இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comFriday 8 February, 2008
வன விலங்குகளை வாழவிடுவோம்.
சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. இதற்கு காரணம் வனப் பகுதிகளை ஒட்டி வாழும் மக்களின் பேராசை தான் காரணம்.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தங்களின் விவசாய நிலபரப்பை அதிகரி்த்துக் கொள்ள காட்டை அழிக்கின்றனர். காட்டை அழித்து விவசாய நிலங்களாக மாற்றி இவர்கள் வளமாக வாழ்கிறார்கள். ஆனால் காட்டை நம்பி வாழும் வன விலங்குகளை பற்றி இவர்கள் சுத்தமாக கவலைபடுவதே இல்லை. வன விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் அழித்துக் கொண்டே இருந்தால் அவைகள் எங்கே போகும்?ஊருக்குள் தான் வரும். விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் ஆக்கிரமித்துவிட்டு , அவைகள் ஊருக்கு வந்து இவர்களை துன்புறுத்துவதாக கதறுகிறார்கள்.
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிப்போம்னு தான பாரதி சொன்னார். தனியொரு மனிதனின் வளத்தை பெருக்க ஜகத்தினை அழிப்போம்னு சொல்லலையே. காட்டை அழித்து விளைநிலங்களாக மாற்றுவது மட்டுமில்லாமல் , விறகுக்காகவும் வேறு உபயோகங்களுக்காகவும் மரங்களை வெட்டி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் வழித் தடங்களை அழிக்கிறார்கள். வனவிலங்குகள் வழி தவறி ஊருக்குள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் மரங்களை வெட்டுவதால் மழை அளவு குறைந்து வனப் பகுதிக்குள் இருக்கும் நீர் ஆதாரங்கள் வற்றிவிடுவதாலும் அவைகள் தண்ணீருக்காக ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதற்கெல்லாம் மனிதர்கள் தான் காரணம்.
வனவிலங்குகள் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் காடுகளில் யானைகள் தான் வழித் தடங்களை உருவாக்குகிறது. இதனை பயன்படுத்தியே மற்ற விலங்குகள் வனத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும் இந்த வழித் தடங்களை பயன்படுத்தியே அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான பகுதிகளுக்கு எல்லா வன வினவிலங்குகளும் இடம் பெயர்கின்றன.
மக்கள் மேய்ச்சலுக்காக தங்களின் வளைப்பு கால்நடைகளை காடுகளின் விடுவதால் புதிய மரங்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவுகிடைப்பது குறைவதுடன் மழை அளவு குறந்து நீரில்லாமல் மரங்கள் காய்ந்து போக நேரிடுகிறது. இதனால் காடுகளில் தீப்பிடித்து வனமும் அதில் வாழும் உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. யானைகள் உருவாக்கும் பெரும் வழித் தடங்கள் காட்டுத் தீ பரவாமல் தடுக்க உதவுகிறது.
இப்படி பல வகைகளில் வன விலங்குகளுக்கு பயனுள்ள யானைகளை தந்தங்களுக்காக கொல்வது மட்டுமின்றி காட்டை அழித்து அவற்றை ஊருக்குள் வரவைத்து ரயிலிலும் பேருந்துகளிலும் மோதி ( பேருந்தில் அடிபட்டும் யானைகள் இறந்திருக்கின்றன) கொன்றால் அது யானைகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி பிற வன விலங்குகளின் எண்ணிக்கையும் குறைய செய்யும். ஆகவே யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை காப்போம். ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிடுவோம்.
கொசுறு : பாரதி ஜகம் என்று சொன்னது உலகத்தை அல்ல. வனத்தை தான். ஜகம் என்றால் வனம்(காடு) என்றும் பொருள் உண்டு. தனியொரு மனிதனின் பசிக்காக உலகத்தையே அழிக்கச் சொல்லும் அளவுக்கு பாரதி என்ன கொடூர உள்ளம் படைத்தவரா?.. அவர் காடு என்ற பொருள் பட சொன்னதை தான் நம்மாளுங்க உலகம்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க. வனத்தில் இருப்பதாக நம்பப் படும் மோகிணிக்கு தான் ஜகன் மோகிணி என்று பெயர சொல்லுகிறார்கள்.
8 Comments:
ம்.
நாமெல்லாம் காட்டை அழிச்சி டவுன்ஷிப் பண்ணிகிட்டு போனா அதுங்கல்லாம் எங்க போகும் ஊருக்குள்ளதான் வரும்.
:(
ஞாயமான கவலை!
வன விலங்குகளின் புகலிடங்களில் நமது புகலிடங்களை அமைப்பது தொடரும்வரை, இந்த அவலங்கள் தொடரும்!!
வனவிலங்குகள் இறப்பதைப் போல, மனிதர்கள் தாக்கப்படுவதும் இதே காரணத்தால்தான்..
தொலைக்காட்சியில் பார்த்த போது கஷ்டமாய் இருந்தது...
கொசுறு தகவல்..ஜெகன் மோகினி பற்றியது ..புதிய தகவல்..
//மங்களூர் சிவா said...
ம்.
நாமெல்லாம் காட்டை அழிச்சி டவுன்ஷிப் பண்ணிகிட்டு போனா அதுங்கல்லாம் எங்க போகும் ஊருக்குள்ளதான் வரும்.
:( //
தெரிஞ்சே பண்ற தப்புகளில் இதுவும் ஒன்று மாம்ஸ்.
----------
//தஞ்சாவூரான் said...
ஞாயமான கவலை!
வன விலங்குகளின் புகலிடங்களில் நமது புகலிடங்களை அமைப்பது தொடரும்வரை, இந்த அவலங்கள் தொடரும்!!
வனவிலங்குகள் இறப்பதைப் போல, மனிதர்கள் தாக்கப்படுவதும் இதே காரணத்தால்தான்..//
சரியாக சொன்னீங்க அமெரிக்காகாரரே.
------
//பாச மலர் said...
தொலைக்காட்சியில் பார்த்த போது கஷ்டமாய் இருந்தது...
//
ரொம்ப கொடூரமா இருந்தது.
//கொசுறு தகவல்..ஜெகன் மோகினி பற்றியது ..புதிய தகவல்..//
ஆஹா அக்கா..உங்களுக்கே புதிய தகவலா :)
ம்ம்.. என்ன செய்ய.. இப்படி கொடுமைகள். பாவம்.
நட்போடு
நிவிஷா.
வேதனை அளிக்கும் விஷயம்தான்!
கொசுறு தகவல்களுக்கு நன்றி!!
என்னத்தை செய்ய நம்மாளுகளுக்கு, அழிக்கிறதுனா அல்வா சாப்பிடுறதுமாதிரி ஆச்சே... :-((
..@நிவிஷா - வேதனை தான் நிவி. விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் வேதனை குறைய வழி.
--------
..@திவ்யா - கொசுறு தகவல் உங்களுக்கும் புதியதோ? :)
---------------
..@கருப்பன் - அழிக்கிறதுக்கு காரணம் பேராசை தான் கருப்பன்.
-----------
.... அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
Post a Comment