இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday, 29 March 2008

இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

வெளிவராத ஒரு சிங்கள படத்தின் இயக்குனரை சிலருடன் இணைந்து இயக்குனர் சீமானும் தாக்கி இருக்கிறார். இது போன்ற கீழ்த்தரமான இயக்குனர் இருப்பது தமிழ்சினிமாவின் சாபக்கேடு. தாக்குதலுக்கு காரணம் அவர்களின் கொள்கை(!?)க்கு மாறாக அந்த சிங்கள படம் இருக்கிறது என்பது தான். படமே வெளிவராத நிலையில் இவர் எப்படி அதை கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை இவர் சொல்லும் காரணம் நிஜமானதாகவே இருக்கட்டும். அப்படியானால் ஒருவர் எடுக்கும் சினிமா நம் கொள்கைகளுக்கு மாறாக இருந்தால் நமக்கு பிடிக்காத வகையில் இருந்தால் அந்த படத்தின் இயக்குனரை உதைக்கலாம். அப்படித்தானே.

சீமான் எடுத்த எல்லா படங்களுமே எல்லோருக்குமே பிடித்தவை தானா?. எதோ காரணத்தால் எத்தனையோ பேருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம் இல்லையா?.. அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து இந்த டுபாக்கூர் இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

சுப.வீ.பா மற்றும் கோஷ்டி எதிர்க்கிறார்கள் என்றால்... அவர்களுக்கு தேவை இருக்கிறது எதிர்க்கிறார்கள். இவரும் ஒரு இயக்குனராக இருந்துக்கொண்டு இதை எபப்டி செய்யலாம்? நாளை இவருக்கும் இந்த நிலை வந்தால் யாரையும் இவர் குறை சொல்லமாட்டாரோ?...

இதில் வேடிக்கை .. சுப.வீ யின் அண்ணன் தான் இயக்குனர் திரு. முத்துராமன் அவர்கள். :) இவர் இன்னொரு இயக்குனரை தாக்குவதற்கு முன் யோசித்திருக்க மாட்டாரா? நம் அண்ணன் எடுத்த படங்கள் கூட யாருக்காவது பிடிக்காமல் இருந்திருக்கலாமே.. அவர்களும் நம் வழியை பின்பற்றினால் என்ன செய்வது என்று....

Friday, 28 March 2008

புரியலை தயவுசெய்து (தமிழ்மணம்) விளக்கவும்

சமீபத்தில் தமிழ்மணத்தில் இருந்த நீக்கப்பட்ட சில இடுகைகள் மற்றும் வலைப்பூக்களால் மீண்டும் தமிழ்மணம் சூடாகி இருக்கிறது. நீக்கத்திற்கு கூறப்படும் காரணங்கள் முரனாகவே இருக்கிறது.ஆபாசமான வார்த்தைகள் அல்லது தனிநபர் மீதான தாக்குதல்களின் காரணமாக நீக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. யோனி, ஆண்குறி என்று எழுதியவர்கள் பதிவுகள் எல்லாம் தமிழ் மணத்தில் வலம் வந்தது.

பொறுபுள்ள ஒரு இணையதளமாக சட்டவிரோத செயல்களுக்கு துணை போகாமல் இருப்பதை கொள்கையாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய .. தங்கள் தளத்தில் பதிவு செய்தவர்கள் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாது என்பதை எல்லாம் முடிவு செய்யக் கூடாது.இது கருத்து சுதந்திரத்திற்கும் தனி நபர் சுதந்திரத்திற்கும் தீங்கானது. அப்படி முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கு, அதை பின்பற்றுபவர்கள் இங்கு உறுப்பினர்களாக இருக்கலாம். இல்லை என்றால் வெளியேறலாம் அல்லது உறுப்பினர் ஆக வேண்டாம் என்று ஒருவேளை சொன்னால்.. அதற்கு தமிழ்மணம் பதிவுலகிற்கு அப்பார்பட்டவர்களால் நடத்தப் பட வேண்டும். தமிழ்மணத்தின் நிர்வாகிகளை பொறுத்தவரை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எழுதும் பதிவுகளில் இதை காணலாம்.

