இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday 13 July, 2009

அரைவேக்காட்டுக் குடிகாரன் - ஒரு சிறிய போதை

ஒரு ஊரில் மொடாக் குடிகாரன் என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த குடிமகன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் சரக்கடித்த பிறகே புரோட்டாவும் சால்னாவும் சாப்டுவது அவன் வழக்கம். ஓரளவு தம் அடிக்கும் பழக்கம் உள்ளவன். ஒரு கோர்ட்டரோ ஆஃபோ வாங்கிக் குடுத்துவிட்டு வழி கேட்டால் உடனே பட்டை சாராயம் காய்ச்சும் இடத்தை கூட காட்டிவிடுவானாம்..

ஒருநாள் 12 வயது மதிக்கத் தக்க சிறுவன் நடந்து வந்தவன் இந்த குடிகாரன் வீட்டின் முன் கஞ்சா கிடைக்காத கடுப்பில் வந்து உட்கார்ந்துவிட்டானாம்.. உடனடியாக பதறிய அந்த குடிகாரன், அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அவன் முன் ஒரு சரக்கு பாட்டிலைக் காட்டி,

"கோவியானந்தரே, இந்த சிறுவனுக்கு போதை ஏற்றி வைக்க எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, சிறுவனே பார், ஓல்ட் மங்க் இருக்கிறது, இல்லை என்றால் நீ என்வீட்டு வாசலில் விழுந்து இருக்கமாட்டாய், உடனடியாக உனக்கு ஓல்ட் மங்கும் கிடைத்திருக்காது" என்றானாம்

இதைக் கேட்ட சிருவன் திடுக்கிட்டான், காரணம் அவர் ஒரு கஞ்சா குடுக்கி.

"தலைவா நான் ஒரு கஞ்சா குடுக்கி, நீங்கள் ஒரு கொடாக் குடிகாரனாக இருந்தாலும் எனக்கு கஞ்சா தருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் சரக்குக்கு எதிரானவன், எனக்கு குடிப்பழக்கம் கிடையாது" என்றாராம்

இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட மொடாக் குடிகாரன், மேலே கைக்கூப்பி

"நான் ஒரு கஞ்சா குடுக்கிக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, சரக்கை நிந்திப்பவருக்கு ஓல்ட் மங்க் அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்த சிறுவனை நோக்கி,

கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக

"உன்னைப் போன்ற குடிப்பழக்கத்திற்கு எதிரான பார்ட்டிகளுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்கு உதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்கு சரக்குக் கிடைக்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட

சிறுவன் வசைகளால் குறுக்கிப் போய்......மெளனமாக வெளி ஏறிவிட்டானாம்.

இன்னும் கோவம் தீராத, அந்த மொடாக் குடிகாரன் புலம்ப ஆரம்பித்து

"கோவியானந்தரே, இது என்ன சோதனை, ஒரு கஞ்சா பார்ட்டிக்கு உதவி அளித்து ஜெயிலுக்குப் போக இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் சரக்கு வெள்ளம்.

அந்த குடிகாரனுக்கு முன்னால் குடிபகவான் ஜானி வாக்கர் தோன்றி,

"முட்டாளே ! தினமும் கஞ்சா அடித்தாலும் அந்த சிறுவனுக்கு 7 வயது முதலே எவர் மூலமாவது தொடந்து கஞ்சா அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாக சென்ற போது கஞ்சா கிடைககாத கடுப்பில் வந்து உட்கார்ந்த காரணத்தினால் சிறுவனை திட்டி விட்டாயே, சிறுவனுக்கான இன்றைய கஞ்சா உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "

என்றாராம்.

பேச்சே எழாமல் தன் தவறை உணர்ந்த குடிகாரன் கண் முன்னே நிற்கும் ஜானி வாக்கரைப் பார்க்கக் கூட வெட்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்து தலைகுணிந்தானாம்.

குறிப்பு: இந்த கதை கோவியானந்தா அவர்களின் டைரியில் படித்தது,பதிவுரையில் சிறிது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு மொடாக் குடிகாரன், என்கிற நினைப்பில் கஞ்சா அடிப்பவர்களை தூற்றுவோர்க்கு அர்ப்பணமாக்குகிறேன்.

அடிக்க சரக்கும், தொட்டுக்க ஊறுகாயும், பக்கத்தில் டாஸ்மாக்கும், ஏசி பார் / டாஸ்மாக் பார் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் சரக்கடிக்கலாம். கோவியானந்தா புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தானே குடிகாரன்?

இது இந்தப் பதிவின் கதைக்கு எதிரானது அல்ல




.....

25 Comments:

said...

:)

said...

;-)))

said...

::))))))

said...

