இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 1 February, 2008

Say NO to Dirty Gold!


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே தங்கத்தின் மீது அப்படி ஒரு வெருப்பு. அதற்கு காரணம் ரொம்ப பாமரத் தனமானது தான். பல ஏழைகளின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பெருமை இந்த தங்கத்தையே சாரும். வரதட்சனை என்ற பெயரில் தங்கத்தை பெண் வீட்டில் வாங்கி அதை அடகு வைத்தோ அல்லது விலைக்கு விற்றோ பிழைப்பு நடத்த விரும்பும் நாகரிக பிச்சைக்காரர்களால் பல ஏழைப் பெண்களும் அவர்கள் பெற்றோர்களும் படும் அவஸ்தையை கண்டு வந்த வெருப்பு தான் இது. பல சமயங்களில் பேராசை பிச்சைக்காரர்களால் பணக்காரக் குடும்பங்கள் கூட நிம்மதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சேலத்து மந்திரி வீட்டிலோ , நகைச்சுவை எம்.பி வீட்டிலோ அல்லது பல்கலை துணைவேந்தர் வீட்டிலோ சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய பணக்கார குடும்பமாக இருந்தாலும் இதே நிலை தான்.

நாகரிக பிச்சைககாரர்களை மட்டும் இல்லை. வழிப்பறி கொள்ளையர்களையும் நகைக்கடை கொள்ளையர்களையும் உருவாக்கிய பெருமையும் இந்த தங்கத்தையே சாரும்.அதே போல் கோவில்களில் கடவுள்களின் கழுத்திலும் உடல் முழுவதிலும் அலங்கரித்துவிட்டு அதை பாதுகாக்கவும், சில இடங்களில் கோவிலையே தங்கத்தில் கட்டிவிட்டு அதை பாதுகாக்கவும் மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களை நூற்றுக் கணக்கில் அங்கு பாதுகாப்பிற்கு வைத்து மக்களின் வரி பணத்தை வீணடிக்கும் பெருமையும் இந்த தங்கத்தையே சாரும். இது போன்ற எல்லாருக்கும் தெரிந்த காரணங்களினால் தான் எனக்கு தங்கத்தின் மீது வெருப்பு வந்தது.

ஆனால் இந்த அசிங்கம் பிடித்த தங்கம் வேறு என்ன மொள்ளமாறித் தனங்கள் எல்லாம் செய்யுது பாருங்க.

ஒரு தங்க மோதிரம் 20 டன் சுரங்க கழிவை உருவாக்குகிறது.

நீர் மாசுபடுதல்:-

  • தங்க சுரங்கங்களால் அதன் அருகில் உள்ள நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப் படுகிறது. அருகில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் அமிலத்தின் அளவை அதிகரித்து நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில தங்க சுரங்கங்கள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலில் கலக்கவிடுகின்றன.ஆறுகளில் கலக்கும் நச்சுக்கழிவுகளால் கழிவு நுரைகள் மற்றும் சில பாதி திரவ நிலையில் உள்ள நச்சுக் கழிவுகள் ஆறுகளில் படிந்து அணைக்கட்டுகளில் விரிசல் ஏற்படவும் அணைகள் உடையவும் காரணமாக இருகிறது. தங்கத்தை அதன் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் சயனைடு பிறகு நீர் நிலைகளில் கலக்கும் போது மீன்கள் போன்ற உயிரினங்கள் அழிகின்றன.
  • சுரங்க கழிவில் வெளியேறும் வேறு சிலரசாயினங்களான பாதரசம் மற்றும் சில கடினமான உலோகங்கள் அருகில் வசிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தலைமுறை தாண்டிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
காற்று மாசுபடுதல் :-
  • ஆழமான திறந்தவெளி சுரங்கங்கள் ஏராளமான தூசுக்களை உருவாக்குவதோடு திரவக் கழிவுகளையும் நீரில் சேர்க்கிறது. பிறகு இவை உலர்ந்து வலிமண்டலத்தில் கலந்து மாசு உண்டாக்கி அருகில் வாழும் மனிதர்களுக்கும் பாதிப்பை தருகிறது. சுரங்கங்களுக்கு அருகில் பெருகும் போக்குவரத்தால் தூசுகள் மேலெழும்பி காற்றை மாசுபடுத்துகிறது.
  • தங்கத்தாதுப் பொருட்களை உருக்கும்போது ஆண்டுக்கு 142 டன் சல்ஃபர் டையாக்ஸைடை வளிமண்டலத்தில் சேர்க்கிறது. வளிமண்டலத்தில் மாசு ஏற்படுத்துவதில் இதன் ( SO2) பங்கு மிக அதிகம்.

