இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday, 16 February 2009
கூட்டாஞ்சோறு v1.02.1
Lables
கூட்டாஞ்சோறு
கிராமத்து நினைவுகள்ல கூட்டாஞ்சோறு பத்தி எழுதியதில் அண்ணாச்சி வந்து “ கூட்டாஞ்சோறுன்னா கைல கிடைக்கிற காய்கறிகள் எல்லாம் கலந்து செய்யறது தான்” அப்டின்னு சொல்லி இருந்தார். நாமளும் இந்த வலைப்பூவில் வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதறோமே.. அதனால இதுக்கும் கூட்டாஞ்சோறுன்னே பேர் வச்சிட்டேன்.( எம்புட்டு நாளைக்குன்னு யாரும் கேட்கப் படாது).
இப்போ எலலாம் ஊடகங்களின் அத்துமீறலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. காதலர் தினத்திற்கு எதிரா பல ”கலாச்சார” அமைப்புகள் பலவிதமான எதிர்ப்பு போராட்டங்களை செஞ்சிட்டு இருந்தாங்க. ஊடங்கங்கள் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று கோதாவில் குதித்திருந்தார்கள். தினமலரில் , காதலர் தினத்தன்று கடற்கரையில் படகுகள் மறைவிலும் வெட்டவெளியிலும் பூங்காக்களிலும் கொஞ்சிக் கொண்டிருந்தவர்களை படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். காதலர் தினத்துக்கு அடுத்த நாள் கோவை பாலிமர் சேனலில் ஊட்டியில் பூங்காக்களில் காதலர்கள் கொஞ்சிக் கொண்டிருந்ததை படம் பிடித்து ஒளிபரப்பினார்கள். இது முற்றிலும் ”சீமான்” தனம். தனிமனித சுதந்திரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அது பலரின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டாக்கி இருக்கும். அந்த பெண்ணின் அல்லது பையனின் பெற்றோரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் அதை பார்க்கும் பட்சத்தில் அது பல மோசமான விளைவுகளை உண்டாக்கி இருக்கும். பிள்ளைகளை படிக்கவோ வேலைக்காகவோ வெளியூர் அனுப்பி இருக்கும் அவர்களின் பெற்றோருக்கு பெரிய அளவில் மன உளைச்சலைத் தந்திருக்கும். முன்பெல்லாம் அனுமதி வாங்கி நடு பக்கத்திலும் நடு சாமத்திலும் காட்டியவர்கள் இப்போது அத்துமீறி எல்லாப் பக்கங்களிலும் எல்லா நேரங்களிலும் காட்டுகிறார்கள். வியாபாரத்திற்காக இது போன்ற கீழ்த் தரமான வேலைகளை ஊடகங்கள் செய்வது ஆரோக்கியமானது இல்லை. பொது இடங்களில் ’சில’ காதல் ஜோடிகளும் கண்ணியமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
கவனிக்க : ”என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை.. சமுதாய நலன் கருதியே இந்த (அதிக) பிரசங்கம். :)
