இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 18 February, 2009

தமிழ்மணம் Vs தமிழிஷ்

சமீக காலங்களில் தமிழிஷின் வளர்ச்சி நன்றாகவே தெரிகிறது. இந்தப் பதிவு தமிழிஷ், தமிழ்மணத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது என்பதை காட்ட அல்ல. என் வலைப்பூவுக்கு தமிழ்மணத்தை காட்டிலும் தமிழிஷில் இருந்தே அதிக நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை காட்ட மட்டுமே. கடந்த பதிவை எழுதிய பின் வந்த நண்பர்களின் விவரங்களை கூகுள் அனலிடிக்சில் பார்த்த போது பெரிய மாறுதல் தெரிந்தது. பிப்ரவரி 17ம் தேதி வந்தவர்களில் 53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் உள்ள தவறான முறையால் , அதில் சிலர் மட்டுமே இடம் பிடிக்கிறார்கள். டைனமிக் ஐபி வசதியை பயன்படுத்தி தாங்களே பல வாக்குகளை பதிவு செய்து அவர்களின் பதிவுகள் மட்டுமே இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் ஒரே விஷயத்தை பற்றியே எழுதுவதால் தமிழ்மணம் வருபவர்களுக்கு மிகச் சிறந்த இடுகைகளை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

சூடான இடுகைகளில் இருந்து சிலரை நீக்கியதற்கு பதில் வாசகர் பரிந்துரையில் இருந்து சிலரை நீக்கலாம். சூடான இடுகை என்பது படிப்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையுமென்று நினைக்கிறேன். அதில் கள்ள ஓட்டு எல்லாம் செல்லாது. தமிழ்மணம் விழித்துக் கொண்டால் மட்டுமே வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளும். விழித்துக் கொள்வார்களா? அல்லது விழித்து என் பதிவைக் கொல்வார்களா? :)

Posted By..
Gandhi...SS

35 Comments:

said...

ஹி..ஹி..

//
விழுத்து என் பதிவைக் கொல்வார்களா?
//
தெரிஞ்சே கேக்குறீயே தல?

said...

எல்லோருக்கும் இதே பிரச்சனை தான்!

said...

ஆனாலும் சந்து சாக்கில் உங்கள் நண்பரின் தமிழிஷ்க்கு விளம்பரம் கொடுத்து விட்டீர்கள்

said...

பதிவை படிப்பவர்கள் அனைவரும் சிரமம் பாக்காமல் பதிவுக்கு கீழே உள்ள மாமா பிஸ்கோத்துவை ஒரு க்ளிக் செய்துவிட்டு போகும் படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

said...

கொளுத்தி போட்டாச்சு...

said...

மீ த செவன்த் !

said...

:)

said...

இப்பத்தான் தெரியுது நம்ம கட ஏன் காத்து வாங்குதுன்னு. தமிழிஷ் ஒரு என்ட்ரி பார்ம் கொடுங்க சார்.

அனுஜன்யா

said...

:)))

said...

//This blog does not allow anonymous comments.//

நீ செஞ்ச உருப்படியான வேல... ;)))

said...

ஆமாம் சஞ்சய்! நான் உங்க கருத்தை ஒத்துக்கறேன்!

said...

ha ha ha..
research posta.. what u r telling is right pa.. readers vote matters.

said...

ஆக எதிர்காலத்தில் ஸ்டார் ஆக எல்லாம் ஆக ஆசை இல்லை! இப்படி எல்லாம் போட்டு தாளிக்க கூடாது மாமு!

said...

// கடந்த பதிவை எழுதிய பின் வந்த நண்பர்களின் விவரங்களை கூகுள் அனலிடிக்சில் பார்த்த போது பெரிய மாறுதல் தெரிந்தது. //

மாம்ஸ் எப்படி இப்படி எல்லாம் உட்டா நார்கோ அனாலிஸின் சோதனை எல்லாம் செய்வீங்க போல!!!

said...

அனுஜன்யா said...
இப்பத்தான் தெரியுது நம்ம கட ஏன் காத்து வாங்குதுன்னு. தமிழிஷ் ஒரு என்ட்ரி பார்ம் கொடுங்க சார். //

இதுமட்டும் காரணம் இல்ல தல இன்னும் பல இருக்கு!

