இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 9 July, 2009

என்னையும் கருத்து சொல்ல வைக்கிறாங்களே.. அவ்வ்வ்வ்..

ஒரு மெய்ஞானியின் அறிவுறுத்தலின் பெயரில் சில மாதங்களாகவே வலைப்பூக்கள் வாசிப்பதை வெகுவாக குறைத்துவிட்டேன். எப்போதாவது பதிவெழுதினால் அதை இணைக்க மட்டுமே தமிழ்மணமும் தமிழிஷும் விசிட்டுவதுண்டு. மற்றபடி, ஸ்டேட்டஸ் மெசேஜ் அல்லது ஆப்புலைன் செய்தியாக சுட்டி தருபவர்கள் மற்றும் மொக்கை மெயில் க்ரூப்பில் யாராவது சுட்டும் பதிவுகள் மட்டுமே படிப்பதுண்டு. அதிலும் கூட பெரும்பாலும் கமெண்டுவதில்லை. அனால் சமீப நாட்களாக அதிகம் வலைப்பதிவுகள் படிப்பதாக உணர்கிறேன். அதுவும் எந்த பதிவுகள் தெரியுமா? அறிவை வளர்க்கும் ( இருந்தா தானே வளர) பதிவுகள் அல்ல. பிரபல பதிவர்களின் சண்டைப் பதிவுகளைத் தான். உங்களின் சண்டைகளால் எங்கள் வக்கிர புத்தி வளர்வதைத் தவிர வெறொன்றும் நிகழ்வதாய் தெரியவில்லை.

மதிப்பு மிக்க பிரபலப் பதிவர்களே..
மேலே மேலே செல்லுங்கள்
அண்ணாந்து பார்த்துக் கொள்கிறோம்
கீழே ஏன் இறங்குகிறீர்கள்
உங்களைப் பார்க்க
நாங்கள் தலைக்குனிய வேண்டியதாக இருக்கிறது.

“கூடவே இருக்கிறியே குப்புசாமி.. நீயாச்சும் புத்திமதி சொல்லக் கூடாதாப்பா”
“ எங்க சஞ்சய் கேக்கறாங்க.கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது. வம்பு பண்ணாதிங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்றாங்க.. இப்ப பாரு நீ சொல்லிட்ட..”

கொய்யால. நாயை கேவலப் படுத்திட்டிங்கன்னு யாராச்சும் சண்டைக்கு வந்திங்கண்ணா அனுஜன்யா & சென்ஷி சேர்ந்து எழுதின கவிதையை அனுப்பி வச்சிடுவேன்.

23 Comments:

said...

You too?
:(

said...

மீ தி செகண்ட்டு..!

தம்பியின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//மதிப்பு மிக்க பிரபலப் பதிவர்களே..
மேலே மேலே செல்லுங்கள்
அண்ணாந்து பார்த்துக் கொள்கிறோம்
கீழே ஏன் இறங்குகிறீர்கள்
உங்களைப் பார்க்க
நாங்கள் தலைக்குனிய வேண்டியதாக இருக்கிறது. //

நச் மாப்பி.

said...

\\கொய்யால. நாயை கேவலப் படுத்திட்டிங்கன்னு யாராச்சும் சண்டைக்கு வந்திங்கண்ணா அனுஜன்யா & சென்ஷி சேர்ந்து எழுதின கவிதையை அனுப்பி வச்சிடுவேன்.\\

எல்லாரும் ஓடியாங்க..புது சண்டை போட புது மேட்டரு சீக்கியிருக்கு ஓடியாங்க ஓடியாங்க ;))

said...

ஓ ஹோ....நீங்கதான் அந்த க.க வா?

said...

//உங்களின் சண்டைகளால் எங்கள் வக்கிர புத்தி வளர்வதைத் தவிர வெறொன்றும் நிகழ்வதாய் தெரியவில்லை//

அதென்னவோ உண்மைதான்..

said...

ஒன்னும் விளங்க மாட்டேங்குது
:(

said...

