இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday 3 February, 2008
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
வடிவேலு ஒரு நாடக நடிகர். அவருக்கு கல்யாணத்துல எதோ தோஷம் இருக்காம். அவருக்கு 2 மனைவிகள் அமைவாங்களாம். அதுல முதல் மனைவி
இறந்துவிடுவாராம். அதனால ஊரில் புதிதாய் தோன்றி இருக்கும் ஒரு கற் (பெண்) சிலைக்கு வடிவேலுவை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இந்த கல்யாணம் முடிந்து வடிவேலு அண்ட் கோ சென்றவுடன் அந்த கற்சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது. அவள் தான் இந்திரலோகத்து ரம்பையாம். பூமிக்கு சுற்றுலா வந்த ரம்பை, சூரிய அஸ்தமணத்திற்குள் தேவலோகம் செல்லாததால் "ஒரு பகல் ஒரு இரவு" கற்சிலையாக பூமியில் இருக்க வேண்டும் என இந்திரனால் சபிக்கப் பட்டு அந்த சாபத்தை ரம்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சைக்கிள் கேப்பில் தான் வடிவேலு ரம்பையை கல்யாணம் செய்துக் கொள்கிறார்.
கல்லாக இருக்கும் போது கட்டினாலும் கண்வன் தானே என்று ரம்பை 2 பூதங்களை அனுப்பி வடிவேலுவை இந்திரலோகத்துக்கு தூக்கி வர செய்கிறாள். இரவு அவளுடனும் பகலில் பூமியிலும் இருப்பாராம். ஹூம்.. மச்சம்டா கருப்பா என்று நான் நினைத்திருப்பேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் . ப்ளீஸ் :P..
நாயகி நல்ல உயரமாக அழகாக இருக்கிறார். ரசிக்கலாம்.
இந்திரலோகத்தில் ரம்பை ஒரு படிகத்தை தருகிறாள். இதை வைத்திருந்தால் யார் கண்ணிற்க்கும் வடிவேலு தெரிய மாட்டாராம். அதை வைத்துக் கொண்டு வடிவேலு சொர்கம் நரகம் இரண்டையும் சுத்தி பார்க்கிறார். நா.அழகப்பன் மட்டுமல்ல.. இந்திரன், எமன் எல்லோரும் வடிவேலு தான். எமன் வடிவேலு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறார். ஆனால் புலிகேசி அளவுக்கு ரசிக்க முடியவில்லை.
[இடைவேளைக்கு பிறகு]
தன்னுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குட்டி பாப்பா இறந்ததும் பொங்கி எழுகிறார் வடிவேலு. குழந்தையின் உயிரை பறித்த எனம் உயிரை பறிக்க திட்டம் போட்டு அதற்காக பூமியில் இருந்து சாராயத்தை எமலோகத்துக்கு எடுத்து சென்று காமெடி பண்ணுகிறார். சகிக்கல.
இறந்த குழந்தைகள் சொர்கத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, இதை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் ஆனந்தப் படுவார்கள் என்று கூறி கண்ணீர் மலக வசனம் பேசுவது தான் படத்தின் மிகப் பெரிய காமெடி.:).. முடியலடா சாமி..
மனிதர்களை கொத்து கொத்தாக(இதென்ன வார்த்தை பிரயோகம்?) கொல்ல எதேதோ செய்தாலும் அதனை மனிதர்கள் முறியடித்துவிடுவதாக பொலம்பிவிட்டு க்ளைமாக்ஸில் மனிதர்கள் தாங்களே சாவை தேடிச் சென்றுவிட்டு அதற்கு தன் மீது பழி போடுவதாகவும் டகால்டி டையலாக் விடுகிறார். ஏண்டா... என்னதான் காமெடி படம்னாலும் ஒரு ஞாயம் வேணாமாடா? :(
வடிவேலு மேலோகத்தில் தான் பார்த்தவைகளை தன் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்வதால், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி பேயோட்ட வருகிறார் ஸ்ரேயா. வந்து வசனம் எதும் பேசி சிரமப் படாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு போகிறார். அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?