யாருக்காவது தூங்கும் போது யாரோ அமுக்கற மாதிரி உணர்வு ஏற்பட்டிருக்கா?. அதாவது, உங்களுக்கு உணர்வு இருக்கும், ஆனா பேச்சு வராது. கை கால் எதுவும் அசைக்கவே முடியாது. சில வினாடிகளுக்கு உயிர் பயத்தை உண்டாக்கும் உணர்வு அது. மனுஷனா பொறந்தா நிச்சயம் அந்த உணர்வு அப்பப்போ வரும். நான் மனுஷன் .. அப்போ நீங்க? :).. சரி கஷ்டமான கேள்வி எல்லாம் வேண்டாம். நானே மனுஷன்னா நீங்க எல்லாம் தெய்வமா தான் இருப்பிங்க.. ( நானும் கடவுளா இருந்தேன் போன மாசம் வரைக்கும்.. அல்லது அசிங்கமா சிலர் கிட்ட திட்டு வாங்கற வரைக்கும் :)).. ). கிராமத்துல ரொம்ப சாதாரனமா சொல்வாங்க..” ராத்திரி சுத்தமா தூக்கமே இல்லடா.. கண்ண மூடினா போதும். வந்து அமுத்திடுது.” அதோட விட மாட்டாங்க. அதுக்கு காரணமா சமீபத்துல செத்த யார் மேலயாவது பழி போடுவாங்க. அவங்க தான் ’பேயா’ வந்து அமுக்கறாங்களாம். எனக்கும் கூட அந்த நம்பிக்கை இருந்தது. அவ்ளோ தான் இன்னைக்கு ’செத்தேன் இன்னைக்கு’ அப்டின்னு நினைப்பேன். அவ்ளோ பயங்கரமான உணர்வு அது.. பல ஆண்டுகள் முன்பு வரை. அப்புறம் அந்த மாதிரி அமுக்கற உணர்வு வரும் போதெல்லாம் அதை பெரிசா எடுத்துக்கறதே இல்லை. கொய்யால, இன்னும் கொஞ்ச நேரம் தானே கை கால் அசைக்க முடியாது.. அப்புறம் தானா சரி ஆகிட போகுது என்று நினைத்துக் கொள்வேன். சமீபத்துல இது தொடர்பான சுஜாதாவோட கட்டுரை ஒன்று படித்தேன். அவரும் என்னை மாதிரியே தான் நினைச்சிப்பராம். Great minds think alike .. சரி சரி.. புரியுது..ஃப்ரீயா விடுங்க.. :))
அதுக்குக் காரணம் :( ஓவர் டூ சுஜாதா ) நம் சரீரத்தின் அசைவுகளை மூளையில் கட்டுப்படுத்தும் பகுதிக்கு மோட்டார் கண்ட்ரோல் என்கிறார்கள்.நம் நினைவை கட்டுப்படுத்தும் பகுதி வேறு இடத்தில் இருக்கிறது. பாதித் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது இரண்டும் ஒரே சமயத்தில் விழித்தெழுந்தால் பிரச்சனை இல்லை. நினைவு முதலில் திரும்பி வந்து, உடலசைவுகள் சற்று நேரம் கழித்து வந்தால் தான் இந்த மாதிரியான அவஸ்தை ஏற்படும். உணர்வு முதலில் வந்து உடலசைவு அதன் பின் வருவதால் ஏற்படும் விளைவு இது.( மேஜர் சுந்தர்ராஜன் மாதிர் ஒரே விஷயத்தை 2 முறை தமிழிலியே சொல்லி இருக்கார் சுஜாதா :))
கவனிக்க : எனக்கு கனவு வரும் போதெல்லாம் அது கனவு தான் என்று தெரிந்துவிடும். பயமுறுத்தும் கனவோ அல்லது வேறு எந்த வகை கனவாக இருந்தாலும் அது கனவு தான் என்று தெரிந்தே தொடரும். சில அதி பயங்கர கனவுகள் ( என் முகமே தெரிவதை சொல்லவில்லை )வரும் போது கூட “ அட கனவு தானே... என்னவோ நடக்கட்டும்” என்று நினைத்துக் கொள்வேன். உங்களுக்கும் இப்படி தோனுமா? உடனே ஒரு அ(ம)ஞ்சல் அட்டையை எடுத்து உங்க விலாசத்துக்கே ஒரு கடுதாசி போட்டுக்காம இங்க பின்னூட்டத்துல சொல்லுங்க..
இன்னைக்கு ஜிமெயில் ஸ்டேட்டஸ் மெசேஜ்ல, எதையும் க்ளிக் பண்ணாம காத்திருந்து பாருங்கன்னு ஒரு சுட்டியை குடுத்திருந்தேன். எப்போவும் பதுங்குக் குழியில இருக்கிற நம்ம ஜி3 அக்கா வெளிய எட்டிப் பார்த்து,
“ நானும் ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்கேன். ஒன்னுமே தெரியலையே” அப்டின்னாங்க.
