இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 17 July, 2008

கோவை பதிவர் சந்திப்பு - படங்களுடன் ஃபுல் கவரேஜ்

[படம் : திரு.வின்செண்ட், திரு. குப்புசாமி, திரு.ஞானவெடியான்]
காலை 10 மணிக்கு 2 நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். தமிழ்பயணி சிவாவும் மஞ்சூர் ராசாவும் எல்லா ஏற்பாடுகளும் முடிச்சி தயாரா இருந்தாங்க. ஞானவெட்டியான் ஐயாவும் குப்புசாமி ஐயா 2 பேரும் உக்காந்துட்டு இருந்தாங்க. அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு காபி குடித்து முடித்து வருபவர்களுகெல்லாம் போன் பண்ணி பேசிக் கொண்டே நேரம் போய்க் கொண்டிருந்தது. பிறகு செல்லா வந்தார். வந்ததும் ரொம்ப டல்லா உக்காந்திருந்தார்.. பத்திரிக்கைகாரர் மாதிரி ஒரு பை வைத்திருந்தார். அதிலிருந்து ஒரு ஒலிப்பதிவு கருவி எடுத்தார். வெளிநாட்டு நண்பர் அனுப்பியதா சொன்னார். அப்போது தான் பயன்படுத்த எடுத்தார் போல. அதில் உள்ள 4 பொத்தான்களையே வெகு நேரம் தேடிக் கொண்டிருந்தார். :)

சிறிது நேரத்தில் தொட்டராய ஸ்வாமி வந்து அடக்க ஒடுக்கமாய் அமைதியாக உக்கந்தார். கொஞ்ச நேரத்தின் சுப்பையா வாத்தியும் கோவை ரவியும் வந்தார்கள். வாத்தி கைய்யில் 3 சால்வைகளும் , கொஞ்சம் சாக்லேட்டுகளும், ஏகப்பட்ட சாமி படங்களும் கொண்டுவந்திருந்தார். சாக்லேட்டுகளை பொறுப்பாக சிவாவிடம் கொடுத்துவிட்டு சாமி படங்களை எல்லோருக்கும் கொடுக்க சொல்லி என்னிடம் கொடுத்தார்.. கடைசி வரையில் யாருக்கும் தரவில்லை என்பது வாத்தியாருக்கு தெரியாது. யாரும் சொல்லிடாதிங்க. :).. சற்று நேரத்தில் புரவி ராம் மற்றும் சிலர் வந்து சேர்ந்தார்கள். இடைஇடையே காபியும் வடையும் ஜூஸும் வந்தது... நன்றி திரு மற்றும் திருமது. மஞ்சூர் ராசா.

[படம் : தொட்டராயஸ்வாமி, ஓசை செல்லா, சுப்பைய்யா வாத்தியார், கோவை ரவி]
... வாத்தியார் படலம் : வந்த உடன் " எனக்கு டைம் இல்ல.. உடனே கிளம்பிடுவேன்..உண்மை தமிழன் என்னை பத்தி 8 பக்கத்துக்கு எழுதி இருக்கார் போய் பாருங்க.. வாத்தியார் பேச ஆரம்பிச்சார்னா நிறுத்த மாட்டார்னு சொல்லி எழுதி இருக்கார்.. எல்லாரும் போய் படிங்க" என்று சொல்லிக் கொண்டே இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தார்... காபி கொடுத்தோம்... எனக்கு நேரம் இல்லை உடனே கிளம்பனும் என்று சொல்லிவிட்டு எதோ சொல்லிக் கொண்டே குடித்தார்.. பிறகு இன்னும் எதோ சொல்லிக் கொண்டே இருந்தார்.. கொஞ்ச நேரத்தில் வடை குடுத்தோம்.. 10 நிமிஷத்தில் நால் கிலம்ப வேண்டும் என்று எதோ சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்... கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிடறேன் என்று ஒரு 2 வரி ஜோக்கை எப்படி பில்டப் பண்ணி பெரிய ஜோக்காக மாத்தினார் என்று 30 நிமிடம் சொன்னார்... ரொம்ப அவசர வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டே எழுந்து தமிழ்மணம் பற்றி சில மணி நேரங்கள் பேசினார்.. நாம 3 மணி நேரம் 3 மணி நேரம் யோசிச்சி எழுதறது சில வினாடிகளில் காணாமல் போய்விடுகிறது... அதனால 150 பதிவுகள் முகப்பில் தெரியற மாதிரி ஸ்க்ரோலிங் வசதி குடுக்க வேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து தமிழ்மணத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னார்.. பிறகு ஜூஸ் குடுத்தோம்.. எனக்கு இதுகெல்லாம் நேரமில்லை நான் போயாகனும் என்று சொல்லிக் கொண்டே ஜூஸ் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டே உக்காந்துக் கொண்டார்.. தான் சம்பாதிக்க பதிவெழுதவில்லை என்றும் சம்பாதித்துக் கொண்டு தான் பதிவெழுதுவதாகவும் சொல்லிக் கொண்டே கூகுள் ஆட்சென்ஸ் பத்தி பேசினார்.. வெறும் 2 கோடி பேர் மட்டும் பேசும் மொழியை கூட ஆட்சென்ஸ் சப்போர்ட் செய்வதாகவும் தமிழ் மொழியை சப்போர்ட் செய்வதில்லை என்றும் பேசிக் கொண்டே இருந்தார்.. மீண்டும் கடைசியாய் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்வதாக சொல்லிவிட்டு.. கூகுளுக்கு இது தொடர்பாய் அனைவரும் ஈமெயில் அனுப்ப வேண்டும் என்று சொன்னார்... ஐய்யா.. நீங்களே அதை எழுதி எங்களுக்கு அனுப்புங்க.. அதை நாங்க ஃபார்வர்ட் செய்கிறோம் என்று சொல்லி எஸ்கேப் ஆய்ட்டோம்.. :)).... இன்னும் எதேதோ பேசிக் கொண்டே இருந்தார்.. எனக்கொரு சந்தேகம்... "சுப்பைய்யா வாத்தியாருக்கு மூச்சு விடும் பழக்கம் இருக்கா?" :P..

தான் வாத்தியாரான / ஆக்கப்பட்ட கதையை சொன்னார்... அது மக்களால் கொடுக்கப் பட்ட பட்டம் என்பதாலும் தனக்கு பிடித்திருந்தது என்பதாலும் அதை வைத்துக் கொண்டதாக சொன்னார்... எம்ஜிஆருக்கு பிறகு சுப்பைய்யா வாத்தியாருக்கு தான் இந்த பட்டம் கொடுத்திருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் அடித்துவிட்டார்...