ஸ்ரேயாவ இப்படி வீணடிச்சிட்டாங்களே படுபாவி பயலுகன்னு நெனச்சி முடிக்கறதுக்குள்ள இந்திரலோகத்துல ரம்பை ஏடாகூடமா படுத்து நெளியறா.ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம். :P
தன்னை பூமியில் வறுத்தெடுத்த காவலர் மேலோகம் வந்ததும் அங்கு தரும் தண்டணைகளை பார்த்து, பயந்து அழுது " இந்த தண்டணை எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் தப்ப்பெ செய்திருக்க மாட்டேனே" என்று பேசுவதை கேட்டதும் அழகப்பன் மனதில் பொரி பறக்கிறது.( பில்ட் அப் :P.. கண்டுக்காதிங்க..).. நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் தெரியாம தான் மக்கள் பூமிய்ல் தப்பு பண்றாங்களாம்.உடனே இந்திரலோகத்தின் ரகசிய அறைக்கு சென்று மனிதர்களின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்டு பூமிக்கு சென்று மக்களை திருத்துகிறார்... டேய்.. அடங்குங்கடா டேய்.. தாங்க முடியல..
பிறகு எமனை கொல்வதற்க்கு முயன்றது வடிவேலு தான் என்பது தெரிந்ததும் எனம் பொங்கி எழுந்து வடிவேலுவை துரத்திக் கொண்டு இந்திரலோகம் வருகிறார். அங்கு ரம்பை எமனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதில் இந்திரன் தலையிட்டு ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபம் குடுக்கிறார். இதனால் வடிவேலு 90 வயது முதியவராகவும் ரம்பை ஆவியாகவும் உலா வருகிறார்கள்.வயோதிக வடிவேலு சாபம் பெற்றதிலிருந்து விமோசனம் பெரும் வரை காரணமே இல்லாமல் கூட அழுதுவடிகிறார்.
ரம்பை குடுக்கும் படிகத்தை வைத்துக் கொண்டிருந்ததால் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கும் வடிவேலு நாரதர் நாசர் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் தெரிந்தாரோ? புரியவில்லை.
நாரதர் கலகம் நன்மையில் முடியவேண்டுமல்லவா?(அப்டியா?!).. அதனால் பிரகஸ்பதி இந்த சாபத்திற்கு சாபவிமோசனம் சொல்கிறார். அதாவது ஆவியாக் திரியும் ரம்பை வடிவேலுவின் கலுத்தில் மாலை அணிவித்தால் இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்து பழய நிலையை அடந்துவிடுவார்களாம். இது தான் க்ளைமாக்ஸ். இதற்காக இவர்கள் செய்யும் கோமாளித் தனங்கள் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது. இழு இழுனு இழுக்கறாய்ங்கப்பு. :(
பிறகு ஒருவழியாக ரம்பை உருவத்தில் இருக்கும் ஒரு வட இந்தியப் பெண்ணின் உடலில் புகுந்துக் கொள்ளும் ரம்பையின் ஆவி தமிழில் பேசுவதைக் கண்ட அவர்கள் பெற்றோர்கள் தீவிர ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக மதுரை அழகர் கோவிலுக்கு அந்த பெண்ணை அழைத்துவந்து வடிவேலு கழுத்தில் மாலையிட செய்து ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபவிமோசனம் கிடைத்து நாரதர் ரம்பைக்கு எதார்த்தத்தை புரிய வைத்து அந்த வட இந்திய பெண்ணையே வடிவேலுக்கு திருமணம் செய்து வைத்து..... ஸ்ஸ்ஸ்..அப்பாடா.. தாறுமாறா நம்ம கண்ண கட்டி படத்த முடிக்கிறாங்க.
தயவு செய்து யாரும் புலிகேசி போல் இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டாம். மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எமன் வேஷத்துக்கு வினுசக்கரவர்த்தியை பயன் படுத்தி இருக்கலாம்.
இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.
ஷொட்டு
- நாயகியின் நாட்டிய நடனங்கள். அற்புதமாக ஆடுகிறார். அழகாகவும் இருக்கிறார்.
- நாரதராக வரும் நாசரின் நடிப்பும் ஒப்பனையும். மிகையாகவுமில்லாமல் குறையாகவும் இல்லாமல் சரியாக செய்திருக்கிறார்.
- தோட்டா தரணியின் கலை. அழகான செட்கள்.