ஒரு முக்கியமான சந்தேகம்...தமிழ்மணம் ஒரு திரட்டியா அல்லது இணைய உலகின் கலாச்சார காவலனா?.. தமிழ்மணத்திலிருந்து சில பதிவுகள் அல்லது பதிவர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழ்மணம் அல்லது அந்த திரட்டியை பயன்படுத்துபவர்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் தமிழ்மணம் சாதித்தது அல்லது சாதித்துக் கொண்டிருப்பது என்ன? தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்ட பதிவர்கள் அது போன்று எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது நீக்கப் பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் உறுப்பினர்கள் படிப்பதை நிறுத்தி இருக்கிறார்களா? ஒரு திரட்டியாக தமிழ்மணத்தால் யார் மனதையுமே மாற்றவோ திருத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்ததை ( சட்ட விரோதம் இல்லாத வகையில் ) எழுதவோ, வாசிக்கவோ உரிமை உண்டு.

பெரும்பாலும் நீக்கத்திற்கு சொல்லப்படும் காரணம்.. தனிநபர் தாக்குதல்.. அவதூறு பரப்புதல். இதை தமிழ்மணம் எந்த அளாவுகோலின் படி முடிவு செய்கிறது. யார் மீது அவதூறு பரப்பபடுகிறதோ அவர் சட்ட ரீதியாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும்/முடியும். இதற்காக தன்னிடம் பதிவு செய்துள்ள பதிவரை அல்லது அவரது இடுகையை நீக்கும் உரிமை தமிழ்மணத்திற்கு கிடையாது. ஆபாசமாக இல்லாமல்(உதாரணம் : போலி தளங்கள்) குற்றசாட்டு ரீதியில் ஒருவர் பற்றிய செய்திகளை வெளியிடுவதை தனிநபர் தாக்கு அல்லது அவதூறு பரப்புவது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை குற்றம் சுமத்தபட்ட்வர் அல்லது கண்டிக்கப் பட்டவர் அந்த செயலுக்கு உரியவராக இருக்கும் பட்சத்தில் ஒருவரது தவறான செயல்பாட்டை தங்கள் தளத்தில் பதிவு செய்துகொண்டவர் தெரிந்துக் கொள்ளவிடாமல் தடுக்கும் அல்லது மறைக்கும் செயலாகவே இந்த நீக்கங்களை கருத முடிகிறது.

இப்படி நீக்குவதற்கு பதில் தமிழ்மணத்திற்கு ஒவ்வாது என்று கருதும் இடுகைகளை தனியாக வகைபடுத்தலாம்.அவற்றை முகப்பு பக்கத்தில் தெரியாமல் அந்த பிரிவிற்கு தனி பக்கங்களை அளிக்கலாம். இதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் அதை படிக்கட்டும். விருப்பம் இல்லதவர்கள் ஒதுக்கி விடட்டும்.

அல்லது ஒரு பதிவை அல்லது பதிவரை நீக்குவதற்கு முன் தன் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட்டு அதன் பின்னர் நீக்கினாலாவது பரவா இல்லை.

சைட் டிஷ் : தமிமணம் வெறும் ஒரு திரட்டி மட்டும் தான். அதன் வேலை தன்னிடம் பதிவு செய்த்துக் கொண்டவர்களின் பதிவுகள திரட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பதிவர் அல்லது படிப்பவரின் சுதந்திரத்தில் எல்லாம் தலையிடக் கூடாது. எதை படிப்பது எதை ஒதுக்குவது என்பதெல்லாம் படிப்பவரின் உரிமை/கவலை. இதில் எதற்கு ஒரு திரட்டி தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு பிறகு அந்த நிலைபாட்டிலிருந்து மாறுவது என்பது வெறும் பரபரப்புக்கான வேலையாகவே தெரிகிறது.தமிழ்மணம் தவிற வேறெந்த திரட்டியும்( இப்போதைக்கு) இந்தளவு தனிநபர் சுதந்திரத்தில் தலை இடுவதில்லை.

Thursday, 27 March 2008

பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதா?

