இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 12 April, 2008

பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.


பெங்களூரில் அலுவலகங்களுக்கான வாடகை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STP) திட்டத்தின் படி மென்பொருள் நிருவனங்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் மார்ச் 2009ல் காலாவதி ஆகிறது. ஆகவே தாங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை மிச்சம் பிடித்து தற்போதுள்ள லாபத்தை தக்க வைத்துக் கொள்ளாவும் மேலும் புதிய சலுகைகளை அனுபவிக்கவும் இந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் பெயர உள்ளன.

கர்நாடகத்தில் மொதம் 13 சி.பொ.ம. விற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில் 11 பெங்களூர் நகரில் அமைய உள்ளது. ஆகவே பெங்களூர் நகரத்தில் தற்போது உள்ள நிறுவனங்களுக்கு போதுமான இடம் சிபொம வில் கிடைத்து விடும். இப்போது அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இடங்கள் காத்து வாங்க ஆரம்பித்துவிடும். வேறு வழியே இல்லாமல் அந்த இடத்திற்கு சொந்தகாரர்கள் வாடகையை குறைத்தே ஆக வேண்டும்.

இதனால் வீட்டு வாடகை எதுவும் குறைய வாய்பில்லை. ஒருவேளை நிறுவங்களுக்கு தருவது போல் அதன் பணியாளர்களுக்கும் சில சலுகைகளுடன் சிறப்பு குடியிருப்பு மண்டலங்கள் அமைத்தால் ஒருவேளை வீட்டு வாடகைகளும் குறையலாம் :)...

இருங்க நம்ம விஜயகாந்த் உங்க கிட்ட என்னவோ பேசனுமாம்..
தலைவா .. பேசுங்க தலைவா..

ஏய்.. பெங்களூருல ஐடி கம்பனிங்கள்ல மட்டும் மொத்தம் 4 லட்சம் பேர் வேலை பாக்கிறாங்க. அந்த கம்பனிங்க எல்லாம் சேர்ந்து மொத்தம் 100மில்லியன்ன் சதுர அடி இடத்தை ஆக்கிரமிச்சி இருக்காங்க. இதுல முக்கால்வாசி இடம் லீசுக்கு எதுத்திருக்காங்க... சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது மார்ச் 2004ல் அலுவலக வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.22 முதல் 42 வரை இருந்திச்சி.. ஆனா இப்போ ஒரு சதுர அடி இடத்துக்கு 48 முதல் 78 வரை இருக்கு... இனி இதெல்லாம் கொஞ்சம் குறையும்.. வர்ட்டா.. ஹும்....

கொசுறு : டிசம்பர் 2007 தகவல்படி...இந்தியாவில் 282.87 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்கபட்டிருக்காம். அதாவது 28 கோடிக்கு மேல.. ஹய்யோ... கலக்கறாங்கய்யா... 2010க்குள்ள 500மில்லியன் இணைப்புக்கு இலக்கு வச்சிருக்காம் இந்திய அரசாங்கம். அட சீனாவ மிஞ்சிடுவோம் போல இருக்கே... அல்லாரும் ஜோரா ஒருவாட்டி கை தட்டுங்கபா.. :))

டிசம்பர் 2007 வரை 3.13மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப் பட்டிருக்கு. இன்னும் 3 வருடத்தில் 20மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்க இலக்கு வச்சிருகாங்களாம். ஆகவே மக்களே எல்லாரும் உங்க டயல் அப் கனெக்ஷன தூக்கிட்டு ப்ராட்பேண்ட் வாங்க தயாரா இருங்க சாமியோவ்... ஏன்னா தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாறுதல்களை பண்ணும் திட்டத்தை தன் குர்தா பையில் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காராம் எங்க சின்ன சிந்தியா... அப்டியே அண்ணாச்சிக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்.:)
நான்றி : SI dailydose.

60 Comments:

said...

1.புது டேம்ப்ளேட் நல்லா இருக்கு

said...

2. புது டெம்ப்ளேட்ல மீஜிக் பாக்ஸ் இல்ல
:(

said...

3. உன் ப்ளாகுக்கு ஆப்பீஸ் டைம்ல ஆளுங்க வரதே பாட்டு கேக்கதான்

said...

4. இருப்பா பதிவ படிச்சிட்டு வரேன்

said...

/
பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.
/

நல்ல விசயம்தான்

said...

வீட்டு வாடகை குறையலைனா பரவால்ல ஏறாம இருக்கட்டும்!!

said...

