இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 15 June, 2008

சிவாஜி வாயில் ஜிலேபி - தமிழச்சி மற்றும் டோண்டு ஸ்பெஷல்

நம்ம ரிஷான் அண்ணாவுக்கு ஒரு சினிமா எடுக்க ஆசை. அதற்காக சில பல Non Residential Ilichavayarகளை அனுகுகிறார். அவர்களை சம்மதிக்க வைக்க முடியாமல் தானே தயாரிப்பது என்று முடிவெடுக்கிறார். ஆனால் தன்னிடம் இருந்த பணமெல்லாம் நமீதா ரசிகர் மன்றத்துக்கு பேனர் வைத்தும் போஸ்டர் ஒட்டியுமே கரைந்து விட்டதால் தன்னிடம் உள்ள மிச்சம் மீதி பணத்தை வைத்து ஒரு பிட்டு படமாவது எடுக்க முடிவு செய்கிறார். அதாங்க டாக்குமெண்டரி படம்.

இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார். என்ன கருத்து சொல்லலாம் என் கத்தாரில் ரூம் போட்டு தம் அடித்து யோசித்ததில் ஒன்றும் தோன்றாமல் போகவே போக்கிரி வடிவேல் ரேஞ்சில் தம் போச்சே என ஃபீல் பண்ணும் போது ஒரு பொரி தட்டுகிறது. அதாவது தம் அடிப்பதை நிறுத்துவதற்கு ஒரு பிட்டு படம் எடுக்க முடிவு செய்கிறார். அதை எப்படி எடுக்கலாம் என்று விவாதிக்க தமிழ்மணம் காப்ளக்ஸ் வளாகத்தில் வந்து உக்காருகிறார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் துக்ளக் புத்தகம் வாங்க வருகிறார். அவருடன் வால்பையனும் வருகிறார். அவர்களிடம் தன் பிரச்சனையை சொல்கிறார் ரிஷான் அண்ணாச்சி.

டோண்டு : (பிட்டு படம் என்றதும் ஆர்வமாக)தம்பி ரிஷான்.. நீ ஒன்னும் கவலை படாத.. நான் சொல்ற மாதிரி எடு. அதாவது ஒவ்வொரு சிகரெட் கடைக்கு பக்கத்துலையும் நம்ம ஆள் ஒருத்தன் நிக்கறான். யாராவது சிகரெட் வாங்கி வாய்ல வச்சதும் நம்ம ஆள் அந்த ஆள்கிட்ட என்னோட உலக பிரசித்தி பெற்ற(எலிக் குட்டி சோதனை அல்ல) ஆட்டிடையர் ஜோக்கை சொல்லனும். உடனே அந்த ஆள் வாய பொளந்து அதை கேப்பான். அப்போ அந்த சிகரெட் கீழ விழுந்துடும். அப்புறம் அந்த ஆள் என் ஜோக் கேட்ட சந்தோஷத்துல சிகரெட் மறந்துட்டு போய்டுவான். இதே மாதிரி எல்லா இடத்துலையும் தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நாள்ல எல்லோருக்கும் சிகரெட் பிடிக்கிற பழக்கமே மறந்து போய்டும்.

வால்பையன்
: ஆஹா.. டோண்டு சார் சூப்பர் ஐடியா.. கீழ விழற சிகரெட்டை அந்த கடைக்காரனே எடுத்து வச்சிப்பான். இப்படி விக்கிற சிகரெட் எல்லாம் அவனுக்கு திரும்ப கிடைச்சிட்டா புதுசா வாங்க மாட்டான். புதுசா வாங்க ஆளில்லைனா சிகரெட் கம்பனிகள் எல்லாம் தானாவே மூடிடுவாங்க... அப்படியே தம் அடிக்கிற பழக்கம் அழிஞ்சிடும். டோண்டு சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....

டோண்டு
: அது ஒன்னும் இல்லப்பா... சமீபத்துல கி.மு. முப்பத்தஞ்சாயிரத்துல நான் ITPL ல வேலை பாக்கும் போது இப்படி தான்....

வால்பையன் : (போனை காதில் வைத்தவாறு).. ஆங் சொல்லு இளையகவி.. அதுவா .. நீ கேட்ட அந்த போலிஸ் தொப்பி வாங்கிட்டேன்யா... இரு இன்னைக்கே கரூர் பஸ்ல குடுத்து விடறேன்..... என்றவாறு எஸ் ஆகிறார்..