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி ரட்டை ஜடை போட்டு வரவில்லை என்று அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை " ஜடையை அறுத்துவிடுவேன்" என்று மிரட்டி இருக்கிறார். ( அறுத்து விட்டதாகவும் பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன..). அதே மாணவியின் வகுப்பாசிரியை அந்த மாணவியின் தலையை சுவற்றில் மோதி காயப் படுத்தி இருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் குடுத்த பின் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த ஆசிரியைகளை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்து பின்பு அவர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

அடுத்து சமீபத்தில் இதே போன்ற ஒரு சம்பவம். இன்னொரு தனியார் பள்ளியில் மெதுவாக தேர்வெழுதியததற்காக ஒரு மாணவனை அந்த வகுப்பாசிரியை, தேர்வெழுத பயன்படுத்தும் அட்டையால் அவன் தலையில் அடித்திருக்கிறார். அட்டையில் இருந்த க்ளிப் பட்டு மாணவன் தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவன் கடைசி வரை ரத்தம் வந்த இடத்தில் கையை வைத்துக் கொண்டு தேர்வு எழுதி இருக்கிறான். கடைசி வரை அவனுக்கு முதல் உதவி கூட செய்யவில்லையாம். இதில் அந்த ஆசிரியையின் மிரட்டல் வேறு.." இதை யாரிடமாவது சொன்னால் இதே போன்று மீண்டும் அடிப்பேன்" என்று. இதற்கு பயந்து அந்த மாணவன் வீட்டில் உண்மையை சொல்லவில்லை. பள்ளி நிர்வாகமும் " உங்கள் பையன் விளையாடும் போது கீழே விழுந்துவிட்டான். வந்து அழைத்து செல்லுங்கள்" என்று தான் தகவல் சொல்லி இருக்கிறது.

பிறகு இரவு தூங்கும் போது அந்த மாணவன் " மிஸ் என்ன அடிக்காதிங்க மிஸ்.. அடிக்காதிங்க மிஸ்" என்று உளறி இருக்கிறான். அதை வைத்து காலையில் அவனை மிரட்டி விசாரிக்கும் போது தான் உண்மையை சொல்லி இருக்கிறான். இதையடுத்து அவன் பெற்றொர் பள்ளிக்கு சென்று புகார் தெரிவித்த பின் அந்த ஆசிரியை வேலை நீக்கம் செய்தி்ருக்கிறார்கள்.

இந்த 2 சம்பவங்களிலுமே, இந்த ஆசிரியைகள் மீது இதற்கு முன்பே இது போன்ற புகார்கள் வந்ததாகவும் அப்போதே அவர்களை எச்சரித்ததாகவும் இரண்டு பள்ளி நிர்வாகமும் கூறி இருக்கிறது. அப்படியானால் இதற்கு முன்பே பல மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். முதல் முறை தவறு செய்யும் போதே அவர்களை நீக்கி இருந்தால் மேலும் மேலும் மாணவர்கள் பாதிக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இந்த சம்பவங்களுக்கு காரணமான மூவருமே பெண்கள் தான். கேட்டால் .. பெண்கள் தான் கனிவானவர்கள், மிருதுவானவர்கள்.. பாசமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறார்கள். என்ன கொடுமை கோயம்புத்தூர் இது? :)

ஆரம்ப வகுப்புகளுக்கு பெண்களை ஆசிரியைகளாக நியமிப்பதே அவர்கள் குழந்தைகளை தாயுள்ளத்தோடு கனிவாக கவனித்துக் கொள்வார்கள் என்பதால் தான். ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கு. இதற்கு காரணம், இவர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லாதது தான். அரசாங்க பள்ளிகளில் பணியாற்ற் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படித்திருக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகளில் அந்த தகுதி தேவை இல்லை. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அதைவிட முக்கியத் தகுதி.. குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். இவர்களிடம் எந்த தாயுள்ளம் இருக்கும்? குடுக்கிற சம்பளத்துக்கு இந்த மாதிரி வேலை பார்த்தாலே போதும் என்ற மன நிலையில் தானே இருப்பார்கள். அதற்காக அனைத்து ஆசிரியைகளையுமே குறை சொல்ல முடியாது. மாணவர்களிடம் மிகக் கனிவாக நடந்து அவர்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஆசிரியைகளும் இருக்கிறார்கள். களைகள் மட்டுமே உடனடியாக களையப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் வேலைக்கு சேரும் முன் ஆசிரியர்/யைகளுக்கு ஒரு பொதுவான அரசமைப்பு மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழை பெறுபவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி ஆசிரியர்/யைகளுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். குறந்த பட்சம் மாதம் ஒரு முறை பயிற்சி வகுப்புகளாவது நடத்த வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும்.. பெண்களிடம் எப்போடா ராசா சகிப்புத் தன்மை இருந்தது குறைவதற்கு என்று கேட்க்கும் "ஆணி"ய வாதிகளை பார்த்து ஒன்று சொல்லிகொள்கிறேன்... " எல்லாம்.. பெண்ணியவாதிகளின் கண்மூடித் தனமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்கத் தான் அப்படி...." அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((((

Wednesday, 26 March 2008

போலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்!

