இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday, 12 May 2008
மங்களூர் சிவா காதலி ஃபோட்டோ.
Make Over Magic Toolன் உதவியுடம் அடையாளம் தெரியாமல் மேக் அக் போடப் பட்டுள்ளது. :P.... அதென்ன Make Over Magic என்று கேட்பவர்கள் மட்டும் தொடரலாம்.இதை பயன்படுத்தி ஒரு பெண்ணின் புகைபடத்தை அப்லோட் செய்து அவருக்கு Lip Liner, Lip Stick, Eye Liner , Hair Style, Hair colour போன்ற வசதிகளை பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிடித்த மாதிரி ஒப்பனை செய்து பார்த்து , பிறகு அதே போல் நேரடியாக செய்து கொள்ளலாம். Indiwo என்ற பெண்களுக்கான பி்ரத்யேக இணையதளத்தில் கிடைக்கிறது இந்த டூல். இந்த டூலை பயன்படுத்தி தான் மங்களூர் சிவாவின் காதலியை அழகு படுத்தி இருக்கிறேன். ஆஹா.. அடுத்த தேர்தல்ல அரசியல் கட்சிகள் டிவி மட்டும் இல்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் எல்லாம் குடுத்து நம்ம பிஸினஸ்க்கு ஆப்பு வச்சாலும் கைவசம் ஒரு தொழில் இருக்குடோய். :)..... பெண்களுக்கு உபயோகமான டூல். முயற்சித்து பாருங்க.
இந்த தளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானதாக இருப்பினும் ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் ஏரளமாக இருக்கு. மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் அழகாக விளக்கப் பட்டிருக்கு. இதை பதிவாகக் கூட போடலாம். ஆனால் அதை நம் மக்கள் எந்த அளவுக்கு நேர் மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாததால் அதை இங்கு ( Breast Self Examination-
Learn to Detect Breast Cancer)போய் பார்த்துக் கொள்ளுங்கள்.
Week-by-Week Pregnancy Guide - கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பகுதி. இதில் கருவில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த நிலையில் இருக்கும், அதன் வளர்ச்சி மற்றும் அந்த நேரங்களில் அவர்கள் செய்ய வேண்டியவை என சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது.
... ஒருத்தன் உருப்படியா எதுனா சொல்ல விடறாங்களா?.. நம்ம மை ஃப்ரண்ட் வம்பிழுக்கிறாங்க... அவங்க கூட ஃபேஸ்புக்ல விளையாடி ஜெயிக்கனுமாம்.. என்ன கொடுமை சார் இது... இருமா கண்ணு.. இதோ இப்போ வரேன்...
போனஸ் : யாஹூ சமீத்தில் பெண்களுக்காக ஆரம்பித்துள்ள தளம்( or Online Magazine ) Yahoo Shine இதையும் பாருங்க. ஆண்களும் படிக்கலாம் சாமியோவ்.
.. இப்பத்திக்கு சஞ்சய் அப்பீட்டு.. :))
Sunday, 11 May 2008
Sunday Special - Matter பஞ்சம்..
AVG Anti virus தனது இலவச புது பதிப்பை வெளியிட்டிருக்கிறது. தனது போட்டியாளரான Avastஐ விட சிறந்தது என சொல்லிக் கொள்கிறது. ஆனால் இணைய விவாத குழுக்களில் இந்த புது பதிப்பை விட Avast சிறந்தது என சொல்கிறார்கள். சிலர் Avira தான் பெஸ்ட் என்கிறார்கள். AVGயின் புது பதிப்பு 4 வைரஸ்களையும் Avira ஒரு வைரசையும் நம் கணினியில் வர அனுமதித்து விடுவதாகவும் Avast இது போன்று எந்த வைரஸையும் அனுமதிப்பதில்லை எனவும் தகவல். என்னிடம் Avast இருக்கிறது. ஆனாலும் AVGயின் புது பதிப்பையும் டவுன்லோட் செய்து வச்சிருக்கேன். இதுல ஒரு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது கூகுள் மற்றும் MSNல் தேடும் போது அதில் வரும் இணைப்புகளை சோதித்து அந்த வலைதளம் பாதுகாப்பானதா அல்லது வைரஸ் அபாயம் உள்ளதா அல்லது அதில் வைரஸ் இருக்க்கிறதா என அறிவிக்கிறது.
