இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday, 20 July 2008
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க
Lables
அணுசக்தி ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு வரி செய்தி :
நாட்டின் மின் தேவையை சமாளிப்பதே.
இன்று நாட்டின் மின்சார உற்பத்தி எந்த நிலையில் இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக அரசு தினமும் மின் வெட்டை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான். அவ்வளவு பற்றாக்குறை. காரணம்.. மின் உற்பத்திக்கான ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருவது தான். நிலக்கரி இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு காலத்திற்கு தான் வெட்டி எடுக்க முடியும். இருக்கும் வரை தான். இன்னும் சில ஆண்டுகளே நிலக்கரி கிடைக்கும். பிறகு என்ன செய்வது?காங்கிரஸ் அரசாங்கத்தின் "கையாகாத்தனத்தால்" , "தவறான ஆட்சி முறையால்" பருவ நிலைகளும் மாறிவிட்டது. சரியான மழை இல்லை. நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஆக.. நீர் மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது.
எனவே மாற்று வழியை தேடித் தானே ஆக வேண்டும்?. அந்த மாற்று வழி தான் அணு மின்சாரம். ஆனால் அதை தயாரிக்க போதுமான அளவு மூலப் பொருள் (தோரியம்) நம்மிடம் இல்லை. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப் போகும் அணு சக்தி ஒப்பந்த்ததின் மூலம் நமக்கு அது கிடைக்கும். இதன் மூலம் நம் மின்சாரத் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்யலாம். இல்லை எனில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இருளில் மூழ்கும் என்பது உறுதி.
இந்த ஒப்பந்தத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் "அமெரிகா நம் அணு உலைகலை கண்காணிக்கும். நாம் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது. நாம் அணு குண்டு தயாரிக்க அமெரிக்கா தடை விதிக்கும்" என்பது தான். இது பயங்கரமாய் சிரிப்பை வரவழைக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவை எந்த உலக நாடும் கட்டுபடுத்த முடியாது. அமெரிக்காவிடமிருந்து வாங்கும் தோரியத்தை நாம் அணு குண்டு தயாரிக்க உபயோகப் படுத்திவிடக் கூடாது என்று தான் அவர்கள் கண்காணிப்பார்கள். அப்படியே நாம் அனுகுண்டு சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தம் ரத்தாகும் அவ்வளவு தான்.
அதுவும் எல்லா அணு உலைகளிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. சிவில் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கென இரண்டு வகையாக நம் அணு உலைகள் பிரிக்கப் படும். மின்சாரத்திற்கு பயன்படுத்தப் படும் அணு உலைகளை தான் சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்கும். இராணுவ பயன்பாட்டிற்கான அணு உலைகளில் நாம் என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது.
அப்படியே நாம் அணுகுண்டு வெடித்து அமெரிக்கா நமக்கு அணு சப்ளையை நிறுத்திக் கொண்டாலும் கவலை இல்லை. அணுகுண்டு சோதனைக்கான நேரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வரையில் அவர்கள் அளிக்கும் தோரியத்தை பயன்படுத்திக் கொள்ளளாமே. கிடைக்கும் வரை லாபம் தானே.
அணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று தான் விதிகள் உள்ளதே ஒழிய நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படியே நாம் அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தினாலும் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. கடந்த முறை அணுகுண்டு சோதனை நடத்தி முடித்து புத்தர் சிரித்தார் என்று அறிவித்த பின் தான் உலக நாடுகளுக்கு தெரிந்தது.
ஆகவே நம் மின் தேவையை உணர்ந்து தேவை இல்லாத குழப்பங்களை தவிர்த்து அனைவரும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் டி.ராஜா : நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிக்கவில்லை. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை தான் எதிர்க்கிறோம்." ஹாஹா.. என்ன கொடுமையான கொள்கை இது?..
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
123 கூட்டல் கணக்கிற்கு அடிப்படையான விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.ஒப்பந்தம் கைசாத்திட வேண்டுமென விரும்புகிறேன்.ஆனால் குதிரை வியாபாரிகள் கவிழ்த்து விடுவார்கள் போல இருக்கிறேதே.