இப்படிக்கு
காத்துவாங்கும் பக்கத்து கடைக்காரன்

said...

// 53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.//

மாமா 84 பேர் வந்து இருக்காங்க! அவன் அவன் 10 பேர் கூட வராமல் போண்டியாகும் நிலையில் இருக்கிறார்கள்!

இப்படிக்கு
பொருளாதார மந்த நிலையினால் கடை வியாபாரம் ஆகாத வியாபாரி

said...

// 53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.//

மாமா 84 பேர் வந்து இருக்காங்க! அவன் அவன் 10 பேர் கூட வராமல் போண்டியாகும் நிலையில் இருக்கிறார்கள்!

இப்படிக்கு
பொருளாதார மந்த நிலையினால் கடை வியாபாரம் ஆகாத வியாபாரி

said...

முழுக்க டைனமிக் ஐபியினால்தான் எனச் சொல்ல முடியாது. சிலர் தங்கள் பதிவுகளுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். படிப்பவர்களும் செய்கிறார்கள்.

டைனமிக் ஐபியும் இருக்கலாம்தான். ஆனால் இதை எப்படிச் சரிசெய்வது?

said...

ம்ம்! சொல்றது சரிதான்!

said...

ஆனால் பாருங்க.. இந்த இடுகைக்கு தமிழ்மணத்திலிருந்துதான் அதிகம் வந்திருக்காங்க..

said...

ஆரமிச்சுட்டியா மாப்ள....நடத்து,நடத்து :)

said...

எத்தன மணிக்கு கமெண்ட் போடுறீங்க அப்துல்லா?? :)))

said...

ந‌ல்ல‌ பாசிடிவ் Attitude.. . . யாரும் உங்க‌ பிளாக்கை ப‌டிக்க‌லைங்கிற‌ உண்மைக்கு எவ்ளோ அழ‌கா வியாக்கியான‌ம் குடுக்க‌றீங்க‌
:-))))

said...

//Princess said...
ha ha ha..
research posta.. what u r telling is right pa.. readers vote matters.//

intha research post oda outcome:
intha blog wastennu konjanaal munnadi ithanoda owner sonnathu unmai aakitichi:-)))))

said...

அட‌க்க‌ட‌வுளே! என் போஸ்ட் அப்போ அப்போ வாச‌க‌ர் ப‌ரிந்துரைல‌ வ‌ருதேன்னு ச‌ந்தோச‌ப்ப‌ட்டா...அதுல‌ இப்பிடி ஒரு உள்குத்தா?:‍(((

said...

//டைனமிக் ஐபி வசதியை பயன்படுத்தி தாங்களே பல வாக்குகளை பதிவு செய்து அவர்களின் பதிவுகள் மட்டுமே இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மிகவும் சரி

said...

கடந்த வருட மே மாதம் நான் வலைக்குள் வந்த போது ’மே பிட் ‘ஜோடி’க்காக வேடிக்கையாக எடுத்தவை’ எனும் என் பதிவு முதன் முறையாக வாசகர் பரிந்துரையில் இடம் பெற்றது. தொடர்ந்து என் பல பதிவுகள் இடம் பெற்று வந்துள்ளன, அவை ’கடந்த 7’ நாட்களாக இருந்த போதும். சமீப காலமாக நான் வாசித்துப் பின்னூட்டமிடும் பதிவுகள் அத்தைனையிலும் தமிழ் மண வாக்கைப் பதிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன், ஒரு நன்றியாக ஏன் கடமையாகவே நினைத்து. அதை ஏன் எல்லோரும் பின்பற்றக் கூடாது? அதைச் செய்தால் கண்டிப்பாக வாசகர் பரிந்துரையில் பலரது பெயர்களைப் பார்க்க இயலும். சுந்தர் சொல்வது போல தமிழ்மணம் இதை நெறிப் படுத்துட்டும் விரைவில். அதே சமயம்,

இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனியொரு பதிவு பிடிக்கையில்
தவறாமல் தமிழ்மண
வாக்கைப் பதிந்திடுவோம்.

சரிதானா சஞ்சய்:)? ரெடிதானா எல்லோரும்:)?

said...

