இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 27 March 2008

பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதா?

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி ரட்டை ஜடை போட்டு வரவில்லை என்று அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை " ஜடையை அறுத்துவிடுவேன்" என்று மிரட்டி இருக்கிறார். ( அறுத்து விட்டதாகவும் பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன..). அதே மாணவியின் வகுப்பாசிரியை அந்த மாணவியின் தலையை சுவற்றில் மோதி காயப் படுத்தி இருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் குடுத்த பின் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த ஆசிரியைகளை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்து பின்பு அவர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

அடுத்து சமீபத்தில் இதே போன்ற ஒரு சம்பவம். இன்னொரு தனியார் பள்ளியில் மெதுவாக தேர்வெழுதியததற்காக ஒரு மாணவனை அந்த வகுப்பாசிரியை, தேர்வெழுத பயன்படுத்தும் அட்டையால் அவன் தலையில் அடித்திருக்கிறார். அட்டையில் இருந்த க்ளிப் பட்டு மாணவன் தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவன் கடைசி வரை ரத்தம் வந்த இடத்தில் கையை வைத்துக் கொண்டு தேர்வு எழுதி இருக்கிறான். கடைசி வரை அவனுக்கு முதல் உதவி கூட செய்யவில்லையாம். இதில் அந்த ஆசிரியையின் மிரட்டல் வேறு.." இதை யாரிடமாவது சொன்னால் இதே போன்று மீண்டும் அடிப்பேன்" என்று. இதற்கு பயந்து அந்த மாணவன் வீட்டில் உண்மையை சொல்லவில்லை. பள்ளி நிர்வாகமும் " உங்கள் பையன் விளையாடும் போது கீழே விழுந்துவிட்டான். வந்து அழைத்து செல்லுங்கள்" என்று தான் தகவல் சொல்லி இருக்கிறது.

பிறகு இரவு தூங்கும் போது அந்த மாணவன் " மிஸ் என்ன அடிக்காதிங்க மிஸ்.. அடிக்காதிங்க மிஸ்" என்று உளறி இருக்கிறான். அதை வைத்து காலையில் அவனை மிரட்டி விசாரிக்கும் போது தான் உண்மையை சொல்லி இருக்கிறான். இதையடுத்து அவன் பெற்றொர் பள்ளிக்கு சென்று புகார் தெரிவித்த பின் அந்த ஆசிரியை வேலை நீக்கம் செய்தி்ருக்கிறார்கள்.

இந்த 2 சம்பவங்களிலுமே, இந்த ஆசிரியைகள் மீது இதற்கு முன்பே இது போன்ற புகார்கள் வந்ததாகவும் அப்போதே அவர்களை எச்சரித்ததாகவும் இரண்டு பள்ளி நிர்வாகமும் கூறி இருக்கிறது. அப்படியானால் இதற்கு முன்பே பல மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். முதல் முறை தவறு செய்யும் போதே அவர்களை நீக்கி இருந்தால் மேலும் மேலும் மாணவர்கள் பாதிக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இந்த சம்பவங்களுக்கு காரணமான மூவருமே பெண்கள் தான். கேட்டால் .. பெண்கள் தான் கனிவானவர்கள், மிருதுவானவர்கள்.. பாசமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறார்கள். என்ன கொடுமை கோயம்புத்தூர் இது? :)

ஆரம்ப வகுப்புகளுக்கு பெண்களை ஆசிரியைகளாக நியமிப்பதே அவர்கள் குழந்தைகளை தாயுள்ளத்தோடு கனிவாக கவனித்துக் கொள்வார்கள் என்பதால் தான். ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கு. இதற்கு காரணம், இவர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லாதது தான். அரசாங்க பள்ளிகளில் பணியாற்ற் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படித்திருக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகளில் அந்த தகுதி தேவை இல்லை. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அதைவிட முக்கியத் தகுதி.. குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். இவர்களிடம் எந்த தாயுள்ளம் இருக்கும்? குடுக்கிற சம்பளத்துக்கு இந்த மாதிரி வேலை பார்த்தாலே போதும் என்ற மன நிலையில் தானே இருப்பார்கள். அதற்காக அனைத்து ஆசிரியைகளையுமே குறை சொல்ல முடியாது. மாணவர்களிடம் மிகக் கனிவாக நடந்து அவர்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஆசிரியைகளும் இருக்கிறார்கள். களைகள் மட்டுமே உடனடியாக களையப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் வேலைக்கு சேரும் முன் ஆசிரியர்/யைகளுக்கு ஒரு பொதுவான அரசமைப்பு மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழை பெறுபவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி ஆசிரியர்/யைகளுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். குறந்த பட்சம் மாதம் ஒரு முறை பயிற்சி வகுப்புகளாவது நடத்த வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும்.. பெண்களிடம் எப்போடா ராசா சகிப்புத் தன்மை இருந்தது குறைவதற்கு என்று கேட்க்கும் "ஆணி"ய வாதிகளை பார்த்து ஒன்று சொல்லிகொள்கிறேன்... " எல்லாம்.. பெண்ணியவாதிகளின் கண்மூடித் தனமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்கத் தான் அப்படி...." அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((((

11 Comments:

Baby Pavan said...

