இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 28 February 2009
தமிழ்மணம் விருதுகள்
தமிழ்மணம் விருதுகள் அறிவித்ததிலிருந்தே அதில் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஆகவே அதைப் பற்றி எதும் அறிந்துக் கொள்ளவும் இல்லை. வாக்கெடுப்பு போன்றவற்றில் கலந்துக் கொள்ளவும் இல்லை. ஆனாலும் விருதுகள் பற்றிய சர்ச்சைகள் உண்டானதும் அப்ப்டி யாருக்குத் தன் குடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கத் தோன்றியது. அடங்கொக்க மக்கா.. எல்லாரும் நம்மாளுங்க. இப்போது பதிவுகள் பக்கம் வருவது பெரிய அளவில் குறைந்துவிட்டதால், ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் ஒரே இடத்துல வாழ்த்து சொல்லிடறேன். இதில் ஒரு சில பதிவுகள் மட்டுமே படித்திருப்பேன். ஆனாலும் விருது வாங்கிய நண்பர்களுக்காக இந்த வாழ்த்துப் பதிவு..
தனித்திரு விழித்திரு பசித்திரு….. - செந்தழல் ரவி
வைகை - இராம்/Raam
Dubukku- The Think Tank - Dubukku , Dubukku- The Think Tank - Dubukku
Nila - நிலா
உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் , உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன்
அலிபாபாவும் 108 அறிவுரைகளும் - தாமிரா
எண்ணச் சிதறல்கள் - எம்.ரிஷான் ஷெரீப்
பயணங்கள் Payanangal - புருனோ Bruno , பயணங்கள் - புருனோ Bruno , பயணங்கள் - புருனோ Bruno
ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் , ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல்
மாதவிப் பந்தல் - kannabiran, RAVI SHANKAR (KRS) , மாதவிப் பந்தல் - kannabiran, RAVI SHANKAR (KRS)
கேன்சருடன் ஒரு யுத்தம் - அனுராதா
“தூயா” - Thooya
பல்சுவை! - SP.VR. SUBBIAH
குசும்பு - குசும்பன்
காலம் - கோவி.கண்ணன்
தமிழ்மணம் விருது பெற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் சாமியோவ்வ்வ்வ்... :)
Wednesday, 25 February 2009
Google Analytics பதிவர்களுக்காக
கூகுள் அனலிடிக்ஸ் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக இந்தப் பதிவு. இது நம் வலைபக்கத்துக்கு வருபவர்கள் பற்றிய துல்லியமான தகவலை தருகிறது. எங்கிருந்து வந்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.. எந்த பதிவுக்கு எவ்வளவு பேர், அவர்கள் உபயோகிக்கும் உலவி, இயங்கு தளம் , நாடு, எதைத் தேடும் போது நம் வலைப்பக்கம் வந்தார்கள்... என இன்னும் ஏராளமான தகவல்கள்.
http://www.google.com/analytics/ என்ற இணையதளத்துக்கு போய் கூகுள் கணக்கை வைத்து லாகின் பண்ணுங்க. அல்லது ஏற்கனவே கூகுள் கணக்கில் லாகின் செய்து இருந்தால் , http://www.google.com/analytics/ முகவரிக்கு சென்றதும் கிடைக்கும் பக்கத்தில் Access Analytics என்பதை தேர்வு செய்யவும். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் வலது பக்கம் + Add new account என்பதை தேர்வு செய்யவும். அடுத்து தெரியும் பக்கத்தில் உள்ள ”You are just a few steps from Google Analytics. Click on the Sign Up button to get started.” என்பதன் கீழே இருக்கும் Sign Up பொத்தானை அமுக்கினால் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். பிறகு ஒப்பந்தத்தை எற்றுக் கொள்வதாக உறுதி அளித்து தொடருங்கள்.
அடுத்தப் பக்கத்தில் கிடைக்கும் நிரலியை வெட்டி உங்கள் வலைப்பக்கத்தின் நிரலிகளுக்குள் ../body>என்பதற்கு மேல் ஒட்டி விடவும். அம்புட்டு தான்.
சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அறிய
http://www.google.com/support/analytics/bin/answer.py?hl=en_US&answer=55480&utm_id=ad
அப்பாலிக்கா வித விதமா விவரங்கள் பார்க்க வேண்டியது தான்.. :)
Posted by...
Monday, 23 February 2009
இந்தியர்களுக்கு 3 ஆஸ்கர் விருதுகள் - வாவ்.. வாழ்த்துக்கள்..