பண்பலைவரிசை ரேடியோக்களை பலரும் குறை சொன்னாலும் அதில் பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் காலை 7 முதல் 8 வரை FM கேட்கும் பழக்கம் உண்டு. அனைத்து FM ரேடியோக்களிலுமே பல நல்ல சுவரஷ்யாமான தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். நேயர்களுக்கு பல வகையான போட்டிகளையும் நடத்துகிறார்கள்.குறிப்பாக ரேடியோ மிர்ச்சியில் நடத்தும் போட்டிகள் ரொம்ப சுவாரஷ்யமா இருக்கும். சமீபத்திய சுவாரஷ்யமான போட்டி.... ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடத்தினார்கள். நகரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப் பட்ட சில வண்ணங்களை அவர்கள் தரும் குறிப்புகளை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முதல் பரிசாக 15000 ரூபாய் கொடுத்தார்கள்.( இது அதிர்ஷ்ட போட்டி அல்ல.. அதை நான் எப்போதும் ஆதரிப்பது இல்லை) எதற்கு பரிசுத் தொகையை குறிப்பிடுகிறேன் என்றால்.. அதே நாளில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த அணிக்கு 4000 ரூபாய் முதல் பரிசாக கொடுத்திருந்தார்கள். என்ன கொடுமை பாலாஜி இது? :P.... சில நாட்களுக்கு முன்பு சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 5000 ரூபாய் கொடுத்து யார் அதிக பொருட்களை வாங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டி நடத்தினார்கள்.

அதெல்லாம் சரி... இப்போ எதுக்கு பாலாஜிக்கு சபாஷ்...
கடந்த செவ்வாய்க் கிழமை காலை நிகழ்ச்சியில் , டுபாக்கூர் கால் செண்டர்களில் பணிபுரிந்து ஏமாந்து போகும் பணியாளர்கள் பற்றிய செய்தியை சொல்லி, அது போன்று ஏமாந்தவர்கள் தனக்கு மெயில் அனுப்பினால் அதை பற்றி நிகழ்ச்சியில் செய்தியாக சொல்லப் படும் என்று சொல்லி இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு போல... அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப் பட்ட 2 கால் செண்டர் பணியாளர்கள்( சுமார் 30 பணியாளர்களின் சார்பில்) பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு 8 மாதங்களாக சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கடைசி 3 மாதங்கள் முழு சம்பளமுமே கொடுக்காமல் தங்களை வெளியேற்றி விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள். அன்று மாலையில் அந்த கால் செண்டரின் உரிமையாளரும் பேசி இருப்பார் போல. இது காவல் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதன் விளைவாக அந்த கால் செண்டர் உரிமையாளர் முழு பணத்தயும் அளிப்பதாக கூறி இருக்கிறார். அதன் படி நேற்று நிலுவை தொகையில் பாதி கொடுத்திருக்கிறார். மீதியை இன்று தருவதாக சொல்லி வர சொல்லி இருக்கிறாராம். ச்ச.. செம மேட்டர் இல்ல... அவர்களுக்கு மீதி தொகையும் இன்று கிடைக்க வாழ்த்துக்கள்!. ஸோ ஹாட்ஸ் ஆஃப் யூ டியர் பாலாஜி.

4 கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு கால் செண்டர் நடத்துவதாக கூறி பணிக்கு ஆட்கள் அமர்த்தி அவர்களுக்கு சரியாக சம்பளம் குடுக்காமல் ஏமாற்றி வெளியேற்றும் மோசடி கால் செண்டர்கள் பற்றிய தகவல்கள் அளித்தால் , அது ரேடியோ மிர்ச்சியின் ஹலோ கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் வெளியிடப் படும் என்று பாலாஜி கூறி இருக்கிறார். இனியும் இது போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து ஏமாறாமல் இருக்க இது ஒரு நல்ல முயற்சி. தகவல் அனுப்ப வேண்டிய இமெயில் முகவர் : balaji983@radiomirchi.com

Tuesday, 25 March 2008

இந்த ஆண்ண்ண்ண்ண்டு.. ஸ்ட்ரைக் ஆண்ண்ண்ண்ண்ண்டு..