நானும் ரொம்ப புத்திசாலித் தனமா ( அல்லது வழக்கம் போல பல்பு வாங்கற லூசுத் தனமா) “ யக்கா, உங்க கிட்ட ஃப்ளாஷ் ப்ளேயர் இருக்கா” அப்டினு கேட்ட்த் தொலைச்சேன்.
அதுக்கு அந்த அக்கா சொன்னாங்க “ ஓ.. அந்த வெப்சைட்ல போய் பாக்கனுமா?..நான் அந்த சுட்டியை க்ளிக் பண்ணவே இல்லையே”ன்னாங்க..
அதாவது என் ஸ்டேட்டஸ் மெசேஜ் காத்திருந்து பார்த்தாலே எதுனா தெரியும்னு பார்த்துட்டு இருந்தாங்களாம்..
என்னா ஒரு வில்லத்தனம்டா சாமி.. இன்னைக்கு நான் தான் கெடைச்சனா? :((
மெய்யாலுமே அந்தக்கா அப்டி தான் பார்த்துட்டு இருந்திருப்பாங்க போல... அப்பாலிக்கா அதை க்ளிக் பண்ணும் போது அந்த பக்கம் திறகக்வே இல்லையாம்.. அப்பாடா.. எனக்கு பதிலா ”சாமி’ பழிவாங்கிட்ட மாதிரி ஒரு பரம திருப்தி எனக்கு.. :))
கூகுளில் SMS Channel என்னும் வசதியை அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். அதில் பல சேனல்கள் இருக்கின்றன. Hindu, CNN-IBN, Money Control உட்பட பல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் இன்னும் பல பொழுதுபோக்கு மற்றும் விற்பனை சேவைகள் பற்றிய சேனல்களும் ஏராளமாக இருக்கின்றன. அதில் சந்தாதாரர் ஆகிவிட்டால் செய்திகள் நம்மைத் தேடி வருகின்றன. நாம் செய்திகளைத் தேடி செல்ல வேண்டாம். இலவச சேவை தான். இப்போது நம் வலைப்பூ நண்பர்களின் படைப்புகள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுவருகின்றன. அவைகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொள்வதற்கு இங்கே செல்லவும். உங்கள் அலைபேசி எண்ணை யாரும் பார்க்க முடியாது.
சமீபத்துல ரொம்ப ரசிச்ச வரிகள் :
பேச வேண்டிய நேரத்தில்
மௌனமாக இருந்து விட்டால்..
மௌனமாக இருக்கும் நேரத்தில்
நிம்மதியாக இருக்க முடியாது..
பார்க்க ரசிக்க
Posted By
Gandhi...SS
Subscribe to:
Post Comments (Atom)
51 Comments:
:-) Me the 1st
ஏற்கெனவே போட்ட கூட்டஞ்சோறுக்குத் தொடர்ச்சியோன்னு வந்தேன்...இது காக்டெயில் மாதிரி கலக்கலா???கலக்குங்க...கலக்குங்க!!!
அன்புடன் அருணா
//எம்புட்டு நாளைக்குன்னு யாரும் கேட்கப் படாது//
கேட்க மாட்டோம்.ஏன்னா அது உங்களுக்கே தெரியாதே:)
//தனிமனித சுதந்திரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை//
தப்புன்னு தெரிஞ்சிட்டு யார் அதை பார்த்திட்டு உட்கார்ந்திருக்க சொன்னா?:-)))
//கவனிக்க : ”என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை.. சமுதாய நலன் கருதியே இந்த (அதிக) பிரசங்கம். :)//
கவனிக்க:சஞ்சய், குதிருக்குள் இல்லை:-))))
//நான் மனுஷன் .. //
சொல்லவேயில்ல? :-))
//அதாவது என் ஸ்டேட்டஸ் மெசேஜ் காத்திருந்து பார்த்தாலே எதுனா தெரியும்னு பார்த்துட்டு இருந்தாங்களாம்.//
போடற ஸ்டேட்ஸ் மெசேஜ ஒழுங்கா போடணும்.:-))
பிறர் பார்க்கும் வண்ணம் காதலிப்பது சரியா?
