இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 16 January 2009

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Aiz.

என் பாசத்திற்குரிய தோழி Aiz க்கு இன்று ( 16.01) பிறந்தநாள். என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதவள் இவள். ரொம்ப வித்தியாசமான தோழி. பெரும் அறிவுஜீவி. அழகாய் கவிதை எழுதுவாள். புதிய தொழில்நுட்பங்கள் பற்றியோ இலக்கியம் பற்றியோ சாதாரனமாய் விவாதிப்பாள். புத்தகப் புழு. புகைப்பட வல்லுநர். இவளுக்கு தெரியாத இசை இணையதளங்களே இருக்க முடியாது. இசைக்கு ராகா மட்டுமே தெரிந்த எனக்கு imeem, last.fm, vodpod இன்னும் சில பயனுள்ள இசைத் தளங்களையும் எனக்கு அறிமுகப் படுத்திவயவள். வழக்காமான அரட்டை மட்டுமே இல்லாமல் எப்போதும் புதுப்புது இணையங்கள் பற்றி சொல்லி என்னையும் படிக்க வைப்பாள். நான் சில இணையம் சார்ந்த பதிவுகள் போடுவதற்கு இவள் தான் காரணம். அனுபவங்களை எழுதுவதில் பெரிய வல்லுநர். எங்கள் நண்பர்களுக்காகவே ஒரு குழு வலைப்பூ ஆரம்பித்து அதற்கும் அதில் இருப்பவர்களுக்கு மட்டுமேயான ஒரு இணைய குழுவுக்கும் தலைமை தாங்கி நடத்துகிறாள். என் வலைப்பூவின் டெம்ப்ளெட் ஆலோசகி. புத்திசாலிப் பெண். அவளை இப்படி எல்லாம் நான் புகழ்ந்ததே இல்லை. இந்தப் பதிவை பார்த்தால் நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இவை அனைத்திற்கும் அதற்கு மேலும் பாராட்டுக்களுக்கு தகுதியானவள். இவள நட்பு எனக்கு வரமே. என் தோழி இன்று போல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துவோம்.

இவள் ஆங்கில வலைப்பூ : Dreamscapes

Posted by..

24 Comments:

வால்பையன் said...

வாழ்த்துக்கள்,

புத்தகப்புழு என்று அழைக்கவேண்டாம்,
புத்தகப்பிரியை அல்லது நிறைய வாசிப்பனுபவம் உள்ளவர் என்று எழுதுங்கள்.

புத்தகப்புழு என்றால் படித்துவிட்டு அதை பயன்படுத்தாதவர் என்று அர்த்தமாம், ஆ.வி கேள்வி பதிலில் மதன் சொன்னது.

Anonymous said...

ஐஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

[ஐஸ் இப்படி என்ன தான் சொன்னாலும் நீங்க அசராதிங்க...கலாய்பதை குறைவில்லாமல் பண்ணவும்]

நாமக்கல் சிபி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் அய்ஸ் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

A N A N T H E N said...

aiz @ ஹெப்பி பெர்த்துடே

Booki said...

sooper appu!!!

nallavela neenga enna ilukkala :D

ஜோசப் பால்ராஜ் said...

மாப்ள,
நீயே இம்புட்டு சொல்றப்ப கட்டாயம் அவுங்க நெம்ப பெரிய ஆளாத்தான் இருக்கணும். என் வாழ்த்துக்களும்.

அன்புடன் அருணா said...

Send a bouquet on my behalf too Sanjai...
anbudan aruna

Dinesh C said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் சார்பாகவும்!

தமிழன்-கறுப்பி... said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

தாரணி பிரியா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஐஸ்

சுரேகா.. said...

உங்கள் தோழிக்கு
உளம்கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

காரூரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Kumky said...

உங்கள் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தோழியின் பிறந்த நாளினை நினைவுகூர்ந்து வாழ்த்து கோரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

Princess said...

@ வால்பையன்:
மிக்க நன்றி, நீங்கள் சொல்வது சரியே!
பிரியமாய் புத்தகங்களை படிப்பவளே..
ஆ.வி படிப்பவரா? நானும் அப்படியே!

Princess said...

@ தூயா:

நன்றி தோழி,
கண்டிப்பாக குறை வைக்கமாட்டேன் ;)

Princess said...

@நாமக்கல் ஷிபி:
நன்றி

@சீனா:
நீங்கள் வாழ்த்தும் விதம் அழகு :) நன்றி

@அமிர்தவர்ஷினி அம்மா:
நன்றி தாயே!

Princess said...

@ananthen:

தாங்க் யூ :D

@booki:

ஹா ஹா ஹா

Princess said...

@ஜோசப் பால்ராஜ்:

ரொம்ப புகழ்ரீங்கப்பா..
நன்றி

@அன்புடன் அருணா:

நன்றி அருணா, எப்படி இருக்கீங்க?

Princess said...

@ Dinesh C:
நன்றி நன்பரே!

@தமிழன்-கறுப்பி...
நன்றி தோழி

@சென்ஷி:
நன்றி

@தாரணி பிரியா
நன்றி தோழி

@சுரேகா
மிக்க நன்றி அன்பரே!

@காரூரன்
நன்றி

@கும்க்கி
நன்றி, நிச்சயம் பாராட்டுக்குரியவரே, நட்புக்கு மதிப்பளிக்கும் யாவரும்..

Princess said...

இறுதியாக @ சஞ்சய் :

வார்த்தைகள் இல்லை உன் நட்புணர்வினை பாராட்ட :)
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களில் ஒரு சிலரயேனும் அறிமுகம் செய்தீர், அவர்களின் அன்பையும், பாராட்டையும் பெற செய்தீர், வாழ்த்துமழையில் நனைய செய்தீர்..

எனக்கான நாளினை மேலும் இனிமையாக்கினீர்..

ரொம்ப மரியாதை தருகிறேன் என்று எண்ண வேண்டாம், பிறர் பார்க்க உன்னை திட்ட வேண்டாம் அதுவுமென் பிறந்த நாள் வாழ்த்து பதிவில் என்று விட்டுவிட்டேன்..

அடுத்தடுத்து பதிவிகளில் இத்தனை நயமான சொற்களை எதிர்பார்க்க வேண்டாம் ;)

அன்பு தோழி - அழகான ராட்சஸி
அய்ஸ்

Kumky said...

A N A N T H E N said...
aiz @ ஹெப்பி பெர்த்துடே
அடப்பாவி இப்பிடி கூடவா சைணீஸ்ல வாழ்த்துவாங்க...?

A N A N T H E N said...

//அடப்பாவி இப்பிடி கூடவா சைணீஸ்ல வாழ்த்துவாங்க...?//

சீனத்துல வாழ்த்துனா அடப்பாவியாத்தான் இருக்கனுமா? அப்பாவிங்க அனந்தன்

Tamiler This Week