பதிவிற்கு பின்னூட்டமிட்டு விட்டுத்தான் பதிவர் பெயரைப் பார்த்தேன்.இந்த ஒப்பந்தம் தனக்கும் தனது எதிர்கால சந்ததிக்கும் சம்பந்தமானது என்பது ஏன் இந்த அரசியல்வாதிகளுக்குப் புரிவதில்லை.பிரச்சினைகளை ஆராய்ந்தால் கூட ஆறுதல்படலாம்.ஆனால் காலை வாருவதிலேயே அக்கரை கொண்டவர்களாக இருக்கிறார்களே.
சஞ்ஜை என்ன சொன்னாலும் அவனுங்களுக்கு புரியாது,கோடுவிழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகொன்டு இருப்பார்கள்.ஆனால் நீங்கள் சொல்வது உறுதி இந்தியா இருளில் மூழ்கும்.
first!
ஒரு பன்னியின் விலை 25 கோடியாமே.
சஞ்சய், எந்த அடிப்படையில் அணு ஆயுத ஒப்பந்தத்தை அனுகுகிறீர்கள் என்று தெரியவில்லை. தோரியம், யுரேனியம் வேண்டும் என்பதற்கு 123 ஐ ஆதரிக்க இயலாது. 123 யின் படி நமது அணு உலைகளை IAEA கண்காணிக்கும். இந்திய மூளைகளிடம் பிச்சை வாங்கக் கூட திறன் இல்லாத IAEA அதிகாரிகள் அமெரிக்காவின் டம்மிகள் மட்டுமே. IAEA அமெரிக்கா சொல்வதை மட்டுமே கேட்கும். பரந்த இந்தியாவில் தோரியம், யுரேனியம் இல்லை என்பது ஒரு மாயத் தோற்றம். விரிவாக நேரம் கிடைக்கும் போது விவாதிக்கலாம்... :)
தலைக்கு மேல வெள்ளம் போயாச்சுங்க அண்ணா. இனி அது சாண் போனா என்ன? மொழம் போனா என்ன?? பொருளாதாரமயமாக்கல்னு சொல்லி வியாபாரிகள உள்ள விட்டம்ங்க அண்ணா. அவிங்க அவிங்களோட சாமான் விக்கறதுக்கு தோதா, சனங்களோட வாழ்க்கை தரத்தை ஒசத்திட்டாங்க. இப்ப, அதுக்கு நெறய கரண்ட் வேணும். இப்படி தும்ப விட்டுட்டு வாலைப் புடிக்கறது தப்புதானுங்க அண்ணா. நங்கயாவும் அம்மினியும் சௌக்கியங்களா??
சஞ்செய் சொல்வது சரிதான் - என்ன செய்யலாம் - ம்ம்ம்ம்ம்
சில விவரங்களை உங்களுக்கு தர வேண்டும் என்று நினைக்கிறேன்,
இதை எதிர்ப்பவர்கள் அணுமின்சாரமே வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
.இப்போது நாம் தயாரிக்கு அணுமின்சாரம் வெறும் 2% .அதை 5% உயர்த்துவதற்கு செலவளிக்கபோகும் தொகை பல்லாயிரகணக்கான கோடி ரூபாய்கள்.ஆனால் மரபு சாரா எரிசக்தி என்று சொல்லப்படும் காற்று மற்றும் சூர்ய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இப்போது 5% ,இதற்காக ஒதுக்கிய பணம் வெறும் 600 கோடிகள்தான்.இதனை இரண்டு மடங்காக உயர்த்தினால் ஆகபோகும் செலவு சில நூறு கொடிகள்தான். அதைவிட முக்கியம் அணு மின் உலைகள் அமைத்தால் அதற்கான பாதுகாப்பு செலவுகள் மற்றும் உபயோகித்த எரிபொருள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஆகும் செலவு என்று கணக்கில் அடங்காத பணம் செலவு செய்ய வேண்டும் .அமெரிக்கா தனது நாட்டில் உள்ள சில் அணு உலைகளை மூட செய்ய போகும் செலவே ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.
