இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 28 March, 2009

Earth Hour ஒரு மணி நேரம் மட்டும் ப்ளிஸ்


இன்று உலகம் முழுவதும் Earth Hour அனுசரிக்கப் படுகிறது. இந்திய நேரம் இரவு 8.30 முதல் 9.30 மணி வரை. ஆகவே அந்த ஒரு மணி நேரம் விளக்குகள் அனைத்தும் அணைத்து புவி வெப்பமடைதல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு கொள்வோம்.

Earth Hour நோக்கம்:

  • தனி மனிதர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைவரையும் ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கச் செய்வது.
  • அதன் முலம் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்துவது.
  • புவி வெப்பத்தினால் எற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க மக்கள் பிரதிநிதிகளை செயல்பட செய்வது.

2007ஆம் ஆன்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தோன்றிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இப்போது சுமார் 80 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கப் படுகிறது.

இதர்காக மார்ச் மாதம் 28ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப் படுகிறது. இதில் நாமும் கலந்துக் கொள்வோம். பூமி வெப்பமடைதலில் இருந்து காப்போம்.

இந்த பிரச்சாரத்திற்கான அமைப்பு, இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் கேட்டிருக்கிறது.
என் கருத்து : ஆற்காடு வீராசாமியை உலக மிந்துறை அமைச்சராக்கினால் போதும். வருடம் ஒரு மணி நேரம் எதற்கு? ஒரு நாளைக்கு 2 மணி நேர விளக்கனைப்பிற்கு உத்திரவாதம் உண்டு.

Wednesday 25 March, 2009

ஆத்தா எனக்கு அவார்டு கெடைச்சிடிச்சி.


நாம இப்போல்லாம் வலைப்பூக்கள் படிக்கிறதே கொறைஞ்சிருந்தாலும் பாசக்கார புள்ளைங்க பதிவுகளை மட்டும் முடிஞ்ச வரைக்கும் படிக்கிறதுண்டு. அப்டி பார்க்கும் போதெல்லாம் இந்த பட்டாம்பூச்சி விருதுன்னு ஒரு மேட்டர் பதிவுலகம் முழுக்க பட்டாசுக் கிளப்பிட்டு இருந்தது. எனக்கும் ஆசை, யாராவது நமக்குத் தர மாட்டாங்களான்னு.:).. நானும் இந்த விருது வாங்கின நம்ம பாசக்கார புள்ளைங்க பதிவுக்கெல்லாம் போய் குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டு இருந்தேன். அப்டியாவது யாராவது நமக்குத் தரமாட்டாங்களான்னு தான். :))

ஹிஹி.. இம்புட்டு தானுங்க நம்ம ரேஞ்ச். சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் ரொம்ப ஆசைப் படுவேன்.தேன்மிட்டாய், ஐஸ், கடலை மிட்டாய், பொரி, எள்ளுருண்டை மாதிரி.. இந்த பட்டாம் பூச்சி விருது மாதிரி..:))

ஆனா பாருங்க ஒருத்தரும் மதிக்கலை.. :(. சரி.. நாம எழுதறதும் யாருக்கும் பிடிக்கலை அல்லது நம்மள நண்பனாவும் யாரும் நினைக்கலைப் போலன்னு நினைச்சிக்கிட்டேன்... நான் எழுதறது பெரும்பாலானவங்களைக் காயப் படுத்தற மாதிரியே இருக்குன்னும் அது எனக்கு தெரியாதுன்னும் என் உடன்பிறப்பு ஒருத்தர் வேற சொல்லி இருந்தாரா.. அதனால விட்ரா..விட்ரா.. சானா கானான்னு மனசைத் தேத்திக்கிட்டேன். :))

ஆனா பாருங்க.. நான் எதிர்பார்க்காத நேரத்துல என்னையும் தன் நண்பனா நினைச்சி பட்டாம் பூச்சி அவார்டு குடுத்துட்டார் நம்ம சுரேகா. :) இதுல இன்னும் ரொம்ப சந்தோஷம் என்னன்னா .. என் மாமன் அப்துல்லா மற்றும் சினிமா பதிவு நிபுணர் முரளி கண்ணன் கூட சேர்த்து எனக்கும் குடுத்திருக்கார்.

அன்பு நண்பர் சுரேகாவிற்கு நன்றி.. நன்றி.. நன்றி.. :)) உங்கள் நட்பில் பெருமை கொள்கிறேன்.