/பிறர் பார்க்கும் வண்ணம் காதலிப்பது சரியா//
அது பேர்தான் காதலா??????????
/ஏற்கெனவே போட்ட கூட்டஞ்சோறுக்குத் தொடர்ச்சியோன்னு வந்தேன்...இது காக்டெயில் மாதிரி கலக்கலா???கலக்குங்க...கலக்குங்க!!!
அன்புடன் அரு//
ஹிஸ்டரில நின்னுட்டடா கார்க்கி :))))
//வடகரை வேலன் said...
பிறர் பார்க்கும் வண்ணம் காதலிப்பது சரியா?//
அண்ணாச்சி.. அது தான் காதலர்களுக்கு பாதுகாப்பு.. பிறர் பார்க்கா வண்ணம் காதலிச்சா அது பெரிய ஆபத்து.. சரி.. காதலர்கள் பொது இடத்துல அமர்ந்து பேசிக்கிறதுல என்ன தப்பு? கண்ணியக் குறைவா நடந்துகிட்டா தப்பு தான். ஆனா எல்லாரும் அப்டி இல்லையே.. தனிமைல உக்காந்து பேசிட்டு இருக்கிறவங்களை எல்லாம் படம் புடிச்சி போட்டா, அவங்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்குமே. அது தான் தப்புன்னு சொல்ல வரேன்.
அப்போ ஊடகங்கள் செய்றது சரின்னு சொல்ல வரீங்களா? :)
ஆமா உங்களுக்கு கனவுகள் மட்டுமில்லை அடிக்கடி பெயர் மாத்தற வியாதி கூட இருக்காமே அப்படின்னு தள சிபி தான் கேட்க்ச்சொன்னாரு ஏன்னா அவருக்கும் தொத்திக்கிச்சாம்...
\\
எனக்கு கனவு வரும் போதெல்லாம் அது கனவு தான் என்று தெரிந்துவிடும். பயமுறுத்தும் கனவோ அல்லது வேறு எந்த வகை கனவாக இருந்தாலும் அது கனவு தான் என்று தெரிந்தே தொடரும்.
\\
எனக்கும் அப்படியான கனவுகள் நிறைய வந்திருக்கு...
எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதுங்கிறதால...
அதுக்கு நோ கருத்து...:)
15th
கூட்டாஞ்சோறு ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட ஃபீலிங்:)
//அது தான் காதலர்களுக்கு பாதுகாப்பு.. பிறர் பார்க்கா வண்ணம் காதலிச்சா அது பெரிய ஆபத்து.. சரி.. காதலர்கள் பொது இடத்துல அமர்ந்து பேசிக்கிறதுல என்ன தப்பு?//
super:):):)
//என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை.. சமுதாய நலன் கருதியே இந்த (அதிக) பிரசங்கம்//
இத ஸ்டமக் பர்னிங்குன்னும் சொல்லலாம்ல:):):)
//அந்த பெண்ணின் அல்லது பையனின் பெற்றோரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் அதை பார்க்கும் பட்சத்தில் அது பல மோசமான விளைவுகளை உண்டாக்கி இருக்கும்.//
இதுல ரெண்டு முக்கியமான உறவுகள் விடுபட்டிருக்கு:):):)
// பதுங்குக் குழியில //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............காப்பிரைட் என்கிட்டே இருக்கு. என்கிட்டருந்து எப்போ பர்மிஷன் வாங்கினீங்க?
//Great minds think alike //
அதான் எனக்கு இங்க புரியல, நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒரே மாதிரி சிந்திச்சிருக்கீங்கன்னு:):):)
// கூட்டாஞ்சோறுன்னா கைல கிடைக்கிற காய்கறிகள் எல்லாம் கலந்து செய்யறது //
கூட்டாஞ்சோறு.... ம்......
இதுக்கு எங்கூர்ல இன்னொரு பேர் சொல்லுவாய்ஞ்ஞ...