சமூக பாதிப்புகள்:-

  • தங்க சுரங்கங்களால் நச்சு கலந்த காற்றையும் நீரையும் உபயோகிக்கும் அப்பகுதி மக்களுக்கு நீண்டகால உடல் கோளாறுகள் உறுவாகிறது. அவர்களின் வருமானம் பெரும்பாலும் ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு எதிராகப் போராடவே செலவழிக்கப் படுகிறது.
  • சுரங்கங்கள் அமைந்துள்ள நகரங்கள் அங்கு வேலை தேடி வருபவர்களாலும் அவர்கள் குடும்பங்களாலும் அந்த நகரங்களில் எல்லை பெரிதாகிறது. எனவே அந்த பகுதியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்கள் சுரங்க நிறுவனங்களால் வெளியேற்றப் படுகிறார்கள்.வேலை தேடி வருபவர்களால் மது உபயோகித்தல், பாலியல் தொழில், போதை பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது.
  • ஆழமான திறந்தவெளி சுரங்கங்கள் பூமிக்கு அடியில் தோண்டப்படும் சுரங்கங்களை விட 8 முதல் 10 சத்வீதம் அதிகக் கழிவை உறுவாக்குகிறது.
பொருளாதார விளைவுகள்:-
  • பொதுவாக சுரங்கத் தொழிலை நம்பியுள்ள நாடுகளில் நீண்டகால பொருளாதார வளர்ச்சி இருக்காது. அந்த நாடுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சியும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். இந்த நாடுகள் சுரங்கங்களில் கிடைக்கும் பொருளை மூலப் பொருட்களாகவே மற்ற நாடுகளுக்க்கு அனுப்பிவிடுவதால் அவற்றைக் கொண்டு முழுமையான பொறுளை உறுவாக்குவதில்லை. எனவே வேலை வாய்ப்பு பெருகுவதில்லை. இதனால் இந்த நாடுகளில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் குற்றச் செயல்களின் அளவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது.
  • சுரங்கங்கள் மீண்டும் புதுபிக்க இயலாத தொழிலாகவே இருக்கிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப் படும் இந்த சுரங்கங்கள் மண்ணில் நச்சு தன்மையை உண்டாக்குவதால் அந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு விவசாயமோ அல்லது வேறு தொழிலோ செய்ய முடியாமல் போய்விடுகிறது. இது உணவு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.
  • உலகில் ஏழ்மையான நாடுகளில் பாதி நாடுகளில் தாதுப் பொருட்கள் ஏற்றுமதி தான் மிகப் பெரிய தொழில்.
மனித உரிமை மீரல்:-

  • சுரங்க தொழிலில் உள்ள நிறுவனங்கள் அப்பகுதி மக்களை மிகக் கேவலமாக நடத்துகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகிறது.
  • 1990 மற்றும் 1998 ஆண்டுகளுக்கிடையில் கயானாவின் டர்க்வா மாவட்டத்தில் மட்டும் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் சுரங்க தொழில் காரணமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.
  • உலகின் மிக அபாயகரமான தொழில்களில் சுரங்கத் தொழிலும் ஒன்று.
மேலும் அறிய : http://www.nodirtygold.org/


ஆகவே தங்கம் உபயோகிப்பதை தவிற்போம்!. சுற்றுச் சூழலையும் மனித உரிமைகளையும் காப்போம்.!

