இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 25 February, 2009

Google Analytics பதிவர்களுக்காக

கூகுள் அனலிடிக்ஸ் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக இந்தப் பதிவு. இது நம் வலைபக்கத்துக்கு வருபவர்கள் பற்றிய துல்லியமான தகவலை தருகிறது. எங்கிருந்து வந்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.. எந்த பதிவுக்கு எவ்வளவு பேர், அவர்கள் உபயோகிக்கும் உலவி, இயங்கு தளம் , நாடு, எதைத் தேடும் போது நம் வலைப்பக்கம் வந்தார்கள்... என இன்னும் ஏராளமான தகவல்கள்.


http://www.google.com/analytics/ என்ற இணையதளத்துக்கு போய் கூகுள் கணக்கை வைத்து லாகின் பண்ணுங்க. அல்லது ஏற்கனவே கூகுள் கணக்கில் லாகின் செய்து இருந்தால் , http://www.google.com/analytics/ முகவரிக்கு சென்றதும் கிடைக்கும் பக்கத்தில் Access Analytics என்பதை தேர்வு செய்யவும். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.


பிறகு அதில் வலது பக்கம் + Add new account என்பதை தேர்வு செய்யவும். அடுத்து தெரியும் பக்கத்தில் உள்ள ”You are just a few steps from Google Analytics. Click on the Sign Up button to get started. என்பதன் கீழே இருக்கும் Sign Up பொத்தானை அமுக்கினால் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். பிறகு ஒப்பந்தத்தை எற்றுக் கொள்வதாக உறுதி அளித்து தொடருங்கள்.

அடுத்தப் பக்கத்தில் கிடைக்கும் நிரலியை வெட்டி உங்கள் வலைப்பக்கத்தின் நிரலிகளுக்குள் ../body>என்பதற்கு மேல் ஒட்டி விடவும். அம்புட்டு தான்.

சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அறிய
http://www.google.com/support/analytics/bin/answer.py?hl=en_US&answer=55480&utm_id=ad

அப்பாலிக்கா வித விதமா விவரங்கள் பார்க்க வேண்டியது தான்.. :)



Posted by...

13 Comments:

said...

ஈ மெயில் ஐடி எப்படி க்ரியேட் பண்றதுன்னு ஒரு போஸ்ட் போடுங்க மாமா.

said...

// நிலா said...

ஈ மெயில் ஐடி எப்படி க்ரியேட் பண்றதுன்னு ஒரு போஸ்ட் போடுங்க மாமா.//

ஹய்யா.. அடுத்த போஸ்ட்க்கு மேட்டர் ரெடி .. :))

said...

இதெல்லாம் மூத்த பதிவர்களுக்கு தான் ஒத்துவரும். :-))
எப்போதோ எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்காது.

said...

நல்ல தகவல்களுக்கு நன்றி:)

said...

I joined the club just today. Anyway, lemme read the post. (yeah, i began to comment without reading the post. ;))

said...

இந்த பெட்டி திறந்துவைக்கப்பட்டுள்ளது என்று சிம்பாலிக்கா காமிக்க ஏதாவது வழி இருக்கா?சில சமயம் தெரியாமல் போட்டு பொசுக்கு வந்து நிக்குது.

said...

இதுனால என்னா யூஜ்:) கொஞ்சம் டீட்டெயிலா சொல்லுமாமு!!!

//ஈ மெயில் ஐடி எப்படி க்ரியேட்//

ஒரு ஈ யை புடிச்சு மயில் பக்கத்துல போட்டு ஒரு அடிச்சா ஈமயில் ரெடி!!

said...

சாதாரணமா இருக்கிற உங்களுக்குள்ள இத்தனை திறமையா :)) ?

இந்த பையன்குள்ளையும் ஏதே இருந்திருக்குபாரேன்..

said...

ஏற்கனவே நான் பதிஞ்சிருக்கேன்... நல்ல தகவல்...... புள்ளிவிபரம்!!!

said...

எனக்கு எல்லாமே ஜீரோ தான் காட்டுது அங்கிள்!
எதாவது தப்பு பண்ணியிருக்கேனா?

நீங்க கொடுத்த லிங்க் எல்லாம் ஆங்கிலத்துல வேற இருக்குது, ஒன்னுமே புரியல

said...

என்னமோ சொல்றீங்கன்னு செய்தாச்சுப்பா.....என்னாகும்னு தெரிய 24 மணிநேரம் காத்திருக்கணுமாமே????காத்திருப்போம்...
அன்புடன் அருணா

said...

Thanks anna..

But will it some time to come in effect?
It shows Zero in every details!!

said...

Thanks ba :)

Tamiler This Week