நடத்துங்கடே!!!

said...

///ICQ

Where Are you..?///

யார மாமா தேடறீங்க? சொன்னா, நாங்களும் தேடுவோமில்ல!!

said...

அவ்வ்வ்..இங்கிருந்து கடைசியில இருக்க லின்ங் புடுச்சு அங்க போனா அங்க ஒரு லின்ங்..அங்கிருந்து கடைசியில இருக்க லின்ங் புடுச்சு எங்கேயோ போனா அங்க ஒரு லின்ங்....அங்கிருந்து கடைசியில இருக்க லின்ங் புடுச்சு அங்கயே சுத்தி சுத்தி வந்தா முடியுது....அவ்வ்வ்வ்வ்

said...

கடைசில சிறுவனுக்கு கஞ்சா கிடைத்ததா இல்லையா கொய்யால அதை சொல்லாம முடிச்சிட்டியேய்யா!
:)))))))))))))))

said...

மங்களூர் சிவா said...

கடைசில சிறுவனுக்கு கஞ்சா கிடைத்ததா இல்லையா கொய்யால அதை சொல்லாம முடிச்சிட்டியேய்யா!
:)))))))))))))))
///



உங்களுக்கு கிடைத்ததா இல்லையானு சொன்னாலே விடை தெரிஞ்சுடுமே..:) ))

said...

/
மின்னுது மின்னல் said...

உங்களுக்கு கிடைத்ததா இல்லையானு சொன்னாலே விடை தெரிஞ்சுடுமே..:) ))
/

என்னைய சிறுவன்னு ஒத்துகிட்டதுக்கு, சொன்னதுக்கு மிக்க நன்றி நான் அவனில்லை நம்ம ப்ராண்ட் வேற
:)))))))))))

said...

என்னைய சிறுவன்னு ஒத்துகிட்டதுக்கு, சொன்னதுக்கு மிக்க நன்றி நான் அவனில்லை நம்ம ப்ராண்ட் வேற
:)))))))))))
//


அப்ப கஞ்சாவில நிறைய ப்ராண்ட் இருக்கா..???


:)

said...

/
மின்னுது மின்னல் said...

என்னைய சிறுவன்னு ஒத்துகிட்டதுக்கு, சொன்னதுக்கு மிக்க நன்றி நான் அவனில்லை நம்ம ப்ராண்ட் வேற
:)))))))))))
//


அப்ப கஞ்சாவில நிறைய ப்ராண்ட் இருக்கா..???


:)
/

இதெல்லாம் தெரியாமலா இந்த பதிவுக்கு கமெண்ட் போட்டீங்க போய் படிச்சிட்டு வாங்க!
:):)

said...

// ஒரு ஊரில் மொடாக் குடிகாரன் என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த குடிமகன் ஒருவன் இருந்தானாம் //




ம்ம்..ம்ம்ம்.... ஈரோட்டுக் கதைய..... !! எனக்கு யாருன்னு புருஞ்சு போச்சு....!!!! கலக்குங்க தலைவரே....!!!

said...

:)))))))

said...

என்னைப் பற்றிய கதையோன்னு பயந்துட்டேன்!

said...

கஞ்சா நல்லது னு சொல்லரீங்களா? இல்ல சரக்கு நல்லது னு சொல்லரீங்கள?

said...

ம்ம்ம்.. ந‌ட‌க்க‌ட்டும்...ந‌ட‌க்க‌ட்டும்

said...

ஒரே குழப்பமா இருக்கு!

said...

வால்பையன் said...

என்னைப் பற்றிய கதையோன்னு பயந்துட்டேன்!
//

என்னது நீங்க இல்லையா?

said...

:((((((((
:)))))))))

said...

ரெண்டு நாள் வரலைனா .. என்னவெல்லாம் நடக்குது ! ஒண்ணுமே புரியல உலகத்திலே ..

said...

இந்தப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன். 24 மணி நேரத்திற்குள் பதிவு நீக்கப்படாவிட்டால் சிங்கைப் பதிவர்களை திரட்டி போராடுவேன்.

சைபர் க்ரைமில் சொல்லிவிடுவேன். கம்பி எண்ண வேண்டி இருக்கும், ஜட்டியை கழட்டுவாங்க என்றெல்லாம் பயமுறுத்த விருப்பம் இல்லை, எனவே சூதனமாக பதிவை உடனடியாக நீக்கவும்.

said...

:-))

said...

பின்னூட்டம் இட்ட வள்ளல்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.. :)

இனி http://www.blog.sanjaigandhi.com ல் சந்திக்கலாம்.

said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

said...

Online kasino Sazka Hry - Sazka Hry - recenze na oficiálních stránkách!

Tamiler This Week