இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 28 March 2008

புரியலை தயவுசெய்து (தமிழ்மணம்) விளக்கவும்

சமீபத்தில் தமிழ்மணத்தில் இருந்த நீக்கப்பட்ட சில இடுகைகள் மற்றும் வலைப்பூக்களால் மீண்டும் தமிழ்மணம் சூடாகி இருக்கிறது. நீக்கத்திற்கு கூறப்படும் காரணங்கள் முரனாகவே இருக்கிறது.ஆபாசமான வார்த்தைகள் அல்லது தனிநபர் மீதான தாக்குதல்களின் காரணமாக நீக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. யோனி, ஆண்குறி என்று எழுதியவர்கள் பதிவுகள் எல்லாம் தமிழ் மணத்தில் வலம் வந்தது.

பொறுபுள்ள ஒரு இணையதளமாக சட்டவிரோத செயல்களுக்கு துணை போகாமல் இருப்பதை கொள்கையாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய .. தங்கள் தளத்தில் பதிவு செய்தவர்கள் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாது என்பதை எல்லாம் முடிவு செய்யக் கூடாது.இது கருத்து சுதந்திரத்திற்கும் தனி நபர் சுதந்திரத்திற்கும் தீங்கானது. அப்படி முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கு, அதை பின்பற்றுபவர்கள் இங்கு உறுப்பினர்களாக இருக்கலாம். இல்லை என்றால் வெளியேறலாம் அல்லது உறுப்பினர் ஆக வேண்டாம் என்று ஒருவேளை சொன்னால்.. அதற்கு தமிழ்மணம் பதிவுலகிற்கு அப்பார்பட்டவர்களால் நடத்தப் பட வேண்டும். தமிழ்மணத்தின் நிர்வாகிகளை பொறுத்தவரை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எழுதும் பதிவுகளில் இதை காணலாம்.

ஒரு முக்கியமான சந்தேகம்...தமிழ்மணம் ஒரு திரட்டியா அல்லது இணைய உலகின் கலாச்சார காவலனா?.. தமிழ்மணத்திலிருந்து சில பதிவுகள் அல்லது பதிவர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழ்மணம் அல்லது அந்த திரட்டியை பயன்படுத்துபவர்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் தமிழ்மணம் சாதித்தது அல்லது சாதித்துக் கொண்டிருப்பது என்ன? தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்ட பதிவர்கள் அது போன்று எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது நீக்கப் பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் உறுப்பினர்கள் படிப்பதை நிறுத்தி இருக்கிறார்களா? ஒரு திரட்டியாக தமிழ்மணத்தால் யார் மனதையுமே மாற்றவோ திருத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்ததை ( சட்ட விரோதம் இல்லாத வகையில் ) எழுதவோ, வாசிக்கவோ உரிமை உண்டு.

பெரும்பாலும் நீக்கத்திற்கு சொல்லப்படும் காரணம்.. தனிநபர் தாக்குதல்.. அவதூறு பரப்புதல். இதை தமிழ்மணம் எந்த அளாவுகோலின் படி முடிவு செய்கிறது. யார் மீது அவதூறு பரப்பபடுகிறதோ அவர் சட்ட ரீதியாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும்/முடியும். இதற்காக தன்னிடம் பதிவு செய்துள்ள பதிவரை அல்லது அவரது இடுகையை நீக்கும் உரிமை தமிழ்மணத்திற்கு கிடையாது. ஆபாசமாக இல்லாமல்(உதாரணம் : போலி தளங்கள்) குற்றசாட்டு ரீதியில் ஒருவர் பற்றிய செய்திகளை வெளியிடுவதை தனிநபர் தாக்கு அல்லது அவதூறு பரப்புவது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை குற்றம் சுமத்தபட்ட்வர் அல்லது கண்டிக்கப் பட்டவர் அந்த செயலுக்கு உரியவராக இருக்கும் பட்சத்தில் ஒருவரது தவறான செயல்பாட்டை தங்கள் தளத்தில் பதிவு செய்துகொண்டவர் தெரிந்துக் கொள்ளவிடாமல் தடுக்கும் அல்லது மறைக்கும் செயலாகவே இந்த நீக்கங்களை கருத முடிகிறது.

இப்படி நீக்குவதற்கு பதில் தமிழ்மணத்திற்கு ஒவ்வாது என்று கருதும் இடுகைகளை தனியாக வகைபடுத்தலாம்.அவற்றை முகப்பு பக்கத்தில் தெரியாமல் அந்த பிரிவிற்கு தனி பக்கங்களை அளிக்கலாம். இதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் அதை படிக்கட்டும். விருப்பம் இல்லதவர்கள் ஒதுக்கி விடட்டும்.