தமிழ்மணம் காம்ப்ளக்ஸ் சுவரில் ஷகிலா போஸ்டர் பார்க்க வந்த மங்களூர் சிவா பிட்டு படம் என்பது காதில் விழுந்ததான் இவர்கள் அருகில் வருகிறார்... அவர் பின்னாடியே ஒளிந்துகொண்டு சீனா சாரும் வரார்...

இது அவர் நினைத்த பிட்டு படமாக இல்லாமல் டாகுமெண்டரி படத்தை தான் அபப்டி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முகம் வாடிப் போய்விடுகிறது. ஆனாலும் எதாவது சொல்லி வைப்போமே என்று நினைத்தவாறு..

சிவா : சிகரெட்டை வெறும் வெள்ளை தாளில் சுத்துவதை நிறுத்திவிட்டு அதற்கு பதில் கவர்ச்சியான பெண்களின் படம் பொறிக்கப் பட்ட தாளில் சுற்றலாம். அப்படி செய்தால் அதை பற்றவைக்க யாருக்கும் மனசு வராது... அப்புறம் தானாக புகைபிடிக்கும் பழக்கம் ஒழிஞ்சிடும்..

சீனா சார் : ஆமாம்.. இது நல்ல திட்டம்.. பிறகு நாணையம், தபால் தலை சேகரிக்கிற மாதிரி இந்த கவர்ச்சி பெண்கள் இருக்கும் சிகரெட் தாள்களை சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதை மையமாய் வைத்து பிட்டு படம்.. ச்ச.. டாக்குமெண்டரி படம் எடுங்க ரிஷான்...

அப்போது சிவாவுக்கு குசும்பனிடமிருந்து போன் வருகிறது.. பேசும் போது இந்த விவரங்களை சிவா குசும்பனிடம் சொல்கிறார்.
ஆர்வமான குசும்பன் : சிகரெட் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியில் மடக்கி அதில் பட்டாசுகள் பொருத்திய சிகரெட்டுகளை கலந்துவிட வேண்டும். அதை பிடிப்பவர்கள் வாய் கிழிந்துவிடும். பிறகு எந்த சிகரெட்டில் பட்டாசு இருக்குமோ என்று பயந்து யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க... இந்த ஐடியா வச்சி அவரை படம் எடுக்க சொல்லுங்க சிவா மாம்ஸ்...
இதை அப்படியே சிவா ரிஷான் கிட்ட சொல்றார்.

பெரியார் பற்றிய புத்தகங்களை வாங்க அந்த பக்கமாக வந்த தமிழச்சி , விவரம் கேட்டு தான் ஒரு ஐடியா கொடுப்பதாக சொல்கிறார்..

தமிழச்சி : இந்தியாவை பொருத்தவரை ஆண்கள் தான் சிகரெட் பிடிக்கிறார்கள். எனவே ஆண்கள் எல்லோரையும் நீளமான தாடி வளர்க்க சொல்லலாம். அப்படி பண்ணா சிகரெட் பிடிக்கும் போது தாடியை சுட்டுகொண்டால் என்ன செய்வது என்று பயந்து சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள். இதை கதை கருவாக வைத்து நீ படம் எடு ரிஷான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த
ஓசை செல்லா
: ஆஹா.. அற்புதமான ஐடியா தோழர். இப்படி செய்தால் எல்லோரும் பெரியார் மீது கொண்ட பற்றினால் தான் தாடி வளர்க்கிறார்கள் என்று நீங்கள் ஒரு பதிவும் பெரியாரை பின்பற்றுவதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒழிந்தது என்று நான் ஒரு பதிவும் போடலாம்..
இவர்களின் ஐடியாக்களை எல்லாம் கேட்டு கலவரமான ரிஷான் " அடப்பாவிகளா... சினிமா எடுத்டு வெளிய விடலாம்னு பார்த்தா இவங்க எல்லாருமா சேர்ந்து என்ன உள்ள அனுப்ப ப்ளான் பன்றாங்களே" என் பொலம்பியவாறே கிளம்ப பார்க்கிறார்.
அந்த சமயத்தில் அங்கு வரும் நம்ம தல இலவசக் கொத்தனார் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என்று கூறுகிறார்..
கொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்.. ரஜினி சிகரெட் பிடிக்கிறதுக்கு பதில் ஜிலேபி சாப்பிடற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். அதை வைத்து மக்களிடம் " பாருங்க மக்களே ரஜினி சிகரெட் பிடிக்கிறது தப்புனு சொல்லி ஜிலேபி சாப்பிடுங்கனு சொல்றார்..." என்று சொல்வோம். இதன் மூலம் சிகரெட் பிடிக்கிறத நிறுத்தின மாதிரியும் ஆச்சி.. ஜங்க் புட் சாப்பிடற பழக்கத்துல இருந்து மக்களை மாற்றி நம்ம பாரம்பரிய இனிப்பு வகையான ஜிலேபியை சாப்பிட வைத்தது போலும் இருக்கும். என்ன சொல்றிங்க ரிஷான்...