ஆகவே இங்கு பிரச்னை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமா என்பது மட்டும் அல்ல .அணு உலைகளே தேவையா என்பதுதான்.
மாம்ஸ் என்ன என்னமோ பெரிய விசயத்தை பற்றி எல்லாம் பேசுறீங்க! அதுக்கு உங்கள் பெயர் ஒரு காரணமா?:))))
//.பிரச்சினைகளை ஆராய்ந்தால் கூட ஆறுதல்படலாம்.ஆனால் காலை வாருவதிலேயே அக்கரை கொண்டவர்களாக இருக்கிறார்களே.//
இதுதான் நடராஜன் நம் தேசத்தில் சாபம்.
//ஆனால் குதிரை வியாபாரிகள் கவிழ்த்து விடுவார்கள் போல இருக்கிறேதே.//
முடியவில்லையே.. சிங்குனா கிங்குதான்னு நிருபிச்சிட்டாரே.. :)
//தென்றல்sankar said...
சஞ்ஜை என்ன சொன்னாலும் அவனுங்களுக்கு புரியாது,கோடுவிழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகொன்டு இருப்பார்கள்.ஆனால் நீங்கள் சொல்வது உறுதி இந்தியா இருளில் மூழ்கும்//
இங்கு மக்கள் நலனில் யாருக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை... வீம்பு தான் முன்னிற்கிறது... எதிர்க் கட்சி என்றால் எதிரிக் கட்சி என்று தான் நினைக்கிறார்கள். அதான் நல்லது செய்தாலும் எதிர்க்கிறார்கள்.
//கார்மேகராஜா said...
first!//
ஆதரவுக்கு நன்றி காமேரா :)
//பன்னி said...
ஒரு பன்னியின் விலை 25 கோடியாமே.//
உங்களுக்கு தான் சரியா தெரியும் :P
// தமிழ் பிரியன் said...
சஞ்சய், எந்த அடிப்படையில் அணு ஆயுத ஒப்பந்தத்தை அனுகுகிறீர்கள் என்று தெரியவில்லை.//
மின் தேவை மட்டுமே அடிப்படை.
// தோரியம், யுரேனியம் வேண்டும் என்பதற்கு 123 ஐ ஆதரிக்க இயலாது.//
வேறு எதற்கு ஆதரிப்பீர்கள்?
// 123 யின் படி நமது அணு உலைகளை IAEA கண்காணிக்கும். //
சிவில் அணு உலைகளை மட்டும் கண்கானிக்கும்.. ராணுவ பயன்பாட்டிற்கான உலைகளை கண்கானிக்க முடியாது.
//இந்திய மூளைகளிடம் பிச்சை வாங்கக் கூட திறன் இல்லாத IAEA அதிகாரிகள் அமெரிக்காவின் டம்மிகள் மட்டுமே.//
உணர்ச்சி வசப் படாதிங்க தமிழ் பிரியன்.இந்தியர் ஒருவர் இதன் தலைவரா இருந்திருக்கிறார். :)
//IAEA அமெரிக்கா சொல்வதை மட்டுமே கேட்கும்.//
தவறான புரிதல். இதில் ரஷ்யா , சீனா உட்பட 25க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அமெரிக்கா பேச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை.
//பரந்த இந்தியாவில் தோரியம், யுரேனியம் இல்லை என்பது ஒரு மாயத் தோற்றம்.//
பரந்த இந்தியாவில் கால் பந்தாட ஆள் கிடைக்கவில்லை என்றால் அது மாயத் தோற்றம். பரந்துபட்ட இந்தியாவில் சம்பாதிக்க முடியாமல் வெளிநாடு போய் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் அது மாயத் தோற்றம்..யுரேனியம் என்பது இயற்கை வளம். இயற்கை வளத்திற்கும் பரப்பளவிற்கும் சம்பந்தம் இல்லை நண்பரே.. உங்கள் கூற்று படி பெட்ரோலுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருப்பதும் மாயத் தோற்றம் என்றாகும்...
