இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 19 June, 2008

வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.

இப்போ தான் முதன் முதலா நான் செய்கிற தொழில்சார்ந்த ஒரு பதிவை போடறேன். அது ஒன்னும் இல்லீங்க.. அப்புறம் எதுக்குடா பதிவு? :( ஷ்ஷ்ஷ்.. நக்கலடிக்கப்படாது....
.... இதனால் பொது ஜனங்களுக்கு சொல்லிக்கிறது இன்னான்னா... இந்த மாதம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள்.. குறிப்பாக டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் மத்தியில் இருந்தே அறிவிக்கப் பட்டிருந்தாலும் புதிய விலையுடன் இந்த பொருட்கள் இன்னும் முகவர்களுக்கு போய் சேரவில்லை. இந்த மாத இறுதியில் அனுப்பப்படும் சப்ளையில் இருந்து விலையேற்றம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது..

இவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை ஏறிவிட்டதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அனைத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில் முன்னனி , பின்னனி, கூட்டணி என எந்த வகை நிறுவனமும் விதிவிலக்கல்ல.

இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த மாதம் முதல் இந்த பொருட்களையும் புதிய விலையில் தான் விற்பார்கள்.

விலையேற்றம் என்றால் ஏதோ வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று சதவீதம் என்று நினைக்க வேண்டாம். சராசரியாக ஏழு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 21" கலர் டிவி ரூ.400 முதல் ரூ.750 வரையிலும் 29" கலர் டிவிக்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும் உயர்த்தப் பட்டுள்ளது. LCD மற்றும் ப்ளாஸ்மா டிவிக்களின் விலையில் பெரிய உயர்வு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டிவியை பொருத்தவரை விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் Picture Tube மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது தான். LCD மற்றும் Plasma டிவிக்களுக்கு PT தேவை படாததால் அதன் மீது பெரிய விலை உயர்வு இருக்காது.

ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது. முன்னனி நிறுவங்களின் 21" டிவியின் ஆரம்ப விலை சராசரியாக சுமார் 6500 முதல் 7000வரை இருக்கும். இதற்கே 400 முதல் 750 வரை விலை உயர்வு இருந்தால் , ஆரம்ப விலையே 7500 முதல் 8500 வரை இருக்கும் ஃப்ரிட்ஜ் விலை எவ்வளாவு உயர்ந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதிலும் ஆடம்பர(Luxury) மாடல்களும், Double Door மற்றும் அதற்கு மேலுள்ள மாடல்களும்( 300 லிட்டர்களுக்கு மேல்) எக்கச்சக்கமாக விலை ஏறி இருக்கிறது.

வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த முறை அதுவும் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஆடி சிறப்பு விற்பனையின் போது தயாரிப்பு நிறுவனம் சில சலுகையை குடுக்கும். பிறகு விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சில சலுகைகளை குடுப்போம். இதை வைத்து சில முகவர்கள் விலை குறைத்து விற்பார்கள். சிலர் பழைய விலையில் சில கூடுதல் பொருட்களை குடுத்து விற்பார்கள். இன்னும் சிலர் சிறிது விலை உயர்த்தி உங்கள் பணத்திலேயே உங்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கி தருவார்கள்:).... இந்த முறை பெரிய அளவில் விலை உயர்வு இருப்பதால் பரிசு பொருட்கள் அல்லது தள்ளுபடி விலையினால் உண்டாகும் நஷ்டத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் விலையேற்றத்தை சமாளிக்க தயாரிப்பு நிறுவங்கள் பெரிய ஆஃபர் எதும் தருவதாக தெரியவில்லை. விலையேற்றத்தின் காரணமாக நிச்சயம் விர்பனையில் சரிவு ஏற்படும். ஆகவே அதை ஈடுகட்டவே பெரும்பாடு பட வேண்டி இருக்கும். வினியோகஸ்தர்கள், முகவர்கள் எல்லோருக்கும் இதே நிலை தான்.

ஆகவே வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும். அடுத்த மாதம் முதல் நீங்கள் தற்போதுள்ள விலையிலிருந்து கூடுதலாக சுமார் 5% முதல் 7% வரை பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...இதை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன்...

29 Comments:

said...

போட்டுத் தாக்குங்க...

said...

விலைவாசி கூடிக்கிட்டே போகுதேன்னு எந்தக் கம்பெனியாவது சம்பளத்தைக் கூட்டுறது பத்தி மூச்சு விடுறாங்களா பாருங்க??? :))))

said...

///இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ///


நீங்க எப்படி?

said...

///பொன்வண்டு said...
விலைவாசி கூடிக்கிட்டே போகுதேன்னு எந்தக் கம்பெனியாவது சம்பளத்தைக் கூட்டுறது பத்தி மூச்சு விடுறாங்களா பாருங்க??? :))))///ரிப்பீட்டேய்.....

said...

///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது.///


இதுவரைக்கும் வாங்கலைனா தான் நடுக்கும். இப்போ வாங்கினாலும் நடுக்கமா? வெளங்கிடும்.

said...

///வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள்.///


அடி இடியா இருக்கிறப்போ ஆடியாவது மண்ணாவது?

said...

//மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும்.//

இல்லாட்டி பல்லிளிக்கணும். அதானே சொல்ல வர்றீங்க?

said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி மாம்ஸ்.

said...

500 ரூபாய் தள்ளுபடியில உங்க கடையிலேயே பிரிட்ஜ் வாங்கிடம்ள
போன மாசமே

வால்பையன்

said...

இப்ப என்ன பண்ணலாம்பா!?!?

said...

இப்பவே வாங்கி வெச்சிட்டா தங்கமணி வரதுக்குள்ள எல்லாம் தூசி படிஞ்சிடாது!?!?!?

said...

