இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comFriday, 27 June 2008
Set என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன?
சற்று நேரத்திற்கு முன் மக்கள் தொலைகாட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தேன். டென்னிஸ் பற்றிய செய்தி சொல்லும் போது , .................... என்ற set கணக்கில் வெற்றி பெற்றார்கள் என குறிப்பிட்டார்கள். செட் என்பதற்கு தமிழ் சொல் தெரியவில்லை போலும். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப் படும் இந்த SET என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் என்னவாக இருக்கும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Thursday, 26 June 2008
ஃபார்வர்ட் மெயில் அனுப்பறது குற்றமா?
ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதோட தலைப்பு மட்டும் மாத்தி நான் அதை எனக்கு தெரிஞ்ச சுமார் நாநூத்தி சொச்சம் பேருக்கு அனுப்பினேன். அது ஒரு குற்றமா? ஆளாளுக்கு என்ன வதைக்கிறாய்ங்க.. எனக்கு அழுகை அழுகையா வருது...
கவிதா : ungalukka..................romba azhaga irukkanga...............
... அவ அழகா தான் இருக்கா.. ஆனா எனக்கானு கேக்கறது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? :(..
மகி : Machiii
Romba thanksda,enaku intha ponnu romba pudichi iruku so seekirama avanga veetla pesi mudivu pannuda mama.............(Really i like her verymuch from KD movie)
... அடப்பாவி... மச்சினு ஆரம்பிச்சி மாமானு முடிச்சிட்டியேடா.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((.. உன்னை எல்லாம் நல்லவன்னு நம்பி அனுப்பிட்டேனே மச்சி... :(.. பாவம்டா இஸ்ரேல் மக்களும் உன் யுனிவர்சிட்டியும்.. :((
காந்தி அக்கா : I believed once I saw the subject and took the mobile to call you, to congratulate!!!!
.... ஹிஹி.. என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :P... அந்த மெயிலை பார்த்ததும் இந்த மூஞ்சிக்கு இதுவா என்று நெனைச்சிட்டாங்க போல.. :)))
மைஃப்ரண்ட் : pichu puduven pichu.. :-)))))))
... ஏன்.. ஏன்.. ஏன்.. என்ன தப்பு இதுல? .. எதுக்கு இந்த கொலைவெறி மிரட்டல்? :(.. இவங்க சித்தார்த்த சைட் அடிப்பாங்களாம்.. நான் இந்த பொண்ண பாக்க கூடாதாம்.. என்ன கொடுமை அனு இது? :)
வெங்கடேஷ் : Dear, this is my lover, dont feeeeeellllllllllllllll
... டேய்.. டேய்... மகா பாவி...ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கைய்யேனு ஏண்டா இப்டி அலையற? ஒழுங்கா அண்ணா யுனிவ் ல டாக்டர் பட்டம் வாங்கற வழிய பாருடா கர்மம் புடிச்சவனே.. :)
பால்(Paul) : Hi Sanjoo,
Thanks ma, enakkaga ivlo kashtapattu oru azhagana ponnu paarthu fotos anuppichadhukku ;)
aanaa paaru,
naan eearkanavay oru ponnai paarthen avo manasai enkitta parikoduthutta.
so, naa indha ponnai eereduthum paakka maatten.
Sorry, thappa ninaichukkathey :)
.... இதுக்கு மகி மாதிரி மாமான்னே சொல்லி இருக்கலாம்.. :(... சாப்பாடு கிடைக்காம கொலை பட்டினியில இருக்கிறவன் உங்களுக்கு எப்படி சாமி சோறு போடுவான்.. யோசிக்காம பதில் வருதே ராசா.. :(.. BTW... உங்க கிட்ட மனச பறிகுடுத்த( அதெப்படி குடுக்கறது? :P ) பொண்ண நெனச்சி பரிதாபப் படாம இருக்க முடியலை பால். :))
ஹரி : unakke idhu overa illa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
... என்ன பன்றது.. ஓவரா தான் இருக்கு.. ஆனாலும் பொண்ணு அழகா இருக்கே... புத்தி வேணாம்னு சொல்லுது.. மனசு வேணும்னு சொல்லுதே.. ( எதோ சினிமால கேட்ட வசனம்... ஆமா.. புத்திக்கும் மனசுக்கும் என்ன சாமி வித்தியாசம்? :( .. புதசெவி.. )
சேதுக்கரசி அக்கா :ethanai pEr idhE ponnai pArthirukkaangalo!! :)
... நோ .. நோ... இப்படி எல்லாம் தம்பி மனசு கஷ்டபடற மாதிரி பேசப் படாது... :P
ஷிவா : Yaarukku Maaps ponnu paatheenga??????
