இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 8 November 2008
டரியல் v1.11.1
புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிவர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது ஆச்சர்யம் தான். காரணம் ஹஸ்பண்டாலஜி, மாண்டிசோரி, சிறுகதைகள், வாழ்க்கை அனுபவங்கள், கோவில் தரிசனங்கள் என எல்லாவற்றையும் ஜல்லி அடிக்காமல் சுருக்கமாக அழகாக அசால்ட்டாக எழுதி விடுகிறார். படிக்கும்போது நமக்கு சோர்வாய் தெரிவதில்லை. இது தான் அக்காவின் பலம் என நினைக்கிறென். வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணுங்க. :)
கன்னாபின்னாவென்று உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன். முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன். ஒரு நாள் இரவு தொலைபேசிய "விவரமான" பதிவர் ஒருவர் என் பழ மெனுவில் சேர்க்க வெண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை பற்றி உபயோகமான டிப்ஸ் குடுத்தார். அதோடு விட்டிருக்கலாம்.. பேரிச்சம் பழத்தை தனியாக சாப்பிடுவதை விட.......
ஓவர் டூ அந்த விவரமான பதிவர்.... :)
" வளைகுடா நாடுகளில் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து அதை நன்றாக அரைத்து அதை நன்றாக காய்ச்சி பிறகு மிதமான சூட்டிற்கு கொண்டுவந்து அதை முதலிரவுக்கு செல்லும் மணமகனுக்கு கொடுப்பார்களாம். அதைக் குடித்ததும் அந்த மணமகனுக்கு ”பல குதிரைகள்” பலம் வந்துவிடுமாம்." :)).. தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( ... இது நம்ம ஊர் சிட்டுக் குருவி லேகியத்தைப் போல் இருக்குமா எனத் தெரியவில்லை. :)).. அப்போ தான் தெரிஞ்சது இவர் விவரமானவர் மட்டுமில்ல.. விவகாரமானவரும் கூட என்று.. :))
^^^^^
^^^^^
”பிறந்த நாள் என்றால், அப்போது என்ன வயதோ அந்த எடையில் கேக் வெட்டி..பெரிய கட் அவுட் வச்சி அதுக்கு அவங்களே பாலபிஷேகம் பண்ணி.. செய்தித் தாள்கள்ல 3 பக்கங்களுக்கு வாழ்த்து செய்தி போடவச்சி... இன்னும் பல வெட்டி சீன் போடும் பிரபலங்களுக்கு மத்தியில்..ஒரு சகாப்தம்.. ஒரு மன்னன்.. இலங்கைத் தமிழர்களுக்காக இன்று தன் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் இன்றைய தினத்தை அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சொன்ன எங்கள் உலக நாயகனே உண்மையாகவே,
உலகம் எங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு..
உன்னைப் பெற்றதில்
பெருமைக் கொள்ளுது நாடு....
உலக நாயகன்.. உலக சூப்பர் ஸ்டார் டாக்டர்.கமலஹாசன் அவர்களே வாழ்க வளமுடன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா.
^^^^^
^^^^^
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்..
Friday, 7 November 2008
யாரிந்த பிரபலப் பதிவர்?
சில ஆண்டுகளுக்கு முன்....
கொச்சினில் ஒரு நட்சத்திர விடுதியின் அறைகள் சிலருக்கு பிரதியேகமாக புக் செய்யப்பட்டது. அதில் சில தொழிலதிபர்களும் ஒரு நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகளும் பல முகவர்களும் கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இரவு விருந்து ஒரு கூரை வேய்ந்த நாலாபுறமும் திறந்த ஒரு பெரிய மீட்டிங்ஹாலில். அதற்கான எற்பாடுகள் கன ஜோராக நடைபெறுகிறது.பலவித வகையான "பானங்கள்" தயார் நிலையில்....