- இந்திரனாக வரும் வடிவேலு கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.
குட்டு
- அழகப்பன் வடிவேலு லிப்ஸ்டிக்கை குறைத்திருக்கலாம். ராமராஜன் தேவலை.
- புலிகேசியின் சுவடுகள் மறையும் முன் அதே போல் எடுக்க முயற்சித்தது.
- இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் பேய் முழி முழித்திருக்கிறார்ர்.
- க்ளைமாக்ஸ் இழுவை.
சந்தேகம் சஞ்சய்காந்தி asks...
- இது காமெடிப் படமா இல்ல அழுகாச்சி படமா?
ப்ளாக் டிக்கெட்கள் டிக்கெட் கவுண்டர் அருகில் தான் விற்க்கப் பட்டது.அந்த இடத்தில் விற்க தியேட்டர் ஊழியர்களால் தான் முடியும். நான் வாங்கும் போது ஏராளமானோர் வாங்கினார்கள். எல்லாரும் அப்போதைய காட்சிக்காகத் தான் வாங்கினார்கள். அப்படினா என்ன வெங்காயத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட். அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலையில் விற்க இந்த அய்யயோக்கியத் தனம்.
18 Comments:
ஷ்ரேயா போட்டோ சூப்பர். இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல எடுத்திருக்கலாம்!!
//
ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம்
//
அவ்வ்வ்
இது எதுக்கு!?!?!!
இன்னும் படம் பாக்கலை டிவிடி வந்திருச்சா????
எங்க மீஜிக் பாக்ஸ் (பாட்டு பொட்டிய)காணோம்!?!?!?
//மங்களூர் சிவா said...
ஷ்ரேயா போட்டோ சூப்பர். இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல எடுத்திருக்கலாம்!//
அது சரி.. நான் என்ன அந்த படதோட ஸ்டில் கேமிரா மேனா?.. :(
//
இன்னும் படம் பாக்கலை டிவிடி வந்திருச்சா????//
கொஞ்சம் பொறுங்க.. ட்யூப் தமிழ்ல வந்துடும்.. :))
//மங்களூர் சிவா said...
எங்க மீஜிக் பாக்ஸ் (பாட்டு பொட்டிய)காணோம்!?!?!?//
அப்பப்போ அந்த பொட்ட்டி மக்கர் பண்ணுச்சி. அதான் தூக்கிட்டேன். :)
சகிக்கலை! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))
விமர்சனம் அருமை.ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்துள்ளீர்கள்.
//
இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?
//
தலைவா வடிவேலு மீது அப்படி என்ன கோபம்.:-)))
//அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?
//
பொடிசுனு சரியா நிருபிச்சுட்டப்பா:-))
கிசு கிசு செய்திலாம் படிப்பதில்லையா, ஸ்ரேயாவுக்கு அந்த சம்பளம் மேலப்போட்டுக்கொடுத்ததுலாம் இரவில் வடிவேலுக்காக மட்டும் சிறப்பு சேவை செய்வதற்காகனு நக்கீரன் முதற்கொண்டு, துண்டு துக்கடா பத்திரிக்கை வரைக்கும் போட்டாச்சே.
மேலும் கதாநாயகி,அப்புறம் முக்கியமான நடிகைகள் எல்லாம் வடிவேல் பழகிப்பார்த்து போட்டது தானாம் :-))
ஆனாலும் இந்த படத்தையும் "கறுப்பு நுழைவு சீட்டு"(தமிழ் வளர்ப்புங்கோவ்) வாங்கி பார்த்த உன்னையேல்லாம் எண்ணை இல்லாத கொப்பறைல தான்யா வறுக்கணும் :-))
yenga unga paatu ?
hayooo thookiteengala :(
//இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.//
ஹாஹா... இதுக்கப்பறமும் இந்த பட்த்துக்கு போவோம்ங்கறிங்க?..:)))))))
//குசும்பன் said...
சகிக்கலை! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))//
அய்யா.. குசும்பரே.. என்னது சகிக்கல? படமா விமர்சனமா? :(
//செல்வம் said...
விமர்சனம் அருமை.ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்துள்ளீர்கள்.//
நன்றி செல்வம்.
