இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 23 February, 2008

IPL தேவையா? திருந்துமா BCCI எனும் லூசு கும்பல்..?

BCCI இப்போது செமத்தியான பணவெறி பிடித்து ஆடுகிறது. ஆஸியில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் திருவிளையாடல் எவ்வளவு மோசமானதோ அதில் கொஞ்சமும் குறைச்சலில்லாதது ஹர்பஜனின் தரம் கெட்ட வார்த்தைகள். சைமண்ட்ஸை மங்கி என்று சொல்லி இருந்தாலும் குற்றம் தான். ஆனால் ஹர்பஜன் மா..கி.. என்று தாயை பழிக்கும் ஒரு மோசமான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார். அந்த டெஸ்ட் தொடரின் நடுவர் பதவியில் இருந்து பக்னரை நீக்கியது போல் ஹர்பஜனையும் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் BCCI தனது பணபலத்தால் ஹர்பஜனை காப்பாற்றிவிட்டது. இது தவறான முன் உதாரணம். இனி வரும் காலங்களில் மற்ற வீரர்களும் BCCI காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி தரம் தாழ்ந்து நடக்கலாம். இது ஆரோக்கியமான செயல் அல்ல.

அது மட்டுமில்லாமல் கடைசி டெஸ்டிற்கு முன்பே அதில் இடம் பெற்றிருந்த சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய ஒரு நாள் தொடர் அணியை அறிவித்தார்கள். இது ஒரு நாள் போட்டியில் இட்ம் கிடைக்காத வீரர்களின் மன நிலையை பாதிக்க செய்து கடைசி டெஸ்ட் போட்டியையும் பாதிக்கும் என்பதை அறிந்தும் இந்த முட்டாள் தனத்தை செய்தது. கேட்டால் புதிதாக இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கு உடை தயார் செய்ய வேண்டும்.. விமான டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் .. ஆதற்கு கால அவகாசம் இல்லை என்று சப்பை கட்டு கட்டினார்கள். எதோ BCCI பிச்சைக் கார நிலையில் இருப்பது போல். உத்தேச அணியை அறிவித்து அனைவருக்கும் ஆடைகள் மற்றும் விமாட சீட்டு எடுக்க வேண்டியது தானே. என்ன கொறஞ்சி போயிருக்கும். லூசு பயலுக.

இது கொஞ்சம் பழய செய்தி.. புதிய செய்திக்கு வ்வருவோம்....

இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை பாழாக்கும் வேலைகளில் BCCI ஈடுபட்டிருக்கிறது. முக்கிய ந்கரங்களில் க்ளப்களை உறுவாக்கி மாட்டு சந்தையில் ஏலம் விடுவது போல் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விட்டிருக்கிறது. இதனால் என்ன பயன் இருக்க முடியும்? க்ளப்களை உறுவாக்கி அந்தந்த மாநிலத்தை சார்ந்த திறமையுள்ள புதிய வீரர்களுக்கு வாய்பளித்து தேசிய அணிக்கு திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கினால் நல்லது தான். ஆனால் இங்கு நடப்பது என்ன? ஏற்கனவே பல நாட்டு தேசிய அணிகளில் விளையாடும் வீரர்களை குத்தகைக்கு அமர்த்தி விளையாட செய்யப் போகிறார்கள். இதில் பணத்தை குவிப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?..

மேலும் இதனால் இந்திய அணிக்கு பாதகமான அம்சங்கள்.