/மதிப்பு மிக்க பிரபலப் பதிவர்களே..
மேலே மேலே செல்லுங்கள்
அண்ணாந்து பார்த்துக் கொள்கிறோம்
கீழே ஏன் இறங்குகிறீர்கள்
உங்களைப் பார்க்க
நாங்கள் தலைக்குனிய வேண்டியதாக இருக்கிறது.//

உண்மங்க


//எங்க சஞ்சய் கேக்கறாங்க.கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது. வம்பு பண்ணாதிங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்றாங்க.. இப்ப பாரு நீ சொல்லிட்ட//

ஹி ஹி ஹி

said...

// எங்க சஞ்சய் கேக்கறாங்க.கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது. வம்பு பண்ணாதிங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்றாங்க.. இப்ப பாரு நீ சொல்லிட்ட..”/

இதை சாக்கா வச்சு சென்னை பதிவர்கள் யாரும் பொறை பாக்கெட் கோவைக்கு பார்சல் அனுப்பிறாதிங்க!

said...

அண்ணே பதிவுண்ணா என்னண்ணே?

said...

நீங்களுமா??

said...

டைமிங்கா ஒரு பதிவா

வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணா

said...

நன்றி சஞ்சய்... இந்த மேட்டர்ல கூட என் கவிதைய மறக்காம அனுப்பி வைக்குறேன்னு சொல்லி இருக்கே பாரு. இதுக்கே தனியா உனக்கு மாத்திரம் கோவில் கட்டலாம் :)))

said...

பிரபல பதிவர்களின் சண்டைப் பதிவுகளைத் தான். உங்களின் சண்டைகளால் எங்கள் வக்கிர புத்தி வளர்வதைத் தவிர வெறொன்றும் நிகழ்வதாய் தெரியவில்லை.
///


இதுக்கு பேர் தான் வக்கிர புத்தியா...?


தெரியாம போயிட்டே :(


இந்த பதிவையும் படிச்சிட்டேனே !!

said...

/
இவ்ளோ தூரம் வந்துட்டிங்க.. கமெண்ட் போடாமலா போய்டுவீங்க.. உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்க.. தனியா பின்னூட்டத்துல நன்றி சொல்லலைனு கோச்சிக்காதிங்க.. :)
/

:)

said...

//மதிப்பு மிக்க பிரபலப் பதிவர்களே..
மேலே மேலே செல்லுங்கள்
அண்ணாந்து பார்த்துக் கொள்கிறோம்
கீழே ஏன் இறங்குகிறீர்கள்
உங்களைப் பார்க்க
நாங்கள் தலைக்குனிய வேண்டியதாக இருக்கிறது.//

உண்மையிலேயே நீ அந்த மெய்ஞானி கூட சேந்து ரொம்ப தூரம் போயிட்ட சஞ்சய் :)))

said...

//// எங்க சஞ்சய் கேக்கறாங்க.கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது. வம்பு பண்ணாதிங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்றாங்க.. இப்ப பாரு நீ சொல்லிட்ட..”/

ippidi yellam neengale sollitaa appuram naanga enna solarathu:-(((((

said...

ம்ம்ம்....ஆரம்பிச்சாச்சா????

said...

அண்ணே.. நம்ம ஊர்லயா இருக்கீங்க.. என்னமோ நடக்குது ஆனா என்னனு தான் புரியல.. குசும்பண்ணனும் உங்க பேர ஸ்டேட்டஸ் ல போட்டு இருந்தார்..
நீங்களாவது சொல்லுங்க என்ன பிரச்சினைனு?

said...

தம்பீ..

காங்கிரஸ்காரன் புத்தியைக் காமிச்சிட்ட பாத்தியா..?

ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்க்கும்போது இதே தலைப்புதான்.. ஆனா உள்ள மேட்டர் வேறய்யா இருந்துச்சு..

ஆனா இப்போ எதையோ கடிச்சு, குதறி போட்டு வைச்சிருக்கே..

இதையெல்லாம் நான் ஏத்துக்க முடியாது..

நான் எதுக்காக கமெண்ட்டு போட்டனோ அதே மேட்டர்தான் உள்ளார இருக்கணும்..

இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள அதே மேட்டர் திரும்பவும் வரலைன்னா மான நஷ்ட வழக்கு போடுவேன்.. ஜாக்கிரதை..!

said...

பின்னூட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

இனி http://www.blog.sanjaigandhi.com ல் சந்திக்கலாம்.

said...

https://notebook-tamil.blogspot.com/

Tamiler This Week