/
Live traffic feed
Belgaum, Karnataka arrived on ":: Break The Rule ::"

/
நான் எப்பய்யா பெல்காம்க்கு போனேன்

said...

Onnum solradhuku illa!

said...

colourful page u

colourful matter u

kalakkureenga ponga! :)

said...

/// மங்களூர் சிவா said...
1.புது டேம்ப்ளேட் நல்லா இருக்கு///



ரிப்பீட்டேய்

said...

///மங்களூர் சிவா said...
2. புது டெம்ப்ளேட்ல மீஜிக் பாக்ஸ் இல்ல///


இருக்கு பா

said...

///மங்களூர் சிவா said...
3. உன் ப்ளாகுக்கு ஆப்பீஸ் டைம்ல ஆளுங்க வரதே பாட்டு கேக்கதான்///


100% correct

said...

///மங்களூர் சிவா said...
4. இருப்பா பதிவ படிச்சிட்டு வரேன்///


ச்சீய் என்ன கெட்ட பழக்கம் இது?

said...

///மங்களூர் சிவா said...
/
பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.
/

நல்ல விசயம்தான்///


எனக்கு என்ன இப்ப?

said...

///மங்களூர் சிவா said...
வீட்டு வாடகை குறையலைனா பரவால்ல ஏறாம இருக்கட்டும்!!///



இது நல்ல விஷயம்

said...

///மங்களூர் சிவா said...
/
Live traffic feed
Belgaum, Karnataka arrived on ":: Break The Rule ::"

/
நான் எப்பய்யா பெல்காம்க்கு போனேன்////


அது நீ இல்ல உன்னோட போலி!!!!!

said...

//மங்களூர் சிவா said...

1.புது டேம்ப்ளேட் நல்லா இருக்கு//

நன்றி மாம்ஸ்..
----
//மங்களூர் சிவா said...

2. புது டெம்ப்ளேட்ல மீஜிக் பாக்ஸ் இல்ல
:(//

இப்போ இருக்கு.. :)
-------
//மங்களூர் சிவா said...

4. இருப்பா பதிவ படிச்சிட்டு வரேன//

நல்லா இர்ருங்க :(
---------

//மங்களூர் சிவா said...

/
பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.
/

நல்ல விசயம்தான//

ஏன்.. அக்கா அங்க தான் இருக்காங்களா? கல்யாணத்துக்கு அப்புறம் அங்க தான் செட்டில் ஆகப் போறிங்களா? :P

--------
//மங்களூர் சிவா said...

/
Live traffic feed
Belgaum, Karnataka arrived on ":: Break The Rule ::"

/
நான் எப்பய்யா பெல்காம்க்கு போனேன//

யாருக்கு தெரியும்.. என்ன மொள்ளமாறித் தனம் பண்றிங்களோ? :P

said...

///Dreamzz said...
Onnum solradhuku illa!///


இதையாவது சொன்னீங்களே?

said...

//Dreamzz said...

Onnum solradhuku illa//

வாடா.. மன்மத ராசா.. நீ.. திரிஷாகிட்ட மட்டும் தான எதுவா இருந்தாலும் சொல்லுவ? :P

said...

///சுரேகா.. said...
colourful page u

colourful matter u

kalakkureenga ponga! :)///



பொடியரு எப்பவுமே கலக்கல் பார்ட்டி தான் சுரேகா!!!!

said...

//சுரேகா.. said...

colourful page u

colourful matter u

kalakkureenga ponga! ://

ஹிஹி.. ரெம்ப நன்னிங்கோ.. :)

said...

SanJai said...
//நான் எப்பய்யா பெல்காம்க்கு போனேன///

யாருக்கு தெரியும்.. என்ன மொள்ளமாறித் தனம் பண்றிங்களோ? :P


ஹா ஹா ஹா ஹா ஹா

said...

//
மங்களூர் சிவா said...

3. உன் ப்ளாகுக்கு ஆப்பீஸ் டைம்ல ஆளுங்க வரதே பாட்டு கேக்கதான//

//நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
3. உன் ப்ளாகுக்கு ஆப்பீஸ் டைம்ல ஆளுங்க வரதே பாட்டு கேக்கதான்///


100% correct//
வேணாம்.. வலிக்கிது.. அழுதுறுவேன்..:(

said...

/////SanJai said...
//Dreamzz said...

Onnum solradhuku illa//

வாடா.. மன்மத ராசா.. நீ.. திரிஷாகிட்ட மட்டும் தான எதுவா இருந்தாலும் சொல்லுவ? :P///


இன்னமுமா திரிஷா?

said...

//நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
4. இருப்பா பதிவ படிச்சிட்டு வரேன்///


ச்சீய் என்ன கெட்ட பழக்கம் இது?//

எல்லாம் இந்த அபியப்பா சகவாசம்..

said...

//பெங்களூரில் அலுவலகங்களுக்கான வாடகை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.///


சரி

said...

//நிஜமா நல்லவன் said...

///சுரேகா.. said...
colourful page u

colourful matter u

kalakkureenga ponga! :)///



பொடியரு எப்பவுமே கலக்கல் பார்ட்டி தான் சுரேகா!!!//

அய்யயோ.. இதோட உள்குத்து புரியலையே.. ஹெல்ப் ப்ளீஸ்.. :(

said...

///மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STP) திட்டத்தின் படி மென்பொருள் நிருவனங்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் மார்ச் 2009ல் காலாவதி ஆகிறது.///


தெரிஞ்சது தான்

said...

///ஆகவே தாங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை மிச்சம் பிடித்து தற்போதுள்ள லாபத்தை தக்க வைத்துக் கொள்ளாவும் மேலும் புதிய சலுகைகளை அனுபவிக்கவும் இந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் பெயர உள்ளன.///


நல்லது. போகட்டும்.

said...

////கர்நாடகத்தில் மொதம் 13 சி.பொ.ம. விற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில் 11 பெங்களூர் நகரில் அமைய உள்ளது. ஆகவே பெங்களூர் நகரத்தில் தற்போது உள்ள நிறுவனங்களுக்கு போதுமான இடம் சிபொம வில் கிடைத்து விடும்.///


நல்ல விஷயம் தான்

said...

///இப்போது அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இடங்கள் காத்து வாங்க ஆரம்பித்துவிடும்.///


வேணுங்கிறவங்க போய் காத்து வாங்கட்டும்:)

said...

///வேறு வழியே இல்லாமல் அந்த இடத்திற்கு சொந்தகாரர்கள் வாடகையை குறைத்தே ஆக வேண்டும்.////

இதுக்கு தான் அப்பப்ப அடங்குடா மவனே ன்னு சொல்லுறது!!!!

said...

////இதனால் வீட்டு வாடகை எதுவும் குறைய வாய்பில்லை. ஒருவேளை நிறுவங்களுக்கு தருவது போல் அதன் பணியாளர்களுக்கும் சில சலுகைகளுடன் சிறப்பு குடியிருப்பு மண்டலங்கள் அமைத்தால் ஒருவேளை வீட்டு வாடகைகளும் குறையலாம் :)...///


பொடியரே நல்ல ஐடியாவா இருக்கே?

said...

///இருங்க நம்ம விஜயகாந்த் உங்க கிட்ட என்னவோ பேசனுமாம்..
தலைவா .. பேசுங்க தலைவா..///


ஊருக்கு இளிச்சவாயன் ??????????????

said...

///ஏய்.. பெங்களூருல ஐடி கம்பனிங்கள்ல மட்டும் மொத்தம் 4 லட்சம் பேர் வேலை பாக்கிறாங்க. ///

அது சரி. இதுல தங்கவண்ட எப்படி கண்டுபிடிக்கிறது?

said...

//நிஜமா நல்லவன் said...

///வேறு வழியே இல்லாமல் அந்த இடத்திற்கு சொந்தகாரர்கள் வாடகையை குறைத்தே ஆக வேண்டும்.////

இதுக்கு தான் அப்பப்ப அடங்குடா மவனே ன்னு சொல்லுறது!!!!//

ஹிஹி.. ஐ லைக் இட்.. :))

said...

////அந்த கம்பனிங்க எல்லாம் சேர்ந்து மொத்தம் 100மில்லியன்ன் சதுர அடி இடத்தை ஆக்கிரமிச்சி இருக்காங்க. இதுல முக்கால்வாசி இடம் லீசுக்கு எதுத்திருக்காங்க... ///


லீசு முடிஞ்ச உடனே வீசிடுவாங்களா?

said...

////அந்த கம்பனிங்க எல்லாம் சேர்ந்து மொத்தம் 100மில்லியன்ன் சதுர அடி இடத்தை ஆக்கிரமிச்சி இருக்காங்க. இதுல முக்கால்வாசி இடம் லீசுக்கு எதுத்திருக்காங்க... ///


லீசு முடிஞ்ச உடனே வீசிடுவாங்களா?

said...

////சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது மார்ச் 2004ல் அலுவலக வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.22 முதல் 42 வரை இருந்திச்சி.. ஆனா இப்போ ஒரு சதுர அடி இடத்துக்கு 48 முதல் 78 வரை இருக்கு... இனி இதெல்லாம் கொஞ்சம் குறையும்..///

சரியான புள்ளி விபர புலி தான். ஒத்துக்கிறேன்.

said...

///வர்ட்டா.. ஹும்....///


அடுத்த ஆள காலி பண்ண போறாரு. விட்டுடுவோம்.

said...

///டிசம்பர் 2007 தகவல்படி...இந்தியாவில் 282.87 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்கபட்டிருக்காம்.///


நெஜமாவா?

said...

///அதாவது 28 கோடிக்கு மேல.. ஹய்யோ...[///


அதான் மில்லியன்'ல சொல்லியாச்சே. அப்புறம் என்ன கோடியில ஒரு தடவ?

said...

////கலக்கறாங்கய்யா... 2010க்குள்ள 500மில்லியன் இணைப்புக்கு இலக்கு வச்சிருக்காம் இந்திய அரசாங்கம்///


இலக்கு தான? ஆமா எல்லாம் சரியா வேலை செய்யுதா?

said...

///அட சீனாவ மிஞ்சிடுவோம் போல இருக்கே...///


எல்லாத்துலையும் மிஞ்சாதீங்கப்ப. கொஞ்சம் அவங்களுக்கு விட்டு வைப்போம்:)

said...

///அல்லாரும் ஜோரா ஒருவாட்டி கை தட்டுங்கபா.. :))///


தட்டினது கேட்டுச்சா??????????

said...

///டிசம்பர் 2007 வரை 3.13மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப் பட்டிருக்கு. ///


நல்லவேளை கருப்பு எம்.ஜி.யார கூப்பிடாம நீங்களே சொல்லிட்டீங்க!!!!

said...

///இன்னும் 3 வருடத்தில் 20மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்க இலக்கு வச்சிருகாங்களாம்///


இன்னும் என்னென்ன வச்சிருக்காங்களோ?

said...

///ஆகவே மக்களே எல்லாரும் உங்க டயல் அப் கனெக்ஷன தூக்கிட்டு ப்ராட்பேண்ட் வாங்க தயாரா இருங்க சாமியோவ்... ///


பெருஞ்சாமிகளா பொடிச்சாமி சொல்லிடுச்சி. கேட்டுக்குங்க.

said...

///ஏன்னா தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாறுதல்களை பண்ணும் திட்டத்தை தன் குர்தா பையில் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காராம் எங்க சின்ன சிந்தியா.///


பை ஓட்டை இல்லையே????????

said...

///அப்டியே அண்ணாச்சிக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்.:)
நான்றி ///


வாழ்த்துக்கள்.

said...

இப்ப சொல்லுங்கப்பா. நான் பதிவ முழுசா படிக்கிறேனா?

said...

அப்பாடா 50 அடிச்சாச்சு?

said...

மூச்சு இன்னும் வாங்கல? வேற எங்க போகலாம்?

said...

ஆஹா ஆஹா! இங்கயுமா!

said...

1.புது டேம்ப்ளேட் நல்லா இருக்கு

ஒரு ஆமாம் சாமீ சொல்லிகிறேன்!

said...

நல்ல தகவல் பூர்வமான பதிவு! நன்றிங்க!

said...

Test........

said...

// SanJai said...

Test........//

ஹா..ஹா... நல்லா தான் டெஸ்ட் வைக்கறிங்க மக்கா:)

பதிவை படிச்சுப்புட்டு வர்ரேன்:))

said...

//மார்ச் 2004ல் அலுவலக வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.22 முதல் 42 வரை இருந்திச்சி.. ஆனா இப்போ ஒரு சதுர அடி இடத்துக்கு 48 முதல் 78 வரை இருக்கு... இனி இதெல்லாம் கொஞ்சம் குறையும்.. வர்ட்டா.. ஹும்....//

விலைக்குறைப்பு அவ்வளவு அதிகமா இருக்கும்ங்கறிங்க???

said...

//ஏன்னா தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாறுதல்களை பண்ணும் திட்டத்தை தன் குர்தா பையில் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காராம் எங்க சின்ன சிந்தியா...//
நல்ல செய்தி:)
//அப்டியே அண்ணாச்சிக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்.:)
நான்றி : SI dailydose.//

வாழ்த்திருவோம்.
(ஆமாம் அதென்ன நான்றி??? ஓ.. அம்புட்டு நன்றியா?:P)

Tamiler This Week