ஹிஹி.. எலுமிச்சைப் பழம்தான் அது. எலுமிச்சை பழத்தை அறுத்து அதை பிழிந்து அதன் சாற்றை கையில் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் விட்டுக் கொண்டு அதில் தூள் உப்பை சிறிது தூவிக்கொள்ள வெண்டும். அதை நக்கியவாறே வோட்காவை குடிக்க வேண்டும்.(டெக்கீலா சைட் டிஷ்ஷாம் அது. போக்கிரி படத்துல "என் செல்ல பேரு ஆப்பிள்" பாட்டுல ப்ரகாஷ் ராஜ் செய்வாரே அப்படி) அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் மெதுவாக வோட்காவை சுவைக்கிறார் வேறு எந்த சைட் டிஷ்களையும் அலட்சியப்படுத்தி தன் மணிக்கட்டில் உள்ள எலுமிச்சைசாறு+உப்பை மட்டும் நக்கியவாறே. அந்த சைட் டிஷ் போதாதென்று ஒரு மூத்த உயர் அதிகாரி வெளிநாட்டில் தனக்கு ஒரு ரஷ்யப் பெண்ணுடன் எற்பட்ட குஜால் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக முகபாவணைகளுடன் விவரிக்கிறார். அந்த தொழிலதிபருக்கு ரெட்டை சைட் டிஷ் தந்த உற்சாக மிகுதியால் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அப்போது ஒரு ஃபுல் பாட்டில் வோட்காவைத் தன்னந்தனியாக காலி செய்கிறார். விருந்து களை கட்டுகிறது. வெளியில் பெய்யும் மழையை போலவே..
இதோடு நிறுத்தி இருந்தால் பரவா இல்லை. பிறகுதான் கச்சேரியே ஆரம்பிக்கிறது. அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது.
திடீரென்று கதா காலட்சேபம் நடத்தினார். கொஞ்ச நேரத்தில் மெனேஜ்மெண்ட் குருவாக மாறி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.அதைத் தொடர்ந்து மைக் மேடை எதுவும் இல்லாமலே பெரும் அரசியல் சொற்பொழிவு ஆத்தினார்.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல) இன்னும் பலவகையான உரைகளை நிகழ்த்தினார்.. உரைகளை நிகழ்த்தினார் என்பதைவிட பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கே குழுமி இருந்த முகவர்கள் அனைவரும் வாயப் பிளந்துக் கொண்டு இவர் உரைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் தன்னிலை மறந்திருந்தனர் என்பதால் மறுநாள் அவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைவிருக்க வாய்ப்பில்லை.அந்த உரையால் சிலருக்கு அதுவரை ஏற்றிய அத்தனையும் இறங்கிபோனதும் நடந்தது.அவர்களைப் பற்றி நமக்கு கவலையும் இல்லை.
கவனிக்க : அங்கே சிலர் உற்சாகபானம் எதுவும் ஏற்றிக்கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வத்துடனும் கொஞ்சம் "கடுப்புடனும்" கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
சுற்றுப்பயணம் சுபமாக முடிந்து அனைவரும் வீடுவந்து சேர்ந்தார்கள்.
உடனே ஒரு பொடியன் அந்த தொழிலதிபரின் போட்டோவை எடுத்துக் கொண்டு அந்த ஆஸ்துவின் அலுவலகம் செல்கிறான். அப்போது அங்கே ஆஸ்துவும் அமுக்க வேண்டிய பார்ட்டியும் அமர்ந்து எதோ பேசிகொண்டிருந்தார்கள். அந்தப் பொடியன் தொழில்ஸின் போட்டோவை ஆஸ்துவிடம் கொடுக்கிறான். அதை ஆஸ்து அந்த பார்ட்டியிடம் தருகிறார். பிறகு "தொழில்பக்தி"யாலும் உற்சாக மிகுதியாலும் 2 தரப்பிலும் நல்லப் பெயர் பெறவும் அவர்கள் மூலம் மேலும் பல கஸ்டமர்களை அள்ளவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் அள்ளிவிடுகிறார்...
புகைப் படத்தை பார்த்த அந்த பார்ட்டி, இந்தப் பொடியனைப் பார்த்து லேசான புன்னகை பூக்கிறார். சரி இதெல்லாம் நாகரிகம் தானே என்று அந்தப் பொடியனும் பதிலுக்கு லைட்டா சிரிச்சி வைக்கிறான். திடீரென்று மண்டைக்குள் மங்கலாக பல்ப் எரிய ஆரம்பிக்கிறது.. இவரை எங்கயோ பார்த்திருப்பது போல் இந்த பொடியனுக்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கடைசி வரை அந்த பல்பு மங்கலாகவே எரிந்துத் தொலைத்தது... சரி இந்த ஊரில் தான குப்பைக் கொட்டிட்டு இருக்கிறோம். எங்காவது பார்த்திருக்கலாம் என்று பொடியன் லேசில் அல்லது லூசில் விட்டுவிடுகிறான்.