.. காண்டு.... உங்களுக்கு பாத்தேன்னு நெனைச்சிங்களாக்கும் ;(... ஊட்டியில இல்லாத ஃபிகர்ஸா மாம்ஸ்.. அதும் இல்லாம ஒரு முறை உங்களுக்கு கல்யாணம் கூட நடந்துடுச்சே.. :)
மங்களூர் சிவா ( ஆர்க்குட்ல): கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சா? வாவ்.. கங்ராட்ஸ்..
.. யோவ் மாமா.. என்ன நக்கலா?.. எனக்கும் ஒரு காலம் வரும்டி... எவ கைல கால்லயாச்சும் விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சி அந்த கல்யாணத்துக்கு உங்கள கூப்ட்டு உங்க மூஞ்சில கரிய பூசல.... ( சாரி..இதுக்கு மேல சவால் விட தைரியம் வரல :P )
இம்சையரசி ஜிடாக்ல வந்து அந்த படம் தெரியலை.. உடனே திரும்ப அனுப்புங்கனு சொன்னாங்க.. அட புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இவ்ளோ ஆர்வமா கேக்கறாங்களே.. அனுப்பி வைப்போம்னு அனுப்பினேன்.. அப்போவும் தெரியலையாம்... சரி .. இவங்க நேரம் நல்லா இருக்கு போலனு நெனைச்சி அமைதி ஆய்ட்டேன்.. ஆனாலும் அம்மணி விடலை.. அவங்க அலுவலக ஐடிக்கு அனுப்புங்கனு சொன்னதோட மட்டும் இல்லாம எல்லா படங்களையும் அனுப்பாதிங்க.. 1 , 2 மட்டும் அனுப்புங்கனு அன்பா கேட்டாங்க.. கூடவே ஒரு மிரட்டல் . " எதுனா மொக்கையா இருந்தது.. கொன்னுடுவேன்".. இப்டி எல்லாம் மிரட்டினா எப்படி? :(.. சரி அனுப்பிட்டு எஸ்கேப் ஆய்டலானு அனுப்பி வச்சிட்டேன்... நல்ல வேளை கொஞ்சம் சாதரனமாவே பதில் வந்தது.. :))
அடுத்து கொஞ்ச நேரத்துல ஒரு பாசக்கார நண்பர் தொலை பேசினார்...
"அடேய் பாவி.. ஜிடாக்ல தலைப்பை பார்த்ததும் போன் பண்ணி விஷ் பண்ணலாம்னு போன் எடுத்தேன்.. ஆனா நீ கொஞ்சம் வில்லங்கமான ஆள். அதும் இல்லாம உனக்கெல்லாம் கல்யாணம்னு ஒரு சம்பவம் நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை.. அதனால மெயில் ஓபன் பண்ணி பாத்துட்டே உனக்கு கால் பண்ணலாம்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே தான் இருந்தது.. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா" ... இன்னும் ரொம்ப பாசமா பேசிட்டு இருந்தார்.... அதுக்கு அண்ணன் வடிவேல் அவர்களின் வசனத்தை சொன்னதும் எதுமே பேசாம போன் கட் பண்ணிட்டார்.. :)))
..... என்ன தல பண்றது?... இருக்கிறவன் வளத்துகிறான்.. இல்லாதவன் வச்சிகிறான்.. இத போய் பெரிசா எடுத்துகிட்டு...:P
(... லைட்டா மானம்கெட்டத் தனமா இருக்குல :P. ஹிஹி......
இதெல்லாம் கூட பரவால்லைங்க... எங்க சித்தப்பா ரிப்ளை பாருங்க
" Good Selection"
... என்னா ஒரு வில்லத் தனம்? காலா காலத்துல பையனுக்கு ஒரு பொண்ணு பாத்தா இப்படிலாம் ஊர்ல இருக்கிற சினிமாக்காரிங்களை எல்லாம் பாத்து வழிஞ்சிட்டு இருபபனா? :(.. ..