பல வீட்டுல வாங்குன பல காய்கறிகளோடு பலதரப்பட்ட குழம்புகளோடு சோற்றில் கலந்தால்,
அதுக்குப் பேரு....
பிச்சைக்காரன் சோறு ;)
அண்ணாச்சிக்கும், உங்களுக்கும் ஏதாவது தகராறா?
கூட்டாஞ்சோறு நல்லா ருசியாவே இருக்கு... தொடருங்கள்
அன்புடன் அருணா said...
//ஏற்கெனவே போட்ட கூட்டஞ்சோறுக்குத் தொடர்ச்சியோன்னு வந்தேன்...//
நானும் அப்படியே:)! என் டேஷ் போர்டில் பதிவின் முதல் வரிகள் வேறு
//கிராமத்து நினைவுகள்ல கூட்டாஞ்சோறு பத்தி எழுதியதில் அண்ணாச்சி வந்து “ கூட்டாஞ்சோறுன்னா கைல கிடைக்கிற காய்கறிகள் எல்லாம் கலந்து செய்யறது தான்” அப்டின்னு சொல்லி இருந்தார். நாமளும்..//
இப்படி ஆரம்பித்ததா.. சரி சஞ்சய் வேலை மெனக்கிட்டு எல்லாக் காயும் வாங்கிப் போட்டு ஆக்கிப் பார்த்து ரெஸிபி கொடுத்திருக்கிறார்னு வந்தேன்:)))!
நல்லாவே இருக்கு இந்தக் கூட்டாஞ்சோறும்.
மாப்ள அந்த தாடி வச்சுக்கிட்டு சிகப்புசட்டை போட்டுகிட்டு அழகழகா பேசுறது யாரு???நீயா???
பதிவு நல்லா தான எழுதி இருக்கீரு ? கடைசில என்ன வில்லத்தனம் ? இந்த வீடியோவ போட்டு ?
*****
அப்போ ஊடகங்கள் செய்றது சரின்னு சொல்ல வரீங்களா?
******
ஊடகங்கள் செய்யறது நிச்சயமா சரி இல்லை.
தேஹல்கா அரசியல்வாதிங்க கிட்ட நைசா பேசி எதையாவது வீடியோ எடுத்து போட்டா, சூப்பர் மாட்டிகிட்டாங்கன்னு தான நம்ப பாக்கறோம் ! இப்ப நம்மையே வீடியோ எடுத்து போட்டா கடுப்பு வருது.
// எம்புட்டு நாளைக்குன்னு யாரும் கேட்கப் படாது//
keppomla..
பதிவுக்கு பதிவு பதிவோட தலைப்பைதான் மாத்தணும், இப்படி ப்ளாக் தலைப்பை இல்லை புரிஞ்சதா?
//வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதறோமே.//
ஏன் அப்ப ஏப்பம் அப்படின்னு வெச்சு இருக்க வேண்டியதுதானே. இன்னும் ஒண்ணும் கூட தோணுது. வேண்டாம் விடுங்க. உங்களுக்கு அது என்னன்னு தெரியும் :)
//அடுத்த நாள் கோவை பாலிமர் சேனலில் ஊட்டியில் பூங்காக்களில் காதலர்கள் கொஞ்சிக் கொண்டிருந்ததை படம் பிடித்து ஒளிபரப்பினார்கள்//
பாலிமர்ல நியூஸ் எப்ப போடறாங்கன்னு தெரியுமா? இதை எல்லாம் கரெக்டா பாருங்க
//என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை.. சமுதாய நலன் கருதியே இந்த (அதிக) பிரசங்கம். :)
//
நம்பணுமா அன்னிக்கு நீங்க ஆன்லைனில் வரவே இல்லை. நீங்க ஏதோ வ.உ.சி. பார்க் பக்கம் சுத்திகிட்டு இருக்கறதா உங்க நண்பர்கள் எல்லாம் சொன்னாங்களே
//வேலைக்காகவோ வெளியூர் அனுப்பி இருக்கும் அவர்களின் பெற்றோருக்கு பெரிய அளவில் மன உளைச்சலைத் தந்திருக்கும்//
தர்மபுரியிலும் பாலிமர் தெரியுதா ?