ஒரு வழியா மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்பித்தாச்சி. ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வுக்கு பரிந்துரை பண்ணி இருக்காங்க. அம்மாடி 40 சதவிகிதமா? ... (விவசாயிகள் கடன் தள்ளுபடியை கண்மூடி தனமாக எதிர்த்த ஏசி அறை பொருளாதார வல்லுநர்கள் இத எதிர்க்கிறார்களா பார்ப்போம்)இவ்வளவு அதிக ஊதிய உயர்வு அளிப்பது கூட பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால்... அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதற்கு தகுதியானவர்கள் தானா? குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் வேலைகளை எத்தனை ஊழியர்கள் செய்கிறார்கள். குறைந்தபட்ச நாகரிகம் மற்றும் மனிதாபிமானம் கூட இல்லாமல் எத்தனையோ ஊழியர்கள் நடந்துக் கொள்கிறார்கள். எதாவது முக்கியமான வேலையாக அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டி இருந்தால் .. எத்தனை பேர் சந்தோஷமாக போய் சந்தோஷமாக வெளியே வர முடிகிறது? ஒரு சிறு வேலைக்கு கூட எத்தனை தாமதம்.. எத்தனை அலைகழிப்புகள்.. எத்தனை அவமானங்கள்.... பெரும்பாலானவர்கள் பொது மக்களிடம் மிக மோசமாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள். காரணம் வேலையின் மீது கொஞ்சமும் அற்பணிப்பு உணர்வு இல்லாததும் தெனாவெட்டும் தான். நம்மை யார் கேள்வி கேக்க முடியும்? அப்படியே கேட்டாலும் .. இருக்கவே இருக்கு சங்கங்கள்... போராட்டங்கள்..
எனவே இந்த அளவு சம்பள உயர்வு தேவையா?

சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளில் முக்கியமானது, இப்போது இருக்கும் விடுமுறை நாட்களை குறைத்து 3 நாட்கள் மட்டுமே விடுமுறை நாட்கள் இருக்க வேண்டும் என்பது. இதை சும்மா பேருக்கு எதிர்த்துவிட்டு அமைதியாகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது....

..............கல்லூரி நாட்களில் முக்கியமான தேர்வு இருந்தால் ஒழிய மற்ற வெள்ளிகிழமைகளில் கல்லூரி செயல்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. அத்தனை வெள்ளிக் கிழமைகளிலும் ஸ்ட்ரைக் இருக்கும். ஏன்னா... ஹாஸ்டல் மாணவர்கள் எல்லோரும் வார இறுதியில் ஊருக்கு போவார்கள். வெள்ளிகிழமை வரை கல்லூரி இருந்தால் சனிக்கிழமை தான் ஊருக்கு செல்ல முடியும் , பிறகு அடுத்த நாளே கிளம்பி ஹாஸ்டலுக்கு வர வேண்டும். அப்போ தான் திங்கட்கிழமை கல்லூரிக்கு வர முடியும். அப்படியானால் விடுமுறை என்று பார்த்தால் முழுதாக 2 நாள் கூட இல்லை. இவ்வளவு கஷ்டப் பட்டு படித்தாக வேண்டுமா? என்ன கொடுமை குசும்பா இது? எனவே... வெள்ளிக் கிழமை நிச்சயமாக ஸ்ட்ரைக் இருக்கும். அது மட்டுமில்லை. என்றைக்கு புது திரைப்படம் ரிலிஸ் ஆனாலும் அன்றும் ஸ்ட்ரைக் இருக்கும். அது எவ்வளவு கொடுமையான படமாக இருந்தாலும் ஸ்ட்ரைக் இருக்கும். சிலர் சினிமாவுக்கு போவதற்கு ஒட்டு மொத்த கல்லூரிக்கும் விடுமுறை இருக்கும். பெரும்பாலும் வெள்ளிகிழமைகளிலும் புது படம் ரிலிஸ் ஆகும் நாட்களிலும் பெரும்பாலான மாணவ மணிகள் :P கல்லூரி பக்கம் வர மாட்டார்கள். எப்படியும் அன்று ஸ்ட்ரைக் இருக்கும் என்று தெரியும். :) ... ஹாஸ்டலில் இதற்கென்று தனி துறையே செயல்படும் . ஸ்ட்ரைக்கிற்கு காரணம் கண்டுபிடிக்கும் துறை. :P.... 2 மற்றும் 3ம் ஆண்டுகளில் எங்கள் அறை தான் இந்த துறையின் அலுவலகம். எப்போதும் எங்கள் அறையில் கொஞ்சம் சார்ட் பேப்பர்கள் ஸ்டாக் இருக்கும். இதில் தான் ஸ்ட்ரைக்கிற்கான காரணம் எழுதி அதை கல்லூரி கேட்டின் முன் வைத்துவிடுவோம். அதை படித்துவிட்டு கேட்டின் உள் நுழையாமல் அனைவரும் அப்படியே செல்ல வேண்டியது தான். :)). பெரும்பாலும் சில காரணங்களே தான் தொடர்ந்து அந்த பேப்பரில் இருக்கும்.