கொண்டுவந்த சால்வையை முதலில் ஓசை செல்லாவுக்கு அணிவித்தார். சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததற்கு போட வேண்டியதாம். அப்போது வேறு யாருக்கோ போட்டுவிட்டதால், இந்த வருடம் அவருக்கு போடுகிறாராம்.. பழய கடனை செலுத்திவிட்டதாக சொல்லிக் கொண்டார். :).. மொத்தம் 10 பேருக்கு சால்வை அணிவிக்க வேண்டுமாம். மீதம் 9 பேர் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தொடந்து வருவேன் என்று பயமுறுத்தினார். பயம் எதற்கென்றால்.. அவருக்கு வயசாகிட்டே போகுது இல்ல.. அதனால் இது மாதிரி தொடந்து வந்துட்டு இருந்தா ஒடம்பு என்ன ஆடறது.. அந்த அக்கறையில தான் சொல்றேன். அதனால சீக்கிறமே அந்த 9 பேர் கிடைக்க பிரார்த்திப்போம். :P.... எல்லாம் முடிந்து ஒருவழியாக கோவை ரவி சாரை தளிக் கொண்டு வாத்தியார் நடைஅயி கட்டினார்.. கிளம்பும் போது குலாப் ஜாமுன் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்துவிட்டார்... காரணம் கேட்டதற்கு தனக்கு சர்க்கரை எல்லாம் இல்லை.. இனிப்பு சாப்பிட்டால் வெய்ட் போட்டுவிடுவார் என்று டாக்டர் சொன்னாராம்... யாருங்க அந்த மன்சாட்சி இல்லாத டாக்டர்.. :(.. இதுக்கு மேல என்ன வெய்ட் போட்ற முடியும்? :)

கோவை ரவி அவர்கள், தான் பாடகர் SPBயின் நெருங்கிய நண்பர் என்றும் அவர் மீதுள்ள பிரியத்தால் அவர் பாடல்களை தொகுத்து வழங்கி கொண்டிருந்ததாகவும் சொன்னார். SPB கோவை பக்கம் கட்சேரிக்கு வந்தால் இவரை உடன் அழைத்து செல்வார் என்று வாத்தியார் சொன்னார்..
[பரிசல்காரன், ஸ்ரீநிவாசன் பால் ஜோசப், கிரி, கார்த்திக், தியாகு]
ஆரம்பத்திலே அறிமுகப் படலம் முடிந்தாலும் கடைசியாய் வந்த திருப்பூர் தியாகு அறிமுகம் செய்துகொண்டார். முன்னதாக பரிசல்காரன் வெயிலானோடு வந்தார்.. ஸ்ரீ அவர் நண்பர் வினோதோடு வந்தார்... எல்லோரும் ஞான வெட்டியான் ஐயாவுடன் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவர் 30க்கும் மேற்பட்ட வலைப்பூவில் ஒரு காலத்தில் எழுதினாராம். நிறைய பழமையான நூல்களை சேகரித்து அதை பற்றி வலையேற்றி வைத்திருக்கிறாராம்.
[திரு.சுப்பைய்யா, திரு.கோவை ரவி, திரு.வடகரை வேலன்]
ஸ்ரீபால் தன் நிறுவனம் பற்றி சொன்னார்.. தமிழ்விக்கி என்ற தன் முயற்சியை பற்றி விளக்கினார். விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்கேற்கலாம் என்றார்... விக்கி தமிழ் மொழிக்கு சரியானது இல்லை என்றும் 1992ல் இருந்தே தான் அதில் பங்கேற்றதாகவும் வழக்கம் போல் தன் நண்பி ஏஞ்செலா என்பவர் அதில் இயக்குநராக இருப்பதாகவும் அவர் தன் தொடர்பில் இருந்தார் என்றும் அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார்.

குப்புசாமி ஐயா தன் கட்டுரைகளை போட்டுக் கொண்டு படத்தை மட்டும் யாரோ ஒருவர் மாற்றி போட்டுவிட்டதாக சொன்னார்.. ஞானவெட்டியான் ஐயா ஏராளமான பக்கங்களை விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்களில் உறுவாக்கித் தந்ததாகவும் பிறகு தன் கட்டுரைகள் எல்லாம் தவறு என்றும் அதற்கு எல்லாம் ஆதாரம் கேட்ட்க் கொண்டிருந்ததால் , ஆதாரம் திரட்ட தான் வாழ் நாள் முழுதும் பத்தாது என்பதான் அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறினார். மனிதர் அநியாயத்துக்கு விஷய ஞானமுள்ளாவர். இவருக்கு ஞானவெட்டியான் என்ற பட்டத்தை மாபொசி அவர்கள் அளித்தாராம்.

இடையே வடகரை வேலன் .tk முகவரி பற்றிய சந்தேகத்தை கேட்டார்.. நந்து அண்ணா போன்றவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் அதை பற்றி தெரிந்துகொள்ளாவும் கேட்டார்.. அதை பயன்படுத்துவது ஆபத்து என்றும் அதில் ஆபத்தான நிரலிகள் எழுதப் பட்டிருக்கும் என்றும் சொல்லி குண்டை தூக்கி போட்டார்.. உடனே செல்லா அதை எதிர்த்து வாதிட்டார்.. அமெரிக்கா.. டிஎனெஸ், செக்யூரிட்டி.. வழக்கம் போல் அதிலும் தன் நண்பர்கள் இருப்பதாக வாதிட்டார்.. ஸ்ரீ கொஞ்சம் குழப்பியது உண்மை தான்.. குறிபிட்ட நிறுவனம் வழங்கும் இலவச .tk முகவரி மட்டுமே ஆபத்தானது என்று சொல்வதற்கு பதில் மொத்த .tk முகவரியும் ஆபத்தானது என்று குழப்பிவிட்டார்.. எனக்கு கொஞ்சம் தெரிந்த விஷயம் என்பதால் இதை சொல்லி ஒரு வழியாக விவாதத்தை முடித்து வைத்தேன்..

