இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 7 July, 2009

இப்படியும் இப்படியும் மனிதர்கள் கூட்டல் வாழ்த்து

சில உதிரிபாகங்கள் வாங்க ஒரு கடைக்கு போனோம்.


“ இந்த மாதிரி வேனுங்க "

"வாங்கிக்கலாம் சார்”.. கடை பையனை வேறு கடைக்கு அனுப்புகிறார்..

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அந்த பையன் கொண்டு வந்தது மெட்டலில் செய்தது. எங்களுக்கு பிவிசியில் தான் வேண்டும். இது தான் நல்லா இருக்கும். பிவிசி எல்லாம் இங்க கிடைக்காது என்று இம்சை பண்ண ஆரம்பிக்கிறார். எனக்குத் தெரியாதா என்ன தேவை என்று. குறிபிட்ட கடையை விசாரிக்க அனுப்பிய எங்க ஆள் , அதை விட்டு இந்த ஸ்பேர் கிடைக்குமா என்று விசாரித்துத் தொலைத்ததால் வந்த வினை இவை எல்லாம்.

பிறகு நான் வேறு கடை பெயரை சொல்லிக் கேட்டேன். தோராயமாக ஒரு இடத்தை சொல்லி அதற்கு எதிரில் இருப்பதாக சொன்னார். அந்த இடத்திற்கு போனால் அப்படி எதும் இல்லை. அங்கே வேறு ஒருவரிடம் கேட்டேன். எதற்கென்று விசாரித்தார். சொல்லித் தொலைத்தேன். அவர் கடையை விட்டு( அதுவும் ஒரு ஹார்டுவேர் கடை) வேறு கடையை விசாரித்த கடுப்பில் தவறான இடத்தை சொன்னார். அங்கு போய் விசாரித்தாலும் அதே நிலை. கேவலமான மனிதர்கள்.

அந்த இடத்தில் இன்னொரு கடையில் சென்று முதலாளியை கேட்காமல் கடை பையனை கேட்டேன். அவர் வெளியே வந்து சரியான திசையை காட்டினார். நான் முதலில் விசாரித்த கடையின் இடதுபுறம் ஒரு சந்தில் இருந்தது நான் தேடிய கடை. அந்த நாய் தெரியாது என்று கூட சொல்லி இருக்கலாம். ஆனால் தவறான திசை காட்டி அலைய விட்டுவிட்டான். அவனுக்கு பிசினஸ் கிடைக்காத கடுப்பை இப்படி காட்டிவிட்டான் போல. எல்லோரும் அதே மாதிரி தான் பண்ணானுங்க.

-----------

ஈரோட்டிலிருந்து ஒரு அரசாங்க பேருந்தில் வந்துக்கொண்டிருக்கிறேன். அவினாசி அல்லது அதற்கு முந்தைய நிறுத்தத்தில் ஒரு நண்பர் ஏறி என் அருகில் அமர்ந்தார். உடல் அமைப்பில் குறைபாட்டுடன் இருந்தார்.

“ கோயம்த்தூர் ஒன்னு ” - நண்பர்

“பாஸ் இல்லையா?” - நடத்துனர்

” இல்லீங்களே”

“ அட என்னய்யா நீ.. முன்னடி ஒரு பொம்பளை.. பார்த்தா எந்தக் கொறையும் இருக்கிற மாதிரி தெரியலை.. அவங்க கூட பாஸ் வாங்கி வச்சிருக்காங்க. இந்தா டிக்கெட்”

சிறிது நேரம் கழித்து மீண்டும் வருகிறார்.

“ ஏன் பாஸ் வாங்கல?”