இப்போ நானும் யாருக்காவது தரனுமாம்.. எனக்குத் தெரிஞ்சி இதை வாங்காம யாரும் இல்லை. அப்டி யாராவது இருந்தா அவங்களுக்குத் தான் நான் இந்த பட்டாம்பூச்சி விருது தர ஆசைப் படறேன். அதனால யாருக்கெல்லாம் இன்னும் இதை யாரும் கொடுக்கலையோ அவங்க எல்லாருக்கும் நான் தரேன் பட்டாம் பூச்சி விருது. எல்லோரும் என் நண்பர்களே. மொத்த பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விருதைக் கொடுக்கிறேன். வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))

நன்றாக தமிழில் எழுதும் திறமை இருந்தும் தமிழ் பதிவுகளுக்கு பரிச்சயம் இல்லாத என் தோழி பதுமையின் பதிவுகளை அறிமுகப் படுத்தும் விதமாக அவளுக்கு இதை சிறப்பு விருதாகக் குடுக்கிறேன் மற்ற எல்லோரோடும் சேர்ந்து..

மேலும் சிறப்பு விரு(ந்)தினர்கள்
குசும்பன்
கோவி கண்ணன்
நாகைசிவா
வால்பையன்
தூயா
பொடிப்பொண்ணு
லவ்டேல் மேடி
கும்கி
... இன்னும் பட்டியல் தொடரும்.. :-)

Monday 23 March, 2009

கூட்டாஞ்சோறு v 1.03.2

எனக்கு ஒரு சந்தேகம். சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை படிக்கிறப்போ வந்தது தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசிய தமிழுக்கும் இப்போ நாம் பேசும் தமிழுக்கும் சின்ன ஒற்றுமை கூட இல்லை.

தொலைகாட்சிகளில் நடன, பாட்டு நிகழ்ச்சிகள் அந்தக் காலத்து புராணங்கள் இதுகாசங்கள் காப்பியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாம் இப்போ நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் இல்லை. இப்போது வரும் கவிதைகள் கதைகள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாமே நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது. அப்படின்னா , அந்த காலத்துல எழுதிய வார்த்தைகள் தானே மக்கள் பேசும் வார்த்தைகளாகவும் இருந்திருக்கும். அப்போது பேசிய மொழி தமிழாக இருந்தால் இப்போது நாம் பேசும் மொழி என்ன? அல்லது நாம் இப்போது பேசுவது தான் தமிழ் என்றால் பழைய இலக்கியங்கள் எல்லாம் எழுதப்பட்டிருப்பது என்ன மொழியில்? இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தி தாள்களில் வந்த வார்த்தைகளுக்கும் இப்போது பயன்படுத்தப் படும் வார்த்தைகளுக்குமே ஏராளமான வித்தியாசங்கள் இருக்கே. இப்படி மாற்றியது யார்? ஒரு மொழியில் தேவைக்கேற்ப புதிய வார்த்தைகள் ( இணையம். கணினி மாதிரி) கண்டுபிடிக்கப் படலாம். ஆனால் இருக்கும் வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்றைக்கு ஏராளமான ஆங்கில வார்த்தைகளை மாற்று வார்த்தைகளாக பயன்படுத்துகிறோம். அதேபோல் பழைய தமிழ் வார்த்தைகளுக்கு மாற்றாக வேறு மொழி பயன்படுத்தி இருப்பார்களோ? அதாவது நாம் இப்போது பேசும் மொழி... இது என்ன மொழி?
----புதசெவி-----

$$


இப்போதெல்லாம் செய்தி சேனல்களைத் தாண்டி வேறு சேனல்கள் பார்க்க முடியவில்லை. எரிச்சலாக இருக்கிறது. எந்த சேனலைப் பார்த்தாலும் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். அலல்து பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அதைத் தாண்டி புதுமையாக( இதுவும் புதுமை இல்லை.. காப்பிதான்) ஒன்றும் யோசிக்க முடியவில்லை போலும். அதிலும் நிகழ்ச்சியின் பரபரப்புக்காக இவர்கள் அடிக்கும் கூத்து சகிக்கலை. நிகழ்ச்சி உருவாவதை படம் பிடிப்பதாக சொல்லி இவர்கள் அடிக்கும் தம்பட்டம் ஓவரோ ஓவர். எதோ பிறவிக் கலைஞர்கள் மாதிரி இதுல டிப்ஸ் எல்லாம் தந்து அசத்துவாங்க பாருங்க.. :)).. அதையும் தாண்டி மேடைல இவங்க அடிச்சிக்கிறது இருக்கு பாருங்க.. யபபா.. சாமிகளா.. எப்டிங்கய்யா இப்டி எல்லாம் கலக்கறிங்க.. இவங்க அடிச்சிக்கிறதை( மாதிரி நடிக்கிறதை) ஒரு நாளைக்கு 100 வாட்டி போட்டு விளம்பரப் படுத்துவாங்க. இதெல்லாம் கூட பரவால்ல.. ஆனா இந்த குட்டீஸ் வச்சி நடத்தற நிகழ்ச்சிகள் இருக்கே. ரொம்ப கொடுமையானது. இந்த காலத்துல ரொம்ப செல்லமா வளர்வதால் அவர்களால் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக்க முடியறதில்லை. அவர்கள் தாங்காமல் அழுவதை ஸ்லோ மோஷன்ல சில பல நிமிடங்கள் காட்டி சந்தோஷப் படறானுங்க. இதை பார்க்கும் அவர்களின் பள்ளி அல்லது தெருவில் இருக்கும் குழந்தைகள் கிண்டல் கேலி செய்வார்கள். இந்தக் குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். இதை எல்லாம் தடுக்கனும் பாஸ். இதுக்கு எதாவது செய்யனும் பாஸ். குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))