ஆனால்.. உண்மையில் இந்தியாவில் ஓரளவாவது யுரேனியம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை பிரித்தெடுக்க மிகப் பெரிய கால அவகாசமும் மிகப் பெரிய அளவில் நிதியும் தேவைப் படுகிறது. அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று அணு விஞ்ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள்.
// விரிவாக நேரம் கிடைக்கும் போது விவாதிக்கலாம்... :)//
வலைச்சரப் பணி முடித்து வாங்க.. விவாதிப்போம். ;)
//அவிங்க அவிங்களோட சாமான் விக்கறதுக்கு தோதா, சனங்களோட வாழ்க்கை தரத்தை ஒசத்திட்டாங்க. இப்ப, அதுக்கு நெறய கரண்ட் வேணும். இப்படி தும்ப விட்டுட்டு வாலைப் புடிக்கறது தப்புதானுங்க அண்ணா.//
அய்யா பழமை பேசி.. இன்னும் பழைமையே பேசிட்டு நேரத்தை வீணடிச்சிட்டு இருக்காதிங்க :).. வாழ்க்கை தரம் உயரனும்னு தான் எல்லாரும் உழைக்கிறாங்க. நீங்க என்னடானா அது தப்புனு சொல்றிங்க.. :).. நீங்க இந்த கமெண்ட் போட இணையத்தில் இருக்க கரண்ட் வேணுங்கணா... பழமை பேசும் உங்களுக்கு இணையத்தில் இருப்பது இனிக்கிறது.. ஆனால் அடுத்தவன் வாழ்க்கை தரம் உயர்ந்தது கசக்கிறது.. என்னங்ணா நீங்க.. கோவைக் காரர் பேசற பேச்சா இது? :P
அத்தியாவசியத் தேவைகள் எப்போதும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதை சமாளிக்கும் வழிகள் இருக்கும் போது பயன்படுத்திக்கனும். அதை குறை சொல்லப் படாது.. :)
//நங்கயாவும் அம்மினியும் சௌக்கியங்களா??//
நீங்களும் கேட்டுட்டு தான் இருக்கிங்க.. பதில் சொல்லத் தான் எனக்கு அப்டி யாரும் இல்லை :((
//babu said...
சில விவரங்களை உங்களுக்கு தர வேண்டும் என்று நினைக்கிறேன்,
இதை எதிர்ப்பவர்கள் அணுமின்சாரமே வேண்டாம் என்று சொல்கிறார்கள்.//
அது தான் தவறு என்று சொல்கிறோம். நம் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்கு மாற்று வழி இருக்கும் போது பயன்படுத்துவதில் என்ன தவறு?
// .இப்போது நாம் தயாரிக்கு அணுமின்சாரம் வெறும் 2% .அதை 5% உயர்த்துவதற்கு செலவளிக்கபோகும் தொகை பல்லாயிரகணக்கான கோடி ரூபாய்கள்.//
சிறு திருத்தம். இப்போது 3% தயாரிக்கிறோம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு 6 சதவீதமாக உயரும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் 11 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான கோடிகள் செலவு என்பது கொஞ்சம் மிகை படுத்தப்பட்ட செய்தி. :).. எதிர்காலத் தேவைக்காக இப்போது செலவளிப்பது தவறில்லை. இப்போது விட்டால் பிறகு இன்னும் அதிக செலவிட வேண்டி இருக்கும். தேசிய நதிகள் இணைப்புக்கு மதிப்பிட்ட தொகை இதர்கு உதாரணம். அப்போதே செயல்படுத்தி இருந்தால் சில ஆயிரம் கோடிகளில் முடிந்திருக்கும். இப்போது 4 லட்சம் கோடிகள் ஆகும் என கணிக்கப் பட்டிருக்கிறது. :(
//ஆனால் மரபு சாரா எரிசக்தி என்று சொல்லப்படும் காற்று மற்றும் சூர்ய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இப்போது 5% ,இதற்காக ஒதுக்கிய பணம் வெறும் 600 கோடிகள்தான்.இதனை இரண்டு மடங்காக உயர்த்தினால் ஆகபோகும் செலவு சில நூறு கொடிகள்தான். //
நல்ல தகவல் . நன்றி பாபு. ஆனால் காற்று மின்சாரத்தை அவ்வளவாக நம்ப முடியாது. எப்போதும் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியாது. இப்போது கோவை மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மிகக் குறைவான அளவே தயாரிக்க முடிகிறது. அதற்கு காற்று நன்றாக வீச வேண்டும். சூரிய சக்தி நல்ல விஷயம் . அதை மானியம் தந்து அனைவரையும் வீட்டில் உபயோகப் படுத்த செய்யலாம். ஆனால் தொழிற்சாலை தேவைகளுக்கு இது உதவாது.