ரிஷான் : இது கொஞ்சம் நல்ல ஐடியாவா தான் இருக்கு... இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

கொத்ஸ் : "சிவாஜி வாயிலே ஜிலேபி"

கூட்டம் கலைகிறது.

சி வா ஜி வாயிலே ஜி லே பி ... நன்றி சீனா சார்...

சிவாஜி வாயிலே ஜிலேபி.....
3 வார்த்தைகளிலும் முதல் எழுத்துக்களை சேர்த்தால் - சிவாஜி இரண்டாவது எழுத்துக்களை சேர்த்தால் - வாயிலே
மூன்றாவது எழுத்துக்களை சேர்த்தால் - ஜிலேபி

................கண்ணன் பாட்டு புகழ் கவிநயா என்னை சி.வா.ஜி தொடர் பதிவு விளையாட்டில் சிக்க வைத்துவிட்டதால் உங்களை இப்படி கொடுமை படுத்த வேண்டியதாகிவிட்டது. :))..............
.... இந்த பதிவு சும்மா நகைச்சுவைக்காகத் தான்... யாரையும் காய படுத்த அல்ல... இதில் சம்பந்த பட்டுள்ள யாராவது ஆட்சேபித்தால் அவர்களை பற்றிய பகுதி நீக்கப்படும்....

55 Comments:

said...

பொடியா - நெசமாவே அது பிட்டுப் படம் இல்லையா - ரிஷானெக் கேக்கட்டா ? நீ பொய் சொல்றியா அது டாகுமெண்ட்ரின்னு

said...

//தன்னிடம் இருந்த பணமெல்லாம் நமீதா ரசிகர் மன்றத்துக்கு பேனர் வைத்தும் போஸ்டர் ஒட்டியுமே கரைந்து விட்டதால்//

நமீதா கட் அவுட்டுக்கு நாம ரெண்டு பேருமாச் சேர்ந்து பாலாபிஷேகம் பண்ணதை விட்டுட்டீங்களே அண்ணாச்சி.. :(

said...

//நம்ம ரிஷான் அண்ணாவுக்கு //

என்னது அண்ணாவா?
ஒரே மயக்கமா வருதே எனக்கு..
ஒரு சோடா ப்ளீஸ்... :P

said...

//இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.//

அதே அதே...

said...

//கொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு..//

கமல் படத்துக்கு விமர்சனம் பண்ணும் போது என்னை இப்படி ரஜினி ரசிகனா சித்தரிக்கும் உம் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது.

said...

//வால்பையன் : ஆஹா.. டோண்டு சார் சூப்பர் ஐடியா.. கீழ விழற சிகரெட்டை அந்த கடைக்காரனே எடுத்து வச்சிப்பான். இப்படி விக்கிற சிகரெட் எல்லாம் அவனுக்கு திரும்ப கிடைச்சிட்டா புதுசா வாங்க மாட்டான். புதுசா வாங்க ஆளில்லைனா சிகரெட் கம்பனிகள் எல்லாம் தானாவே மூடிடுவாங்க... அப்படியே தம் அடிக்கிற பழக்கம் அழிஞ்சிடும். டோண்டு சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....//


சஞ்சய் சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....?

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//நம்ம ரிஷான் அண்ணாவுக்கு //

என்னது அண்ணாவா?
ஒரே மயக்கமா வருதே எனக்கு..
ஒரு சோடா ப்ளீஸ்... :P///அண்ணே இந்தாங்க சோடா.

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//வால்பையன் : ஆஹா.. டோண்டு சார் சூப்பர் ஐடியா.. கீழ விழற சிகரெட்டை அந்த கடைக்காரனே எடுத்து வச்சிப்பான். இப்படி விக்கிற சிகரெட் எல்லாம் அவனுக்கு திரும்ப கிடைச்சிட்டா புதுசா வாங்க மாட்டான். புதுசா வாங்க ஆளில்லைனா சிகரெட் கம்பனிகள் எல்லாம் தானாவே மூடிடுவாங்க... அப்படியே தம் அடிக்கிற பழக்கம் அழிஞ்சிடும். டோண்டு சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....//


சஞ்சய் சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....?///


அவரு ஒரு ஐடியா சுரங்கம். இது தெரியாதா ரிஷான் அண்ணே?

said...