//நான் மனுஷன் .. அப்போ நீங்க? :)//
எப்போ டீ புரோமோட் ஆனிங்க. போன வாரம் நான் கடவுள் சொல்லிட்டு இருந்திங்க
//போன மாசம் வரைக்கும்.. அல்லது அசிங்கமா சிலர் கிட்ட திட்டு வாங்கற வரைக்கும் :)).. //
யாரெல்லாம் என்ன என்ன திட்டினிங்கன்னு அப்படின்னு இங்க வந்து சொல்லுங்களேன்.
//சில வினாடிகளுக்கு உயிர் பயத்தை உண்டாக்கும் உணர்வு அது//
உங்களை முத முதல்ல நேர்ல பாக்கறவங்களுக்கு ஏற்படுமே அந்த உணர்வுதானே இது
//மேஜர் சுந்தர்ராஜன் மாதிர் ஒரே விஷயத்தை 2 முறை தமிழிலியே சொல்லி இருக்கார் சுஜாதா :))
//
மேஜர் தமிழ்ல ரெண்டு தடவை சொல்ல மாட்டார். இங்கிலீஷ்ல சொல்லி அதை அப்படியே டிரான்ஸ்லேட் செய்வார்
அப்புறம் எங்க தலைவரையா கிண்டல் செய்யறீங்க
கருப்பனின் காதலியை கவிதா தியேட்டரில் மூணு ஷோ விடாம பாக்கற தண்டனை கிடைக்குதா இல்லையா பாருங்க.
//பேச வேண்டிய நேரத்தில்
மௌனமாக இருந்து விட்டால்..
மௌனமாக இருக்கும் நேரத்தில்
நிம்மதியாக இருக்க முடியாது//
நான் ரசிக்கிற வரிகள்
சாப்பிட வேண்டிய நேரத்தில்
சாப்பிடமால் இருந்து விட்டால்
பசி இருக்கும் நேரத்தில்
நிம்மதியாக இருக்க முடியாது
யக்கா உனக்கு இப்படித்தான் தோணும், இதுதானே உங்க பதில் :)
//இது முற்றிலும் ”சீமான்” தனம். தனிமனித சுதந்திரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. //
சீமானை தனிமனித சுதந்திரத்தில் தலையிடிகிறார் என சம்பந்தமில்லாத விசயத்தில் இழுத்திருக்கும் இவ்விசயத்தை ”சஞ்சய் தனம்” என்று சொல்லலாமா?
எதுதுக்கத்து தான் சீமானை நோண்டுறதுன்னு இல்லையா
”என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை..//
பெண்ணுடன் ஊர் சுற்றுவது பாதிக்கபடத்தான் என்று நீங்களே எவ்வாறு முன்முடிவுக்கு வரலாம்,
இந்த எண்ணமே ராமசேனா போன்றா கலாச்சார போலீஸ்களிடமும் இருக்கிறது.
//மனுஷனா பொறந்தா நிச்சயம் அந்த உணர்வு அப்பப்போ வரும். நான் மனுஷன் .. அப்போ நீங்க? :)//
அது சாதாரண உடல் அசதி தான் என்று உணர்ந்து கொண்ட மனிதர்கள் நாங்கள், அப நீங்கள்?
ன்னா நீங்க எல்லாம் தெய்வமா தான் இருப்பிங்க.. ( நானும் கடவுளா இருந்தேன் போன மாசம் வரைக்கும்.. அல்லது அசிங்கமா சிலர் கிட்ட திட்டு வாங்கற வரைக்கும்//
உங்களை திட்டியவர்கள் கடவுளா?