பாதுகாப்பான தளங்களுக்கு அருகில் பச்சை நிற 'டிக்" இருக்கும். வைரஸை கொண்டுள்ள தளங்கள் சிவப்பு X குறியிடனும் , வைரஸ் பரவ வாய்புள்ள தளங்கள் ஆரஞ்சு நிற X குறியுடனும் தெரிகிறது. இந்த குறிகள் மீது மவுஸ் கொண்டு சென்றால் அந்த தளம் பற்றிய விவரங்கள் தெரிகிறது.
வைரஸ் அபாயம் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்தாலோ அல்லது நேரடியாக(தேடுதல் இல்லாமல்) அந்த தளத்தின் முகவரியை குறிப்பிட்டு செல்ல முயன்றாலோ ஒரு எச்சரிக்கை தகவல் வருகிறது( பார்க்க :2வது படம்). அந்த எச்சரிக்கையை மீறி செல்வது நமது ரிஸ்க். ஆகையால் இந்த வசதிக்காக Avast இருந்தும் AVGயின் இந்த புது பதிப்பையும் பதிவிறக்கி வைத்துக் கொண்டேன். ஓசியில் கிடைத்தால் எனக்கொன்று என் தம்பிக்கொன்று என கேட்கும் ஆட்கள் தானே நாமெல்லாம்.. :D.... முயற்சித்து பார்க்கலாம்...

மேட்டர் பஞ்சதால மக்கள் மறந்துடக் கூடாதேனு எப்டி எல்லாம் ஒப்பேத்த வேண்டி இருக்கு. என் ஆசான் ஜூவிக்கு இந்த ஒப்பேத்தல்கள் எல்லாம் சமர்ப்பணம். :)
Saturday, 10 May 2008
தமிழக காவல் துறையின் லட்சணம்

ஒரு காலத்தில் தமிழக காவல் துறை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக பேசப் பட்டது. ஆனால் இன்று .. அவர்கள் தங்கள் திறமைய ஆளும் கட்சிக்கு ஆட்கள் இழுக்கவும் எதிர் கட்சியினரின் தொலை பேசி பேச்சிகளை ஒட்டு கேட்கவும் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து எதிர் கட்சியினரை உளவு பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.
இதைவிட பெருங்கொடுமைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடப்பது தொடர்கதை ஆகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகில் அதியமான் கோட்டை காவல் நிலையதிலும் அதை தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையத்திலும் துப்பாக்கிகள் கொள்ளை போனது. அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது... காவல் நிலையத்தையே காவல் காக்க முடியாத இவர்களால் எப்படி பொது மக்களை காக்க முடியும். இவர்களை பணி நீக்கம் செய்யாமல் விசாரணை குழு அமைக்கிறார்கள். கர்மம்....
அடுத்து சில தினங்களில் கோவையில் மரம் கடத்தும் கும்பல் ஒன்று ஒரு பூங்காவில் இருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றார்கள். இத்தனைக்கும் இந்த பூங்கா நகரின் மத்தியில் இருக்கிறது. காவல் துறையினர் எந்த லட்சனத்தில் நகரில் இரவு ரோந்து பார்த்திருப்பார்கள் என்று பாருங்க.
இதைவிடக் கொடுமை.. கோவையில் இரவு பணியில் இருந்த காவலர்களில் வாக்கி டாக்கியை யாரோ அபேஸ் பண்ணி சென்றது. தன்னிடம் ஒருவன் திருடுவதையே தடுக்க முடியாத இவர்களா நகரில் நடக்கும் திருட்டை தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?..
சமீபத்தில் சென்னையில் நடந்த கொடுமை..... ராஜாஜி சாலையில் உள்ள அரசு கருவூலம், சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளக் கட்டிடத்தில் நடந்த கூத்து... அந்த பகுதியில் இரவில் ரோந்து சென்ற கமிஷனர் அந்த அலுவலக கட்டிடத்திற்கு சென்று கதவை தட்டி இருக்கிறார். அரை மணி நேரம் கழித்து ஆயுதப் படை காவலர் ஒருவர் தூக்க கலக்கத்தில் கதவை திறந்திருக்கிறார். எந்த லட்சணத்தில் காவல் காக்கிறார்கள் பாருங்க.
அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள். மேலும் 3 காவலர்கள் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றிருந்ததும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இவர்கள் இதே ரீதியில் சேவை புரிந்தால் தமிழகத்தில் ஒரு பயலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. குறிப்பாக இரவில் யாரும் வெளியே செல்ல முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் ஒழுங்காக வேலை பார்த்தால் தான் இந்த நிலை மாறும்.