சிவா : கேக்குறாகள்ல சொல்லுங்க

சீனா சார் : உங்களையும் தானே கேக்குறாக..நீங்க சொல்லுங்க..

சிவா : அதை நீங்க சொல்ல மாட்டீங்களா?

சீனா சார் : ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?

நானு : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.//

அதே அதே...///


கருத்து படமா? பிட்டு படமா? சரியா சொல்லுங்கப்பா.

said...

////எம்.ரிஷான் ஷெரீப் said...
சிவா : கேக்குறாகள்ல சொல்லுங்க

சீனா சார் : உங்களையும் தானே கேக்குறாக..நீங்க சொல்லுங்க..

சிவா : அதை நீங்க சொல்ல மாட்டீங்களா?

சீனா சார் : ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?

நானு : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

//குசும்பன் : சிகரெட் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியில் மடக்கி அதில் பட்டாசுகள் பொருத்திய சிகரெட்டுகளை கலந்துவிட வேண்டும். அதை பிடிப்பவர்கள் வாய் கிழிந்துவிடும். பிறகு எந்த சிகரெட்டில் பட்டாசு இருக்குமோ என்று பயந்து யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க... இந்த ஐடியா வச்சி அவரை படம் எடுக்க சொல்லுங்க சிவா மாம்ஸ்...
இதை அப்படியே சிவா ரிஷான் கிட்ட சொல்றார்.//

நீங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டேங்க குசும்பன் சார்.
ஹீரோவா நடிக்க நீங்களே வர்றீங்களா?
பட்டாசு வெடிச்சு வாய் கிழியுற சீனுக்கு டூப்பெல்லாம் வைக்கமாட்டேன் ஆமா :P

said...

///நம்ம ரிஷான் அண்ணாவுக்கு ஒரு சினிமா எடுக்க ஆசை. அதற்காக சில பல Non Residential Ilichavayarகளை அனுகுகிறார்.///


:))

said...

////எம்.ரிஷான் ஷெரீப் said...
//குசும்பன் : சிகரெட் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியில் மடக்கி அதில் பட்டாசுகள் பொருத்திய சிகரெட்டுகளை கலந்துவிட வேண்டும். அதை பிடிப்பவர்கள் வாய் கிழிந்துவிடும். பிறகு எந்த சிகரெட்டில் பட்டாசு இருக்குமோ என்று பயந்து யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க... இந்த ஐடியா வச்சி அவரை படம் எடுக்க சொல்லுங்க சிவா மாம்ஸ்...
இதை அப்படியே சிவா ரிஷான் கிட்ட சொல்றார்.//

நீங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டேங்க குசும்பன் சார்.
ஹீரோவா நடிக்க நீங்களே வர்றீங்களா?
பட்டாசு வெடிச்சு வாய் கிழியுற சீனுக்கு டூப்பெல்லாம் வைக்கமாட்டேன் ஆமா :P////


அவரே பதிவு பக்கம் வராம இருக்காரு. வம்புக்கு இழுக்குறீங்களே?

said...

////எம்.ரிஷான் ஷெரீப் said...
சிவா : கேக்குறாகள்ல சொல்லுங்க

சீனா சார் : உங்களையும் தானே கேக்குறாக..நீங்க சொல்லுங்க..

சிவா : அதை நீங்க சொல்ல மாட்டீங்களா?

சீனா சார் : ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?

நானு : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....///

நானும் நானும் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//கொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்.. ரஜினி சிகரெட் பிடிக்கிறதுக்கு பதில் ஜிலேபி சாப்பிடற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். அதை வைத்து மக்களிடம் " பாருங்க மக்களே ரஜினி சிகரெட் பிடிக்கிறது தப்புனு சொல்லி ஜிலேபி சாப்பிடுங்கனு சொல்றார்..." என்று சொல்வோம். இதன் மூலம் சிகரெட் பிடிக்கிறத நிறுத்தின மாதிரியும் ஆச்சி.. ஜங்க் புட் சாப்பிடற பழக்கத்துல இருந்து மக்களை மாற்றி நம்ம பாரம்பரிய இனிப்பு வகையான ஜிலேபியை சாப்பிட வைத்தது போலும் இருக்கும். என்ன சொல்றிங்க ரிஷான்...//

என்ன சொல்றது?
நாட்டுல அவனவன் ஒரு சீனித் தொழிற்சாலையையே உடம்புல சுமந்துட்டு அலையுறப்போ இப்படி ஒரு சீன் வச்சு,மக்களெல்லாம் அதைப் பின்பற்றி..
நல்லாயிருங்கைய்யா நல்லாயிருங்க.. :(

ஏனுங்க சஞ்சய்..உங்க மாமனார் ஹாஸ்பிட்டல் நடத்தப்போறதா சொன்னீங்க..அதுக்காக பேஷண்டையெல்லாம் இப்படியா சேர்க்குறது? :P

said...