சரி சரி.. அப்டி என்ன தலைப்பு.. என்ன மெயில்னு கேக்கறிங்களா? :)
அஸ்கி புஸ்கி : சமீபமாக தமிழில் வலைபதியும் ஒரு பெண் பதிவர் வழக்கமாக தாமதாம அலுவலகம் சென்று சீக்கிறமாக வீட்டிற்கு வருபவர். சில தினங்களாக காலையில் சீக்கிறமாகவே அலுவலகத்திற்கு சென்று மாலையில் தாமதமாக வீட்டிற்கு வருகிறாராம். இதற்கு காரணம் அவரின் தாய் ஊருக்கு சென்றுவிட்டதால் இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம். ரொம்ப பொடி வச்சி பேசறனோ? :P
Thursday, 19 June 2008
வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.
இப்போ தான் முதன் முதலா நான் செய்கிற தொழில்சார்ந்த ஒரு பதிவை போடறேன். அது ஒன்னும் இல்லீங்க.. அப்புறம் எதுக்குடா பதிவு? :( ஷ்ஷ்ஷ்.. நக்கலடிக்கப்படாது....
.... இதனால் பொது ஜனங்களுக்கு சொல்லிக்கிறது இன்னான்னா... இந்த மாதம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள்.. குறிப்பாக டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் மத்தியில் இருந்தே அறிவிக்கப் பட்டிருந்தாலும் புதிய விலையுடன் இந்த பொருட்கள் இன்னும் முகவர்களுக்கு போய் சேரவில்லை. இந்த மாத இறுதியில் அனுப்பப்படும் சப்ளையில் இருந்து விலையேற்றம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது..
இவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை ஏறிவிட்டதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அனைத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில் முன்னனி , பின்னனி, கூட்டணி என எந்த வகை நிறுவனமும் விதிவிலக்கல்ல.
இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த மாதம் முதல் இந்த பொருட்களையும் புதிய விலையில் தான் விற்பார்கள்.
விலையேற்றம் என்றால் ஏதோ வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று சதவீதம் என்று நினைக்க வேண்டாம். சராசரியாக ஏழு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 21" கலர் டிவி ரூ.400 முதல் ரூ.750 வரையிலும் 29" கலர் டிவிக்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும் உயர்த்தப் பட்டுள்ளது. LCD மற்றும் ப்ளாஸ்மா டிவிக்களின் விலையில் பெரிய உயர்வு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டிவியை பொருத்தவரை விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் Picture Tube மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது தான். LCD மற்றும் Plasma டிவிக்களுக்கு PT தேவை படாததால் அதன் மீது பெரிய விலை உயர்வு இருக்காது.
ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது. முன்னனி நிறுவங்களின் 21" டிவியின் ஆரம்ப விலை சராசரியாக சுமார் 6500 முதல் 7000வரை இருக்கும். இதற்கே 400 முதல் 750 வரை விலை உயர்வு இருந்தால் , ஆரம்ப விலையே 7500 முதல் 8500 வரை இருக்கும் ஃப்ரிட்ஜ் விலை எவ்வளாவு உயர்ந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதிலும் ஆடம்பர(Luxury) மாடல்களும், Double Door மற்றும் அதற்கு மேலுள்ள மாடல்களும்( 300 லிட்டர்களுக்கு மேல்) எக்கச்சக்கமாக விலை ஏறி இருக்கிறது.
வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த முறை அதுவும் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஆடி சிறப்பு விற்பனையின் போது தயாரிப்பு நிறுவனம் சில சலுகையை குடுக்கும். பிறகு விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சில சலுகைகளை குடுப்போம். இதை வைத்து சில முகவர்கள் விலை குறைத்து விற்பார்கள். சிலர் பழைய விலையில் சில கூடுதல் பொருட்களை குடுத்து விற்பார்கள். இன்னும் சிலர் சிறிது விலை உயர்த்தி உங்கள் பணத்திலேயே உங்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கி தருவார்கள்:).... இந்த முறை பெரிய அளவில் விலை உயர்வு இருப்பதால் பரிசு பொருட்கள் அல்லது தள்ளுபடி விலையினால் உண்டாகும் நஷ்டத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் விலையேற்றத்தை சமாளிக்க தயாரிப்பு நிறுவங்கள் பெரிய ஆஃபர் எதும் தருவதாக தெரியவில்லை. விலையேற்றத்தின் காரணமாக நிச்சயம் விர்பனையில் சரிவு ஏற்படும். ஆகவே அதை ஈடுகட்டவே பெரும்பாடு பட வேண்டி இருக்கும். வினியோகஸ்தர்கள், முகவர்கள் எல்லோருக்கும் இதே நிலை தான்.