செல்லாவிற்கு வாத்தியார் சால்வை அணிவிக்கிறார்.
[புரவி ராம் அறிமுகம் செய்துக் கொள்கிறார்]
லதானந்த் படலம் : சுப்பைய்யா வாத்தியார் சென்றதும் லதானந்த் சார் பேச ஆரம்பித்தார்... தான் எதையும் ஜாக்கி வைத்து தூக்க பதிவெழுத வரவில்லை என்றார். சொந்த பந்தம் சுக துங்கங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இணையம் பக்கம் வரும் 10 நிமிடங்களை( நிஜமாவா? :P ) ஜாலியாக கழிக்க வேண்டும் என்று எழுதுகிறாராம். திருக்குறளுக்கு சென்னை பாஷையில் விளக்க உரை எழுதி அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாம். பிறகு சில தமிழார்வலர்களின் எதிர்ப்பால் இவரிடம் சொல்லிவிட்டு பாதியில் ஆனந்தவிகடன் நிறுத்திவிட்டதாம். பிறகு பாக்யாவில் எதோ அடல்ட் ஒன்லி தொடர் எழுதினாராம். அதற்கும் பெண்கள் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் நிறுத்திவிட்டார்களாம். பிறகு எதோ குழந்தைகள் தொடர் எழுதி அதை வெற்றிகரமாக தொடர்ந்தாராம். பல பத்திரிக்கைகளுக்கும் சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். பத்திரிக்கை வட்டாரத்தில் பல நண்பர்கள் இருப்பதாக சொன்னார்.

தான் எழுதும் விதத்தை பார்த்து யாரோ ஒருவர் சண்டைக்கு வந்ததாகவும், விவாதிக்க தயாரா என்று அவர் கேட்டதற்கு தான் அதற்கெல்லாம் தயார் இல்லை என்றும் சொல்லிவிட்டாராம். புத்திசாலி.. இல்லை என்றால் அவர் நேரத்தை வீணடித்து இருப்பார். அதற்கு காரணம் அவர் மீதுள்ள ஆதங்கம் தான் ( வயித்தெரிச்சலை இபப்டியும் நாகரிகமாக சொல்லலாம் என்றார்) என்றும் " என்னடா நாம பல வருஷங்களா எழுதியும் கிடைக்காத புகழ் இவருக்கு வந்த உடன் கிடைத்து விட்டதே என்று நினைத்து சிலர் இபப்டி நடந்துக் கொள்கிறார்களாம். அதை பற்றி எல்லாம் கவலை படாமல் நந்து, ரவி போன்ற ரசிகர்கள் கடிதங்கள் எழுதி தன்னை உற்சாகப் படுத்துவதாகவும் இன்னும் இருக்கும் ஏராளமான ரசிகர்களுக்காக தான் எழுதுவதாகவும் சொன்னார்.. மனிதர் ரொம்பவே வெளிப்படையாக பேசுகிறார்..

இவர் எழுத்துக்கள் கொஞ்ச ஏடாகூடமாக இருந்தாலும் இவர் அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்திருக்கிறார்கள். சொந்தமாக புத்தகம் மற்றும் அச்சகம் கூட நடத்தினார்களாம். தான் வலைப்பூ எழுத வந்த கதையை ரொம்ப சுவாரஸ்யமாக சொன்னார். அவர் திருக்குறளுக்கு சென்னை பாஷையில் எழுதியதற்கு7 ஒரு சாம்பிள் எடுத்து விட்டார்.. செம ரகளையாக இருந்தது... அதை தன் வலைப்பூவில் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மதிய உணவு வேளையில் "அதி முக்கியமான" பணி இருப்பதாக சொல்லி ஜூட் விட்டார். :))..

மதிய உணவுக்கு கொஞ்ச நேரம் முன்பிருந்தே " மானமார் வைவார்.. ஊட்டுக்கு போகனும்... வழி விடுங்க" என கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார் வடகரைவேலன். ஆனால் லதானந்த் சார் கூட சேர்ந்து எதோ ஒரு ரெஸ்ட் ஹவுசில் ஜோதியில் ஐக்கியமாகியது தனிக் கதை.. :P
ஒருவழியாக உணவு உண்டதும் வெயிலானும் பரிசல்காரனும் வீட்டுக்கு போக நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு லதானந்த் சார் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். நல்லா இருங்கய்யா... :)
[தியாகு, ஸ்வீட் சுரேஷ்]
நீண்ட நேர விவாதங்களுக்கு பிறகு ஸ்ரீபால் மற்றும் அவர் நண்பர் வினோத் ரயிலுக்கு நேரமாகிவிட்டதான் புறப்பட்டார்கள். அதன் பிறகு தியாகு, அவர் உறவினர் கருவேல் பாண்டியன் மற்றும் ஞானவெட்டியான் ஆகியோர் ஆண்மீகத்தையும் அரிவியலையும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். இடைஇடையே வென்செண்ட் சார் விவசாயம் மற்றும் மர வளர்ப்பு பற்றி உபயோகமான தகவல்களை பரிமாறிக் கொண்டார். பிறகு கார்த்திக் அடுத்த நாள் சென்னைக்கு கல்லூரிக்கு போக வேண்டும் என்பதால் புறப்பட்டார்.
தொட்டராயஸ்வாமி PDF பற்றிய தன் சந்தேகங்களை கேட்டார், அதற்கு தமிழ்பயணி சிவா தெளிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தியாகு விலைவாசி, கம்யூனிசம், பெரியாரிசம் என்று புலம்பித் தள்ளினார். நம் கல்வி முறை எதிர்த்துக் கேள்வி கேட்க கற்ரு தரவில்லை என்றும் போராடுபவர்களை உறுவாக்கவில்லை என்றும் 100 முறைக்கு மேல் சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு எவ்வளவு விளக்கம் தந்தாலும் மறுபடியும் அதே பல்லவியை பாடிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்து சேர்ந்த சேலம் சுரேஷ் விவசாயத்தில் தான் மெற்கொள்ள உள்ள செயல்களையும் லட்சியத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரிடம் மரவளர்ப்பு பற்றி வின்செண்ட் சார் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு " விவாசய நிலங்கள் முழுக்க மரம் வைத்துவிட்டால் சோத்துக்கு எங்க சார் போறது" என்று கேட்டார்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான். அவர் விவசாயத்தில் தோற்றுக் கொண்டே வருவதாக சொன்னதும், அதற்கு நான் சொன்ன சில யோசனைகளை ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்துவதாக சொனனார்.. எங்களுக்கு விவசாயம் பண்ணத் தெரியும்ல :))...