“ எங்க வாங்கறதுன்னு தெரியலீங்க”

“ அட என்னப்பா.. இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிறதில்லையா? தேவை இல்லாம பணத்தை வீணாக்கறையே. பாஸ் மட்டும் இருந்தா கால் டிக்கெட்டு தான். நீ இப்போ 11 ரூபாய் குடுத்திருக்க வேணாம். 3.50 குடுத்திருந்தா போதும். 11 ரூபாய் கூட கம்மியா தெரியலாம். நீ 50 ரூபாய் குடுத்து போக வேண்டிய இடமா இருந்தா அதுல கால் பாகம் குடுத்தா போதும். எவ்ளோ மிச்சம்னு பாரு. ”

“ அது எனக்கு தெரியாதுங்க”

”கவர்மெண்ட் சலுகை குடுக்கலைனு மட்டும் கொறை சொல்றிங்க.. குடுத்தா அதை பயன்படுத்திக்க மாட்டேங்கறிங்க..”

” பாஸ் எங்க வாங்கறதுங்க”

“ மொதல்ல ஒரு கவர்மெண்ட் டாக்டர் கிட்ட சர்டிபிகேட் வாங்கிக்கோ.நேரா கலெக்டர் ஆபிஸ் போ. அங்க இதுக்குன்னு ஒரு ஆபிஸ் இருக்கு. அங்க போய் ஒரு மனு குடு. அவஙக உடனே பாஸ் குடுப்பாங்க. அதை வச்சி எல்லா மஃப்சல் பஸ்லையும் கால் டிக்கெட்டு வாங்கிட்டு எங்க வேணாலும் போகலாம். எல்லா ஊர்லையும் இது செல்லும்.”

“ சரிங்க.. வாங்கறேன்”

பிறகு இன்னும் சிறிது நேரம் கழித்து வருகிறார்.

“ இந்தா பாரு.. இதான் மாதிரி படிவம். இந்த மாதிரி இருக்கனும். “

“ இது மாதிரி என்கிட்ட இருக்குங்க”
நண்பர் ஒரு புத்தகம் போன்ற அமைப்பில் காட்டுகிறார்.

“ அடப்பாவி .. இதான்யா நான் சொன்னது.. இதுல பாரு.. இந்த பக்கம், இந்த பக்கம், அப்புறம் இந்த பக்கம்.. இத மூனையும் ஜெராக்ஸ் எடுத்து வச்சிக்கோ. அதை எங்க கிட்ட குடுத்தா உனக்கு கால் டிக்கெட் மட்டும் போடுவோம். அப்புறம் இந்த பேப்பரை எல்லாம் எங்க ஆபீஸ்ல குடுத்துடுவோம்.”

”சரிங்க.. இனிமேல் ஜெராக்ஸ் எடுத்து வச்சிக்கிறேன்”

----

“ எங்க இருக்க சஞ்சய்?”

” ஞாயித்துக் கெழம எங்க அண்ணாச்சிப் போகப் போறேன். வீட்ல தான் இருக்கேன்.”

”சரி இரு.. உங்க ஏரியால தான் இருக்கேன். வரேன்..

“ வாங்க வாங்க”

”எதுனா சாப்ட வச்சிருக்கியா?

“ வெட்கம் வேதனை அவமானம்.. என்னை பார்த்து இப்டி கேட்டுட்டிங்களே அண்ணாச்சி..”

“ டேய்.. கேள்விக்கு பதில்”

“ஹிஹி.. வாங்கிட்டு வாங்க..”

“ தெரியும்டா.. சிவவிலாஸ் கிட்ட இருக்கேன்.. அதான் கேட்டேன்”

“ இன்னொரு நண்பரும் இருக்கார்.”

“அப்போ சேர்த்து வாங்கி வரேன்”

“ ஹிஹி.. அதுக்கு தான் சொன்னேன்.. பின்ன.. எனக்கு வாங்கி வரதை அவருக்குக் குடுத்துட்டு நான் என்ன வாய பாத்துட்டா இருக்க முடியும்?”

“ அடப்பாவி .. டேய்.. இரு வரேன்.. வந்து கவனிக்கிறேன்..”