1. எல்லா வீரர்களுக்கும் ஒரே விலை இல்லை. ஆகவே ஏலத்தில் குறைவான விலை போன வீரர்கள் மனதில் தாழ்வு மனபான்மை உருவாகும். இது அதிக விலை போன வீரர்கள் மீது குறந்த விலை போன வீரர்களுக்கு பொறாமையும் வெருப்பும் வர வாய்ப்புண்டு. அதே போல் அதிக விலை போன வீரர்கள் குறைந்த விலை போன வீரர்களை ஏளனமாக பார்க்கும் அல்லது மரியாதை குறைவாக நடத்தும் வாய்ப்புண்டு. சாதாரனமாகவே கோஷ்டி பூசல் மலிந்துள்ள அணி இந்திய கிரிக்கெட் அணி. குறிப்பாக தோனிக்கு அதிக பணம் கிடைத்தது மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். நாம் சரியாக விளையாடவில்லை எனில் தோனி தனி மனிதனாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுவிடுவாரா.. என்று மற்ற வீரர்கள் நினைக்க கூடும்.

2.இந்த க்ளப்கள் 20-20 ஆட்டங்களுக்கே முக்கியத்துவம் தரப் போவதால் , அடுத்த முறை நாம் அதிக விலை போக வேண்டும் நம் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் 20-20 ஆட்டங்களில் அதிக கவனம் செலுத்தி அதற்கேற்றவாறே பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதனால் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கோட்டை விடுவார்கள்.

3. எளிதில் உணர்ச்சிவசப் படும் நம் அணி வீரர்களிடம் இந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் மரியாதை குறைவான விஷயங்கள் சேர்ந்து எதிர் அணியில் விளையாடும் நம் நாட்டு வீரர்களிடம் மோசமான வார்த்தை பிரயோகம் அல்லது மோசமான நடத்தைகளை அதிகரிக்கும். இதனால் தேசிய அணிக்காக விளையாடும் போது ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவித்துக் கொள்வார்கள். அணியின் ஒற்றுமை முழுமையாக சீரழியும். இதனால் தோல்விகளை மட்டுமே சந்திக்க வேண்டி இருக்கும்.

4. இந்த க்ளப்கள் நடத்தும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கும். இது இந்திய வீரர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவே வழி வகுக்கும். ஆனால் இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு வீரர்களுக்கு இந்திய மைதானங்கள் நன்கு பழகிவிடும். பின்னர் இந்திய மைதானங்களில் வைத்தே இந்திய அணிக்கு மந்திரிச்சி விடுவார்கள்.

5. இந்திய அணியினருடன் ஒன்றாக தங்கி பயிற்சி பெற்று விளையாடப் போகும் வெளிநாட்டு அணியினர் நம் வீரர்களின் அனைத்து பலவீனங்களையும் தெரிந்து கொள்வார்கள். இதை இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது பயன்படு்த்திக் கொள்வார்கள். அதிலும் குறிப்பாக ஆஸியினர் எதிர் அணியினரின் பந்து மற்றும் மட்டைகளுடன் மோதுவதை விட அவர்களின் மன ரீதியிலான பலவீனங்களுடன் தான் விளையாடி ஜெயிப்பார்கள். இது அவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம்.

IPL பிரபலமான வீரர்கள் மற்றும் BCCI யின் பணபலத்தை பெருக்க தான் உதவுமே தவிர கிரிக்கெட்டிற்கோ அல்லது வாய்ப்பு தேடும் புதிய வீரர்களுக்கோ துளியும் பயன்பட போவதில்லை. இதனால்.... BCCI பெரும் பணக்கார நிறுவனமாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் நிலை????????????

சுபாஷ் சந்திராவை ஒழுங்காக விட்டால் ICL மூலமாக பல புதிய திறமைசாலிகளை அறிமுகப் படுத்தி இருப்பார். ICL லிலும் பல நாட்டு வீரர்களும் இடம் பெற்றிருந்தாலும் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள்.

8 Comments:

said...

சீக்கிரம் இழுத்து மூடுங்கப்பா BCCI ஐ நாம 'சானியா மிர்ச்சா' ஆடறதை பாக்க போவோம்.

Anonymous said...