//அதைவிட முக்கியம் அணு மின் உலைகள் அமைத்தால் அதற்கான பாதுகாப்பு செலவுகள் மற்றும் உபயோகித்த எரிபொருள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஆகும் செலவு என்று கணக்கில் அடங்காத பணம் செலவு செய்ய வேண்டும் //
ஒத்துக் கொள்கிறேன்... இந்த பின்னூட்டம் போட நீங்கள் பயன்படுத்திய விசப் பலகை அணுவை விட மோசமானது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுவும் அழிக்க முடியாத மக்காத பொருள். மண்ணை நாசப் படுத்தும் பொருள். இதை உங்களால் தவிற்க முடியுமா? அது போலத் தான் அணுசக்தி பயன்பாடும். நிச்சயம் இதில் தீமை இருக்கு. ஆனால் தவிர்க்க முடியாதே.
//.அமெரிக்கா தனது நாட்டில் உள்ள சில் அணு உலைகளை மூட செய்ய போகும் செலவே ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.//
ஓ.. அவ்வளவு செலவாகுமா? :(
ஆனால் எதற்கு அணு உலைகளை மூட வெண்டும். இன்றைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒருவேளை புதுபிக்க முடியாமல் போனாலும் பிற்காலத்தில் அதற்கான் தொழில்நுட்பம் கண்டுபிடிக்க படலாமே.. ஆகவே மூடிவிழா பற்றி இப்போதே ஏன் கவலை படனும்? :)
//ஆகவே இங்கு பிரச்னை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமா என்பது மட்டும் அல்ல .அணு உலைகளே தேவையா என்பதுதான்.//
மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டால் நிச்சயம் தேவை தான்.
கருத்துக்கு நன்றி பாபு. :)
//குசும்பன் said...
மாம்ஸ் என்ன என்னமோ பெரிய விசயத்தை பற்றி எல்லாம் பேசுறீங்க! அதுக்கு உங்கள் பெயர் ஒரு காரணமா?:))))//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் மாமா.. :)) உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பார்த்தால் இதெல்லாம் சப்ப மேட்டர் மாமா.. உங்க போட்டோ குரும்புகளை பார்த்தாலே தெரியும் .. நீங்க எவ்ளோ பெரிய (விஞ்)ஞானி என்று. :)
ஞாயிற்றுக்கிழமைங்கிறதால தமிழ்மணத்திற்கு பதிவு குறையுதா?தலைப்புல எனது பதிவும் முற்றுமில் உங்க பதிவும் மீள் பதிவு போடுது?
எப்படியோ வந்ததுக்கு பின்னூட்டங்களை ரசித்துப் போகிறேன்.குசும்பு உங்க பேரு காலத்து விசயமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காரு:)
இங்க, அமெரிக்காவுல வேகமாப் பரவிட்டு இருக்குற பழைய ஆமிஷ் பண்பாடு பத்தியும் தெரிஞ்சுக்குங்களேன். ச்சும்மா, ஒரு தகவலுக்கு தான்.
http://www.800padutch.com/amish.shtml
http://en.wikipedia.org/wiki/Amish
Post a Comment