$$

க்ராக்&ஜாக்
விஜய் : ராமா ராமா ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்
பீமா பீமா பீமன் கிட்ட கதய கேட்டேன்
முருகு முருகு முருகன் கிட்ட மயிலைக் கேட்டேன்
ஈசு ஈசு ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன்
க்ராக்&ஜாக் : ஏனுங்க்ணா.. இப்டி வெட்டியா கண்டதையும் கேட்கற நேரத்துல
ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.

^^^^^^^^^^^^^^

க்ராக் : மாசம் 25000 சம்பளம். ஒரு நல்ல வேலை இருக்கு. வேணுமா?
ஜாக் : அட. அப்டியா.. உடனே சேர்ந்துக்கிறேன். வேலை என்ன சொல்லு?
க்ராக் : ஏவிஎம் வாசல்ல நின்னுகிட்டு அஜித் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும்.
ஜாக் : !?!?!?!

டரியல்ட்யூப் ஆஃப் திஸ் வீக்
இப்போ விஜய் தான் Youtube-ல நம்ம விஜய டீஆருக்கு பயங்கர போட்டியா இருக்கார்.. :))




Posted By

Sunday 22 March, 2009

Happy Birthday Dear Pavan kutty


எங்க சங்கத்து சிங்கமும், அபிஅப்பா & மாநக்கல் பிசிக்கு சவால் விட்டவருமான முழு நிர்வாணப் புகழ் பவன் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் எல்லா நலனும் பெற்று வளமோடும் ஆரோக்கியமாகவும் வாழ சங்கத்து சார்பிலும் வலையுலக ஆண்டிஸ் அங்கிள்ஸ் தாத்தாஸ் பாட்டிஸ் சார்பிலும் வாழ்த்துகிறேன். :)

Tuesday 17 March, 2009

வெறி பிடித்த விஜய் - என்னாச்சி இந்த பய புள்ளைக்கு

பலவீனமான இதயம் கொண்டவர்களும் குழந்தைகளும் அதிக சத்தம் வைத்து கேட்க வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.

Monday 16 March, 2009

தர்மபுரி @ தகடூர்

நண்பர் குடுகுடுப்பைக் கேட்டுக் கொண்டதற்காக வருங்கால முதல்வர் வலைப்பூவிற்காக எழுதிய பதிவு.

தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.

எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்

தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு

மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம்]
  • எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
  • மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.

[விடுதலைப் போராட்ட வீரர் திரு. சுப்ரமனியம் அவர்கள் திரு உருவ சிலை]
[திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் மணிமண்டப நுழைவாயில்]
  • இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

[பரிசல் சவாரி]
[ரம்மியமான பரிசல் பயணம்]
[ஐந்தருவி]
  • எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
  • அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
  • எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
படங்கள் : இணையத்திலிருந்து எடுத்தது. எடுத்தவர்களுக்கே சொந்தம். அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.

அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )

Sunday 8 March, 2009

Happy Birthday Krithik






இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் வீட்டு இளைய தளபதி க்ரித்திக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Posted By..

Monday 2 March, 2009

அபிஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அபிஅம்மா என்று அறியப்படும் என் பாசமிகு கிருஷ்ணா அக்காவுக்கு இன்று பிறந்தநாள். அபிஅப்பாவின் லொள்ளுகளையும் குசும்புகளையும் வென்று கிருஷ்ணாக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாகவும் வளமுடனும் நலமுடனும் வாழ அன்புத் தம்பியின் இதயப் பூர்வமான நல் வாழ்த்துக்கள். எப்போதும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான சொந்தம்.

Posted By..

Tamiler This Week