இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday 16 June, 2008

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..

இந்த கிரடிட் கார்டுங்கள பார்த்து எதுக்குத் தான் மக்கள் இப்படி பயப்படறாங்களோ தெரியலை. நாம ஒழுங்கா இருந்தா க்ரெடிட் கார்ட் மாதிரி நண்பன் வேற யாரும் இருக்க மாட்டாங்க. யாருக்கு எபடியோ .. ஆனா எனக்கு இவரு ரொம்ப நல்ல நண்பன்தாங்க... எந்த பொருள் வாங்கினாலும் 50 நாளைக்கு பணம் கட்ட டைம் வாங்கி தரான். எப்படி பார்த்தாலும் குறைந்த பட்சம் 30 நாள் டைம் வாங்கி தரான். ஆனா கடந்த சில மாதங்களாக இவனால கொஞ்சம் சிக்கல் ஆகிபோச்சிங்க... பணம் கட்டும் கெடுவுக்கு 4 நாட்கள் முன்னாடியே செக் தரனும்னு ப்ரிண்டட் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க. ஆனா நான் அதை எல்லாம் பாக்கறதில்ல. மெயில்ல வர ஸ்டேட்மெண்ட் மட்டும் தான் பாப்பேன். அதுல அந்த விவரம் இருக்காது.

சரி மேட்டருக்கு வருவோம்...
நான் எப்போவுமே கெடு தேதி அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு தான் காசோலை தருவது வழக்கம். ஆரம்பத்தில் இதனால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதக் கட்டணம் என்று 350 ரூபாய் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதை கழித்தே பணம் செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும் தாமதக் கட்டணம் போட்டதுமில்லாமல் சென்ற மாதம் Finance Charge என்று ஒன்று புதியதாக போட்டிருந்தார்கள். வட்டியாக இருக்கலாம். நான் இதற்கு முன்பே சேவை மையத்தில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாமதமாக என் காசோலை Collection ஆகி இருப்பதாக பதில் சொன்னார்கள். ஆனால் நான் ஒருமுறை கூட கெடு தேதிக்கு பின்பு காசோலை குடுத்ததில்லை. தாமதமாக அவர்களுக்கு பணம் போனதற்கு நான் காரணம் இல்லை.

Finance charge என்பதை பார்த்து கடுப்பானதில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெயில் அனுப்பினேன். ரொம்ப புத்திசாலித் தனமாக கடந்த 3 மாத அறிக்கையை குறிபிட்டு .. இவ்வளவு தொகை இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தான் கட்டி இருக்கிறீர்கள். ஆகவே தாமதக் கட்டணங்களும் ஃபினான்ஸ் கட்டணமும் வந்திருக்கு என்று பதில் அனுபினார்கள். என் கடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பெண் சபதம் எதும் எடுத்திருப்பார் போல. உடனே நானும் அதற்கு பதில் அனுப்பினேன்.

யக்கா மாரியாத்தா..." நீங்கள் குறிப்பிட்டிருப்பது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து.. நான் அதை கழித்து கட்டி இருக்கிறேன். அநாவசியமாக நீங்கள் குறிப்பிடும் தாமதக் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் என் காசோலைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு 50 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே நான் கடைசித் தேதியில் தான் காசோலை தருவேன். நான் கொடுப்பது உள்ளூர் காசோலை. இது பணமாக 24 மணி நேரத்துக்கு மேல ஆகாது. அப்படி இருக்க நான் ஏன் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதக் கட்டணத்தையும் செலுத்த மாட்டேன். உங்கள் வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் இந்த தேவையற்ற கட்டணங்களை திரும்ப பெறவில்லை என்றால் உடனே உங்கள் வங்கி அளித்துள்ள கடன் அட்டையை ஒப்படைத்துவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்த நாளே பதில் வந்தது. நீங்கள் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்... லொட்டு லொசுக்கு என்று அளந்து விட்டு, அந்த கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்று எனக்கு ஸ்டேட்மெண்ட் வரும் நாள். பார்த்தேன். அட.. சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் :)...