நவ் ஓவர் டூ ஆஸ்து....
" மாப்ள தங்கமானவருங்க... பெரிய பெரிய பிச்னஸ் எலலாம் செய்றாங்க.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.. நல்ல குடும்பம்... ரொம்ப அமைதியான சுபாவம்... சின்ன வயசுல இருந்து நமக்கு நல்லா தெரிஞ்சவருங்க ( சொனனதுலையே அண்டப் புளுகு ஆகாசப் புளுகு இது தான் ).. இங்க தான் _____ ரோட்ல ஆபிஸ்... சூதுவாது தெரியாத நல்ல பையனுங்க... செட்டு சேர்ந்துட்டு யார் கூடவும் சுத்தமாட்டாப்ள... தொழில், குடும்பம்னு ரொம்ப நல்ல டைப்பு.. பொறுப்பான பையனுங்க... இந்த மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனை பாக்கறது இந்த காலத்துல கஷ்டம் இல்லீங்களா"
இதே ரேஞ்சில அள்ளிக் கொட்டிட்டு இருந்ததால அதுக்கு மெல சிரிப்பை அடக்க முடியாத அந்த பொடியன், நான் கெள்ம்புரேனுங்க என்று சொல்லிவிட்டு ஜூட் விடுகிறான்... அந்த பார்ட்டி கடைசி வரை ஆஸ்துவில் அள்ளிக் கொட்டல்களுகெல்லாம் முகத்தில் எந்த மாற்றத்தையும் காண்பிக்கவில்லை... சரி எல்லாவற்றையும் உன்னிப்பா கேக்கறார் போல.. அல்லது மாப்பிள்ளை படத்தை பார்த்து தன் அக்கா மகளுக்கு சரியான வரன் என்று நினைத்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார் என பொடியன் நினைத்துவிட்டான்.
அலுவலகம் வந்து அந்த தொழிலதிபர் அண்ட் கோவிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது இன்னொரு சக தொழிலதிபர் உள்ளே நுழைகிறார். மறுபடியும் முதலிலிருந்து எல்லாவற்றையும் கேட்டு ரசித்த அவர் அந்த பார்ட்டியின் விவரத்தை கேட்கிறார். அந்தப் பொடியனும் தொழில்ஸ் அண்ட் கோவும் பார்ட்டியைப் பற்றி சொல்கிறார்கள்.
அட இவரு நம்ம ____ டயர் கம்பனி ஓனரு.... _____ மாமா கூட(இவர் ஒரு டீலர்) கொச்சின் வந்தாரில்ல.. அட நீங்க கூட ஓவர் அலும்பு பண்ணிங்களே மாமா.. உங்களுக்கு டெக்கீலா டெக்னிக் சைட் டிஷ் சொல்லி கொடுத்தாரே.வோட்காவுக்கு லெமன்காடி+சோடாதான் கரெக்ட் லிம்கா வேனாம்ன்னு சொன்னாரே அவர் தான் இவர்..
