இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 9 September, 2007

சண்டை வேண்டாமே...

இப்போது தமிழ் வலை உலகில் மிக பெரும் டிஜிடல் வார் நடந்துக் கொண்டிருகிறது. ஒன்று திராவிட அணி. மற்றொன்று ஆரிய அணி. இரண்டு பக்கமும் மிக பெரும் மூளைகாரர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு பெரியவர் தவறான கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு அளிக்கிறேன் பேர்வழி என்ரு சிலர் அணிவகுக்கிறார்கள். திராவிட அணி ( போலியார் அணி என்று சொல்லி, இவர்களே இவர்களை தாழ்த்திக் கொள்க்றார்கள். எதிரணி என்று அழைத்துக் கொள்ளாமே.. )என்ற பெயரில் அணிவகுக்கிறவ்ர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அசாத்திய சாமர்த்திய சாலிகள். இவர்கள் வலை பதிப்பதை விட்டு ஒரு மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்தால் நிச்சயம் இன்னொரு கூகுள் உருவாகலாம். இரண்டு அணியினரும் பெரும் கோபக்காரர்களாக மட்டுமே இருகிறர்கள். 5 நிமிடம் அமைதியாய் கண்மூடி யோசிப்பவர்களாக தெரியவில்லை.
அப்படி யோசித்தால் நிச்சயம் சம்பந்தம் இல்லாத தனி மனித தாக்குதல்களில் ஈடுபட மாட்டார்கள்.

ஐபி முகவரிகளையும் , தனிநபர் தரவுகளையும் கண்டு பிடிப்பதை விட்டு , பெரியது திராவிடமா ஆரியாமா என ஆராய்ந்து பதிவிடுங்கள். நான் ரசிகர் மன்றமே ஆரம்பிக்கிறேன்.

ஒருவர் மீது இருக்கும் கோபத்தை வெளிபடுத்த அவகளின் குடும்ப உறுப்பினர்களை தாக்கத்தான் வேண்டுமா?

இந்த சண்டைகள் எல்லாம் முடிந்து தமிழ் வலை பதிவுகளில்
ஆரோக்கியமான விவாதங்களை எதிர் பார்த்து காத்து கிடப்பவர்களில் நானும் ஒருவன்...

---- நான் ஆரியனும் அல்ல..திராவிடனும் அல்ல... இந்தியத் தமிழன்..----

2 Comments:

said...

//
நான் ஆரியனும் அல்ல..திராவிடனும் அல்ல... இந்தியத் தமிழன்
//
ஆரியனும் அல்ல திராவிடனும் அல்ல என்றால் நீ இந்தியனே அல்ல இங்கிலாந்தவன் இங்கிலாந்தவன் இங்கிலாந்தவன்

:-) :-)

said...

நான் இங்கிலாந்தவன் இல்லை. இன ரீதியிலான அடையாளம் இல்லாதவன். ஹிஹி...

Tamiler This Week