ஆகவே வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும். அடுத்த மாதம் முதல் நீங்கள் தற்போதுள்ள விலையிலிருந்து கூடுதலாக சுமார் 5% முதல் 7% வரை பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...இதை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன்...
Monday, 16 June 2008
போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..
இந்த கிரடிட் கார்டுங்கள பார்த்து எதுக்குத் தான் மக்கள் இப்படி பயப்படறாங்களோ தெரியலை. நாம ஒழுங்கா இருந்தா க்ரெடிட் கார்ட் மாதிரி நண்பன் வேற யாரும் இருக்க மாட்டாங்க. யாருக்கு எபடியோ .. ஆனா எனக்கு இவரு ரொம்ப நல்ல நண்பன்தாங்க... எந்த பொருள் வாங்கினாலும் 50 நாளைக்கு பணம் கட்ட டைம் வாங்கி தரான். எப்படி பார்த்தாலும் குறைந்த பட்சம் 30 நாள் டைம் வாங்கி தரான். ஆனா கடந்த சில மாதங்களாக இவனால கொஞ்சம் சிக்கல் ஆகிபோச்சிங்க... பணம் கட்டும் கெடுவுக்கு 4 நாட்கள் முன்னாடியே செக் தரனும்னு ப்ரிண்டட் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க. ஆனா நான் அதை எல்லாம் பாக்கறதில்ல. மெயில்ல வர ஸ்டேட்மெண்ட் மட்டும் தான் பாப்பேன். அதுல அந்த விவரம் இருக்காது.
சரி மேட்டருக்கு வருவோம்...
நான் எப்போவுமே கெடு தேதி அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு தான் காசோலை தருவது வழக்கம். ஆரம்பத்தில் இதனால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதக் கட்டணம் என்று 350 ரூபாய் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதை கழித்தே பணம் செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும் தாமதக் கட்டணம் போட்டதுமில்லாமல் சென்ற மாதம் Finance Charge என்று ஒன்று புதியதாக போட்டிருந்தார்கள். வட்டியாக இருக்கலாம். நான் இதற்கு முன்பே சேவை மையத்தில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாமதமாக என் காசோலை Collection ஆகி இருப்பதாக பதில் சொன்னார்கள். ஆனால் நான் ஒருமுறை கூட கெடு தேதிக்கு பின்பு காசோலை குடுத்ததில்லை. தாமதமாக அவர்களுக்கு பணம் போனதற்கு நான் காரணம் இல்லை.
Finance charge என்பதை பார்த்து கடுப்பானதில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெயில் அனுப்பினேன். ரொம்ப புத்திசாலித் தனமாக கடந்த 3 மாத அறிக்கையை குறிபிட்டு .. இவ்வளவு தொகை இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தான் கட்டி இருக்கிறீர்கள். ஆகவே தாமதக் கட்டணங்களும் ஃபினான்ஸ் கட்டணமும் வந்திருக்கு என்று பதில் அனுபினார்கள். என் கடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பெண் சபதம் எதும் எடுத்திருப்பார் போல. உடனே நானும் அதற்கு பதில் அனுப்பினேன்.
யக்கா மாரியாத்தா..." நீங்கள் குறிப்பிட்டிருப்பது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து.. நான் அதை கழித்து கட்டி இருக்கிறேன். அநாவசியமாக நீங்கள் குறிப்பிடும் தாமதக் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் என் காசோலைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு 50 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே நான் கடைசித் தேதியில் தான் காசோலை தருவேன். நான் கொடுப்பது உள்ளூர் காசோலை. இது பணமாக 24 மணி நேரத்துக்கு மேல ஆகாது. அப்படி இருக்க நான் ஏன் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதக் கட்டணத்தையும் செலுத்த மாட்டேன். உங்கள் வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் இந்த தேவையற்ற கட்டணங்களை திரும்ப பெறவில்லை என்றால் உடனே உங்கள் வங்கி அளித்துள்ள கடன் அட்டையை ஒப்படைத்துவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன்.
அடுத்த நாளே பதில் வந்தது. நீங்கள் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்... லொட்டு லொசுக்கு என்று அளந்து விட்டு, அந்த கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்று எனக்கு ஸ்டேட்மெண்ட் வரும் நாள். பார்த்தேன். அட.. சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் :)...