53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.//
ithula naan entha kanakku

said...

தமிழ்மணம் வருபவர்களுக்கு மிகச் சிறந்த இடுகைகளை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.//

அப்பிடின்னா நம்ம பதிவுகளையெல்லாம் சிறந்தவைன்னு சொல்றீங்களா தல..?

said...

வெண்பு, ஒருவேளை அவங்க மறந்தாலும் நீங்க எடுத்துக் குடுப்பிங்க போல.. :)

-------------

அப்டியா வால்.. அப்போ நான் தான் பூனைக்கு மணி கட்டின எலியா? கிகிகி.. சும்மா பில்டப்பு.. :)

---------------

இந்த இச்மைலிக்கு இன்னா அர்த்தம் சர்வேஸ்? :)

------------

வால், தமிழிஷ்கே நான் தான் ஓனர்னு சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் கெத்தா இருந்திருக்குமே.. ;))

------------

நந்தண்ணா.. நீங்க ரொம்ப நல்லவர்ன்னு தான் எங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியுமே.. :)

மொதல்ல நிலா ப்ளாக் அப்டேட் பண்ணுங்க.. இல்லைனா பெரிய பிரச்சனை வெடிக்க வாய்ப்பு இருக்கு.. :)

--------------

நன்றி ஆதவன்.. ஆனால் ஒன்னும் நடந்த மாதிரி தெரியலையே.. :)

---------------

கோவியாரே .. நீங்க சொன்ன மாதிரியே உமக்கு ஆதரவா தான் இந்த பதிவு.. :))

-------------

வெறும் இச்மைலிக்கு நன்றி எட்வின்.. :)

said...

அனுஜன்யா உங்களை மாதிரி சிறந்த ஆட்டக்காரருக்கு எல்லாம் ரசிகர்கள் அதிகம் கூட வேண்டும். எங்க எல்லாம் வாய்ப்பு இருக்கோ அங்க எல்லாம் கவுண்டர் தொறக்கனும்.. உடனே தமிழிஷ் மற்றும் தமிழ்வெளியில ஒரு கவுண்டர் தொறந்து வைங்க..:))

--------------

தங்கச்சி சிரிமதி, எப்போவுமே அதே செட்டிங்கு தான்.. கும்மி பதிவு போட்டால் மட்டுமே அனானிஸ் அலவ்ட்.. நீ என் ப்ளாக் பக்கம் வரதே இல்லைன்னு இப்டி எல்லாமா சொல்லனும்? :))

-------------

நன்றி அபிஅப்பா.. :)

-----------

Thanks Aiz ( Princess)

------------

குசும்பன் மாம்ஸ்.. பொது வாழ்க்கைல வந்து இதுக்கெல்லாம் கவலை பட முடியுமா? :))
//மாம்ஸ் எப்படி இப்படி எல்லாம் உட்டா நார்கோ அனாலிஸின் சோதனை எல்லாம் செய்வீங்க போல!!!//

இப்போ நீங்களும் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க இல்ல.. :))
//மாமா 84 பேர் வந்து இருக்காங்க! அவன் அவன் 10 பேர் கூட வராமல் போண்டியாகும் நிலையில் இருக்கிறார்கள்!/

வலையுலக மெகாஸ்டார் இப்டி பேசலாமா? ( சூப்பர்ஸ்டார் பட்டம் காலியா இல்லையாம்ல.. )

-------------

said...

நன்றி சுந்தர்ஜி..
//டைனமிக் ஐபியும் இருக்கலாம்தான். ஆனால் இதை எப்படிச் சரிசெய்வது?//

உங்களை மாதிரி பெரியவங்க தான் வழி சொல்லனும்.. :)

------------

ரொம்ப நன்றி ஜோதி சார்.. :)

------------

நன்றி சுரேஷ்.. இது சூடாண இடுகைல இடம் பிடிச்சதால நிறைய பேர் வந்திருக்காங்க.. அதுக்கு தலைப்பு தான் காரணம். மொள்ளமாறித் தனமா தலைப்பு வச்சாலும் அதிகம் பேரை வரவழைக்கலாம். ஆனால் உண்மையிலேயே நன்றாக எழுதுபவர்களுக்கு? அதான் பிரச்சனை.