ஆகவே மக்களே .. இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா.. பேராசையை கட்டுப் படுத்திக் கொண்டு கடன் அட்டையை சரியாகப் பயன் படுத்தினால் அதை விட நல்ல நண்பன் இருக்கவே முடியாது. ஆகவே கடன் அட்டையை பார்த்து பயப்படாதிங்க. நாம ஒழுங்கா இருக்கிறவரைக்கும் அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. கடன் அட்டை வழங்கிய நிறுவனம் "தவறான" கட்டணம் குறிப்பிட்டிருந்தால் கட்டாதீங்க.கேள்வி கேளுங்க... அவர்கள் என்ன நம்மை மிரட்டுவது.. நாம் அவர்களை மிரட்டுவோம்...ஜெயம் நமக்கே..

அஸ்கி புஸ்கி : இந்த பதிவை எழுதிமுடித்து எழுத்துப் பிழை திருத்த திரும்ப படித்த போது கொஞ்சம் டோண்டு பாணி பதிவாக தோன்றியது. இதில் சுய தம்பட்டம் அடிப்பது நோக்கம் அல்ல. எனக்கு நேர்ந்ததை உள்ளது உள்ளபடி சொல்லி கடன் அட்டை பற்றிய பயத்தை போக்குவதும் தவறை எதிர்த்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தவுமே இந்த பதிவு. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். யாருக்காவது உதவலாம். ஹிஹி.. தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்குல.. கண்டுக்காதிங்க.. :P

20 Comments:

said...

:) hehe naan edhum ketkalappa

said...

ஒரே ஒரு ஜோக் மட்டும் சொல்லிக்கிறேன்பா இந்த எடத்துல.

க்ரெடிட் கார்ட் சேவை மையத்துல ஒரு வாடிக்கையாளர் மிகத்தவறாமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்துபவர் வந்து போனவுடன் அங்கு இரு ஊழியர்கள் பேசுவது.

வந்துட்டான் மோசமான வாடிக்கையாளர்.

அவர்களின் கொள்ளையே இந்த 'இதர'charge களில் தான்.

இன்னும் என்கிட்ட இந்த கடன் அட்டை இல்லை

:)))))

said...

இன்னொரு உபரிதகவல். இந்த மாதத்திலிருந்து ஐசிஐசிஐ கடன் அட்டைக்கு பணமாக ஐசிஐசிஐ வங்கியில் செலுத்தினால் 100 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையாம் இது. இது பிசினஸ் லைனில் வந்த செய்தி.

என்ன கொடுமை சஞ்சய் இது

:))

said...

நான் சரியாக கட்டி விடுவேன்.. என்னால் பெரிய அளவு இலாபம் இல்லை அவர்களுக்கு..

சரி "டோண்டு பாணி பதிவாக தோன்றியது"

அதென்னங்க அப்படி ஒரு பதிவு..:-?

said...

பேசலன்னா, இந்த மாதிரி 'உபரி கட்டணங்கள்' போட்டுத் தாளிச்சுடுவாங்க! அவங்களுக்கு வருமானமே இதிலதானே? ஒழுங்கா மாசா மாசம் பணம் கட்றவங்க இவங்களோட எதிரிங்க. எப்படா மாட்டுவானுங்கன்னு பாத்துட்டு இருப்பானுங்க.

நீங்க சொல்ற மாதிரி, ஆசைகளை அடக்கி வைத்து இந்த அட்டைகளை ஒழுங்கா உபயோகிச்சா, நமக்கு நிறைய நன்மைகள்தான். ஆனா, பிராக்டிக்கலா என்ன நடக்குது? ஆசைதான் அழிவுக்குக் காரணம் :)

said...

அட போங்கப்ப இந்த அறிவுரையல்லாம் பணத்தை திருப்பி கட்டுறவங்களுக்கு. நாமல்லாம் வீட்டுக்கு சுமோ வராம பணத்த கொடுக்கறதா இல்ல.

said...

//மங்களூர் சிவா said...
அவர்களின் கொள்ளையே இந்த 'இதர'charge களில் தான்.//



ரிப்பீட்டேய்....

said...

8 வருசமா கார்டு வாங்காம எப்படியோ தப்பிச்சுட்டேன். இப்போ HDFC ல இருந்து தன்னால அலாட் செய்து கைல குடுத்துட்டானுங்க. நீங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கிறேன்.

said...