ஆகவே மக்களே .. இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா.. பேராசையை கட்டுப் படுத்திக் கொண்டு கடன் அட்டையை சரியாகப் பயன் படுத்தினால் அதை விட நல்ல நண்பன் இருக்கவே முடியாது. ஆகவே கடன் அட்டையை பார்த்து பயப்படாதிங்க. நாம ஒழுங்கா இருக்கிறவரைக்கும் அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. கடன் அட்டை வழங்கிய நிறுவனம் "தவறான" கட்டணம் குறிப்பிட்டிருந்தால் கட்டாதீங்க.கேள்வி கேளுங்க... அவர்கள் என்ன நம்மை மிரட்டுவது.. நாம் அவர்களை மிரட்டுவோம்...ஜெயம் நமக்கே..
அஸ்கி புஸ்கி : இந்த பதிவை எழுதிமுடித்து எழுத்துப் பிழை திருத்த திரும்ப படித்த போது கொஞ்சம் டோண்டு பாணி பதிவாக தோன்றியது. இதில் சுய தம்பட்டம் அடிப்பது நோக்கம் அல்ல. எனக்கு நேர்ந்ததை உள்ளது உள்ளபடி சொல்லி கடன் அட்டை பற்றிய பயத்தை போக்குவதும் தவறை எதிர்த்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தவுமே இந்த பதிவு. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். யாருக்காவது உதவலாம். ஹிஹி.. தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்குல.. கண்டுக்காதிங்க.. :P
Sunday, 15 June 2008
சிவாஜி வாயில் ஜிலேபி - தமிழச்சி மற்றும் டோண்டு ஸ்பெஷல்
நம்ம ரிஷான் அண்ணாவுக்கு ஒரு சினிமா எடுக்க ஆசை. அதற்காக சில பல Non Residential Ilichavayarகளை அனுகுகிறார். அவர்களை சம்மதிக்க வைக்க முடியாமல் தானே தயாரிப்பது என்று முடிவெடுக்கிறார். ஆனால் தன்னிடம் இருந்த பணமெல்லாம் நமீதா ரசிகர் மன்றத்துக்கு பேனர் வைத்தும் போஸ்டர் ஒட்டியுமே கரைந்து விட்டதால் தன்னிடம் உள்ள மிச்சம் மீதி பணத்தை வைத்து ஒரு பிட்டு படமாவது எடுக்க முடிவு செய்கிறார். அதாங்க டாக்குமெண்டரி படம்.
இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார். என்ன கருத்து சொல்லலாம் என் கத்தாரில் ரூம் போட்டு தம் அடித்து யோசித்ததில் ஒன்றும் தோன்றாமல் போகவே போக்கிரி வடிவேல் ரேஞ்சில் தம் போச்சே என ஃபீல் பண்ணும் போது ஒரு பொரி தட்டுகிறது. அதாவது தம் அடிப்பதை நிறுத்துவதற்கு ஒரு பிட்டு படம் எடுக்க முடிவு செய்கிறார். அதை எப்படி எடுக்கலாம் என்று விவாதிக்க தமிழ்மணம் காப்ளக்ஸ் வளாகத்தில் வந்து உக்காருகிறார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் துக்ளக் புத்தகம் வாங்க வருகிறார். அவருடன் வால்பையனும் வருகிறார். அவர்களிடம் தன் பிரச்சனையை சொல்கிறார் ரிஷான் அண்ணாச்சி.
டோண்டு : (பிட்டு படம் என்றதும் ஆர்வமாக)தம்பி ரிஷான்.. நீ ஒன்னும் கவலை படாத.. நான் சொல்ற மாதிரி எடு. அதாவது ஒவ்வொரு சிகரெட் கடைக்கு பக்கத்துலையும் நம்ம ஆள் ஒருத்தன் நிக்கறான். யாராவது சிகரெட் வாங்கி வாய்ல வச்சதும் நம்ம ஆள் அந்த ஆள்கிட்ட என்னோட உலக பிரசித்தி பெற்ற(எலிக் குட்டி சோதனை அல்ல) ஆட்டிடையர் ஜோக்கை சொல்லனும். உடனே அந்த ஆள் வாய பொளந்து அதை கேப்பான். அப்போ அந்த சிகரெட் கீழ விழுந்துடும். அப்புறம் அந்த ஆள் என் ஜோக் கேட்ட சந்தோஷத்துல சிகரெட் மறந்துட்டு போய்டுவான். இதே மாதிரி எல்லா இடத்துலையும் தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நாள்ல எல்லோருக்கும் சிகரெட் பிடிக்கிற பழக்கமே மறந்து போய்டும்.