///தமிழ்மணம் காம்ப்ளக்ஸ் சுவரில் ஷகிலா போஸ்டர் பார்க்க வந்த மங்களூர் சிவா பிட்டு படம் என்பது காதில் விழுந்ததான் இவர்கள் அருகில் வருகிறார்... அவர் பின்னாடியே ஒளிந்துகொண்டு சீனா சாரும் வரார்...////

அவரு பதிவுல தான் நிறைய போஸ்டர் ஒட்டுறாரே. அப்புறம் எதுக்கு இந்த பக்கம் எல்லாம் வர்றார்?

said...

//cheena (சீனா) said...
பொடியா - நெசமாவே அது பிட்டுப் படம் இல்லையா - ரிஷானெக் கேக்கட்டா ? நீ பொய் சொல்றியா அது டாகுமெண்ட்ரின்னு//

சீனா சார்..நீங்களுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//அவரு ஒரு ஐடியா சுரங்கம். இது தெரியாதா ரிஷான் அண்ணே?//

அது தெரியுது...ஆமா உங்களுக்கும் நான் அண்ணாவா? நிஜமாவே நல்லவன் தானா நீங்க?:(

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
ஏனுங்க சஞ்சய்..உங்க மாமனார் ஹாஸ்பிட்டல் நடத்தப்போறதா சொன்னீங்க..அதுக்காக பேஷண்டையெல்லாம் இப்படியா சேர்க்குறது? :P///என்னது மாமனாரா? அவருக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலையே? ஓ... வருங்கால மாமனாரா இருக்கும்.

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//அவரு ஒரு ஐடியா சுரங்கம். இது தெரியாதா ரிஷான் அண்ணே?//

அது தெரியுது...ஆமா உங்களுக்கும் நான் அண்ணாவா? நிஜமாவே நல்லவன் தானா நீங்க?:(///


எனக்கு அண்ணன் சஞ்செய். அவருக்கு அண்ணன் நீங்க. அப்ப எனக்கு எப்படி? நம்புங்கப்பா. கேள்வி எல்லாம் கேக்ககூடாது சின்ன புள்ளையாட்டம்?

said...

///இவர்களின் ஐடியாக்களை எல்லாம் கேட்டு கலவரமான ரிஷான் " அடப்பாவிகளா... சினிமா எடுத்டு வெளிய விடலாம்னு பார்த்தா இவங்க எல்லாருமா சேர்ந்து என்ன உள்ள அனுப்ப ப்ளான் பன்றாங்களே" என் பொலம்பியவாறே கிளம்ப பார்க்கிறார்.////


பிட்டு படம் எடுத்து வெளிய விட்டாலும் கடைசில உள்ளே தானே போகணும். எல்லோரும் சரியாதான் சொல்லுறாங்க ரிஷான் அண்ணே.

said...

///இதில் சம்பந்த பட்டுள்ள யாராவது ஆட்சேபித்தால் அவர்களை பற்றிய பகுதி நீக்கப்படும்....///அப்ப எல்லோரும் ஆட்சேபித்தால் பதிவே நீக்கப்படுமா?

said...

யப்பா! தாங்க முடியலடா சாமீ!!!

said...

//ஆனால் தன்னிடம் இருந்த பணமெல்லாம் நமீதா ரசிகர் மன்றத்துக்கு பேனர் வைத்தும் போஸ்டர் ஒட்டியுமே கரைந்து விட்டதால்//

இப்படின்னு பொய் சொல்லிட்டு வேற திரியறானா அந்த ரிசானு? :-)
பணமெல்லாம் ரிசானின் பாய் ப்ரெண்டாம்-ல, பண்டரி "பாய்"!
அவுங்க வீட்டு பீரோவில் பத்திரமா இருக்காம்! :-)

said...

ரிசான்: //ஒரே மயக்கமா வருதே எனக்கு..
ஒரு சோடா ப்ளீஸ்... :P//

நிஜமா நல்லவன்: //அண்ணே இந்தாங்க சோடா//

அச்சோ!
நிஜமாலுமே நல்லவரா இருக்கீங்களே அண்ணாச்சி!