\\ஆனால் இந்திய அணியின் நிலை????????????\\
இது இந்திய அணிக்கு மட்டுமில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் நாடுகள் அனைத்தும் கவலைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

\\நாம 'சானியா மிர்ச்சா' ஆடறதை பாக்க போவோம்.\\

ரிப்பீட்டேய். மத்த விளையாட்டுக்களை நாம் கவனிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சேய்

said...

//மங்களூர் சிவா said...

சீக்கிரம் இழுத்து மூடுங்கப்பா BCCI ஐ நாம 'சானியா மிர்ச்சா' ஆடறதை பாக்க போவோம்//

லைட்டா திருந்தறது...
---------
//சின்ன அம்மிணி said...
இது இந்திய அணிக்கு மட்டுமில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் நாடுகள் அனைத்தும் கவலைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

மற்ற நாடுகளுக்கு இதனால் நல்ல ஆதாயம் தான் அம்மணி. அவர்கள் வீரர்களுக்கு இந்திய ஆடுகளங்கள் நன்கு பரிச்சயம் ஆகும். புதிய ஒரு சீதோஷ்ண நிலை பழகிவிடும். மேலும் கூடுதல் ஆட்டங்களில் விளையாடுவதால் திறமையும் கூடும். ஓசியில் பயிற்சி.

20-20 ஆட்டங்கள் தான் விளையாடப் போகிறார்கள் என்பதால் உடனே அவர்கள் சொந்த நாட்டுக்காக விளையாடும் போது சரியான ஓய்வு இல்லை என்ற சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை.


// ரிப்பீட்டேய். மத்த விளையாட்டுக்களை நாம் கவனிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சேய//

என்னாது ரிப்பீட்டா? ஏனுங்க சின்னம்மிணி.. அவர் மத்த விளையாட்டுகளை கவனிக்கவா அப்படி சொன்னார்? :(

said...

பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படும் BCCI திருந்த வாய்ப்பே இல்லை. எப்படியே இந்திய கிரிக்கெட் கெட்டு ஒழிய இதைவிட நல்ல தருணம் கிடையாது.

said...

கிரிக்கெட்டுக்கு நம் நாட்டில் நிஜமான அழிவுகாலம் பிறக்கின்றது..

said...

ஹலோ இம்புட்டு கருத்து சொல்வதான் இன்று முதல்.கருத்து கந்தசாமி.என்று அழைக்கப்படுவீர்கள்:))))

இது எப்படி இருக்கு?:::

said...

//நிஜமா நல்லவன் said...

பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படும் BCCI திருந்த வாய்ப்பே இல்லை. எப்படியே இந்திய கிரிக்கெட் கெட்டு ஒழிய இதைவிட நல்ல தருணம் கிடையாது//
என்னது நல்ல தருணமா? :) நீங்க நிஜமாலுமே ரொம்ப நல்லவருங்க :))

-------
// பாச மலர் said...

கிரிக்கெட்டுக்கு நம் நாட்டில் நிஜமான அழிவுகாலம் பிறக்கின்றது..//
அக்கா சொன்னா சரி தான் :). அழியட்டும் விடுங்க. இந்த கர்மம் பிரபலம் ஆனதுக்கு அப்புறம் தான் நம்ம பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் அழிஞ்சி போச்சி. கிராமத்துல சின்ன வயசுல எவ்வளவு விளையாட்டுகள் இருந்தது. இப்போ கிரிக்கெட் தவிர ஒண்ணும் யாருக்கும் தெரியலை.

---------
//குசும்பன் said...

ஹலோ இம்புட்டு கருத்து சொல்வதான் இன்று முதல்.கருத்து கந்தசாமி.என்று அழைக்கப்படுவீர்கள்:))))

இது எப்படி இருக்கு?::://

இதுவும் கவுண்டிங்கல இருக்குடி. வைக்கிறேன் கொஞ்சம் பெரிய ஆப்பா.. :)

said...

enakkum cricketukkum romba thooram
:)

natpodu
nivisha

Tamiler This Week