கூடாதுன்னு பொறுப்பா தின்று தீர்த்த நம்ம சஞ்ஜய்க்கு பாராட்டுக்கள்//

ஹிஹி.. அது மட்டுமில்லை மாம்ஸ்.. விரைவில் பாண்டிச்சேரியில் நடபெற இருக்கும் பிரமாண்ட விழாவிலும் எதுவும் வீணாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்..

....ஹ்ம்ம்ம் சொல மறந்துட்டேனே.. வாழ்த்துக்கள் ஸ்ரீ மாம்ஸ்... அக்காவ ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க.. :D

said...

கோவை சந்திப்பை பற்றிய விவரங்களுக்கு முதலில் நன்றி.

வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.


அடுத்த சந்திப்பை இன்னும் நன்றாக பெரிய அளவில் நடத்த அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்படுவோம். கோவை மற்றும் சுற்றுவட்டார பதிவர்கள் இணைய நண்பர்கள் அனைவரின் பங்கும் இருக்கவேண்டும்.

said...

@ மஞ்சூர் அண்ணா..
.... அசத்திடுவோம் .... :)

Tamiler This Week