சஞ்செய் - எல்லா பொதுத்துறை வங்கிகளிலும் இப்படி அநியாயம் பண்ணுவதில்லை. வெளி நாட்டு வங்கிகளிலும், ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளிலும் தான் இது நடக்கிறது. கார்டுக்கு பணம் கட்டினால் ரூபாய் 100/- அதிகம் கட்ட வேண்டுமாம். என்ன அநியாயம் இது

said...

// Dreamzz said...

:) hehe naan edhum ketkalappa//
நானும் எதும் சொலலப்பா.. ;)
அது சரி.. நான் என்ன த்ரிஷாவா? நீ எதுனா கேக்க? :P

said...

//மங்களூர் சிவா said...

ஒரே ஒரு ஜோக் மட்டும் சொல்லிக்கிறேன்பா இந்த எடத்துல.

க்ரெடிட் கார்ட் சேவை மையத்துல ஒரு வாடிக்கையாளர் மிகத்தவறாமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்துபவர் வந்து போனவுடன் அங்கு இரு ஊழியர்கள் பேசுவது.

வந்துட்டான் மோசமான வாடிக்கையாளர்.//

ஜோக் இல்ல.. நிஜம் தான்.. ஒழுங்காய் பணம் கட்டுபவர் அவர்களுக்கு தேவை இல்லை.. அதில் அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை.. ஒழுங்காய் பணம் கட்டுபவர்களுக்கு கடன் தொகைக்கான உச்சவரம்பை அதிகரிப்பதில்லை. அபராதத்துடன் பணம் கடுட்பவர்களுக்கு , அவர்கள் கேட்காமலேயே உச்ச வரம்பை அதிகரித்துக் கொண்டே போவார்கள். நான் கடன் அட்டை பயன்படுத்த ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. இப்போது வரை ஆரம்பத்தில் வழங்கப் பட்ட உச்சவரம்பு இன்னும் அதிகரிக்கப் படவில்லை. நானும் கேட்கவில்லை. ஆனால் நான் சரியாக பணம் கட்டாமல் இருந்திருந்தால் இந்நேரம் பத்து மடங்கு உயர்த்தி இருப்பார்கள். :) நான் அந்த அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறேன். :))

// அவர்களின் கொள்ளையே இந்த 'இதர'charge களில் தான்.//

50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் கடன் தருகிறார்கள். அதை நாம் தவறாகப் பயன்படுத்தினால் இதர கட்டணங்கள் வரத் தான் செய்யும். அதை எபப்டி கொள்ளை என்று சொல்ல முடியும் மாம்ஸ்? :)
//இன்னும் என்கிட்ட இந்த கடன் அட்டை இல்லை

:)))))//

சரியாக பயன்படுத்த முடிந்தால் தாராளமாக தைரியமாக வாங்கி பயன்படுத்தலாம். :)

said...

//மங்களூர் சிவா said...

இன்னொரு உபரிதகவல். இந்த மாதத்திலிருந்து ஐசிஐசிஐ கடன் அட்டைக்கு பணமாக ஐசிஐசிஐ வங்கியில் செலுத்தினால் 100 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையாம் இது. இது பிசினஸ் லைனில் வந்த செய்தி.

என்ன கொடுமை சஞ்சய் இது

:))//
உண்மை தான். காசோலையை அவர்கள் ATM மையங்களில் போட்டுவிட்டால் நம் நேரமும் மிச்சமாகும்.. அவர்கள் நேரமும் மிச்சமாகும். இதை விட்டுவிட்டு எதற்கு வங்கியில் போய் பணம் கட்டனும்? அதை விட சிறந்த வழி.. அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் இணையவழி பணப் பரிமாற்றம் மூலம் செலுத்திவிடலாம். காசோலை பயன்படுத்துவது குறையும். காசோலை தயாரிக்க தேவைப் படும் காகிதம் தயாரிப்பதற்காக மரம் வெட்டப் படுவதும் குறையும்... :)

said...

//கிரி said...