வால்பையன் : ஆஹா.. டோண்டு சார் சூப்பர் ஐடியா.. கீழ விழற சிகரெட்டை அந்த கடைக்காரனே எடுத்து வச்சிப்பான். இப்படி விக்கிற சிகரெட் எல்லாம் அவனுக்கு திரும்ப கிடைச்சிட்டா புதுசா வாங்க மாட்டான். புதுசா வாங்க ஆளில்லைனா சிகரெட் கம்பனிகள் எல்லாம் தானாவே மூடிடுவாங்க... அப்படியே தம் அடிக்கிற பழக்கம் அழிஞ்சிடும். டோண்டு சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....
டோண்டு : அது ஒன்னும் இல்லப்பா... சமீபத்துல கி.மு. முப்பத்தஞ்சாயிரத்துல நான் ITPL ல வேலை பாக்கும் போது இப்படி தான்....
வால்பையன் : (போனை காதில் வைத்தவாறு).. ஆங் சொல்லு இளையகவி.. அதுவா .. நீ கேட்ட அந்த போலிஸ் தொப்பி வாங்கிட்டேன்யா... இரு இன்னைக்கே கரூர் பஸ்ல குடுத்து விடறேன்..... என்றவாறு எஸ் ஆகிறார்..
தமிழ்மணம் காம்ப்ளக்ஸ் சுவரில் ஷகிலா போஸ்டர் பார்க்க வந்த மங்களூர் சிவா பிட்டு படம் என்பது காதில் விழுந்ததான் இவர்கள் அருகில் வருகிறார்... அவர் பின்னாடியே ஒளிந்துகொண்டு சீனா சாரும் வரார்...
இது அவர் நினைத்த பிட்டு படமாக இல்லாமல் டாகுமெண்டரி படத்தை தான் அபப்டி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முகம் வாடிப் போய்விடுகிறது. ஆனாலும் எதாவது சொல்லி வைப்போமே என்று நினைத்தவாறு..
சிவா : சிகரெட்டை வெறும் வெள்ளை தாளில் சுத்துவதை நிறுத்திவிட்டு அதற்கு பதில் கவர்ச்சியான பெண்களின் படம் பொறிக்கப் பட்ட தாளில் சுற்றலாம். அப்படி செய்தால் அதை பற்றவைக்க யாருக்கும் மனசு வராது... அப்புறம் தானாக புகைபிடிக்கும் பழக்கம் ஒழிஞ்சிடும்..
சீனா சார் : ஆமாம்.. இது நல்ல திட்டம்.. பிறகு நாணையம், தபால் தலை சேகரிக்கிற மாதிரி இந்த கவர்ச்சி பெண்கள் இருக்கும் சிகரெட் தாள்களை சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதை மையமாய் வைத்து பிட்டு படம்.. ச்ச.. டாக்குமெண்டரி படம் எடுங்க ரிஷான்...
அப்போது சிவாவுக்கு குசும்பனிடமிருந்து போன் வருகிறது.. பேசும் போது இந்த விவரங்களை சிவா குசும்பனிடம் சொல்கிறார்.
ஆர்வமான குசும்பன் : சிகரெட் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியில் மடக்கி அதில் பட்டாசுகள் பொருத்திய சிகரெட்டுகளை கலந்துவிட வேண்டும். அதை பிடிப்பவர்கள் வாய் கிழிந்துவிடும். பிறகு எந்த சிகரெட்டில் பட்டாசு இருக்குமோ என்று பயந்து யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க... இந்த ஐடியா வச்சி அவரை படம் எடுக்க சொல்லுங்க சிவா மாம்ஸ்...
இதை அப்படியே சிவா ரிஷான் கிட்ட சொல்றார்.
பெரியார் பற்றிய புத்தகங்களை வாங்க அந்த பக்கமாக வந்த தமிழச்சி , விவரம் கேட்டு தான் ஒரு ஐடியா கொடுப்பதாக சொல்கிறார்..