மஞ்சூர் ராசா தன் பழய கோவை நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நீர் வீணாதல், எரிபொருள் வீணாதல், சுற்ற்ச்சூழல் என்று பல விஷய்ங்கள் விவாதத்தித்து ஒருவழியாக 5 மணிக்கு மேல சந்திப்பு முடிந்தது. இறுதியாக வின்செண்ட் சார் தான் கொண்டு வந்த "சர்க்கரை நோய் தீர்க்கும்/குறைக்கும்" சில மூலிகை செடிகளை எல்லோருக்கும் கொடுத்தார்.உண்ட மயக்கதில் மட்டையான ஓசை செல்லா.. காய்ச்சல் என்று காரணம் சொன்னார்.. நம்பிட்டோம்ல. :P

.. அம்மாடி.. கை வலிக்கிது... இதுக்கு மேல "சுருக்கமா" என்னால சொல்ல முடியலை.. ஆளை விடுங்க சாமிகளா.. :)).. 4 வரி எழுதினாலே 4000 எழுத்துப் பிழை இருக்கும்.. இதுல எவ்வளவு இருக்கோ.. பொறுத்தருளும் மகா ஜனங்களே.. :))

44 Comments:

said...

// சொந்த பந்தம் சுக துங்கங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இணையம் பக்கம் வரும் 10 நிமிடங்களை( நிஜமாவா? :P ) ஜாலியாக கழிக்க வேண்டும் என்று எழுதுகிறாராம். //

ஆஹா...நான் எழுதிக் கொடுத்தமாதிரியே பேசிட்டாரா லதானந்த் சார்... :) ?

said...

இப்பத்தான் சக பதிவர்கள் அம்புட்டுப் பேரையும் போட்டோல பார்க்குறேன்..நன்றிங்க அண்ணாச்சி...ஆமா நீங்க எங்கே ?

said...

படங்களை நன்றாகப் பதிந்துள்ளீஈர்கள்.
அதற்காக சும்மா விட்டு விடுகிறேன்:-))))
மற்றதை என் வகுப்புக் கண்மணிகள் பார்த்துக் கொள்வார்கள்!

said...

அழகா எழுதி இருக்கீங்க சஞ்சய்... இந்தியா வரும் போது தமிழகத்தில் எங்கு பதிவர் சந்திப்பு நடந்தாலும் செல்ல எண்ணியுள்ளேன்... :)

said...

எழுத்துப் பிழை எல்லாம் அவ்வளவா இல்லங்ண்ணா.... படங்கள் சூப்பருங்ண்ணா... :)

said...

எங்க வாத்தியார் அங்கே பணி அவசரத்தில் கொஞ்சம் பேசியதை திரித்து வெளியிட்டதை கண்டிக்கிறோம்.

said...

சஞ்செய்

விமர்ச்னம் அருமை - இப்படித்தான் எழுத வேண்டும். நன்று

Anonymous said...

//இடையே வடகரை வேலன் .tk முகவரி பற்றிய சந்தேகத்தை கேட்டார்.. நந்து அண்ணா போன்றவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் அதை பற்றி தெரிந்துகொள்ளாவும் கேட்டார்.. அதை பயன்படுத்துவது ஆபத்து என்றும் அதில் ஆபத்தான நிரலிகள் எழுதப் பட்டிருக்கும் என்றும் சொல்லி குண்டை தூக்கி போட்டார்.. உடனே செல்லா அதை எதிர்த்து வாதிட்டார்.. அமெரிக்கா.. டிஎனெஸ், செக்யூரிட்டி.. வழக்கம் போல் அதிலும் தன் நண்பர்கள் இருப்பதாக வாதிட்டார்.. ஸ்ரீ கொஞ்சம் குழப்பியது உண்மை தான்.. குறிபிட்ட நிறுவனம் வழங்கும் இலவச .tk முகவரி மட்டுமே ஆபத்தானது என்று சொல்வதற்கு பதில் மொத்த .tk முகவரியும் ஆபத்தானது என்று குழப்பிவிட்டார்.. எனக்கு கொஞ்சம் தெரிந்த விஷயம் என்பதால் இதை சொல்லி ஒரு வழியாக விவாதத்தை முடித்து வைத்தேன்..
//

Source: http://en.wikipedia.org/wiki/.tk

.tk is the Internet country code top-level domain (ccTLD) for Tokelau, a territory of New Zealand located in the South Pacific.

Tokelau provides any interested individuals .tk domain names free of charge, but forces the placement of advertising banners on all provided domains. These free domains are pointed to Tokelau nameservers, which redirect HTTP traffic via HTML frames to a specified web page. The domains also redirect five email addresses to external addresses. Because of this redirection, use of free .tk domains for other services (such as hosting servers for other protocols such as FTP and IRC or creating hostnames and subdomains within them) is not officially possible. Sites not visited at least 25 times in consecutive 90 day periods are automatically cancelled to avoid the domains being unavailable to more active websites.

Dot-TK recently provided .tk websites the option to join a network called TiKinet, a close-knit network that links sites to each other based on key words called TiKilinks. The network is expected to increase traffic to the websites, many of which are personal sites and blogs operated by individuals who otherwise would have no way to advertise their sites. [1]

To be able to use one's own nameservers, or get a "special" .tk domain name, for example, trademark domain names for most Fortune 500 companies, and to avoid advertisements, the user must buy it. Paid domain names start at $19.90 US for the first 2 years.

Potentially valuable names with less than 4 characters are unavailable for free registration, and must be purchased - usually at a premium price of over $1000 USD.

Internet service provider Road Runner on Time Warner Cable, continues to block sites with the .tk domain with some exceptions including dot.tk, google.tk and tcl.tk. It is unknown what the process is for determining which sites are blocked.


[edit] Controversy
Despite Dot TK stating on their website that the "optional advertisement on your website [...] can be easily removed FOR FREE" many users of Dot TK are unable to remove the advertisements. Removing them is not free of charge but through a "premium rate (paid) SMS" service - paying to remove the ad. Dot.tk currently offers an ambassador program, in which users put a link on their website that offers the services of Dot.tk. For every person a user refers, he/she will get one "fish". Fish can then be traded in for various items, including a Dot.tk paid domain. Originally, a pop up ad was available as an option to DotTK users, but if a pop up blocker was detected, a forced intro page would display. Now, DotTK does not have the pop-up/intro page option for free domains, and all free domains must have a DotTK banner at the top of the website. In addition to these advertisements, Dot TK may sometimes display their registration page instead of the registered website, making the user's site inaccessible. As the server tries to guess your location from your IP address, you may live in a country completely different from the IP reverse-resolve - unfortunately this means the page will be displayed in a different language.

Previously, every access to a free site first would show an advertisement before the redirect to the registered site took place - unless the site manager disabled it in the Linker-Promo section of 'My Dot Tk', you couldn't have more than three free domain names.