/
டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது.
/

இந்த மிக்ஸி & டேபிள் டாப் கிரைண்டர் விலை நிலவரம் எப்படி????

said...

/

.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....
/

இது மேட்டரு

:))))

said...

/
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...
/

இது ஜூப்பர்

said...

மீ தி 15

said...

//நிஜமா நல்லவன் said...

போட்டுத் தாக்குங்க...//
இப்படி எல்லாம் காப்பி அடிக்கப் படாது.. :)))

said...

//பொன்வண்டு said...

விலைவாசி கூடிக்கிட்டே போகுதேன்னு எந்தக் கம்பெனியாவது சம்பளத்தைக் கூட்டுறது பத்தி மூச்சு விடுறாங்களா பாருங்க??? :)))//

விலைவாசி உயர்வால் தயாரிப்பு அடக்க விலையும் கூடிட்டே போகுது. அந்த கஷ்டத்தையே சமாளிக்க முடியலை. இதுல எங்க போய் சம்பளத்த பத்தி பேசறது.. அபப்டினு நான் சொல்லைங்கண்ணா.. கம்பனி வச்சிருக்கிறாவங்க சொல்றாங்க.. :))

said...

// நிஜமா நல்லவன் said...

///இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ///


நீங்க எப்படி?//

அட நீங்க வேற.. நான் டீலர் இல்லைங்க.. அவங்களுக்கு சப்ளை பண்ற சாதாரன ஆளு தான் :).. ஒவ்வொரு மாசமும் குறிபிட்ட அளவு வாங்கி இருப்பு வைத்தே ஆகனும். புதுசா வாங்கி பதுக்க இடம் இருக்காது. :(

said...

//நிஜமா நல்லவன் said...

///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது.///


இதுவரைக்கும் வாங்கலைனா தான் நடுக்கும். இப்போ வாங்கினாலும் நடுக்கமா? வெளங்கிடும்.//

ஹிஹி... இன்னும் 1 வருடம் காத்திருந்தா பழய விலைக்கு வாங்க முடியும் என நினைகிறேன்.. விலைவாசி கட்டுபடுத்தபட வில்லை எனினும் இந்த பொருட்களின் விற்பனை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கு. விற்பனை கூடும் போது செலவினக்களை சமாளிப்பது எளிது. ஆகவே விலை குறையலாம்.

said...

//நிஜமா நல்லவன் said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி மாம்ஸ்.//

பயனுள்ளதாக இருந்தால் சந்தோஷம்.

said...

//வால்பையன் said...

500 ரூபாய் தள்ளுபடியில உங்க கடையிலேயே பிரிட்ஜ் வாங்கிடம்ள
போன மாசமே

வால்பையன்//

ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.

said...

//மங்களூர் சிவா said...

இப்ப என்ன பண்ணலாம்பா!?!?//
ஆளுக்கொரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணலாம். :P

.. ஹ்ம்ம்ம்.. நீங்க தான் பாத்துட்டிங்களே... சொன்னபடி டிசம்பர்ல கல்யாணம் பண்ணிடுவீங்கல.. :P

said...

//மங்களூர் சிவா said...

இப்பவே வாங்கி வெச்சிட்டா தங்கமணி வரதுக்குள்ள எல்லாம் தூசி படிஞ்சிடாது!?!?!?//
டிசம்பர் வரைக்கும் தான... பெட்டியை பிரிக்காம வச்சிக்கோங்க.. ஒன்னும் ஆகாது.

said...

//மங்களூர் சிவா said...

/
டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது.
/

இந்த மிக்ஸி & டேபிள் டாப் கிரைண்டர் விலை நிலவரம் எப்படி????//

எல்லாம் இதே நிலை தான்.. 200 - 300 வரை கூடுதலா இருக்கும்..

said...

//மங்களூர் சிவா said...

/

.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....
/

இது மேட்டரு

:))))//

ஹிஹி.. மெட்டரு இல்ல மாமு.. இது உஷாரு.. :))

said...

//மங்களூர் சிவா said...

/
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...
/

இது ஜூப்பர்//

நிறைய பேர் இது தெரிஞ்சும் சோம்பேரித் தனத்தாலும் , விசாரித்துவிட்டு வெளியே போனால் தப்பா நினைப்பார்களோ என்ற வரட்டு கவுரவத்தாலும் அநியாயத்துக்கு ஏமாந்துக் கொண்டிருக்கிறார்கள்.

said...

//SanJai said...
ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.//

நன்றி நான்தான் சொல்லணும்
விலை குறைவாக கொடுத்ததற்கு.
என் மற்ற நண்பர்களுக்கும் உங்கள் கடையை தான் சிபாரிசு செய்கிறேன்

வால்பையன்

said...

//வால்பையன் said...

//SanJai said...
ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.//

நன்றி நான்தான் சொல்லணும்
விலை குறைவாக கொடுத்ததற்கு.
என் மற்ற நண்பர்களுக்கும் உங்கள் கடையை தான் சிபாரிசு செய்கிறேன்

வால்பையன்//

அட அப்டியா? மிக்க நன்றிகள் வால்..:)

said...

தனி மனிதனுக்கு பையன் படுற இத்துனூண்டு mobile போனே பல ஆயிரம் கணக்குல விலை குடுத்து வாங்கும் போது இவளவு பெரிய சைஸ் fridge, TV, AC , அதுவும் வீட்ல இருக்கிற பல பேர் பையன் படுத்துற பொருள், சில நூறு ரூபாய் கூட குடுத்துட்டு போகலாம் விடுங்க ...

சும்மா நம்மள சாமதானம் பண்ணிக்கணும் ந இப்படி எதாச்சு நெனைச்சுக்க வேண்டியது தான்...

Tamiler This Week