ஸ்லம்டாக் படத்தின் மீது ஏராளமான விமர்சங்கள் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் தூக்கி எறிய வைத்துவிட்டார்கள் இந்த இந்தியர்கள். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளும் பூக்குட்டி ஒரு ஆஸ்கர் விருதும் வென்று இந்திய திரைத்துறையின் திறமையை உலகறிய செய்திருக்கிறார்கள். பூக்குட்டியின் பெயர் அறிவிக்கும் போது பார்க்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானு பெயரை அறிவிக்கும் போது தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தேன். உடல் சிலிர்த்துவிட்டது. ஒன்றல்ல இரண்டு விருதுகள். மிக சந்தோஷமான தருணம். வாழ்த்துக்கள் இருவருக்கும். மேலும் உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்.
..
Sunday, 22 February 2009
அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் - ஜட்டிக்கதைகள்
Posted By...
Saturday, 21 February 2009
பொடிப்பொண்ணு நித்யா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
நம் சக பதிவர் பொடிப்பொண்ணு நித்யா ஒரு மோசமான விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தாலும் முதுகில் ஏற்பட்ட மோசமான காயத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதால் , அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.
Wednesday, 18 February 2009
தமிழ்மணம் Vs தமிழிஷ்
சமீக காலங்களில் தமிழிஷின் வளர்ச்சி நன்றாகவே தெரிகிறது. இந்தப் பதிவு தமிழிஷ், தமிழ்மணத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது என்பதை காட்ட அல்ல. என் வலைப்பூவுக்கு தமிழ்மணத்தை காட்டிலும் தமிழிஷில் இருந்தே அதிக நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை காட்ட மட்டுமே. கடந்த பதிவை எழுதிய பின் வந்த நண்பர்களின் விவரங்களை கூகுள் அனலிடிக்சில் பார்த்த போது பெரிய மாறுதல் தெரிந்தது. பிப்ரவரி 17ம் தேதி வந்தவர்களில் 53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.
தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் உள்ள தவறான முறையால் , அதில் சிலர் மட்டுமே இடம் பிடிக்கிறார்கள். டைனமிக் ஐபி வசதியை பயன்படுத்தி தாங்களே பல வாக்குகளை பதிவு செய்து அவர்களின் பதிவுகள் மட்டுமே இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் ஒரே விஷயத்தை பற்றியே எழுதுவதால் தமிழ்மணம் வருபவர்களுக்கு மிகச் சிறந்த இடுகைகளை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
சூடான இடுகைகளில் இருந்து சிலரை நீக்கியதற்கு பதில் வாசகர் பரிந்துரையில் இருந்து சிலரை நீக்கலாம். சூடான இடுகை என்பது படிப்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையுமென்று நினைக்கிறேன். அதில் கள்ள ஓட்டு எல்லாம் செல்லாது. தமிழ்மணம் விழித்துக் கொண்டால் மட்டுமே வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளும். விழித்துக் கொள்வார்களா? அல்லது விழித்து என் பதிவைக் கொல்வார்களா? :)
Posted By..
Gandhi...SS
Monday, 16 February 2009
கூட்டாஞ்சோறு v1.02.1
கிராமத்து நினைவுகள்ல கூட்டாஞ்சோறு பத்தி எழுதியதில் அண்ணாச்சி வந்து “ கூட்டாஞ்சோறுன்னா கைல கிடைக்கிற காய்கறிகள் எல்லாம் கலந்து செய்யறது தான்” அப்டின்னு சொல்லி இருந்தார். நாமளும் இந்த வலைப்பூவில் வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதறோமே.. அதனால இதுக்கும் கூட்டாஞ்சோறுன்னே பேர் வச்சிட்டேன்.( எம்புட்டு நாளைக்குன்னு யாரும் கேட்கப் படாது).