இவனுங்க மொதல்ல ஜோடா-ன்னு ஆரம்பிப்பாங்க!
அப்பாலிக்கா ஜோடி-ன்னு பிட்டைப் போட்டு, அதையும் உங்களையே தேடித் தரச் சொல்லுவாய்ங்க! உசார்! உசார்! :-)

said...

//அப்ப எல்லோரும் ஆட்சேபித்தால் பதிவே நீக்கப்படுமா?//

ஜூப்பரோ ஜூப்பர்! :-))

//அவனவன் ஒரு சீனித் தொழிற்சாலையையே உடம்புல சுமந்துட்டு அலையுறப்போ//

ரிசானு!
நீ டாக்டரா? கவிஞரா? ரெண்டுமே-வா??
என்னா ஒரு கவுஜ தலைப்பு!

சீனித் தொழிற்சாலை!
சிற்றெறும்பு அவள்!!
சீனி மிட்டாய் அவன்!!!
போராட்டம் இல்லாத தொழிற்சாலை!!!!

ராசாவே சித்தெறும்பு உன்னை - பாட்டெல்லாம் பாடக் கூடாது, சொல்லிட்டேன்! :-)

said...

// cheena (சீனா) said...

பொடியா - நெசமாவே அது பிட்டுப் படம் இல்லையா - ரிஷானெக் கேக்கட்டா ? நீ பொய் சொல்றியா அது டாகுமெண்ட்ரின்னு//

ரிஷான் அண்ணா. சீனா சார் கவலையை போக்குங்கள். :P
----------
@ரிஷான் :
//நமீதா கட் அவுட்டுக்கு நாம ரெண்டு பேருமாச் சேர்ந்து பாலாபிஷேகம் பண்ணதை விட்டுட்டீங்களே அண்ணாச்சி.. :(//
2 பேரும் சேர்ந்து அபிஷேகம் பண்ணதால தான் உங்கிட்ட கொஞ்ச்மாவது மிச்சம் மீதி இருக்கு. இல்லைனா மொத்தமா இழந்திருப்ப :)

//என்னது அண்ணாவா?
ஒரே மயக்கமா வருதே எனக்கு..
ஒரு சோடா ப்ளீஸ்... :P//

அது சரி... அண்ணாவுக்கு வயசாகுதில்ல..:P

//சஞ்சய் சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....?//

எல்லாம் உன்ன மாதிரி கெட்ட சகவாசம் தான்.... என்ன செய்ய? :D
------------

said...

//இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு..//

கமல் படத்துக்கு விமர்சனம் பண்ணும் போது என்னை இப்படி ரஜினி ரசிகனா சித்தரிக்கும் உம் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது.//

அண்ணா.. நுண்ணரசியலின் நிரந்தரத் தலைவரே.. நானெல்லாம் உங்க அரசியலின் கடைசி வரிசை தொண்டன்.. நானாவது உங்களிடம் நுண்ணரசியல் செய்வதாவது... ஆனாலும் நீங்க கமலை விமர்சிப்பதை பார்த்தால் மனசளவில் ரஜினி ரசிகராய் இருப்பீரோ என்ற சந்தேகம் பெனாத்தல் அண்ணாச்சிக்கு கூட இருக்காம். :P

said...

// நிஜமா நல்லவன் said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
//நம்ம ரிஷான் அண்ணாவுக்கு //

என்னது அண்ணாவா?
ஒரே மயக்கமா வருதே எனக்கு..
ஒரு சோடா ப்ளீஸ்... :P///அண்ணே இந்தாங்க சோடா//
கேட்டதும் கொடுப்பவரே பாரதி.. நீங்க நிஜமாலுமே நல்லவரு தான்..
--------
//அவரு ஒரு ஐடியா சுரங்கம். இது தெரியாதா ரிஷான் அண்ணே?//
அண்ணே.. எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க ப்ளீஸ்... உள்குத்து வேண்டாமே :((
-----

said...

