இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 1 June 2009

இருவத்தி நாலு வரி ஹைக்கூ

வெறகு இட்டாந்து
அடுப்ப பத்தவச்சி
ஒல வச்சி
அரிசி போட்டு
பொங்க வச்சி
கஞ்சி வடிச்சி
அதை குடிச்சிப் பாத்தா
உப்பு செத்த கூடவோ?

சோத்த போட்டு
கொழம்பு ஊத்தி
கொழய பெசஞ்சி
உருண்ட புடிச்சி
உள்ள விட்டா
காரம் கொஞ்சம் தூக்கலோ?

ஊர சுத்திட்டு
ஊட்டுக்கு வந்து
பொட்டிய தொறந்து
லாகின் பண்ணி
லின்கு பார்த்து
கவுஜ படிச்சா
பைத்தியம் முத்திப் போச்சோ?

எண்ணிப் பாருங்க
இதுதான்
இருவத்தி நாலு வரி ஹைக்கூ..


இதை, திரிஷா விடியோ புகழ் அதிஷாவுக்கு சமர்ப்பிக்கிறேன்

24 Comments:

*இயற்கை ராஜி* said...

Aiyooooooooooo

குசும்பன் said...

கருமம்
கன்றாவி
தலையெழுத்து!

மூன்று வரி கக்கூஸ்

anujanya said...

மச்சி மச்சி இது டூ மச்சி

அனுஜன்யா

ஆயில்யன் said...

தலையெழுத்து!






குசும்பன் ஐய்ய்ய் கூவில எனக்கு புடிச்சது :)))))

சென்ஷி said...

இரு... இரு.. ரவிசங்கர் அங்கிள்ட்ட சொல்லி கருத்து சொல்ல சொல்றேன்.

( அப்பவே வேலன் அண்ணாச்சி புதுசா ஒரு கவிஞர் உருவாகிட்டாருன்னு சேட்ல என்கிட்ட மிரட்டுனாரு!)

ஆயில்யன் said...

//இவ்ளோ தூரம் வந்துட்டிங்க.. கமெண்ட் போடாமலா போய்டுவீங்க.. //

வேற வழி!

ஆயில்யன் said...

//அப்பவே வேலன் அண்ணாச்சி புதுசா ஒரு கவிஞர் உருவாகிட்டாருன்னு சேட்ல என்கிட்ட மிரட்டுனாரு!///

இவுருதான்!

இவுருதான்!!

சென்ஷி said...

எழுதிய வரிகள்
வார்த்தைகளாய்
அதிர்கிறதே...

காரணம்
இது
ஷேக்க்க்கூ..

ஆயில்யன் said...

ஆஹா இப்படி எதிர் பதிவு போட ஆரம்பிச்சா குசும்பன் கை பரபரக்குமே இத்தினி நேரம் தன்னோட 25 போட்டோ ஸ்டில்ஸ டிராப்டியிருப்பாரே....??? :))))))))

*இயற்கை ராஜி* said...

தின‌மும் ச‌மைக்கிறதை இப்பிடி வேற‌ சொல்ல‌ணுமா?:-(

*இயற்கை ராஜி* said...

த‌க்காளி ச‌ட்னி க‌விதை ஏதும் இல்லையா?

Abbas said...

intha kavitha purinjuthu
avarkavitha puriyavee illayee

*இயற்கை ராஜி* said...

ப‌ரிட்சைக்கு ப‌ய‌ந்து
பிட் எழுதி
ச‌ட்டைல‌ ம‌றைச்சி
ஷூ ல‌ ஒளிச்சி
ப‌ரிட்சைஹாலுக்கு கொண்டுபோயி
திருட்டுமுழி முழிச்சி
இன்விஜிலேட்ட‌ரை ஏமாத்தி
வெளில‌ எடுத்து பாத்தா
ச‌ப்ஜெக்டே வேறயோ?:-))

மேவி... said...

கலக்கல்

அன்புடன் அருணா said...

அடப் பாவி???:((

ஜோசப் பால்ராஜ் said...

//கருமம்
கன்றாவி
தலையெழுத்து!

மூன்று வரி கக்கூஸ்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

sakthi said...

அருமையான கவுஜ

Unknown said...

enna kodumai ithu:((

cheena (சீனா) said...

பொடியனின் குறும்பாவிலும் பொருள் இருக்கிறது - திறமை வளர்கிறது - தொடர்ந்து எழுதுக

வால்பையன் said...

கொலவெறி பிடிச்ச மனுசங்களா இருக்கிங்களே!

வால்பையன் said...

கமெண்ட் பாலோஅப் இல்லை!
என்னான்னு பாருங்க

விக்னேஷ்வரி said...

:O

பட்டாம்பூச்சி said...

Ada ada ada...enna kavujappa...
kalakkareenga ponga :)

Kumky said...

இருந்தாலும் இம்புட்டு தெகிரியம் உடம்புக்காகாதப்பா...

Tamiler This Week