10 Comments:

said...

சார் கைல எத்தனை மோதிரம் போட்டிருக்கீங்க??? :P

said...

//இம்சை அரசி said...

சார் கைல எத்தனை மோதிரம் போட்டிருக்கீங்க??? ://

மேடம் வாங்கி தருவீங்கனு தான் வெய்ட்டிங் :P

said...

சஞ்ஜெய், தங்கத்தை வெறுப்பது தேவை இல்லாத ஒன்று. வரதட்சனை, பெண்கள் படும் அவலங்கள் இவை எல்லாம் தங்கத்தினால் அல்ல. த்ங்கம் என்பது நம்மோடி இணைந்த ஒன்று - அதை விட்டு விலக முடியாது.

said...

//cheena (சீனா) said...

சஞ்ஜெய், தங்கத்தை வெறுப்பது தேவை இல்லாத ஒன்று.//
வெறுப்பதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன். ஏன் வெறுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் எதிர் பார்க்கிறேன்.

//வரதட்சனை, பெண்கள் படும் அவலங்கள் இவை எல்லாம் தங்கத்தினால் அல்ல.//
வரதட்சனை கொடுமைகளில் தங்கத்திற்கே பெரும் பங்கு என்பது என் தாழ்மையான கருத்து,


// த்ங்கம் என்பது நம்மோடி இணைந்த ஒன்று - அதை விட்டு விலக முடியாது.//

அது தான் ஏன்? இது என்ன மனிதன் மண்ணில் தோன்றும் போதே உடன் தோன்றியதா என்ன? இதை ஏன் விட்டு விலக முடியாது.?

said...

வெறுப்பதற்கான காரணங்கள் நியாயமாகத் தோன்றினாலும்...

ஆசை யாரை விட்டுவைக்கிறது?

necessary evil களில் இதுவும் ஒன்றாகிவிட்டது...

(ரங்கமணி கண்ணில் இந்தப் பதிவு படாமல் இருக்கட்டும்)

said...

//பாச மலர் said...

வெறுப்பதற்கான காரணங்கள் நியாயமாகத் தோன்றினாலும்...

ஆசை யாரை விட்டுவைக்கிறது?

necessary evil களில் இதுவும் ஒன்றாகிவிட்டது...

//

ஹிஹி.. ஆசை எல்லோரயும் விட்டு வைத்து தான் இருக்கிறது. நாம் தான் ஆசையை விடத் தயாரில்லை. :)

//(ரங்கமணி கண்ணில் இந்தப் பதிவு படாமல் இருக்கட்டும்)//

ஒரு மெயில் போட்றுவோம்.. :P
எதோ என்னால முடிஞ்சது.. :))

said...

ம்

சீரியஸ் பதிவராயிட்டே வர்றீங்க!!

வாழ்த்துக்கள்.

said...

//மங்களூர் சிவா said...
ம்
சீரியஸ் பதிவராயிட்டே வர்றீங்க!!
வாழ்த்துக்கள்//

தப்பாச்சே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

ஆகவே தங்கம் உபயோகிப்பதை தவிற்போம்!. சுற்றுச் சூழலையும் மனித உரிமைகளையும் காப்போம்.!

SanJai...தவிற்போம் .....அல்ல தவிர்ப்போம்!!
"கண்டிப்பா தவிர்த்திடலாம்!!!!"
அன்புடன் அருணா

said...

//aruna said...

ஆகவே தங்கம் உபயோகிப்பதை தவிற்போம்!. சுற்றுச் சூழலையும் மனித உரிமைகளையும் காப்போம்.!

SanJai...தவிற்போம் .....அல்ல தவிர்ப்போம்!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
(ஹைய்யா அருணா அக்கா பதிவை முழுசா படிச்சிட்டு தான் பின்னூட்டம் போடறாங்க. :) )
// "கண்டிப்பா தவிர்த்திடலாம்!!!!"
அன்புடன் அருணா //

ரொம்ப நன்றிக்கா.. :)

Tamiler This Week