// நிஜமா நல்லவன் said...
கருத்து படமா? பிட்டு படமா? சரியா சொல்லுங்கப்பா//
உங்க விருப்ப எதுவோ.. அது நிறைவேற்றப் படும். :P
......
//

நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இதெல்லாம் எதுக்குன்னே புரியல.. அதனால நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

--------
/////நம்ம ரிஷான் அண்ணாவுக்கு ஒரு சினிமா எடுக்க ஆசை. அதற்காக சில பல Non Residential Ilichavayarகளை அனுகுகிறார்.///


:))
//

இப்போ NRIனா இப்டி தான் எல்லாரும் நெனைச்சிகிறாங்க.. பணம்காய்ச்சி மரம்னு.. பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு.
-------
//அவரே பதிவு பக்கம் வராம இருக்காரு. வம்புக்கு இழுக்குறீங்களே?//

கல்யாணம் பண்ணிப் பார்.. பதிவு எழுதிப் பார்னு சும்மாவா சொன்னங்க? :P
----
//அவரு பதிவுல தான் நிறைய போஸ்டர் ஒட்டுறாரே. அப்புறம் எதுக்கு இந்த பக்கம் எல்லாம் வர்றார்?//

மாற்றாந்தோட்டத்து மல்லிகை தான் மணக்குமாம். :)))

----------
//என்னது மாமனாரா? அவருக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலையே? ஓ... வருங்கால மாமனாரா இருக்கும்//
நிகழ்காலத்துக்கே வழிய காணோமாம்.. இதுல வருங்கால மாமனாரா? நல்ல இருங்கண்ணே.. :(
----
//அப்ப எல்லோரும் ஆட்சேபித்தால் பதிவே நீக்கப்படுமா?//
அவ்ளோ சின்னதா போட்டும் படிக்க முடியுதா? இருந்த படிக்க முடியாத மாதிரி இன்னும் சின்னதா போடறேன். :P
------
//பிட்டு படம் எடுத்து வெளிய விட்டாலும் கடைசில உள்ளே தானே போகணும். எல்லோரும் சரியாதான் சொல்லுறாங்க ரிஷான் அண்ணே.//

எதுக்கு உள்ள? தியேட்டருக்கு உள்ளவா? :P

said...

@ரிஷான் :
//ஏனுங்க சஞ்சய்..உங்க மாமனார் ஹாஸ்பிட்டல் நடத்தப்போறதா சொன்னீங்க..அதுக்காக பேஷண்டையெல்லாம் இப்படியா சேர்க்குறது? :P//

ஏன் ராசா ஏன்? ஏன் இப்படி புரளிய கெலப்பி விடற? :(

said...

// கவிநயா said...

யப்பா! தாங்க முடியலடா சாமீ!!!//

இந்த பின்னூட்டங்களுக்கே தாங்கலைனா எப்படி கவிநயா? இன்னும் சில நல்லவங்க இருக்கங்களே.. அவங்க வந்தா என்ன சொல்வீங்க?
ஹிஹி.. நீங்க பதிவை சொல்லலையே.. ஒரு ஸ்கூல் பையன் பேச்சக் கேட்டு TAG பண்ணிங்க இல்ல.. இனி பண்ணுவீங்க? :P

said...

@ KRS :
//இப்படின்னு பொய் சொல்லிட்டு வேற திரியறானா அந்த ரிசானு? :-)
பணமெல்லாம் ரிசானின் பாய் ப்ரெண்டாம்-ல, பண்டரி "பாய்"!
அவுங்க வீட்டு பீரோவில் பத்திரமா இருக்காம்! :-)//
ஓ.. இது வேறையா? அட ங்கொக்க மக்கா.. :)
----
//இவனுங்க மொதல்ல ஜோடா-ன்னு ஆரம்பிப்பாங்க!
அப்பாலிக்கா ஜோடி-ன்னு பிட்டைப் போட்டு, அதையும் உங்களையே தேடித் தரச் சொல்லுவாய்ங்க! உசார்! உசார்! :-)//

ஹாஹாஹா..
ரிஷான் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க.. :))
---

//ரிசானு!
நீ டாக்டரா? கவிஞரா? ரெண்டுமே-வா??
என்னா ஒரு கவுஜ தலைப்பு!//

அவர் .. ஆல் இன் ஆல் அழுக்கு ராசா.. ச்ச.. அழகு ராசா... :)
------
//சீனித் தொழிற்சாலை!
சிற்றெறும்பு அவள்!!
சீனி மிட்டாய் அவன்!!!
போராட்டம் இல்லாத தொழிற்சாலை!!!!//
"அவள்" இருந்தும் போராட்டம் இல்லாத இடமாய் கற்பனை செய்ய முடிந்த உங்கள் துணிவையும் நம்பிக்கையயும் பாராட்டுகிறேன். :)))

//ராசாவே சித்தெறும்பு உன்னை - பாட்டெல்லாம் பாடக் கூடாது, சொல்லிட்டேன்! :-)//

ச்சீ..ச்சீ.. உங்க ரேஞ்சிக்கு எல்லாம் கட்டெறும்பு தான்.. :)

said...

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி!

said...