......... மங்கை அவர்களின் பதிவை படிசச்தும் இதை எழுதத் தோன்றியது....
Friday, 9 May 2008
பை கூகுள்.. ஹை யாஹூ இந்தியா...
ஜிமெயில் வரும் வரை நம் வேடந்தாங்கல் யாஹூவாகத் தான் இருந்தது. ஆனால் ஜிமெயில் வந்ததும் அதில் இருந்த வசதிகளுக்காக யாஹூவை தலை முழுகினோம். ஆனாலும் சாட் பண்ண இப்போ வரை யாஹூ மெசஞ்சர்க்கு இணையாக வேறு எதுவும் கிடையாது. அதே போல் இவ்வளவு நாளும் தேடுதல் என்றாலே அது கூகுள் தான் என்று இருப்பேன். ஆனால் இப்போ யாஹூ ஒரு அற்புதமான தேடும் அனுபவத்தை தருகிறது. இதன் பெயர்
Yahoo Glue! beta. இதை சோதனை அடிப்படையில் முதலில் யாஹூ இந்தியாவில் அறிமுகப் படுத்தி இருக்கிறது. இதைவிட சிறந்த தேடுபொறிக்கு கூகுள் ரொம்பவே மெனக் கெட வேண்டி இருக்கும். அது வரை இனி தேடுதலுக்கு யாஹூ இந்தியா தான் என்னோட ஃபேவரிட்டா இருக்கும்.
அப்படி என்ன இருக்கு இந்த புது
Yahoo Glue! betaவில்?.. நாம் தேட வேண்டிய சொல்லை குடுத்து தேட சொன்னதும் அந்த சொல்லுக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் தருகிறது. உதாரணமாக Kamal என்று தேடினால் கமல்ஹாசன் பற்றிய தகவல்கள் அடங்கிய இணைய தளங்கள், கமல் தொடர்பான புகைபடங்கள், விக்கிபீடியாவில் கமல், யாஹூ பதில்களில் கமல் பற்றிய விவாதங்கள், லாஸ்ட் எஃப் எம்மில் கமல் படங்களின் பாடல்களின் பட்டியல், Youtubeல் கமல் தொடர்பான விடியோக்கள் , மற்ற தளங்களில் உள்ள செய்திகள் , இன்னும் பல விதமான தகவல்கள் என அனைத்தும் ஒரே பக்கத்தில் அளித்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறது.
ஒவ்வொரு முறையும் தேட்டுவதற்கு யாஹூ இந்தியா தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் அட்ரஸ்பாருக்கு அடுத்து உள்ள தேடுதல் பெட்டியில் Yahoo Glue! betaவை தேர்ந்தெடுத்து அங்கிருந்தே தேடலாம். கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ள இடம்.
முயற்சி பண்ணி பாருங்க... வழக்கம் போல படத்து மேல வச்சி அமுக்குங்க.. பெரிசாகும்..
Thursday, 8 May 2008
தமிழச்சியும் இளையகவி்யும் ஜூ.வியின் மேட்டர் பஞ்சமும்
வாரத்துக்கு 2 பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக ஜூவி செய்யும் மொள்ளமாறித் தனம். இது ஜூவிக்கோ, தமிழச்சிக்கோ எந்த வகையிலாவது பயன் தரக் கூடிய கட்டுரை ?!யா?... எமக்கு வந்த நம்பத் தகுந்த தகவல்படி தன் பதிவின் ஹிட்ஸ் ஜாஸ்தி ஆவதற்காக இளையகவி காசு குடுத்து அல்லது தன் பதிவின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கொடுப்பதாக்க சொல்லி இதை போட சொல்லி இருக்கிறார். :) காலையில் நான் அவரிடம் தொலை பேசிய போது அவரும் இதை ஒத்துக் கொண்டார். என்ன கொடுமை சார் இது? அந்த ஜொள்ளு பதிவு போட தமிழச்சியிடம் சம்மதம் பெற்றாராம்... யோவ் இளைய கவி.... தமிழச்சிய உங்க சகோதரினு தானைய்யா சொன்னிங்க.. சகோதரிய ஜொள்ளுவிட சகோதரியே சம்மதிச்சாங்களா? ஏன்யா இப்படி புளுகறிங்க? ஏன்யா இப்படி தமிழச்சி பேரை கெடுக்கறிங்க? ...