இப்போ எலலாம் ஊடகங்களின் அத்துமீறலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. காதலர் தினத்திற்கு எதிரா பல ”கலாச்சார” அமைப்புகள் பலவிதமான எதிர்ப்பு போராட்டங்களை செஞ்சிட்டு இருந்தாங்க. ஊடங்கங்கள் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று கோதாவில் குதித்திருந்தார்கள். தினமலரில் , காதலர் தினத்தன்று கடற்கரையில் படகுகள் மறைவிலும் வெட்டவெளியிலும் பூங்காக்களிலும் கொஞ்சிக் கொண்டிருந்தவர்களை படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். காதலர் தினத்துக்கு அடுத்த நாள் கோவை பாலிமர் சேனலில் ஊட்டியில் பூங்காக்களில் காதலர்கள் கொஞ்சிக் கொண்டிருந்ததை படம் பிடித்து ஒளிபரப்பினார்கள். இது முற்றிலும் ”சீமான்” தனம். தனிமனித சுதந்திரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அது பலரின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டாக்கி இருக்கும். அந்த பெண்ணின் அல்லது பையனின் பெற்றோரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் அதை பார்க்கும் பட்சத்தில் அது பல மோசமான விளைவுகளை உண்டாக்கி இருக்கும். பிள்ளைகளை படிக்கவோ வேலைக்காகவோ வெளியூர் அனுப்பி இருக்கும் அவர்களின் பெற்றோருக்கு பெரிய அளவில் மன உளைச்சலைத் தந்திருக்கும். முன்பெல்லாம் அனுமதி வாங்கி நடு பக்கத்திலும் நடு சாமத்திலும் காட்டியவர்கள் இப்போது அத்துமீறி எல்லாப் பக்கங்களிலும் எல்லா நேரங்களிலும் காட்டுகிறார்கள். வியாபாரத்திற்காக இது போன்ற கீழ்த் தரமான வேலைகளை ஊடகங்கள் செய்வது ஆரோக்கியமானது இல்லை. பொது இடங்களில் ’சில’ காதல் ஜோடிகளும் கண்ணியமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
கவனிக்க : ”என்னை” யாரும் காதலிக்கவும் இல்லை.. எந்தப் பெண்ணுடனும் ஊர் சுற்றி நான் பாதிக்கப் படவும் இல்லை.. சமுதாய நலன் கருதியே இந்த (அதிக) பிரசங்கம். :)
யாருக்காவது தூங்கும் போது யாரோ அமுக்கற மாதிரி உணர்வு ஏற்பட்டிருக்கா?. அதாவது, உங்களுக்கு உணர்வு இருக்கும், ஆனா பேச்சு வராது. கை கால் எதுவும் அசைக்கவே முடியாது. சில வினாடிகளுக்கு உயிர் பயத்தை உண்டாக்கும் உணர்வு அது. மனுஷனா பொறந்தா நிச்சயம் அந்த உணர்வு அப்பப்போ வரும். நான் மனுஷன் .. அப்போ நீங்க? :).. சரி கஷ்டமான கேள்வி எல்லாம் வேண்டாம். நானே மனுஷன்னா நீங்க எல்லாம் தெய்வமா தான் இருப்பிங்க.. ( நானும் கடவுளா இருந்தேன் போன மாசம் வரைக்கும்.. அல்லது அசிங்கமா சிலர் கிட்ட திட்டு வாங்கற வரைக்கும் :)).. ). கிராமத்துல ரொம்ப சாதாரனமா சொல்வாங்க..” ராத்திரி சுத்தமா தூக்கமே இல்லடா.. கண்ண மூடினா போதும். வந்து அமுத்திடுது.” அதோட விட மாட்டாங்க. அதுக்கு காரணமா சமீபத்துல செத்த யார் மேலயாவது பழி போடுவாங்க. அவங்க தான் ’பேயா’ வந்து அமுக்கறாங்களாம். எனக்கும் கூட அந்த நம்பிக்கை இருந்தது. அவ்ளோ தான் இன்னைக்கு ’செத்தேன் இன்னைக்கு’ அப்டின்னு நினைப்பேன். அவ்ளோ பயங்கரமான உணர்வு அது.. பல ஆண்டுகள் முன்பு வரை. அப்புறம் அந்த மாதிரி அமுக்கற உணர்வு வரும் போதெல்லாம் அதை பெரிசா எடுத்துக்கறதே இல்லை. கொய்யால, இன்னும் கொஞ்ச நேரம் தானே கை கால் அசைக்க முடியாது.. அப்புறம் தானா சரி ஆகிட போகுது என்று நினைத்துக் கொள்வேன். சமீபத்துல இது தொடர்பான சுஜாதாவோட கட்டுரை ஒன்று படித்தேன். அவரும் என்னை மாதிரியே தான் நினைச்சிப்பராம். Great minds think alike .. சரி சரி.. புரியுது..ஃப்ரீயா விடுங்க.. :))