1.ஹாஸ்டலில் சாப்பாடு சரி இல்லை...
2. சாப்பாடு பற்றாக்குறை.. ( செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு 12 மணிக்கு மேல வந்தா எவன் சோறு போடுவான்? :P )
3. பாத்ரூமிற்க்கு தண்ணீர் சப்ளை இல்லை. ( காலையில் போர் மோட்டார் போட்டதும் தெரியாமல் நிறுத்திவிடுவோம். பிறகு தாமதமாக மோட்டார் போட்டு விடுவோம். அப்போ தான லேட்டா குளிச்சிட்டு அதையே காரணமாக எழுத முடியும்:P)
4. கல்லூரியில் ஆசிரியர் பற்றாக் குறை ( இருக்கிறவங்க க்ளாஸ் எல்லாம் ஒழுங்கா அட்டெண்ட் பண்ற மாதிரி:) )
5. அடிக்கடி பழுதடையும் ஹாஸ்டல் டிவியை மாற்ற வேண்டும். ( நல்ல வேளை கடைசி வரை அதை மாற்றவே இல்லை :P )
... இது போன்று சில காரணங்கள் தான் தொடர்ந்து இருக்கும்...
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்.. அரசு ஊழியர்களும் இப்படி படிச்சி (?!) வந்தவங்க தானே.. அரசாங்கம் அறிவிக்கும் விடுமுறையை பற்றி அவர்களுகென்ன கவலை? அதெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். :))

ஸோ... ஒரு வேளை இந்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் .... இப்போது இருக்கும் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் அடிக்கடி ஸ்ட்ரைக் இருக்கும் என நினைக்கிறேன். :))

Thursday, 20 March 2008

முதல்கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றது.

கோவை, சூலூர், திருப்பூர், அவினாஷி, பல்லடம், சோமனூர், பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், காங்கேயம், தாராபுரம், வெள்ளக்கோயில், கூடலூர், ஊட்டி, அருவங்காடு, கோத்தகிரி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம்..... வழக்கமான சுற்றுப்பயணமாக இல்லாமல் கோடை துவங்கிவிட்டதால் ஒரு முதல் கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே முடித்துவிட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடி சுற்ற்ப்பயணம் போக வேண்டியது தான்.

தினமும் இரவு 12 மணிக்கு மேல இரவு உணவு.. அதிலும் பெரும்பாலும் பஞ்சாபி தாபா ஹோட்டல்களிலேயே சாப்பிட்டு வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.

முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று மிகுந்த சிரமத்துக்கிடையில் :) காலை 4 மணிக்கு எழுந்து பயணத்தை துவங்கி ஊட்டி காபி ஹவுஸில் சிற்றுண்டி முடித்துக் கொண்டு வழியில் மான், காட்டுபன்றி, மயில், சிங்கவால் குரங்கு போன்ற சொந்த பந்தங்களை எல்லாம் சந்தித்து விட்டு கூடலூர் சென்று திரும்ப ஊட்டி வரும் வரை எல்லாம் சுமூகமாகத் தான் முடிந்தது. பிறகு ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடையில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. கொஞ்சம் மழை பெய்தாலும் "தண்ணி" மப்பில் மரங்கள் கவிழும். நேத்து பலத்த மழை. மண்சரிவு ஏற்படாமல் இருக்கனுமே என்று நினைத்துக் கொண்டே வந்தோம். மரம் விழுந்ததோடு நின்றது. எப்படியும் மரத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்து சீராக 2 மணி நேரமாவது ஆகும். நல்ல வேளை ஒரு போலிஸ் அங்கிள் டேக் டைவர்ஷன் சொல்லி ஒரு ஒத்தையடி பாதையை காண்பித்தார். அவர் பேச்சை கேளாமல் சில லேம்ப் ஆயில்ஸ் மெயின் ரோட்டிலேயே சென்றார்கள். எப்படியும் 2 மணி நேரத்திற்கு மேல் அவதி பட்டிருப்பார்கள். போலிஸ் மாமா சொன்ன வழியில் சென்றதால் எந்த சிரமமும் நெரிசலும் இல்லாமல் அருவங்காடு வழியாக குன்னூர் வந்து சேர்ந்தோம். வழியில் மேட்டுப்பாளையத்தில் 11.30 மணிக்கு ஒரு ரோட்டோரக் கையேந்திபவனில் சுட சுட தோசை சாப்பிட்டு கோவை வந்து சேர்ந்தோம்.

ச்ச... எவண்டா கண்டுபிடிச்சான் ராத்திரியில் ஆடை மாத்திக் கொண்டு படுக்கனும் என்று.தினமும் ராத்திரி 12 மணிக்கு மேல தான் வீட்டுக்கே வர முடியுது. இதுல இந்த கன்றாவி எல்லாம் பண்ணிட்டு படுக்கனுமாம். ச்ச.. ஒரே குஷ்டமப்பா :(((....

..... இன்று காலையில் தொலைகாட்ச்சியில் செய்தி : "குன்னூருக்கும் மேட்டுபாளையத்துக்கும் இடையில் மண்சரிவு. போக்குவரத்து நிறுத்தம்." ஆஹா... ஜஸ்டு மிச்சுடு....

கூடலூர் போகும் வழியில் கேமராவில் சுட்டது.. :)

ஊட்டி போகும் வழி
வழியில் மான் கூட்டம்.. இன்னும் சில இடங்களிலும் கூட்டம் கூட்டமாக இருந்தது.
இதுக்கு பேர் மயில்.. ஹிஹி ஆண் மயில்.. :P
ஓடையாம்ல :)
என்னா ஒரு வில்லத் தனமான பார்வை.. ஹிஹி.. பக்கத்தில் போக பாயந்துகொண்டு தூரத்தில் இருந்தே எடுத்த படம் இல்லை :P
கொஞ்சம் கூட பயப்பட மாட்டேன்றான். :)
எப்போதும் படையோட தான்யா சுத்தறாய்ங்க.
அட.. என்னா சேஷ்ட்டை பன்றாங்க.. கொஞ்ச நேரம் மிரட்டராங்க.. கொஞ்ச நேரம் தாவறாங்க.. அட.. அட...
தலைவா எதுவா இருந்தாலும் சொல்லிட்டு திட்டுப்பா... என் காதுல என்னென்னவோ கேட்டது.. :(
இத பாருய்யா நக்கலை... என் மூஞ்சி பாக்க முடியாத அளவுக்கா கொடூரமா இருக்கு? :((
பெண் மயில்.. தெரியுதா?

என்னா ஒசரமா வளந்துனு கீது.. :O

.....நல்ல வேளை.. குசும்பன் கல்யாண வேலைல இருக்கார்.... :P

Thursday, 6 March 2008

மார்ச் மாத PIT போட்டிக்கு






பெரியோரே.. சிறியோரே.. ஆன்றோரே.. சான்றோரே.. இந்த மாசம் பிட் ல பிரதிபலிப்புனு போட்டி தலைப்பு குடுத்திருக்காங்க. இதுல எதுனா அந்த போட்டிக்கு தேறுமா பாத்து சொல்லுங்க சாமியோவ். 2 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் ஆழப்புழா ஆற்றில் படகு வீடுகளில் தங்கி சுற்றுலா சென்ற போது எடுத்தது. புதுசா எடுக்க நேரமும் இல்ல. என்னத்த எடுக்கிறாதுனும் தெரியல. :((

Tamiler This Week