There are reports that .tk domains have been used for phishing scams and spam.[2]

Moreover, the Dot.tk 'free forwarding service' is also widely used by spammers and scammers on free advertising services such as Gumtree.[citation needed] Despite numerous attempts to contact the 'dot.tk' abuse team, the service is still permitting unscrupulous users to set up forwarding addresses which enable them to mask their real domain name / url and redirect innocent victims to sometimes illegal / fraudulent web sites.

said...

ரொம்ப நல்ல இருக்கு உங்க கவரேஜ்

said...

ரொம்ப நல்ல இருக்கு உங்க கவரேஜ்

said...

ரொம்ப நல்ல இருக்கு உங்க கவரேஜ்

said...

முழுமையான பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்கள்!

நல்லா இருக்கு!

ஆனா நீங்கதான் எஸ்கேப்பு! :)

said...

neenga enga ?? :)

said...

ஒரு துக்கத்துக்குப் போகவேண்டியதனால் அன்று வர முடியவில்லை. உங்கள் படத்துடன் கூடிய இந்த செய்தி மூலம் நிகழ்வுகளை அறிந்துகொண்டேன். நன்றி பொடியர்.

said...

சஞ்சய்,

அருமையான கவரேஜ். படங்களோடு வீட்டியோவும் இருக்குமென்று பார்த்தால், வீடியோ எடுக்கற மாதிரி படம் போட்டு ஜமாலிச்சிட்டிங்க :)))

வாத்தியார் காட்டிய அவசரம், நீங்கள் எழுதியதைப் படிக்கும்போதே ஏதோ நாங்களே அவசரம் காட்டற மாதிரி வெகு இயல்பு.

மொத்தத்தில் ஜூப்பர்.

:))

Anonymous said...

பரிசல்காரரு அந்த பில்ட் அப் கொடுத்தாரு தான் பயங்கர இளமையா இருக்கறதா, அப்படி ஒன்னும் தோனல சாமி

said...

பதிவர் சந்திப்பு பற்றிய படங்களும், உங்களுடைய வர்ணனைகளும் நன்று. வாழ்த்துக்கள்.

( ஏங்க. எங்க வாத்தியாரை பற்றி குத்தம் சொல்லலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா. உங்களுக்கு பொன்னாடை போர்த்தலேன்னதுக்காக இப்படியா போட்டு குடுக்கிறது. ஏதோ எங்க வாத்தியாரை இளமை மாறாமல் போட்டோ புடிச்சு போட்டதுக்காக உங்களை சும்மா விடுறன்..)

said...

மாமனார் (வாத்தியார்) (எனக்கு வர வேண்டிய சீர் செனத்தீல கொற வெச்சாலும்)சால்வை போட்டு கிளப்புறார் பாருங்க. பெருமையா இருக்கு பாக்க!

மாமா, கோவிச்சுட்டு அக்காவை வையாதீங்க.

said...

//இவர் எழுத்துக்கள் கொஞ்ச ஏடாகூடமாக இருந்தாலும்//

இல்லையே? ரொம்ப நன்றாக எழுதுகிறார். நான் இவர் வலைப்பூவை தினமும் படிப்பேன்.

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

// சொந்த பந்தம் சுக துங்கங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இணையம் பக்கம் வரும் 10 நிமிடங்களை( நிஜமாவா? :P ) ஜாலியாக கழிக்க வேண்டும் என்று எழுதுகிறாராம். //

ஆஹா...நான் எழுதிக் கொடுத்தமாதிரியே பேசிட்டாரா லதானந்த் சார்... :) ?//

ஓ.. இதெல்லாம் உன் வேலை தானா? :)

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

இப்பத்தான் சக பதிவர்கள் அம்புட்டுப் பேரையும் போட்டோல பார்க்குறேன்..நன்றிங்க அண்ணாச்சி...ஆமா நீங்க எங்கே ?//
நான் தான் உங்க எல்லோர் மனசுலயும் இருக்கேனே ரிச்சு.. :P

said...

// SP.VR. SUBBIAH said...

படங்களை நன்றாகப் பதிந்துள்ளீஈர்கள்.
அதற்காக சும்மா விட்டு விடுகிறேன்:-))))
மற்றதை என் வகுப்புக் கண்மணிகள் பார்த்துக் கொள்வார்கள்!//

ஹாஹா.. கோச்சிக்காதிங்க வாத்தியார்... நீங்க இல்லாம போயிருந்த இவ்ளோ சுவாரஸ்யமா முடிஞ்சிருக்காது.. :))

said...

மிகவும் தெளிவான, நல்ல கவரேஜுடன் கூடிய பதிவு!

எல்லோருக்கும், எல்லா உதவிகளையும் செய்துகொண்டே, இத்தனை விஷயங்களைக் கிரகித்து, எழுத்தில் கொணர்ந்திருக்கும் உங்கள் திறமை நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. (நிஜமாகச் சொல்கிறேன்)

வாழ்த்துக்கள்!

அடுத்த சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன்.. (நீங்க எதுவும் கேக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன்.. அதுல முழுசா இருப்பேன்!)


அப்புறம்....
//Anonymous said...
பரிசல்காரரு அந்த பில்ட் அப் கொடுத்தாரு தான் பயங்கர இளமையா இருக்கறதா, அப்படி ஒன்னும் தோனல சாமி//

பெட்ரோல் விலை ஏகத்துக்கும் ஏறிகிட்டிருக்கு, நியூக்ளியர் ஒப்பந்தம் பற்றி எரிஞ்சிட்டிருக்கு, சுப்பிரமணியபுரம் சூப்பரா போய்ட்டிருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு இதுதான் ரொம்ப முக்கியமா அனானி? பாவங்க நானு.. விட்டுடுங்க.. ஏதோ தெரியாம சொல்லீட்டேன்!

(சஞ்சய்..இது உங்க வேலைதானா?)

said...

கோவை பதிவர் சந்திப்பில் "சீனியர் " பதிவாலர்களை சந்திக்கும் நல் வாய்ப்பை இழந்த நிலையில் உங்களின் நேர்முக வர்ணனை போல் அதுவும் வண்ணப் படக் காட்சிகளின் ( ஒரு dvd பதிவு போல்)உள்ள பதிவுக்கு நன்றிகள்.