-----------

ஹிஹி.. எல்லாம் உங்க ஆசிகள் அப்துல்லா மாம்ஸ்.. ;))

-----------

நீங்க எத்தனை மணிக்கு கமெண்டறிங்க வெண்பு? :)

ஊட்டம்மா கிட்ட அனுமதி வாங்கிட்டிங்க போல.. வீட்ல இருந்தாலும் ஆன்லைன் வறிங்க? :))

said...

இயற்கை.. இப்டி எல்லாம் உண்மையை சொல்லப்படாது.. :)

----------

நன்றி ரெபல் :)

------------

காயத்ரி.. ஆனாலும் உங்களுக்கு இப்டி ஒரு டவுட்டு வரக் கூடாது.. :)

-----------

//அப்பிடின்னா நம்ம பதிவுகளையெல்லாம் சிறந்தவைன்னு சொல்றீங்களா தல..?//

நம்ம பதிவுகள் இல்ல தாமிரா.. உங்களை மாதிரியானவங்க பதிவுகள் தான் சிறந்தவை.. என்னை ஏன் உங்க கூட சேத்துக்கிறிங்க.. அது உங்களுக்கு தான் அவமானம்.. :))

said...

// ராமலக்ஷ்மி said...

கடந்த வருட மே மாதம் நான் வலைக்குள் வந்த போது ’மே பிட் ‘ஜோடி’க்காக வேடிக்கையாக எடுத்தவை’ எனும் என் பதிவு முதன் முறையாக வாசகர் பரிந்துரையில் இடம் பெற்றது. தொடர்ந்து என் பல பதிவுகள் இடம் பெற்று வந்துள்ளன, அவை ’கடந்த 7’ நாட்களாக இருந்த போதும். சமீப காலமாக நான் வாசித்துப் பின்னூட்டமிடும் பதிவுகள் அத்தைனையிலும் தமிழ் மண வாக்கைப் பதிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன், ஒரு நன்றியாக ஏன் கடமையாகவே நினைத்து. அதை ஏன் எல்லோரும் பின்பற்றக் கூடாது? //

நன்றிக்காக வாக்களிப்பது தவறு அக்கா.. அதற்கும் டைனமிக் ஐபி வசதியின் மூலம் தனக்கு தானே வாக்களிபப்தற்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. அதனால் நான் வாக்களிப்பேன். அதற்காக நான் எழுதும் மொக்கைகளுக்கு நீங்கள் வாக்களிபப்து சரி அல்ல. அப்படி செய்யும் போது தான் சிறந்த பதிவுகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒருவர் நமக்கு பின்னூட்டம் போடும் போது அதற்கு நன்றிக் கடனாக அவருக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்துவது அவரை மேலும் சிறப்பாக அல்லது தொடர்ந்து எழுத வைக்கும். ஆனால் இதே வழிமுறையை வாக்களிக்க பயன்படுத்தக் கூடாது.

//அதைச் செய்தால் கண்டிப்பாக வாசகர் பரிந்துரையில் பலரது பெயர்களைப் பார்க்க இயலும். //

வாசகர் பரிந்துரையில் பலரும் வருவது முக்கியமில்லை அக்கா.. சிறந்த இடுகைகள் வரனும். உங்கள் கவிதைகள் போல.. குசும்பனின் போட்டோக் குறும்புகள் போல,,டாக்டர் புருனோவின் பதிவுகள் போல..அதுவே முக்கியம்.. :)


// தனியொரு பதிவு பிடிக்கையில்
தவறாமல் தமிழ்மண
வாக்கைப் பதிந்திடுவோம்.

சரிதானா சஞ்சய்:)? ரெடிதானா எல்லோரும்:)?//

நிச்சயம்.. தனி ஒரு பதிவு பிடிக்கையில் மறவாமல் வாக்களிக்கிறேன். ஆனால் நன்றிக்காக வேண்டாம். :)

said...

புதிதாக வந்திருக்கும் என் போன்றவர்களுக்கு, இந்த பதிவுலக சூட்சுமங்களை ஒரளவு புரிந்து கொள்ள இந்த பதிவு மிகவும் உதவும்.

Tamiler This Week