தமிழச்சி : இந்தியாவை பொருத்தவரை ஆண்கள் தான் சிகரெட் பிடிக்கிறார்கள். எனவே ஆண்கள் எல்லோரையும் நீளமான தாடி வளர்க்க சொல்லலாம். அப்படி பண்ணா சிகரெட் பிடிக்கும் போது தாடியை சுட்டுகொண்டால் என்ன செய்வது என்று பயந்து சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள். இதை கதை கருவாக வைத்து நீ படம் எடு ரிஷான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த
ஓசை செல்லா : ஆஹா.. அற்புதமான ஐடியா தோழர். இப்படி செய்தால் எல்லோரும் பெரியார் மீது கொண்ட பற்றினால் தான் தாடி வளர்க்கிறார்கள் என்று நீங்கள் ஒரு பதிவும் பெரியாரை பின்பற்றுவதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒழிந்தது என்று நான் ஒரு பதிவும் போடலாம்..
இவர்களின் ஐடியாக்களை எல்லாம் கேட்டு கலவரமான ரிஷான் " அடப்பாவிகளா... சினிமா எடுத்டு வெளிய விடலாம்னு பார்த்தா இவங்க எல்லாருமா சேர்ந்து என்ன உள்ள அனுப்ப ப்ளான் பன்றாங்களே" என் பொலம்பியவாறே கிளம்ப பார்க்கிறார்.
அந்த சமயத்தில் அங்கு வரும் நம்ம தல இலவசக் கொத்தனார் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என்று கூறுகிறார்..
கொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்.. ரஜினி சிகரெட் பிடிக்கிறதுக்கு பதில் ஜிலேபி சாப்பிடற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். அதை வைத்து மக்களிடம் " பாருங்க மக்களே ரஜினி சிகரெட் பிடிக்கிறது தப்புனு சொல்லி ஜிலேபி சாப்பிடுங்கனு சொல்றார்..." என்று சொல்வோம். இதன் மூலம் சிகரெட் பிடிக்கிறத நிறுத்தின மாதிரியும் ஆச்சி.. ஜங்க் புட் சாப்பிடற பழக்கத்துல இருந்து மக்களை மாற்றி நம்ம பாரம்பரிய இனிப்பு வகையான ஜிலேபியை சாப்பிட வைத்தது போலும் இருக்கும். என்ன சொல்றிங்க ரிஷான்...
ரிஷான் : இது கொஞ்சம் நல்ல ஐடியாவா தான் இருக்கு... இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?
கொத்ஸ் : "சிவாஜி வாயிலே ஜிலேபி"
சிவாஜி வாயிலே ஜிலேபி.....
3 வார்த்தைகளிலும் முதல் எழுத்துக்களை சேர்த்தால் - சிவாஜி இரண்டாவது எழுத்துக்களை சேர்த்தால் - வாயிலே
மூன்றாவது எழுத்துக்களை சேர்த்தால் - ஜிலேபி
................கண்ணன் பாட்டு புகழ் கவிநயா என்னை சி.வா.ஜி தொடர் பதிவு விளையாட்டில் சிக்க வைத்துவிட்டதால் உங்களை இப்படி கொடுமை படுத்த வேண்டியதாகிவிட்டது. :))..............
.... இந்த பதிவு சும்மா நகைச்சுவைக்காகத் தான்... யாரையும் காய படுத்த அல்ல... இதில் சம்பந்த பட்டுள்ள யாராவது ஆட்சேபித்தால் அவர்களை பற்றிய பகுதி நீக்கப்படும்....
தசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்
என்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே எப்போவும் பாட்டு பாடறானுங்க. அதுவும் இல்லைனா எல்லா படத்துலையும் பறந்து பறந்து சண்டை போடறானுங்க.
இவர்களுக்கு மத்தியில் கமல் ரொம்பவே வித்தியாசம் தான். எப்போதும் ஒரே மாதிரி படம் கொடுத்து போர் அடிபப்தில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் நம்மை ரசிக்க வைக்க "முயற்சி" செய்கிறார். இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் வரிசையில் அவைகளை தூக்கி சாப்பிடும் வகையில் இது அபாரமான முயற்சி. நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். இது தான் உண்மையான கலைஞனுக்கான அடையாளம்.
சும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை.
தொழில்நுட்ப ரீதியில் கலக்கி இருக்கிறார்கள். லாஜிக் விளக்கெண்ணைகளை தவிர்த்து வித்தியாசமான , புதுமையான முயற்சியை ரசிக்கும் மனது இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.