எனக்கு கனவு வரும் போதெல்லாம் அது கனவு தான் என்று தெரிந்துவிடும்.//
அவ்வாறு தெரிந்து விட்டால் அதன் உண்மை தன்மையில் உங்கள் ஆதிக்கமும் கலந்து விடும், அந்த கனவு உங்களால் நகர்த்தப்படும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அந்த கனவில் உங்களின் கற்பனையும் கலந்துவிடும்
டீ.ராஜேந்தர் வீடியோ பழசு,
உங்களுக்கு வேண்டுமானால் அதை அடிக்கடி பார்க்க ஆவலாய் இருக்கலாம்,
எங்களுக்கு என்ன வந்துச்சு.
நானும் பழய கூட்டாஞ்சோறு வெர்சன் வேற போலன்னு நினைச்சேன்..
ரொம்ப நல்லா இருந்தது.. ரசித்தேன்..
நன்றி புனிதா :)
---------
நன்றி அருணாக்கா.. நெறைய பேர் அப்டி நினைச்சி தான் படிக்க வந்திருக்காங்க.. இல்லைனா இவ்ளோ பேர் படிச்சிருக்க மாட்டாங்க போல.. :)
-------------
நன்றி இயற்கை.. வழக்கம் போல குதிச்சி விளையாடியாச்சா? இப்போ சந்தோஷமா? போம்மா.. போய்.. பசங்களுக்கு ஒழுங்கா பாடம் நடத்தற வழியை பாருங்க.. :))
------------
வாங்க கார்க்கியாரே.. நீங்க ஹிஸ்டரில மட்டும் இல்ல ஜுவாலஜி, பாட்டணியில கூட நின்னு ரொம்ப நாளாச்சி.. :))
// தமிழன்-கறுப்பி... said...
எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதுங்கிறதால...
அதுக்கு நோ கருத்து...:)//
நான் கெட்ட வார்த்தை பேச வேணாம்னு நினைச்சாலும் விட மாட்டிங்க போல.. :))
தனியா மெயில் அனுப்பி உங்களை கவனிக்கிறேன்.. :)
---------------------
//வித்யா said...
கூட்டாஞ்சோறு ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட ஃபீலிங்:)//
மம்மி, யார் சமைச்ச மீல்ஸ் சாப்ட்ட மாதிரி இருக்கு? நல்லா இருக்குன்னு சொல்றிங்களா.. நல்லா இல்லைனு சொல்றிங்களான்னு தெரியலையே மம்மி.. :))
---------------
ராப் அக்கா.. வாங்க.. நலமா? :)
//// பதுங்குக் குழியில //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............காப்பிரைட் என்கிட்டே இருக்கு. என்கிட்டருந்து எப்போ பர்மிஷன் வாங்கினீங்க?//
சரிங்க.. நீங்க தான் பதுங்குகுழி பாவயர்கள் சங்கத் தலைவி.. போதுமா? :))
////Great minds think alike //
அதான் எனக்கு இங்க புரியல, நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒரே மாதிரி சிந்திச்சிருக்கீங்கன்னு:):):)//
உங்க மாமியார் கிட்ட புடிச்சிக் குடுத்துடுவேன்.. ஜாக்கிரதை. :)
வெயிலான்.. நீங்க நல்லவருன்னு தெரியும். ஆனா இம்புட்டு நல்லவருன்னு தெரியாது. அய்யா சாமி.. ஆளை விடுங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. :(
--------------
நன்றி வெண்பூ.. உங்கள் ஆசிர்வாதம் ;)
-----------------------
நன்றி லக்ஷ்மியக்கா.. நல்லா ஏமாந்திங்களா? :))
---------------
அப்து மாமு.. ஒடம்பு எப்டி இருக்கு? :)
----------------
நன்றி மணிகண்டன்.. :)
//தேஹல்கா அரசியல்வாதிங்க கிட்ட நைசா பேசி எதையாவது வீடியோ எடுத்து போட்டா, சூப்பர் மாட்டிகிட்டாங்கன்னு தான நம்ப பாக்கறோம் ! இப்ப நம்மையே வீடியோ எடுத்து போட்டா கடுப்பு வருது.//
தல, சிறை அறைல கேமரா வைக்கிறதுக்கும் நம்ம வீட்டு படுக்கை அறையில கேமரா வைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ. சிறைல வச்சா ,அது பாதுகாப்பு சமாச்சாரம்.. படிக்கை அறைல வச்சா?