ெசமாவே அது பிட்டுப் படம் இல்லையா -
ரிஷானெக் கேக்கட்டா ? நீ பொய் சொல்றியாமே அது டாகுமெண்ட்ரின்னு

:((

said...

கருத்து படமா? பிட்டு படமா? சரியா சொல்லுங்கப்பா.

said...

அண்ணன் ரிஷானின் பிட்டு படத்தில் இலவசமாக நடித்து தர உலக நாயகன் மங்களூர் சிவா ரெடி.

said...

/
தமிழ்மணம் காம்ப்ளக்ஸ் சுவரில் ஷகிலா போஸ்டர் பார்க்க வந்த மங்களூர் சிவா பிட்டு படம் என்பது காதில் விழுந்ததான் இவர்கள் அருகில் வருகிறார்...
/

பிட்டு படம் இல்லை என தெரிந்ததும் அங்க ரணகளமானதை இங்கு பதியாத சஞ்சய்க்கு கடும் கண்டனங்கள்!

:))

said...

40

said...

///இவர்களின் ஐடியாக்களை எல்லாம் கேட்டு கலவரமான ரிஷான் " அடப்பாவிகளா... சினிமா எடுத்டு வெளிய விடலாம்னு பார்த்தா இவங்க எல்லாருமா சேர்ந்து என்ன உள்ள அனுப்ப ப்ளான் பன்றாங்களே" என் பொலம்பியவாறே கிளம்ப பார்க்கிறார்.////


பிட்டு படம் எடுத்து வெளிய விட்டாலும் கடைசில உள்ளே தானே போகணும். எல்லோரும் சரியாதான் சொல்லுறாங்க ரிஷான் அண்ணே.

said...

ரஜினிகாந்த் said...

என் படத்தை எதுக்குப்பா போட்ட நான் ஆட்சேபிக்கிறேன்

said...

ஜிலேபி said .....

சிவாஜி வாயில என்னைய எதுக்குய்யா போட்ட

நானும் ஆட்சேபிக்கிறேன்

said...

சிவாஜி said .....

என் வாயில எதுக்குய்யா ஜிலேபிய போட்ட

நானும் ஆட்சேபிக்கிறேன்

said...

பிட்டுபடம் said .....

ஏன்யா பிட்டு படம்னா அவ்ளோ இளக்காரமா போச்சா??

எப்பிடி உன்னைய பாக்கவைக்கிறதுன்னு தெரியும்

நானும் ஆட்சேபிக்கிறேன்

said...

நமீதா said .....

எச்சூஸ்மி எனி ப்ராப்ளம் சஞ்சய்

said...

சமுதாயம் said .....

இதுவரைக்கும் சொன்னவனுங்க கருத்துங்களே போதும் புதுசா எதும் வேணாம்

நானும் ஆட்சேபிக்கிறேன்

said...

சிகரெட் said .....

என்னைய பிடிக்கலைனா நான் விழுந்துருவேன்

நானும் ஆட்சேபிக்கிறேன்

said...

49

said...

50

said...

என்னைக் கும்முன அம்புட்டுப்பேருக்கும் ஆப்பு வச்சிட்டேன்.

வந்து பாருங்க :P

said...

என்னையும் கூட்டு சேர்த்ததுக்கு நன்றி
அப்படியே இந்த சென்னை எங்கிருக்குன்னு சொல்லிடிங்கன்ன
ஒரு தபா போயிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும்.
எத்தனை மணிக்கு கப்பல் சார்

வால்பையன்

said...

தெளிவான பின்னூட்டம் போட்ட ஆசை சாரி ஓசை செல்லாவுக்கும்.. கேப் விடாம போட்டுத் தாக்கின மங்களூர் மாமாவுக்கும் நன்றிகள். :))

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

என்னைக் கும்முன அம்புட்டுப்பேருக்கும் ஆப்பு வச்சிட்டேன்.

வந்து பாருங்க :P//

கவலைபடாதீங்க அண்ணா.. :))
முரற்பகல் செய்யின்..... :)))

said...

//வால்பையன் said...

என்னையும் கூட்டு சேர்த்ததுக்கு நன்றி
அப்படியே இந்த சென்னை எங்கிருக்குன்னு சொல்லிடிங்கன்ன
ஒரு தபா போயிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும்.
எத்தனை மணிக்கு கப்பல் சார்

வால்பையன்//

நாட்ல எல்லாரும் இதே மாதிரி தெஇளிவா பேசினிங்கனா.. கீழ்பாக்கத்துக்கும் ஏர்வாடிக்கும் தேவை இருக்காது. :P

Tamiler This Week