அதுக்குக் காரணம் :( ஓவர் டூ சுஜாதா ) நம் சரீரத்தின் அசைவுகளை மூளையில் கட்டுப்படுத்தும் பகுதிக்கு மோட்டார் கண்ட்ரோல் என்கிறார்கள்.நம் நினைவை கட்டுப்படுத்தும் பகுதி வேறு இடத்தில் இருக்கிறது. பாதித் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது இரண்டும் ஒரே சமயத்தில் விழித்தெழுந்தால் பிரச்சனை இல்லை. நினைவு முதலில் திரும்பி வந்து, உடலசைவுகள் சற்று நேரம் கழித்து வந்தால் தான் இந்த மாதிரியான அவஸ்தை ஏற்படும். உணர்வு முதலில் வந்து உடலசைவு அதன் பின் வருவதால் ஏற்படும் விளைவு இது.( மேஜர் சுந்தர்ராஜன் மாதிர் ஒரே விஷயத்தை 2 முறை தமிழிலியே சொல்லி இருக்கார் சுஜாதா :))
கவனிக்க : எனக்கு கனவு வரும் போதெல்லாம் அது கனவு தான் என்று தெரிந்துவிடும். பயமுறுத்தும் கனவோ அல்லது வேறு எந்த வகை கனவாக இருந்தாலும் அது கனவு தான் என்று தெரிந்தே தொடரும். சில அதி பயங்கர கனவுகள் ( என் முகமே தெரிவதை சொல்லவில்லை )வரும் போது கூட “ அட கனவு தானே... என்னவோ நடக்கட்டும்” என்று நினைத்துக் கொள்வேன். உங்களுக்கும் இப்படி தோனுமா? உடனே ஒரு அ(ம)ஞ்சல் அட்டையை எடுத்து உங்க விலாசத்துக்கே ஒரு கடுதாசி போட்டுக்காம இங்க பின்னூட்டத்துல சொல்லுங்க..
இன்னைக்கு ஜிமெயில் ஸ்டேட்டஸ் மெசேஜ்ல, எதையும் க்ளிக் பண்ணாம காத்திருந்து பாருங்கன்னு ஒரு சுட்டியை குடுத்திருந்தேன். எப்போவும் பதுங்குக் குழியில இருக்கிற நம்ம ஜி3 அக்கா வெளிய எட்டிப் பார்த்து,
“ நானும் ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்கேன். ஒன்னுமே தெரியலையே” அப்டின்னாங்க.
நானும் ரொம்ப புத்திசாலித் தனமா ( அல்லது வழக்கம் போல பல்பு வாங்கற லூசுத் தனமா) “ யக்கா, உங்க கிட்ட ஃப்ளாஷ் ப்ளேயர் இருக்கா” அப்டினு கேட்ட்த் தொலைச்சேன்.
அதுக்கு அந்த அக்கா சொன்னாங்க “ ஓ.. அந்த வெப்சைட்ல போய் பாக்கனுமா?..நான் அந்த சுட்டியை க்ளிக் பண்ணவே இல்லையே”ன்னாங்க..
அதாவது என் ஸ்டேட்டஸ் மெசேஜ் காத்திருந்து பார்த்தாலே எதுனா தெரியும்னு பார்த்துட்டு இருந்தாங்களாம்..
என்னா ஒரு வில்லத்தனம்டா சாமி.. இன்னைக்கு நான் தான் கெடைச்சனா? :((
மெய்யாலுமே அந்தக்கா அப்டி தான் பார்த்துட்டு இருந்திருப்பாங்க போல... அப்பாலிக்கா அதை க்ளிக் பண்ணும் போது அந்த பக்கம் திறகக்வே இல்லையாம்.. அப்பாடா.. எனக்கு பதிலா ”சாமி’ பழிவாங்கிட்ட மாதிரி ஒரு பரம திருப்தி எனக்கு.. :))
கூகுளில் SMS Channel என்னும் வசதியை அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். அதில் பல சேனல்கள் இருக்கின்றன. Hindu, CNN-IBN, Money Control உட்பட பல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் இன்னும் பல பொழுதுபோக்கு மற்றும் விற்பனை சேவைகள் பற்றிய சேனல்களும் ஏராளமாக இருக்கின்றன. அதில் சந்தாதாரர் ஆகிவிட்டால் செய்திகள் நம்மைத் தேடி வருகின்றன. நாம் செய்திகளைத் தேடி செல்ல வேண்டாம். இலவச சேவை தான். இப்போது நம் வலைப்பூ நண்பர்களின் படைப்புகள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுவருகின்றன. அவைகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொள்வதற்கு இங்கே செல்லவும். உங்கள் அலைபேசி எண்ணை யாரும் பார்க்க முடியாது.
சமீபத்துல ரொம்ப ரசிச்ச வரிகள் :
பேச வேண்டிய நேரத்தில்
மௌனமாக இருந்து விட்டால்..
மௌனமாக இருக்கும் நேரத்தில்
நிம்மதியாக இருக்க முடியாது..
பார்க்க ரசிக்க
Posted By
Gandhi...SS