சகதிவாளர்களின் சிறப்புக்களையும் சாதனைகளையும் பாரட்டுமுகமாக "பொன்னாடை" அணிவித்து( சுவாமி படங்கள் ,இனிப்பு பரிசிகள் அளித்து சிறப்பித்ததை) மகிழ்ந்த " சுப்பையா" வாத்தியார்
அவர்களின் நல் ( நட்பு பாராடும் உயர் குணத்தை)மனதை கொஞ்சம் கூடுதலாக பாரட்டியிருக்கலாமே!

said...

விஜய் said...
சக பதிவாளர்களின் சிறப்புக்களையும் சாதனைகளையும் பாரட்டுமுகமாக "பொன்னாடை" அணிவித்து( சுவாமி படங்கள் ,இனிப்பு பரிசிகள் அளித்து சிறப்பித்ததை) மகிழ்ந்த " சுப்பையா" வாத்தியார்
அவர்களின் நல் ( நட்பு பாராடும் உயர் குணத்தை)மனதை கொஞ்சம் கூடுதலாக பாரட்டியிருக்கலாமே

said...

போட்டுத்தாக்குங்க!

நல்லா இருக்கு பதிவர் சந்திப்பின் வர்ணனை!

சஞ்சயின் மனித நேயம் ஊரறிந்ததாக்கும்!

வாழ்த்துக்கள்

said...

//தான் வாத்தியாரான / ஆக்கப்பட்ட கதையை சொன்னார்... அது மக்களால் கொடுக்கப் பட்ட பட்டம் என்பதாலும் தனக்கு பிடித்திருந்தது என்பதாலும் அதை வைத்துக் கொண்டதாக சொன்னார்... எம்ஜிஆருக்கு பிறகு சுப்பைய்யா வாத்தியாருக்கு தான் இந்த பட்டம் கொடுத்திருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் அடித்துவிட்டார்...//

யாருப்பா அது என்னை முந்தி கொண்டது.

//காபி கொடுத்தோம்... எனக்கு நேரம் இல்லை உடனே கிளம்பனும் என்று சொல்லிவிட்டு எதோ சொல்லிக் கொண்டே குடித்தார்.. , கொஞ்ச நேரத்தில் வடை குடுத்தோம்.. 10 நிமிஷத்தில் நால் கிலம்ப வேண்டும் என்று எதோ சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்... , பிறகு ஜூஸ் குடுத்தோம்.. எனக்கு இதுகெல்லாம் நேரமில்லை நான் போயாகனும் என்று சொல்லிக் கொண்டே ஜூஸ் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டே உக்காந்துக் கொண்டார்..//

அது என்ன எங்க வாத்தியார் சாப்பிட தை மட்டும் இவ்வளவு விலாவாறிய எழுதி இருக்கீங்க? இதுக்கு எல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதா?
இதை நான் வன்மையாக கண்டிகிரேன்.

//கிளம்பும் போது குலாப் ஜாமுன் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்துவிட்டார்... காரணம் கேட்டதற்கு தனக்கு சர்க்கரை எல்லாம் இல்லை.. இனிப்பு சாப்பிட்டால் வெய்ட் போட்டுவிடுவார் என்று டாக்டர் சொன்னாராம்... யாருங்க அந்த மன்சாட்சி இல்லாத டாக்டர்.. :(.. இதுக்கு மேல என்ன வெய்ட் போட்ற முடியும்? :)//

:-))) வலை வீசி தேடிடுவோம்..

வலை பதிவர் சந்திப்புக்கு வர இயலமையின் காரணமாக வருத்தமாக இருந்தேன், உங்கள் பத்திவை படித்தவுடன் அசோகம் போயே விட்டது.

நன்றி சஞ்சை காந்தி

said...

நல்ல கவரேஜ் சஞ்சய்.. போட்டோக்கள் அருமை. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் நினைவில் வைத்திருந்து அழகான நடையில் விளக்கியுள்ளீர்கள். நன்றி..

said...

வெள்ளை சட்ட.. சதுர வாச்சு..
செகப்பு பேனா..கொழந்த சிரிப்பு..
சொம்மா கலக்குறீங்க வாத்தியாரே!

வாத்தியாரையும்,மற்ற பதிவரையும்
விதம்விதமாய் படம் எடுத்து,பிரிச்சு
மேய்ஞ்ச உங்க கைகளுக்கு முத்தம்
தரவேண்டும் அன்பு சஞ்ஜயரே..

அது என்னமோ தெரியல்ல, மகாபாரத்துல தொடங்கி இன்னிக்கு வரைக்கும் சஞ்ஜயர்கள் ரன்னிங் கமெண்ட்ரியில் கலக்குறாங்க!

நான் தமிழ்மணத்துக்கு கொஞ்சம் புதுசு. அதனால மற்ற பதிவர்களைப் பற்றி எழுத முடியல. கோபிச்சுக்காதீங்க, நண்பர்களே :))

said...

பவர் புல் கவரேஜ்ங்க. கலக்குங்க. இந்த பதிவின் ”மேன் ஆப் தி ப்ளாக்கர்” நம்ம அன்பின் வாத்தியார் தான் என்ன சொல்றீங்க நன்பர்களே? கரெக்ட்தானே?

Anonymous said...

சஞ்சய்,

உங்களின் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகின்றேன்.

அசதியிருக்கீங்க... முழுமையான விவரம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

ஆமாம், இதென்ன .tk டொமைனைப் பத்தி நான் குழப்பிட்டேங்கறீங்க? அதோட நேம் சர்வர்ல குழப்பம் பண்ணுவாயங்கன்னு நான் சொன்னது அப்ப உங்களுக்கு புரியவேயில்லையா??? :)))

சரிசரி, யாரோ ஒரு புண்ணியவான் இங்கே .tk பற்றிய விக்கிபீடியா முகவரியையும் கட்டுரையும் கொடுத்திருக்கின்றார் படித்துப் பாருங்கள்.

நன்றி...

said...

// நந்து, ரவி போன்ற ரசிகர்கள் கடிதங்கள் எழுதி தன்னை உற்சாகப் படுத்துவதாகவும் //

நந்து,

இதெல்லாம் நம்பாதீங்க. பொடியன் பொடி வச்சு எழுதியிருக்கார்.

// வடகரைவேலன், லதானந்த் சார் கூட சேர்ந்து எதோ ஒரு ரெஸ்ட் ஹவுசில் ஜோதியில் ஐக்கியமாகியது தனிக் கதை.. //

பத்த வச்சிட்டியே பரட்டை...

said...

பதிவர்களது அலைபேசி எண்ணையும் முடிந்தால் குறிப்பிடவும்.

கவிநெஞ்சன் said...