நான் சரியாக கட்டி விடுவேன்.. என்னால் பெரிய அளவு இலாபம் இல்லை அவர்களுக்கு..//

நானும் தான். நாமெல்லாம் அவர்களுக்கு வேண்டாத விருந்தாளிகள் அல்லது அறிவிக்கப் படாத விளம்பர தூதுவர்கள். நாம் சரியாக கட்டுவதால் எந்த இதரக் கட்டணமும் கட்டவதில்லை. எனவே அந்த வங்கியை பற்றி பிறரிடம் நல்ல படியாக சொல்லி வைப்போம். அது அவர்களுக்கு மேலும் வாடிக்கையாளார்களா தருகிறது. எதுவுமே லாப கணக்கு இல்லாமல் கிடைக்காது சாரே.. :P

// சரி "டோண்டு பாணி பதிவாக தோன்றியது"

அதென்னங்க அப்படி ஒரு பதிவு..:-?//

ஹாஹா.. அவர் பதிவுகளை படித்துப் பாருங்கள்.. புரியும்.. :P

said...

//பேசலன்னா, இந்த மாதிரி 'உபரி கட்டணங்கள்' போட்டுத் தாளிச்சுடுவாங்க! அவங்களுக்கு வருமானமே இதிலதானே? ஒழுங்கா மாசா மாசம் பணம் கட்றவங்க இவங்களோட எதிரிங்க. எப்படா மாட்டுவானுங்கன்னு பாத்துட்டு இருப்பானுங்க.//

சரியா சொன்னிங்க.. :))
(ஹிஹி.. பேசரவந்தான் பிஸ்தா :P )
//நீங்க சொல்ற மாதிரி, ஆசைகளை அடக்கி வைத்து இந்த அட்டைகளை ஒழுங்கா உபயோகிச்சா, நமக்கு நிறைய நன்மைகள்தான். ஆனா, பிராக்டிக்கலா என்ன நடக்குது? ஆசைதான் அழிவுக்குக் காரணம் :)//
இபப்டிக்கு
சுவாமி தஞ்சாவூரானந்தா :)

said...

// Bleachingpowder said...

அட போங்கப்ப இந்த அறிவுரையல்லாம் பணத்தை திருப்பி கட்டுறவங்களுக்கு. நாமல்லாம் வீட்டுக்கு சுமோ வராம பணத்த கொடுக்கறதா இல்ல.//
வெரி குட்.. உங்கள தான் அவங்க எதிர்பாக்கிறாங்க :P
அபப்டியே வந்தாலும் சாவோ தியரி , பட்டர்ஃப்ளை எஃபக்ட் மாதிரி எதுனா சொல்லி ஓட ஓட விரட்டிட மாட்டிங்க? :P

said...

//நிஜமா நல்லவன் said...

//மங்களூர் சிவா said...
அவர்களின் கொள்ளையே இந்த 'இதர'charge களில் தான்.//



ரிப்பீட்டேய்....//
:-))

said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

8 வருசமா கார்டு வாங்காம எப்படியோ தப்பிச்சுட்டேன். இப்போ HDFC ல இருந்து தன்னால அலாட் செய்து கைல குடுத்துட்டானுங்க. நீங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கிறேன்//

உடனடியா அவங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி கார்ட் பத்தின விவரங்கள் எல்லாம் வாங்கிக்கோங்க. அந்த மெயிலை பத்திரமாக் வைத்துக் கொள்ளுங்கள். தொலை பேசியில் விவரம் கேட்க வேண்டாம். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும்.கட்டண விவரம் தெரியாமல் அட்டையை பயன்படுத்த வேண்டாம்.

said...

// cheena (சீனா) said...

சஞ்செய் - எல்லா பொதுத்துறை வங்கிகளிலும் இப்படி அநியாயம் பண்ணுவதில்லை. வெளி நாட்டு வங்கிகளிலும், ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளிலும் தான் இது நடக்கிறது. கார்டுக்கு பணம் கட்டினால் ரூபாய் 100/- அதிகம் கட்ட வேண்டுமாம். என்ன அநியாயம் இது//

போட்டுக்கொள்ளட்டுமே .. நாம் ஏன் கவலை பட வேண்டும்?.. க்ரெடிட் கார்ட் பயன்படுத்டுபவர் நிச்சயம் எதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பார். காசோலை கொடுக்க வேண்டியது தானே.. இதனால் நம் நேரமும் தான மிச்சமாகிறது. எதற்கு வரிசையில் காத்திருகக் வேண்டும். இது நமக்கே புரிய வேண்டும். இப்போது அவர்கள் புரிய வைக்கிறார்கள். :-))

Anonymous said...

simple idea...

Always drop PDC i.e) pre-dated cheque :-))

said...

most of the CC's now reduced the interest free period from 52/50 days to 48 days :-((

Tamiler This Week