இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 4 June 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 5

புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.


இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க
. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .


இந்த வாரப் படம்..
முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.

10 Comments:

sakthi said...

அதிகாலை நிலவை ஏமாற்றி
பூமியை ஆக்ரமித்த‌ நினைவில் குளிர்ந்து
பனி சின்னம் கொண்ட முகத்துடன்
சிவந்து எழுந்தான் நிலவின் காதலன்

நிசப்தமான காலையில்
அமைதியான யுத்தமோ
நித்திரையை தொலைத்து
பாடி திரியும் பறவைகள்
பாட முடியாவிட்டாலும்
காற்றில் ஆடும்
வண்ணத்துபூச்சிகள்

புது நாட்களை வரவேற்க பூக்கும் மலர்கள்
கானும் போதே கற்பனை விரியும்
என்னையும் தாண்டி விண்னையும் தாண்டி
அழகான விடியலை கால் நூற்றாண்டாய்
காணாமல் விட்டேன்

நல்ல வேளை
நான் துருவத்தில் பிறக்கவில்லை
பிறந்திருந்தால் வருடத்திற்க்கு
ஒரு முறை தான் விடியல்
விடியலை கண்டவர்கே
வாழ்கையில் விடியல்
எனக்கும் இன்று தான் விடிந்தது....

Raju said...

முயற்சி திருவினையாக்கும்
உதயசூரியனைப்பாருங்கள்
எண்பத்தாறு வயதாம் அவருக்கு
பல கோடி வருடங்களுக்கு சமம்

சிறு சிறு நட்சத்திரங்களும்
அவரவர் இடத்தை அடையும்
இங்கு மக்களும் நாடாளும்
விதத்தில் பங்கு கிடைக்கும்

கோபம் கொண்ட சிறு பெண்
தன் கனலை காட்டுது
உன் தணலால் அப்பெண்ணை
அரவணைத்து காபற்றிடுவாய் அய்யா!

Raju said...

Sorry, no spell check... last line

அரவணைத்து காப்பாற்றிடுவாய் அய்யா!

Kumky said...

இந்த படத்தயெல்லாம் பார்த்தா கவிதையா வரும்?.....உம்ம....

ஆ.சுதா said...

அதிகாலைச் சோம்பல்
ஆகாயப் பறவை
குளிர்ந்தக் காற்று
சிவந்த வானம்
மனைவியின் கூந்தல் மணம்
அழகாகவே விடிகின்றது
எனக்கான இன்னுமோர் நாள்.

அன்புடன் அருணா said...

வாழ்நாள்
முழுவதும்
அழகாய்
விழுவதும்
எழுவதுமாய்
ஒரே வேலையை
உன்னால்தான்
செய்ய முடியும்
போரடிக்காமல்!!!!

பொடிப்பையன் said...

காலையில் எரிந்து
மாலையில் மிளிர்ந்து
இரவிலாவது ஓய்கிறாய் எங்களுக்காக......

குசும்பன் said...

கிழக்கில் உதித்து
மேற்கில் மறையும்
சூரியனே!
ஏன் நீ வடக்கில்
உதித்து தெற்கில்
மறைய கூடாது?

(ஹி ஹி மாமா இப்படியும் கவிதை எழுதுவுமுல்ல!:)))

குசும்பன் said...

சூ
ரி

னை

கை
யால்


றை
ப்
பா
ர்


ல்

Raj said...

மண்ணவள் மேனியை
மனம் மகிழ பார்த்து
பகல்நேரம் மறந்து அழகை
பருகியிருந்த சூரியனே
பருகிய அழகு அதிகமானதாலோ
மயங்கி மஞ்சள் வானமாகி
மேற்திசையில் வீழ்ந்து
மண்ணவளின் கூந்தலினுள்
காணமல் போகின்றாய்
சூரியா
அன்பான கரத்தால் மண்ணவளை
அழகாக்கி நன்மை செய்வதுபோல் உன்
கொல்லும் வெப்ப பார்வையால்
கொன்று அழித்துவிடு தீமைகளை
ஏன் எனில்
உன்னவள் அல்லவா
மண்ணவள்………

Tamiler This Week