அருமையா கலக்கிட்ட வாத்தியாரே (புரிஞ்சுக்கினியா, உனக்கும் வாத்தியார் பட்டம்). ஆமா படத்துல அம்புட்டு அப்பாவியா தெரியறவர் தான் கொஞ்சநாளா பதிவுலகைக் கலக்கின தமிழரசி என்கிற ஓசை செல்லாவா? அவரும் உங்க ஊரா? எங்க சிங்காரச் சென்னைக்காரர் சும்மா குன்னூர் னு தமாசு பண்றாருன்னுல நெனைச்சிருந்தோம். ஆளு நிசமாலுமே வில்லங்கமான ஆளுதான் ஓய். உங்க நண்பரா?

அப்புறம் அரசியல் லாம் கலக்குவாரே தியாகு அவரும் கோயம்புத்தூரா. சுப்பையா வாத்தியார் வேறு. கோவைல இவ்வளவு வலையுலகப் பிரபலங்கள் சேர்வாங்கன்னு தெரிஞ்சா ரயில் புடிச்சாவது வந்திருப்போம்ல சிங்காரச் சென்னையிலிருந்து. அடுத்து எல்லாருக்கும் சேர்த்து அழைப்பு அனுப்பும் ஓய்.

உண்மையில் இவ்ளோ அழகாக புகைப்படத்தோடு பதிவுபோட்ட உமக்கும் ஒரு ஓஓ போடனும் ஓய். சும்மா கலக்கிட்டே வாத்யாரே.

said...

நல்ல பதிவும் சுருக்கெளுத்தாளருக்குடைய எழுத்து நடையும்.ஆமா?ஏன் செல்லா வெகு டல்லா?இருந்தாலும் பொன்னாடை சிரிப்பு மட்டும் விதிவிலக்கு.சென்ற முறை அவர் அமைத்த காந்திபுர சந்திப்பும் நினைவுக்கு வந்து போகிறது.

சிந்தனை முகங்களின் ஒருங்கிணைப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

Anonymous said...

ஆமா நீங்க unsettled woman அ சைட் அடிக்க தேடினத சொல்லவே யில்ல??

said...

@ ரிசான்
//ஆஹா...நான் எழுதிக் கொடுத்தமாதிரியே பேசிட்டாரா லதானந்த் சார்... :) ?//

அட. அதெல்லாம் உன் வேலை தானா? :)

//இப்பத்தான் சக பதிவர்கள் அம்புட்டுப் பேரையும் போட்டோல பார்க்குறேன்..நன்றிங்க அண்ணாச்சி...ஆமா நீங்க எங்கே ?//

நான் கேமரவுக்கு பின்னாடி இருந்தேன்.. :)

------
//SP.VR. SUBBIAH said...

படங்களை நன்றாகப் பதிந்துள்ளீஈர்கள்.
அதற்காக சும்மா விட்டு விடுகிறேன்:-))))
மற்றதை என் வகுப்புக் கண்மணிகள் பார்த்துக் கொள்வார்கள்!//

ஹாஹா.. நன்றி வாத்யாரே. :)

---
//தமிழ் பிரியன் said...

அழகா எழுதி இருக்கீங்க சஞ்சய்... இந்தியா வரும் போது தமிழகத்தில் எங்கு பதிவர் சந்திப்பு நடந்தாலும் செல்ல எண்ணியுள்ளேன்... ://
நன்றி தமிழ்பிரியன்.

//எங்க வாத்தியார் அங்கே பணி அவசரத்தில் கொஞ்சம் பேசியதை திரித்து வெளியிட்டதை கண்டிக்கிறோம்.//

அட நீங்க வேற.. ரொம்ப சுருக்கி வெளியிட்டிருக்கிறேன். :))

----
// cheena (சீனா) said...

சஞ்செய்

விமர்ச்னம் அருமை - இப்படித்தான் எழுத வேண்டும். நன்று//

நன்ரி சீனா சார் :)

said...

.tk விளக்கத்துக்கு நன்றி அனானி.. நல்ல விஷய்ங்கள கூட ஏன் தான் முகமூடி போட்டு சொல்றிங்களோ? :(

-----

//Nithya (நித்யா) said...

ரொம்ப நல்ல இருக்கு உங்க கவரேஜ்//

இத ஒரு வாட்டி சொன்னப் பத்தாதா? 3 வாட்டி சொலனுமா? :) ..நன்றி நித்யா..

//neenga enga ?? :)//

கழுதை கெட்டா..... :))
----

// ஆயில்யன் said...

முழுமையான பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்கள்!

நல்லா இருக்கு!

ஆனா நீங்கதான் எஸ்கேப்பு! :)//

நன்றி ஆயிலய்ன்... எல்லாம் உங்க மேல இருக்கிற அக்கறைல தான் :P

-------

// Kasi Arumugam - காசி said...

ஒரு துக்கத்துக்குப் போகவேண்டியதனால் அன்று வர முடியவில்லை. உங்கள் படத்துடன் கூடிய இந்த செய்தி மூலம் நிகழ்வுகளை அறிந்துகொண்டேன். நன்றி பொடியர்.//

இதெல்லாம் போங்கு ஆட்டம்.. நீங்க வருவீங்கனு 5 மணி வரை காத்துட்டு இருந்தோம்> :(

--------
//வாத்தியார் காட்டிய அவசரம், நீங்கள் எழுதியதைப் படிக்கும்போதே ஏதோ நாங்களே அவசரம் காட்டற மாதிரி வெகு இயல்பு.

மொத்தத்தில் ஜூப்பர்.//

நன்றி சதங்கா :)

------

said...

// Anonymous said...

பரிசல்காரரு அந்த பில்ட் அப் கொடுத்தாரு தான் பயங்கர இளமையா இருக்கறதா, அப்படி ஒன்னும் தோனல சாமி//

அட இல்லீங்க .. இளமையா தான் இருக்காரு.. 2 நாள் கழிச்சி என் அலுவலகம் வந்தார்.. அங்கயும் தான் இளமையா இருக்கிறதா என்கிட்ட சொல்லி "வருத்தப்" பட்டார் :))

---------

//உங்களுக்கு பொன்னாடை போர்த்தலேன்னதுக்காக இப்படியா போட்டு குடுக்கிறது.//

ஆஹா.. கண்டுபிடிச்சிட்டிங்களே கல்கிதாசரே.. :)

----

// பழமைபேசி said...

மாமனார் (வாத்தியார்) (எனக்கு வர வேண்டிய சீர் செனத்தீல கொற வெச்சாலும்)சால்வை போட்டு கிளப்புறார் பாருங்க. பெருமையா இருக்கு பாக்க!