// தலைவா வடிவேலு மீது அப்படி என்ன கோபம்.:-)))//
கோபம் இல்ல.. எல்லாம் ஒரு பச்சாதாபம் தான் :))
//வவ்வால் said...
ஆமாம் வவ்வால் நான் பொடிசுதான். இந்த கிசுகிசு கூட செவி வழி செய்தி தான். எனக்கு நக்கீரன் மாதிரி மஞ்சள் பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் இல்லை... வவ்வால் துண்டுதுக்கடா மஞ்சள் பத்திரிக்கை கூட விட்டு வைக்கறதில்லை போலும். :))
//ஆனாலும் இந்த படத்தையும் "கறுப்பு நுழைவு சீட்டு"(தமிழ் வளர்ப்புங்கோவ்) வாங்கி பார்த்த உன்னையேல்லாம் எண்ணை இல்லாத கொப்பறைல தான்யா வறுக்கணும் :-))//
ஏன் இந்த கொல வெறி? :((
//Kuttibalu said...
yenga unga paatu ?
hayooo thookiteengala :(//
வாங்க குட்டி. அட உங்களுக்கும் இந்த பாட்டு எல்லாம் புடிக்குமா? அது என் பதிவுக்கு வரவங்களுக்கு எரிச்சலா இருக்கும்னு நெனச்சேன். அதுவும் இல்லாம அப்பப்போ அந்த பாட்டு சர்வர் வேல செய்யறதில்லை. அதான் எடுத்துட்டேன். திரும்ப போட்டுடுவோம். :)
//ரசிகன் said...
ஹாஹா... இதுக்கப்பறமும் இந்த பட்த்துக்கு போவோம்ங்கறிங்க?..:)))))))//
வாங்க மாம்ஸ். கோவைல 80 ரூபாயோட போச்சி. ஆனா உங்கள மாதிரி வெளிநாடுகள்ல வசிக்கிறவங்களுக்கு இன்னும் கூடுதலான தண்டசெலவா இருக்கும்னு தான் இந்த பொது சேவை. :))திருட்டு விசிடில கூட பாத்துடாதிங்க. :))
அப்படியே பிச்சு பிச்சு வச்சிட்டீங்க...
என் தளத்தில் நான் எழுதியதை விட ஓவராகவே காலை வாரியிருக்கிறீர்கள்...
இந்த படத்தில் நடிப்பதற்காக 22 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை வடிவேலு உதறியதாக ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தேன்...
விதி வலியது
நன்றி நித்யகுமாரன்.
//விதி வலியது//
:)
இத்தனைக்குப் பிறகும் நாங்கள் படம் பார்ப்போம். பொழுது போக வேண்டாமா ? பொடியன் சொன்னது சரிதானா - சோதிக்க வேண்டாமா -
@ சீனா சார்: விதி வலியது. :P
இந்த கொடுமைய உங்கள யாரு 80ரூ குடுத்து பிளாக்ல டிக்கட் வாங்கி பாக்கச்சொன்னது??
..@கருப்பன் - என்ன பன்றது தலைவா.. புலிகேசி கெலப்பி விட்ட எதிர்பார்ப்பு தான். அதும் இல்லாம யாரும் இந்த கொடுமைய என்கிட்ட சொல்லவே இல்லை. அதனால தான் மத்தவங்களும் இதே கொடுமையை அனுபவிக்க வேணாம்னு இந்த பொது சேவை. :P
நான் இந்தப் படத்தை நேத்துப் பார்த்தேன்.
தோட்டா தரணி செட் அபாரம். அதுவும் எமலோகம்தான் டாப்.
சிம்மாசனத்தின் பின்னே அந்த எருமைமாடு:-)))))
// துளசி கோபால் said...
நான் இந்தப் படத்தை நேத்துப் பார்த்தேன்.
தோட்டா தரணி செட் அபாரம். அதுவும் எமலோகம்தான் டாப்.
சிம்மாசனத்தின் பின்னே அந்த எருமைமாடு:-)))))//
வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றிம்மா..
அதென்ன குறிப்பாக எருமை மாடு பத்தி சொல்லி ஸ்மைலி வேற பலமா போட்டிருக்க்கிங்க? எதும் உள்குத்து இருக்கா? :P
Post a Comment