சிலர் சாவை உணர்ந்ததை பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க.. ஆனா பேயறைஞ்ச மாதிரினு சொல்றதை யாராவது உணர்ந்திருக்கிங்களா.. அன்னைக்கு அந்த பொடியன் அதை பார்த்தான்.. :))
யாருன்னு கேள்வி பட்ட தொழில்ஸ்கே பேயறஞ்ச மாதிரி ஆச்சின்னா.. அள்ளி விட்டுட்டு இருந்த அந்த ஆஸ்துவின் நிலைமை? :(
எதோ அந்த ஆஸ்த்துக்கு அந்த பார்ட்டியால படு பயங்கர அடி உதை விழுந்திருக்கும் என்று தானே நினைக்கிறிங்க.. அதான் இல்ல.. இங்க தான் செம ட்விஸ்டே இருக்கு.. :))
அந்த பார்ட்டிக்கு அவங்க அக்கா குடும்பத்து மேல என்ன பகையோ என்ன கர்மமோ.. எத்தனை நாளா ரூம் போட்டு யோசிச்சாரோ அவங்களை பழிவாங்க.... இந்த மாப்பிள்ளை ஒகே என்று சொல்லிட்டார்.. :)) ஆனா பாருங்க.. முன்னால சூது ஜெயிச்சாலும் பின்னாலயே வந்து தர்மம் அதை வெல்லும்னு நம்ம குசும்பன் அவர் கூட நாலாவது வரைக்கும் படிச்ச திவ்யா பிரபந்தம் கிட்ட சொன்னா மாதிரி அந்த பொண்ணு வேற ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. :))
அப்பாலிக்கா வேற ஒரு அப்பாவி போட்டோவை மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணி இந்த தொழில்ஸ்க்கு அந்தப் பொடியன் மெயில் அனுப்பி , அந்த அப்பாவி வாழ்க்கை வீணாக காரணமா இருந்ததெல்லாம் ஒரு தனிப் பதிவா போட வெண்டிய சமாச்சாரம்.. :(
டிச்சிக்கி 1 : இவர் ஒரு பிரபல பதிவர்.. இவர் யார் என உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் இவரைப் பற்றி இது போல் ஒரு பதிவை போட்டு புண்ணியம் தேடிக்கொள்ள்லாம் ... :))
டிச்சிக்கி 2 : இந்த பிரபலப் பதிவரின் புகழை பரப்பும் அரியதொரு சேவையில் தங்களை அற்பணித்துக் கொள்ள விரும்புவர்கள் இங்கே முன் பதிவு செய்துக் கொள்ளவும்...
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
Tuesday, 4 November 2008
இலங்கை விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு - No kummi Please

இலங்கை பிரச்சனையில் பெரும்பாலானோர் ஒன்றும் புரியாமலே உணர்ச்சிவசப் பட்டுக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.மலையகம் பற்றி நமக்கு சில விஷயங்களில் தெளிவை கொடுக்கும் விதத்தில் இந்த பேட்டி அமைந்திருக்கிறது. நண்பர் நிர்ஷனின் வலைப்பூவில் நண்பர் கல்வெட்டு சில நல்ல கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு திரு.திலகர் விரைவில் பதில் தருவதாக சொல்லி இருக்கிறார். அதில் நமக்கு மேலும் பல தகவல்கள் தெரியவரலாம்.
இலங்கை பிரச்சனையில் விருப்பமுள்ளவர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினர் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவை முழுதாக பொறுமையாகப் படிக்கவும்.
நண்பர் நிர்ஷனின் பதிவு இங்கே..
வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனானநேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம் சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।
உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?
ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.
இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம்.
இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.
இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக
இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.(பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள்.
அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர்.
இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம்.
அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர்.
அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.
மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?
நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட.
அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.
இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?
இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும்.
மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம்.(பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை.
தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘
இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும்,
மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே.இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும்.
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.
ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன.
அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.
சந்திப்பு: சேவியர்
Monday, 3 November 2008
எல்லாரும் மெஸ்ல சாப்பிடுங்கப்பு!
நம்ம வெண்பூ அண்ணாச்சி சமீபத்திய துணுக்ஸ்ல பிரபல “உயர்விலை” சைவ உணவகம் பத்தி பொலம்பி இருக்க்கார்.. அந்தப் பக்கம் எல்லாம் ஏன் போறிங்க? எல்லா ஊர்லையும் நல்ல மெஸ் இருக்கும்.. அதன் சராசரி விலைப்பட்டியல் இங்கே ...
Sunday, 2 November 2008
எச்சரிக்கை : சினிமா தொடர் பதிவு
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
7. தமிழ்ச்சினிமா இசை?
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(....ஒருவேளை எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததால் வேண்டுமானால் தமிழ்சினிமா மேம்படலாம்.. :))... )
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சின்ன பதிவா இருந்தாலே எழுத்துப் பிழைகள் எண்ணமுடியாத அளவு இருக்கும். இதை மறுமுறை வாசித்து திருத்தம் செய்ய என் சோம்பேறித் தனம் அனுபதியளைக்காததால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை கண்டுக்க வேணாம்னேன்.:))
--