“ சரி சரி.. சூடா வாங்கிட்டு வாங்க.. “

நேந்திரம் பழம் பஜ்ஜி, மெதுவடை, பக்கோடா எல்லாம் சுட சுட வந்தது.. மழை நேரத்துக்கு சூப்பரோ சூப்ப்ரா இருந்தது.

-------

“ எங்க இருக்கிங்க சஞ்சய்”

“ பிருந்தாவன் முன்னாடி”

“ இதோ.. வந்துட்டேன்.. இருங்க”
“ ஓய்.. எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது.. கொன்னுடுவேன்.. சீக்கிறம் வாங்க..”

“ அட வந்துட்டேன்பா.. 5 நிமிஷம் இருங்க”

வந்தாங்க.. கையில் ஒரு கிஃப்டோட..
முதல் முறை சந்திப்பதால் கிஃப்ட் கொடுக்கனுமாம்.. ஹ்ம்ம்.. எனக்கு இப்படி எல்லாம் ஃப்ரண்ட்ஸ்.. :)

அட்டைப் படத்தைப் பார்த்துட்டு அங்கயே திட்டினேன்.. உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதா? இதெல்லாம் ஒரு கிஃப்டான்னு.. அவங்க நம்மள விட நல்ல்வஙக்.. அப்டி எல்லாம் வாங்க முடியாது.. எனக்கு பிடிச்சது தான் தர முடியும்னு சவுண்டு குடுத்தாங்க.. சரி பொழச்சி போகட்டும்னு விட்டுட்டேன். :)

வீட்ல போய் பிரிச்சி பார்த்து அசந்துட்டேன்.. ரொம்ப புதுமையாவும் அழகாவும் இருந்தது.. ஊர்ல இருக்கிற வீட்ல டிவி மேல வச்சிருக்கேன்.. நெறைய பேர் அதை ஆச்சர்யமா பார்த்தாங்க.. அவ்ளோ புதுமையா இருந்தது.

“ இங்க பாருங்க அம்மனி.. நீங்க கிஃப்ட் குடுக்கறிகன்னு.. நானும் குடுக்கனும்னு எதிர்பார்க்காதிங்க.. அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை.. சொல்லிட்டேன்..”

”அட.. இதெல்லாம் நீங்க சொல்லி தான் தெரியனுமா? உங்க கிட்ட போய் அதெல்லாம் எதிர்பார்ப்பேனா?.. கவலைபடாதிங்க.. “

இது நல்ல பொண்ணுக்கு அழகு.. :))

என் இனிய பிறந்தநாள்( ஜூலை 7) வாழ்த்துகள் ராஜி.. வாழ்க வளமுடன்..
24 Comments:

said...

1st

said...

happy b'day raji

said...

வாழ்த்துக்கள் இயற்கை!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

//கையில் ஒரு கிஃப்டோட..
முதல் முறை சந்திப்பதால் கிஃப்ட் கொடுக்கனுமாம்.. ஹ்ம்ம்.. எனக்கு இப்படி எல்லாம் ஃப்ரண்ட்ஸ்.. //

சஞ்சய் என்னை முதன்முறை பார்க்கும் போது ஒரு செட் சாம்பார் இட்லியும், ரோஸ்டும் வாங்கி கொடுத்தார்!

தின்னிபண்டாராங்களை ப்ரெண்ட்ஸாக வைத்து கொண்டால் இது தான் கிடைக்கும்!

said...

வாழ்த்துகள் இயற்கை(ராஜி).

அவசியம் அண்ணாச்சியை சீக்கிரம் சந்திக்கனும் - சஞ்சையோட ...

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜீ@இயற்கை

இதுமாதிரியும் கண்டக்டர்கள் இருக்காங்க

said...

அடப்பாவமே உங்களை பாக்க வந்தா ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரணுமா :(


இது போல வாங்கி கொடுக்கிறதை பார்த்தாவது திருந்துங்க :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயற்கை :)

said...

:))))))

said...

இயற்கையை வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன்.