----------------
தூயா.. நீ கேட்டாலும் நாங்க சொல்ல மாட்டோம்ல.. :)
---------------
ப்ரியா அக்கா.. முடிஞ்சதா இல்ல எதும் மிச்சம் மீதி இருக்கா?? சாப்பாட்டு ராணி.. :)
//எதுதுக்கத்து தான் சீமானை நோண்டுறதுன்னு இல்லையா//
வால்.. கூல்.. :) சீமான் சமீபத்துல ஒரு வார்த்தைக்கு ப்ராண்ட் அம்பாசடர் ஆகி இருக்கான். அந்த வார்தைக்கு பதில் தான் அவன் பேர் போட்டேன்.:)
--------------
//பெண்ணுடன் ஊர் சுற்றுவது பாதிக்கபடத்தான் என்று நீங்களே எவ்வாறு முன்முடிவுக்கு வரலாம்,
இந்த எண்ணமே ராமசேனா போன்றா கலாச்சார போலீஸ்களிடமும் இருக்கிறது.//
அய்ய.. அது பெண்ணால பாதிக்கப் படறதுன்னு அர்த்தம் இல்ல. அப்டி ஊர் சுத்தி நான் தனிப்பட்ட முறைல பாதிக்கப் படலை இதுவரைக்கும்னு சொல வந்தேன். அதாவது என்னை யாரும் பார்த்து வீட்ல சொல்லி அதனால பாதிக்கப் படலை என்ற அர்த்தத்தில் சொல்ல வந்தேன்.. ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. முடியலை.. :(
//உங்களை திட்டியவர்கள் கடவுளா?//
என் மீது அதிக பாசம் வைத்தவர்கள். அசிங்கமாக என்றால் ரொம்ப கற்பனை பண்ணிகக் வேண்டாம்.. அப்டி எதும் இல்லை.. சும்மா கலாட்டா தான்.. :)
//அவ்வாறு தெரிந்து விட்டால் அதன் உண்மை தன்மையில் உங்கள் ஆதிக்கமும் கலந்து விடும், அந்த கனவு உங்களால் நகர்த்தப்படும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அந்த கனவில் உங்களின் கற்பனையும் கலந்துவிடும்//
ஓரளவு சரியே.. பல சமயங்களில் நடப்பது நடக்கட்டும் கனவு தானே என்று இருந்துவிடுவேன். என் கற்பனை எதும் கலந்துவிடுவதில்லை. சில சமயங்களில் நான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறேன் என்று நினைக்கிறென்.
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நானும் பழய கூட்டாஞ்சோறு வெர்சன் வேற போலன்னு நினைச்சேன்..
ரொம்ப நல்லா இருந்தது.. ரசித்தேன்..//
ஹிஹி.. ரொம்ப நன்றிக்கா.. :)
/
யாருக்காவது தூங்கும் போது யாரோ அமுக்கற மாதிரி உணர்வு ஏற்பட்டிருக்கா?.
/
ஆமாப்பா ஆமாம்
/
அதாவது, உங்களுக்கு உணர்வு இருக்கும், ஆனா பேச்சு வராது.
/
இல்லையே வந்ததே
/
கை கால் எதுவும் அசைக்கவே முடியாது.
/
முடிஞ்சதே
/
சில வினாடிகளுக்கு உயிர் பயத்தை உண்டாக்கும் உணர்வு அது.
/
சில வினாடிகள் இல்ல பல வினாடிகள்
/
மனுஷனா பொறந்தா நிச்சயம் அந்த உணர்வு அப்பப்போ வரும்.
/
கொய்ய்ய்யால கண்ணாலம் ஆனதால அப்பிடின்னு நான் நெனச்சிகிட்டிருக்கேன்!
:)))))))))))))))
:))
Post a Comment