அல்லது ஒரு பதிவை அல்லது பதிவரை நீக்குவதற்கு முன் தன் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட்டு அதன் பின்னர் நீக்கினாலாவது பரவா இல்லை.

சைட் டிஷ் : தமிமணம் வெறும் ஒரு திரட்டி மட்டும் தான். அதன் வேலை தன்னிடம் பதிவு செய்த்துக் கொண்டவர்களின் பதிவுகள திரட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பதிவர் அல்லது படிப்பவரின் சுதந்திரத்தில் எல்லாம் தலையிடக் கூடாது. எதை படிப்பது எதை ஒதுக்குவது என்பதெல்லாம் படிப்பவரின் உரிமை/கவலை. இதில் எதற்கு ஒரு திரட்டி தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு பிறகு அந்த நிலைபாட்டிலிருந்து மாறுவது என்பது வெறும் பரபரப்புக்கான வேலையாகவே தெரிகிறது.தமிழ்மணம் தவிற வேறெந்த திரட்டியும்( இப்போதைக்கு) இந்தளவு தனிநபர் சுதந்திரத்தில் தலை இடுவதில்லை.

12 Comments:

TBCD said...

யோவ் கலக்கல் பதிவு...எங்கேயோ போயிட்டே...

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Anonymous said...

எல்லாரும் சங்கு ஊதுகிறீர்கள். கேட்ட மாதிரி தெரியவில்லையே. அது சரி.
தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

தெய்வமகன் said...

நண்பா தமிழ்மணத்தில் இருக்கீங்களான்னு செக் பண்ணிக்குங்க.இல்லாட்டி உங்க மெயில் ஓப்பன் பண்ணிப்பாருங்க.

ஆன கொஞ்சம் தைரியம் அதிகம் தான்

வாழ்க

Dreamzz said...

ithukku thaan naan intha tamilmanam vilayatuke varathu illa!

Anonymous said...

வணக்கங்ணா.. நா..புதுசுங்க.. சூப்பரா கேட்டிங்க போங்க... வழிமொழிகிறேன்..............ணா.

நிஜமா நல்லவன் said...

அண்ணே வணக்கம்
உங்கள யாரு அண்ணே பொடியன் னு சொன்னது
போட்டு தாக்கிட்டீங்களே அண்ணாத்த
பொடி செம காரம்

நிஜமா நல்லவன் said...

///தெய்வமகன் said...
ஆன கொஞ்சம் தைரியம் அதிகம் தான்////



பொடியன்களுக்கு ரொம்பத்தான் தெகிரியம்.

Sanjai Gandhi said...

@TBCD : மிக்க நன்றி..தலைப்புக்கு உதவியதற்கும் :P

----------

@அனானி : எவ்வளவு நேரம் தான் நடிக்க முடியும்? :)

---------

@ ட்ரீம்ஸ் : நீ ரொம்ப நல்லவண்டா :P

----------
@ ப்ரசன்னா : ஆதரவுக்கு நன்றி ப்ரசன்னா..புதுசா வந்தவர் கூட ஆதரிக்கிறிங்கனா.. அப்போ தமிழ்மணத்தின் நிலைப்பாட்டில் நிச்சயம் பெரும் தவறு இருக்கு.

---------

@நல்லவர் : நன்றி அண்ணாத்த. எல்லாம் உங்க ஆசிர்வாதம் :P

நிஜமா நல்லவன் said...

///@நல்லவர் : நன்றி அண்ணாத்த. எல்லாம் உங்க ஆசிர்வாதம் :P///


ஆசிர்வாதமா??????????
ஆளவிடுங்கப்பா.

Yogi said...

// :: Break The Rule :: //

uLkuthu ??

:)

Hari said...

தமிழ்மணம் ஒரு சில விதிகளை வகுத்து கொண்டு செயல்படும் போது, அது நமக்கு ஒத்துவராத போது அதை விட்டு வெளியேறுவதே சிறப்பு. என்னை போல்.

நிற்க. தமிழ்மணம் "நான் சொல்வதை போல்தான் அனைவரும் எழுதவேண்டும்" என்று கூறினால் மட்டுமே அதை நீங்கள் குறை சொல்லமுடியும். மற்றபடி அவர்கள் தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்ட வரையறைகளை நீங்கள் விமர்சிக்க முடியாது. வசவு வார்த்தைகளை கொண்டுள்ள பதிவுகள் அவர்கள் வரையறைகளுக்குள் அடங்காவிட்டால், அதை நீக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதை குறை கூற முடியாது.

மங்களூர் சிவா said...

/
நண்பா தமிழ்மணத்தில் இருக்கீங்களான்னு செக் பண்ணிக்குங்க.இல்லாட்டி உங்க மெயில் ஓப்பன் பண்ணிப்பாருங்க.
/

நல்லா சொன்னப்பா தெய்வமகன்

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

Tamiler This Week