இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday, 15 June 2008
தசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்
என்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே எப்போவும் பாட்டு பாடறானுங்க. அதுவும் இல்லைனா எல்லா படத்துலையும் பறந்து பறந்து சண்டை போடறானுங்க.
இவர்களுக்கு மத்தியில் கமல் ரொம்பவே வித்தியாசம் தான். எப்போதும் ஒரே மாதிரி படம் கொடுத்து போர் அடிபப்தில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் நம்மை ரசிக்க வைக்க "முயற்சி" செய்கிறார். இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் வரிசையில் அவைகளை தூக்கி சாப்பிடும் வகையில் இது அபாரமான முயற்சி. நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். இது தான் உண்மையான கலைஞனுக்கான அடையாளம்.
சும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை.
தொழில்நுட்ப ரீதியில் கலக்கி இருக்கிறார்கள். லாஜிக் விளக்கெண்ணைகளை தவிர்த்து வித்தியாசமான , புதுமையான முயற்சியை ரசிக்கும் மனது இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
20 Comments:
மீ தி பர்ஸ்ட்டு??
உலக நாயகன் இல்ல உலகதரத்துக்கு எதாவது விளக்கம் சொல்ல முடியுங்களா!?
பிலிஸ்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜயகாந்தின் "அரசாங்கம்" பாக்கப் போன போது 'உலகத் தரத்தில் எடுத்திருக்கானுங்களாம்டா'ன்னு நண்பன் சொன்னான். 'உலகத்தரம்னா என்னடா?'ன்னு கேட்டேன். 'சண்ட போடும் போது கயறக் கெட்டி தூக்குவாய்ங்க' ன்னான்.
இந்த விளக்கம் தெரியாமல் போனவங்களுக்கு படம் உலகதரமா தெரியாதுதான் :(
முதல் 15 நிமிஷம் ஒரு மாபெரும் சரித்திரப்படத்தைப் பார்க்கற மாதிரி இருக்கு.
கொஞ்சம் கொஞ்சம் ஹே ராம் வாசனை அடிச்சாலும் கூட.
கமலோட 10 அவதாரத்துல,[ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், புஷ், அமெரிக்க
ஆர்னால்ட், ஜப்பானிய அண்ணன், அவ்தார் சிங்,பாட்டி, பல்ராம் நாயுடு, பூவராகன், [காலிஃபுல்லா] மனசுல நிக்கறது ரெண்டே ரெண்டு பேர்தான்.
பல்ராம் நாயுடு, பூவராகன்.
இத்தனை ரோலையும் இவரே செஞ்சிருக்கணுமான்னு மனசுல பட்டுகிட்டே இருந்திச்சு.
இவ்வளவு கஷ்டப்பட்டு, என்ன பிரமாதமாகச் செய்துவிட்டார்னு பார்த்தா,
ப்ச் :(
ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல.
நம் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது .
அசினின் கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவர்
'பெருமாளே' எனச் சொல்லும்போதெல்லாம் ஓங்கி அறையலாமா என எரிச்சலே வருகிறது.
மொத்தத்தில் படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.
பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.
:)))
பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((
சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.
நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது
:)))))))))
நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.
டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியவில்லை
:((
மீ தி 15 ஆ உதவிக்கு நி.நல்லவரை அழைக்கிறேன்.
:)
தல
உங்க பக்கம் தான் நானும். மங்களூர் சிவாவின் விமர்சனத்தை கணக்கில் எடுக்காதீங்க இவர் விஜய்காந்த் ரசிகர் ;-))
//சும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை//
Well Said.
:)
அன்பான பின்னூட்ட பெருமக்களான மங்களூர் சிவா, ட்ரீம்ஸ், கானா பிரபா, கைபுள்ள ஆகியோருக்கு இந்த நேரத்திலே என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன். நன்றி...நன்றி...நன்றி... :)
Post a Comment