வாழ்த்துக்கள்... சொந்த செலவுல ஆப்பு வாங்க பதிவு போட்டதுக்கு.

என்ன இருந்தாலும் மிஸ் இப்படி எல்லாம் என்ன மாதிரி குட்டி பசங்கள அடிக்க கூடாது... குசும்பு மாமா மாதிரி குறும்பு செய்யரவங்கல எப்படி வேணா அடிங்க...

மங்களூர் சிவா said...

/
Baby Pavan said...
வாழ்த்துக்கள்... சொந்த செலவுல ஆப்பு வாங்க பதிவு போட்டதுக்கு.

/
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

/
இந்த சம்பவங்களுக்கு காரணமான மூவருமே பெண்கள் தான். கேட்டால் .. பெண்கள் தான் கனிவானவர்கள், மிருதுவானவர்கள்.. பாசமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறார்கள்.
/
என்ன கொடுமை சஞ்சய் இது :(

மங்களூர் சிவா said...

சின்ன புள்ளைங்ககளையே இந்த சாத்து சாத்தறாளுகளே இவளுகளை நம்பி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Kuttibalu said...

/
இந்த சம்பவங்களுக்கு காரணமான மூவருமே பெண்கள் தான். கேட்டால் .. பெண்கள் தான் கனிவானவர்கள், மிருதுவானவர்கள்.. பாசமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறார்கள்.
/
என்ன கொடுமை சஞ்சய் இது :(

ரிப்பீட்டேய்

Dreamzz said...

//எல்லாம் இருக்கட்டும்.. பெண்களிடம் எப்போடா ராசா சகிப்புத் தன்மை இருந்தது குறைவதற்கு என்று கேட்க்கும் "ஆணி"ய வாதிகளை பார்த்து ஒன்று சொல்லிகொள்கிறேன்... " எல்லாம்.. பெண்ணியவாதிகளின் கண்மூடித் தனமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்கத் தான் அப்படி...." //

yov... pengalidam sagiputhanmaia :P
nalla comedy panreenga... :)

Sanjai Gandhi said...

//Baby Pavan said...

வாழ்த்துக்கள்... சொந்த செலவுல ஆப்பு வாங்க பதிவு போட்டதுக்கு.//

ஹிஹி.. என்ன எல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க பவன் :P

// என்ன இருந்தாலும் மிஸ் இப்படி எல்லாம் என்ன மாதிரி குட்டி பசங்கள அடிக்க கூடாது... குசும்பு மாமா மாதிரி குறும்பு செய்யரவங்கல எப்படி வேணா அடிங்க..//

கவலை படாதே செல்லம்.. உன் ஆசை வெகு விரைவில் நிறைவேறப் போகிறது. ;))

Sanjai Gandhi said...

கொடுமை தான் சிவா மாம்ஸ்.. இதுங்களை எல்லாம் முள்ளு மெல முட்டி போட வைக்கனும்.
// மங்களூர் சிவா said...

சின்ன புள்ளைங்ககளையே இந்த சாத்து சாத்தறாளுகளே இவளுகளை நம்பி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ//
அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு :P...
ஆமா நீங்க உங்க எதிர்காலத்தை பத்தி கவலை படறிங்களா இல்லை குசும்பனை நினைத்து கவலை படறிங்களா? :P

Sanjai Gandhi said...

@ குட்டிபாலு : ஒடம்பு எபப்டி இருக்கு ராசா? :P

அந்த ராங் கால் பார்ட்டியை திரும்ப கால் பண்ண சொல்லட்டுமா? :))

Sanjai Gandhi said...

@ ட்ரீம்ஸ்:
அடேய் கண்ணா.. காதல் பிறந்த(கதையில .. நிஜம்.. :P)திலிருந்து நீ ஒரு மார்க்கமா தான் இருக்க.. நான் அவங்களுக்கு சகிப்பு தன்மை இருக்குனு சொல்லல.. அவங்க கிட்ட இருந்து என் உயிரை காபபத்திக்க தான் அவங்க கிட்ட சகிபு தன்மை இருக்கிற மாதிரியும் அது குறந்து வருவது மாதிரியும் சொல்லி இருக்கிறேன். எல்லாம் பயம் தாண்டா..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((

சுரேகா.. said...

நல்ல பதிவு!

ஆமாம்.உண்மையிலேயே கொஞ்சம் பொறுமை இழந்துதான் காணப்படுறாங்க!

Tamiler This Week