மச்சி, வாங்குன கிப்ட்டுக்கு வஞ்சகம் இல்லாம வாழ்த்திட்ட. அது சரி அவங்க பொறந்தநாளுக்காச்சும் ஒரு கிப்ட் அனுப்பியிருக்கலாம்ல?

ஒரு அரசுப் பேருந்து நடத்துநர் ஒரு உடல் ஊனமுற்றவருக்கு இத்தனை விவரங்கள் சொன்னது மிகவும் நல்ல விசயம் தான். பாராட்டப் பட வேண்டியவர்.

said...

ம்ம்ம் அசத்தல்ஸ்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயற்கை ராஜி!!!:)

said...

பாவம் நாய்கள், அவைகளுக்கு இந்த சூதுவாதெல்லாம் தெரியாது. நாய்கள் முன்னேற்றக் கட்சியிலிருந்து நேட்டீஸ் வரப் போகிறது!


அரசுப் பேருந்து நடத்துனரின் உதவி பாராட்டதக்கது. இன்னும் கொஞ்சம் மரியாதையாகப் பேசியிருக்கலாம்.

said...

ந‌ன்றி அனைவ‌ருக்கும்....

said...

ஆனாலும் ச‌ஞ்ச‌ய் நேத்து நான் "என்ன‌ எழுத‌றீங்க‌"ன்னு கேட்ட‌துக்கு "மொக்கை"ன்னு சொல்லி இருக்க‌ வேணாம்....:-(

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள்...ஆனா எப்படி உனக்கு போய் இப்படி ஒரு நல்ல Friend ?????

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

வெரிகுட் போஸ்ட்...!! நல்ல அப்சர்வேஷன்...இது இருக்க பல உள்குத்துக்கள் யாருக்கும் புரியுமோ என்னமோ தெரியல...

உடல் ஊனமுற்றவரை மென்மையான காயப்படுத்தாத சொல்லில் வடித்தமைக்கு ஒரு ஷொட்டு.

அந்த அம்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு கிப்ட் குடுத்தா பதில் கிப்ட் குடுக்கறவன் மனுசன்.

( நீ தெய்வம்னு சொல்லிடாத)

said...

அருமை
எல்லாரும் வாழ்த்து சொன்ன அந்த அக்காவுக்கு நானும் வாழ்த்து சொல்லிகிறேன்
நடத்துனர் அப்டீங்குற வார்த்தைக்கு சரியான எடுத்துக்காட்டு அவர்
***
அங்க குறையுள்ள மனிதரை அந்த சொல்லால் விளிக்காமலே நிகழ்வை பதிவு செய்திருக்கும் திறன் அற்புதம்
****
நம்ம தளம் பக்கம் இப்ப எல்லாம் வாரதில்லிங்கோ நீங்க..

said...

கலந்து கட்டி நல்லா இருக்கு.

said...

அற்புதம்,
இது போன்ற நடத்துனர்கள் (மன்னிக்க) - மண்ணின் மைந்தர்கள் - மனிதர்கள் இருப்பதால் தான் இந்த வாழ்க்கை மீதும் சிறிது நம்பிக்கை வைக்க முடிகிறது.
இயல்பான பதிவு, மனதைத்தொட்டது

said...

me 22 :)

said...

நன்றி மங்களூராரே..

நன்றி தமிழ்பிரியன்

நன்றி சென்ஷி

நன்றி வால்

நன்றி ஜமால்

நன்றி ஜெ

நன்றி தாரணி அக்கா

நன்றி நாஞ்சில்

நன்றி ஜோசப்

நன்றி அருணாக்கா

நன்றி சுரபி

நன்றி இயற்கை

நன்றி சக்தி பெரியம்மா

நன்றி கயல்

நன்றி ரவி மாமா( சொல்லித் தான் தெரியனுமா தெய்வம்னு? :) )

நன்றி நேசமித்திரன்

நன்றி விக்னேஷ்வரி

நன்றி முரளி

நன்றி மின்னல்

said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in

Tamiler This Week