மாமா, கோவிச்சுட்டு அக்காவை வையாதீங்க//

நன்றி சூலூர்காரரே.. :)

-------

//கயல்விழி said...

//இவர் எழுத்துக்கள் கொஞ்ச ஏடாகூடமாக இருந்தாலும்//

இல்லையே? ரொம்ப நன்றாக எழுதுகிறார். நான் இவர் வலைப்பூவை தினமும் படிப்பேன்.//

அவர் நன்றாக எழுதுவதால் தானே ஏடாகூடமா இருந்தாலும் விரும்பி படிக்கிறோம். :)

------

said...

//பரிசல்காரன் said...

மிகவும் தெளிவான, நல்ல கவரேஜுடன் கூடிய பதிவு!

எல்லோருக்கும், எல்லா உதவிகளையும் செய்துகொண்டே, இத்தனை விஷயங்களைக் கிரகித்து, எழுத்தில் கொணர்ந்திருக்கும் உங்கள் திறமை நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. (நிஜமாகச் சொல்கிறேன்)
//

ஆஹா.. 2 நாளா எனக்கு குளிர் காய்ச்சல் வந்ததுகு நீங்க தான் காரணமா? :))

// வாழ்த்துக்கள்!

அடுத்த சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன்.. (நீங்க எதுவும் கேக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன்.. அதுல முழுசா இருப்பேன்!)//

தெரியுமே.. லதானந்த் சார் போன் பன்ற வரைக்கும் முழுசா இருப்பீங்கனு :P

-------

//பெட்ரோல் விலை ஏகத்துக்கும் ஏறிகிட்டிருக்கு, நியூக்ளியர் ஒப்பந்தம் பற்றி எரிஞ்சிட்டிருக்கு, சுப்பிரமணியபுரம் சூப்பரா போய்ட்டிருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு இதுதான் ரொம்ப முக்கியமா அனானி? பாவங்க நானு.. விட்டுடுங்க.. ஏதோ தெரியாம சொல்லீட்டேன்!

(சஞ்சய்..இது உங்க வேலைதானா?)//

அண்ணே.. நாங்கள்லாம் பாராட்டினாலும் திட்டினாலும் முகத்தை மறைச்சிக்க மாட்டோம் அண்ணே.. இது உங்களால பாதிக்கப் பட்ட வேற யாரோ ஒரு அப்பாவியாக்கும். :))

said...

கருத்துக்கு நன்றி விஜய் :)..

---

சுரேகா.. said...

போட்டுத்தாக்குங்க!

நல்லா இருக்கு பதிவர் சந்திப்பின் வர்ணனை!//

நன்றி சுந்தர் அண்ணாச்சி :)

----

//வலை பதிவர் சந்திப்புக்கு வர இயலமையின் காரணமாக வருத்தமாக இருந்தேன், உங்கள் பத்திவை படித்தவுடன் அசோகம் போயே விட்டது.

நன்றி சஞ்சை காந்தி//

வந்திருந்தால் நாங்கள் சந்தோஷப் பட்டிருப்போம் விமல். :)

-------

//வெண்பூ said...

நல்ல கவரேஜ் சஞ்சய்.. போட்டோக்கள் அருமை. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் நினைவில் வைத்திருந்து அழகான நடையில் விளக்கியுள்ளீர்கள். நன்றி.//

நன்றி வண்பூ.. :)

---

//அது என்னமோ தெரியல்ல, மகாபாரத்துல தொடங்கி இன்னிக்கு வரைக்கும் சஞ்ஜயர்கள் ரன்னிங் கமெண்ட்ரியில் கலக்குறாங்க!//

நன்றி தமாம் பாலா சார்.. ( ஹ்ம்ம்.. வெறும் வாய் தான்னு சொல்லாம சொல்றிங்க.. நல்லா இருங்க.. :) )
------

// Covai Ravee said...

பவர் புல் கவரேஜ்ங்க. கலக்குங்க. இந்த பதிவின் ”மேன் ஆப் தி ப்ளாக்கர்” நம்ம அன்பின் வாத்தியார் தான் என்ன சொல்றீங்க நன்பர்களே? கரெக்ட்தானே?//

நீங்க சொன்னா சரி தான் ரவி சார். கருத்துக்கு நன்றி.

said...

// ஸ்ரீ said...

சஞ்சய்,

உங்களின் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகின்றேன்.

அசதியிருக்கீங்க... முழுமையான விவரம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..//

நன்றி ஸ்ரீ.. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். :)

------

//
பத்த வச்சிட்டியே பரட்டை...//

வாங்க வெயிலான்.. எதோ நம்மளால முடிஞ்சது.. :)

----

//வேளராசி said...

பதிவர்களது அலைபேசி எண்ணையும் முடிந்தால் குறிப்பிடவும்.//

பொதுவில் குறிப்பிடுவதை சிலர் விரும்ப மாட்டார்கள் வேளராசி சார்.. அதான் தரல.

---

//உண்மையில் இவ்ளோ அழகாக புகைப்படத்தோடு பதிவுபோட்ட உமக்கும் ஒரு ஓஓ போடனும் ஓய். சும்மா கலக்கிட்டே வாத்யாரே//

நன்றி கவிநெஞ்சரே... கோவையில் இன்னும் அதிக பதிவர்கள் இருக்கிறார்கள். :)

----

//சிந்தனை முகங்களின் ஒருங்கிணைப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.//

நன்றி ராஜ நடராஜன்.

---

//Anonymous said...

ஆமா நீங்க unsettled woman அ சைட் அடிக்க தேடினத சொல்லவே யில்ல??//

அட நீங்க வேற.. அத என்கிட்டயே யாரும் சொல்லலை.. :P

said...

சஞ்சய் விரிவான பதிவா போட்டு அசத்திட்டீங்க, நான் முழுவதும் இல்லை என்றாலும் நீங்கள் கொடுத்த விவரங்கள் அந்த குறையை நீக்கி விட்டது.

Anonymous said...

சஞ்சய் சார்.

அடியேன் வகுப்பிற்கு இந்த 2011 ல்
சேர்ந்துள்ள புது மாணவன்,

உங்களுடைய கோவை பதிவர் சந்திப்பு
அனுபவங்கள் அருமை,

முக்கியமாய் நமது வாத்தியாரைப் பற்றி
குறிப்பிட்டுள்ளவற்றை படித்து
என் வாழ்நாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன், உங்கள் வர்ணனை SUPER

Tamiler This Week